முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Monday, August 2, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (முதல் பாகம்)


சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)17-07-2010, 18-07-2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் (போலி)தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் நடந்தது..

அல்லாஹ்விற்கு உருவம் இல்லை, அவன் உருவமற்றவன், அவனுக்கு கை, கால், முகம், கண் இல்லை. அவன் அர்ஷின் மட்டும் இல்லை என்ற நிலைப்பாட்டில் சுன்னத் ஜமாஅத் சார்பில் மௌலவி ஷைக் அப்துல்லாஹ் ஜமாலியும், எல்லா விஷயங்களையும் உருவமாக படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விற்கு குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருவம் உண்டு (நவூதுபில்லாஹ்) என்ற நிலைப்பாட்டில் PJ யும் கலந்து கொண்டு விவாதம் நடந்தது.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த PJ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு அல்லாஹ் மறுமையில் காட்சி தருவான் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்தார். அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சூரியனையும், பெளர்ணமி நிலவை (உங்கள் கண்களால்) பார்ப்பது போல பார்ப்பீர்கள் என்று சொல்லிய விஷயத்திற்கு சூரியனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு, சந்திரனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு. என்ற மடத்தனமான வாதத்துடன் தொடங்கியது. மேலும் அந்த ஹதீஸை முழுமையாக சொல்லும் போது அல்லாஹ்வை இதற்கு முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய். நபிகள் நாயகம் ஸல்... صورت என்று சொல்லி விட்டார்கள் அதனால் உருவம் உண்டு! மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது என்பது அன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன் இது தான் என்று.

இதற்கு பதில் அளித்த ஜமாலி அவர்கள், இதில் உருவம் இருக்கு என்று நேரிடையாக எங்கு இருக்கிறது? மேலும் முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய் என்பதை உருவம் என்று வைத்தால் இதற்கு முன் பார்த்த உருவம் என்ன என்று வினவ அதற்கு பதில் இல்லை! சூரியன் சந்திரன் என்ற குழப்பம் தான் வாதமாக வந்தது.


உளரிக் கொட்டிய PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிக்க வந்த PJ தனது வாதத்திற்கு இறைவனுக்கு உருவம் இருக்கு என்று நேரிடையான ஆதாரம் குர்'ஆன் லிருந்தும் ஹதீஸில் இருந்தும் விவாதம் முடியும் வரை தரவே இல்லை. தரவும் முடியாது. ஜமாலி வைத்த வாதத்தையும் ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்க முடியவில்லை.

ஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.


அல்லாஹ்வை அவனின் ساق ஐ கொண்டு அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற வார்த்தையில் ساق என்பதற்கு شدت கடினம் என்று அர்த்தம் (இமாம்களும் அந்த அர்த்தம் தான் கொடுத்தார்கள்) என்று சொல்லப்பட்டது, இல்லை ساق என்றால் கால் என்று அர்த்தம் வைத்தார் PJ மேலும் கால் இன் மேல் இருக்கும் திரையை அகற்றுவான் என்று PJ கூற, ஆடை தேவையற்ற அல்லாஹ் ஆடை உடுத்தி இருக்கானா என்ற கேள்விக்கு வழி வகுக்கிறீர்கள் என்று சொன்னார்கள் ஜமாலி அவர்கள். அல்லாஹ்வை கேலி பேசாதீர்கள் என்று அல்லாஹ்வை உருவம் கொடுத்து ஆடை அணிவித்து கேலி செய்தார் PJ. மேலும் நமது தரப்பில் சூரா இக்லாஸ் ஓதி காண்பிக்கப்பட்டு அல்லாஹ் ஒருவன், அவன் தேவையற்றவன், யாரும் அவனை பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, அவனுக்கு நிகராக யாரும் இல்லை. என்று சொல்லப்பட்டது அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது ஆனால் இல்லை என்ற பாணியில் தான் PJ உறுதிப்படுத்திகொண்டிருந்தார்.
அது பின்னால் சொல்லப்படும்.

குர்ஆனையே ஏற்பதை போன்று மறுத்த கோமாலி PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட PJ அதற்கு ஆதாரமாக கீழ் வரும் வசனங்களை முன் வைத்தார், அதில் செய்த திருகு ஜாலங்கள் அடுத்த subtitle (தன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ) இல் சொல்லப்படும்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள்.

