முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, December 28, 2010

இமாம் ஹுசைன் மற்றும் இமாம் ஹசன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களும் - அல்லாஹ்வின் முடிவும்

ஒரு முறை இமாம் ஹுசைனார் அவர்களும் இமாம் ஹசனார் அவர்களும் ஒரு குறிப்பேட்டில் சில சொற்களை எழுதிக்கொண்டு இருவரும் தத்தந் கையெழுத்து தான் அழகு என்று கூறிக்கொண்டு இருந்தார்கள்.

அவ்விருவருமே கடைசி வரையில் சமாதானம் ஆகவில்லை. இமாம் ஹசனார் அவர்கள் கூறினார்கள் ஒ ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு ) அடம் பிடிக்காதே. நாம் இருவரும் பாட்டனாரிடம் பொய் கேட்போம். அவர்கள் கூறட்டும் உன்னுடைய கையெழுத்து அழகானதா இல்லை என்னுடைய கையெழுத்து அழகானதா என்று. இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு இதற்க்கு சம்மதித்தார்கள்.

இரு சிறுவர்களும் தன்னுடைய பாட்டனார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருச்சன்னிதானதிற்கு வருகை புரிந்தார்கள்.

இமாம் ஹசனார் அவர்கள் கூறலானார்கள்...

என் அருமை பாட்டனாரே தாங்களே இதை பாருங்கள் என்னுடைய கையெழுத்து தானே அழகாக இருக்கின்றது. என் தம்பி (இமாம்) ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹு) தன்னுடைய கையெழுத்து தான் அழகாக இருக்கின்றது என்று அடம் பிடிகின்றார். நீங்களே கூறுங்கள் யா ரசூல்லுல்லாஹ்.

இதை கூர்ந்து கவனித்த இமாம் ஹுசைன் அவர்கள் இல்லை இல்லை நான் ஒத்துக்கொள்ளமாட்டேன், தாங்களே பாரும் யா ரசூல்லுல்லாஹ் என்று தன்னுடைய கையெழுத்தை காண்பித்தார்கள். நாயகம் அவர்களோ தன்னுடைய இரு பேரக்குழந்தைகளின் தந்தையான சையதினா அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹுல் கரீம் அவர்களிடம் சென்று கேட்குமாறு கூறினார்கள்.

இரு குழந்தைகளும் தன்னுடைய அன்பு தந்தையிடம் சென்று கூறினார்கள். எங்கள் தந்தையே இவற்றில் யாருடைய கையெழுத்து அழகாக இருக்கின்றது எழுதிய குறிப்பேட்டை காண்பித்தவாறே கேட்டார்கள்.

தன்னுடைய வாழ்வில் பலப்பல குழப்பமான நிலையை மிக எளிதாக தீர்வுகளையும் முடிவுகளையும் எடுத்த அந்த அல்லாஹ்வின் புலி இதைக்கண்டு தயக்கம் அடைந்தார்கள். இருவரின் கையெழுத்தும் அழகாக இருந்தும் தன்னுடைய எந்த ஒரு பிள்ளையின் மனதையும் புண்படுத்தகூடாது என்று எண்ணி நிலைமையை சமாளிக்க தன்னுடைய அன்பு மனைவி சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை நோக்கி இரு பிள்ளைகளையும் செய்கை காட்டினார்கள்.

என் அருமை பிள்ளைகளே இருவரின் கையெழுத்தை பற்றி உங்கள் அம்மா அவர்கள் கூறுவார்கள். அவர்களிடம் சென்று கேட்கவும் என்று சொன்னார்கள்.

சையதா பாத்திமா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் இதை பார்த்துவிட்டு தன்னுடைய தந்தையான முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் சபைக்கு செல்லுமாறு கேட்டுக்கொன்றார்கள்.