என்று பல வசனங்களை காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று சிறு பிள்ளை தனமாக உளறிக்கொட்டி தான் ஒரு காபிர் (அன்றைய காலத்து மக்கத்து காபிர் எப்பிடி (அல்லாஹ்வை நம்பி நபியே வானிலிருந்து மழை பொழிய வைத்தது யார் என்று அம்மக்களிடம் கேட்டால் அல்லாஹ் என்று பதில் சொல்லுவார்கள் இந்த வசனமும் ஓதி காண்பிக்கப்பட்டது) அல்லாஹ்வை நம்பி விட்டு உருவத்தை வணங்கினார்களோ அப்படி தான் நாங்களும்) என்று நிரூபித்தார். மேலும் அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான் ليس كمثله شيئ அவனை போல யாரும் எதுவும் இல்லை என்னும் போது உருவம் இருந்தால் அவனோடு ஏதோ ஒன்று ஒப்புமை ஆகும் என்று நம் தரப்பு எடுத்து வைத்தால் ஒளி விற்கும் உருவம் இல்லை அதில் ஒப்புமை ஆகாதா என்று கிண்டல் அடித்தார்கள்.

தன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ:

 • நேரிடையாக பொருள் கொள்ள வேண்டும் என்று கூறி கண் என்று வந்தால், கண் தான் என்று சொல்லி வந்தவர் ஹழ்ரத் நூஹு அலை.... அவர்கள் விஷயமாகவும், மற்ற நபிமார்கள் விஷயமாகவும் தன்னுடைய குர்'ஆன் மொழி பெயர்ப்பில் அல்லாஹ்வின் கண் என்று வரும் இடத்தில் கண்காணிப்பு என்று அர்த்தம் வைத்து இருந்தது சுட்டிக்காட்டப்படும் போது அந்த வாதத்தில் இருந்து வாபஸ் வாங்கினார்.
 • كل شيئ هالك الا وجهه அந்த நாளில் எல்லாம் அழிந்து போகும், அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்று வசனம் வருகிறதே முகம் என்று அர்த்தம் வைத்தால் அல்லாஹ்வின் உருவத்தில் முகம் மட்டும் தான் இருக்கிறது என்ற பொருள் அல்லவா வரும் என்று வினவும் போது, இல்லை இங்கே மட்டும் உள்ளமை என்று நாம் கொடுக்கும் அர்த்தம் வைத்து அந்தர் பல்டி அடித்தார்.
 • அதே பதில் தான் كل من عليها فان ويبقى وجه ربك ذوا الجلال والاكرام எல்லாம் அழிந்து போகும் அல்லாஹ்வின் உள்ளமை மட்டும் இருக்கும் என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டார்.
 • அல்லாஹ் தினமும் இரவில் முதலாம் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை சுட்டிக்காட்டும் போது அப்போது அர்ஷ் காலியாக இருக்குமா? மேலும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரம் இரவாக இருக்குமே, அப்படியானால் எந்த பகுதியின் இரவில் என்று கேக்கப்படும் போது இல்லை இங்கேயும் சுன்னத் ஜமாஅத்தின் அர்த்தமான இறங்கி வருதல் என்பதற்கு அருள் என்று அர்த்தம் வைத்து தன்னுடைய உருவத்திற்கு பலம் இல்லாமல் சோர்ந்து போனார்கள்.
 • அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று தன்னுடைய பத்திரிக்கையில் தன்னுடைய சகோதரர் P. சுல்தான் அலாவுத்தீன் (P.S. அலாவுத்தீன்) எழுதிய அமர்ந்தான் என்பதற்கு விளக்கம் தந்தவர், தன்னுடைய குர்'ஆன் மொழிபெயர்ப்பில் அமர்ந்தான் என்று பொருள் கொடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் எங்கள் சகோதரரின் சுட்டி காட்டுதலில் மாட்டிக்கொண்டார். மேலும் இங்கே அர்ஷில் அமர்ந்தான் என்று அர்த்தம் வைத்தால் அர்ஷை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் எங்கே அமர்ந்தான் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல், அது அப்படிதான் என்ற ரீதியில் (சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை போல) முடித்துக்கொண்டார்.
 • ساق என்பதற்கு கால் என்னும் போது நேரிடையாக பார்த்தால் ஒரு கால் தானே வருகிறது ஏன் அல்லாஹ்வை கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன அல்லாஹ்வை கேலி செய்கிறீர்கள் என்று நம்மை பார்த்து கேக்கின்றார்கள். மேலும் ஒன்று என்று வந்தாலும் மற்றதை நாமாக விளங்கி கொள்ள வேண்டும் (என்று கூறி முசா பஹா செய்யும் விஷயத்தில் கை என்று வருகிறது அதனால் ஒரு கை என்று கூறியது பொய் என்பதை போல உளறினார்.)
 • அல்லாஹ்விற்கு கால் இருக்கிறது என்று கூறி நரகவாதிகளை அல்லாஹ் நரகத்தில் போட்டு விட்ட பிறகு அடக்கியாள்வான் என்ற பொருளுக்கு காலால் மிதிப்பான் என்று கூறி அல்லாஹ் நரகத்திற்கு செல்வான் என்ற கருத்தை சொல்கின்றீர்களே என்று கேட்டால் அது கால் தான் அல்லாஹ் நரகத்திற்கு செல்லவில்லை என்று உளறி கொட்டினார். அல்லாஹ் நரகத்தில் கால் வைக்கும் போது அர்ஷில் இல்லையா என்ற கேள்விக்கும் பதில் இல்லாமல் முடித்துக்கொண்டார்.
 • அல்லாஹ் ஒளி யாக காட்சி தருவான் என்று ஹதீஸில் வருவதை ஆதாரம் காடும் போது, ஒளி என்பதும் உருவம் தானே என்று உளறினார், பிறகு ஒளி எங்கு இருந்து பிறக்குமோ அதுக்கு உருவம் இருக்கவேண்டும் தானே, பல்பை போல, என்று ஹதீஸை நக்கல் அடித்தார்.
இப்படி பல விஷயங்களில் தானே தனக்கு முரண்பட்டார். அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு என்றவர் கை, கண், கால், முகம் என்று வரும் இடத்தில் அவனுடைய பண்பு என்று நாம் வைக்கும் அர்த்தம் வைத்தார்.


உண்டு ஆனால் இல்லை என்று உளறிய PJ

 • அல்லாஹ்விற்கு கண் உண்டு, ஆனால் என் மொழிபெயர்ப்பில் கண்காணிப்பு.

 • அல்லாஹ்விற்கு முகம் உண்டு. ஆனால் முகம் என்று குர்'ஆனில் சொல்லப்பட்டது உள்ளமை தான்.

 • அல்லாஹ்விற்கு கால் உண்டு. ஆனால் நரகத்தில் செல்லும் போது அது அவனுடைய ஆளுமை தான்.

 • அல்லாஹ் வானத்தில் இறங்கி வருகிறான் ஆனால் அது அருள் தான்.இறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக PJ பேச பேச அர்த்தம் வைப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் வந்த வினையில் ஏற்படும் விபரீதத்தை பாருங்கள். அதன் மூலம் அல்லாஹ்வைவையும் அவனுடைய தூதர், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் வார்த்தையையும் கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரி கோமாலி PJ அவர்கள்.

அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறியதால் எழும்

கேள்விகள். (நவூது பில்லாஹ்)

 • அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோமே? பதில் இல்லை.
 • அல்லாஹ் விற்கு உருவம் உண்டு என்று சொன்னால் அல்லாஹ் ஆணா? பெண்ணா? கருப்பா? சிகப்பா? போன்ற கேள்வி எல்லாம் எழும்புமே? உருவம் இல்லாவிட்டால் இந்த பிரச்சனை வராதே!
 • உங்கள் கூற்று பிரகாரம் ساق என்று கூறப்பட்டதால் அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?
 • அல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?
 • ஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா?
 • அல்லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்று குர்'ஆனில் வருகிறது அப்படி என்றால் இடது கை எங்கே?
 • அல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும்? மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும்? அப்படியானால் அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்?
 • அல்லாஹ் ஆதம் அலை... அவர்களை தன்னுடைய சாயலில் படைதான் என்று கூறுகின்றீர்களே. ஹழ்ரத் ஆதம் அலை.... அவர்கள் 60 அடி உயரம், அப்படியானால் இறைவனின் உயரமும் அது தானா?
 • அல்லாஹ்விற்கு கை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல. என்று கூறுகிறீர்களே, அப்படி என்றால் அல்லாஹ்விற்கு சதை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு நரம்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு ரத்தம் உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு எலும்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, என்று நீங்கள் சொல்வது போல அமைந்து இருக்கிறதே?
 • அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்றால், உலகத்தை அழிக்கும் போது தன்னுடைய மற்ற பாகத்தை அல்லாஹ் அழித்துக் கொள்வானா?
 • அல்லாஹ் மற்றும் அர்ஷின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா? (குர்'ஆனில் எட்டு மலக்குகள் சேர்ந்து அர்ஷை சுமப்பார்கள் என்று வருகிறது)
 • அல்லாஹ் உருவமுள்ளவன் என்றால் அவனால் படைக்கப்பட்ட அர்ஷின் பால் அவன் தேவை உள்ளவனா!
 • அல்லாஹ் முதலில் ஒரு உருவத்தில் வருவான், பிறகு ஒரு உருவத்தில் வருவான் என்று அர்த்தம் வைத்தீர்களே அப்படியானால் அல்லாஹ்விற்கு எத்தனை உருவம் என்று கேட்டால், அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.