இந்த உலகில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வ அலைஹி வ ஸல்லம் அவர்களை தவிர முடிவு எடுப்பதிலும் தீர்ப்பு வழங்குவதிலும் அவர்களை யாரும் மிஞ்சமுடியாது. (RasoolAllah Sallallahu Alaihi wa Sallam, the greatest and most exalted decision maker in the world)

முஹம்மத் ஸல் லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் கூறினார்கள். என் அருமை குழந்தைகளே உங்களில் எவர்மனதையும் புண்படுத்த கூடாது என்பதற்காக. உங்களின் இந்த பிரச்சனைக்கு ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் தீர்வு கூறுவார்கள் என்றார்கள்.

சற்று நேரத்தில் ஹஸ்ரத் ஜிப்ரில் அமீன் அலைஹி ஸலாம் அவர்கள் விஜயம் புரிந்தார்கள். யா ரசூல்லுல்லாஹ் தங்களின் மீதும் தங்கள் குடும்பத்தின் மீதும் சாந்தியும் சமாதானமும் ஏற்படுவதாக.

இமாம் ஹசன் மற்றும் இமாம் ஹுசைன் (ரழியல்லாஹு அன்ஹுமா) அவர்களின் இந்த பிரச்சனைக்கு அல்லாஹ் தீர்ப்பு வழங்குவான். நான் சொர்கத்திலிருந்து ஒரு பழத்தை கொண்டு வந்துள்ளேன். இதை நான் சற்று மேல உயர வீசுகின்றேன் எவருடைய குறிப்பேட்டில் இந்த பழமானது விழுகின்றதோ அவர்களே வெற்றி பெற்றவர்கள். அவர்களின் கையெழுத்து தான் அழகாமது என்று கூறினார்கள்.

பழத்தினை மேல தூக்கி எறிந்த பொது அது காற்றில் தானாகவே இரு துண்டுகளாக பிளந்து அவற்றில் ஒரு துண்டு சையதினா இமாம் ஹசன் அவர்களின் குறிப்பேட்டில் மேல் விழுந்தது. மற்றொண்டு சையதினா இமாம் ஹுசைன் அவர்களின் குறிப்பேடின் மீது விழுந்தது.

அல்லாஹ்வின் தீர்ப்பின் படி இருவரின் கையெழுத்தும் அழகனதாம் என்று கூறி ருஹுள் அமீன் அவர்கள் விடை பெற்றார்கள்.

இரு குழந்தைகளின் உள்ளமும் மகிழ்ச்சி வெள்ளம் பொங்கியது. புன்சிரிப்புடன் இரு குழந்தைகளை எல்லோரும் கண்டு மகிழ்தனர்.

Friday, December 17, 2010

கர்பலா ஒரு வரலாற்றுப்பார்வை.




இஸ்லாத்தில் வருட ஆரம்பமான முஹர்ரம் மாதம் அதிலும் குறிப்பாக ஆஷுரா நாள், பல்வேறு நபிமார்களின் சம்பவத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டுள்ளது. இந்த முஸ்லிம் சமுதாயம், உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை பின்பற்றும் இந்த சமூதாயத்திற்கு இந்த மாதம் எதை தந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் ஆஷுரா நாளில் இரண்டு நோன்புகளை தந்தது. வேறு என்ன தந்தது? வேறு என்ன? இந்த சமூதாயத்திற்கு தலை குனிவை தான் தந்தது! காரணம் என்ன?

இந்த சமூதாயத்தில் யாரை கண்ணியப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டதோ, யாரை நேசிப்பது ஈமான் என்று கூறப்பட்டதோ, யாருக்காக தொழுகையில் சலவாத் ஓதப்படுகின்றதோ, யாரு சுவனத்து இளைஞர்களின் தலைவர் என்று நபிகளாரால் சொல்லப்பட்டதோ, அல்லாஹ்வை நேசியுங்கள், என்னை நேசிப்பத்தின் மூலம் அல்லாஹ்வை நேசம் பெறுங்கள், என்னுடைய குடும்பத்தவர்களை நேசிப்பத்தின் மூலம் என் நேசத்தை பெறுங்கள் என்று கூறப்பட்டதோ, உங்