இது போன்ற கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் எழும்ப செய்து அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் PJ என்ற இந்த கோமாலி.
அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை ஜமாலி அவர்கள் பண்பு என்று அர்த்தம் வைக்கும் போது, முரண்டு பிடிக்காமல் ஒப்புக்கொண்ட PJ விற்கு நன்றி இதன் மூலம் கோடான கோடி முஸ்லிம்களின் ஈமான் பாதுகாக்கப்பட்டது.

மேலும் அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்து கேலி கிண்டலுக்குள்ளாக்கும் இந்த கேடுகெட்ட PJ வின் மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.


விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.


 • அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த PJ பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.
 • உருவம் உண்டு என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று நமது விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
 • அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.
 • மேலும் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறினால், நாங்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கு உருவம் உண்டு, அவனை வழிபடுகிறோம் என்றால் உருவ வழிபாட்டுக்காரர்கள் இல்லாமல் வேறு என்ன? இதனால் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்பதையும் நிரூபித்துவிட்டார்.
 • விவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும், சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள் PJ அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார். இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.


இமாம்களை பின்பற்ற கூடாது என்று சொல்லிவிட்டு இப்னு குதைபாவை ஆதாரம் காட்டியுள்ளீர்களே என்று அவர்கள் தரப்பை அவர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டது, மேலும் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்ற அடிப்படை சித்தாந்தத்தை தகர்த்துவிட்டீர்களே என்று அவர்களின் ஜால்ராக்களே துளைக்க ஆரம்பித்து விட்டது. மேலும் தூய்மையான இஸ்லாம் சொன்னீர்கள் என்று தான் உங்களுடன் இருந்தோம் இப்படி மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கிவிட்டீர்களே என்று கூறி சுன்னத் ஜமாஅத் பக்கம் மக்கள் வர ஆரம்பித்ததன் விளைவு!

இப்படி வாய் கொடுத்து வசமாய் மாட்டிக்கிட்டோமே என்ற நிலை தான் அவர் (நிரந்தர) வனவாசம் சென்ற ஒரு பின்னணி ஆகும், இதற்கு ஆதாரமாக சென்னையில் நடந்த இரண்டாவது விவாதமே சாட்சி, காரணம் இவரின் ஈமானை பறிக்கும் காரியத்தில் உடன்படாத போலி தவ்ஹீதில் இருந்தவர்கள் முதல் விவாதத்தில் பங்கேற்றவர்கள், இரண்டாவது விவாதத்தில் பாதி பேர் தான் கலந்து கொண்டார்கள். 150 நபர்களுக்கு அனுமதி இருக்க எங்கும் தன்னுடைய ஜால்ராக்களை கூட்டும் இவர்களால் வெறும் 80 நபர்களையே சேர்க்க முடிந்தது என்பது அல்லாஹ் தந்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

அவரை (நிரந்தர) வனவாசம் அனுப்பிய இரண்டாவது பின்னணி மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.

மதுரை நாபிஈ.

0 comments: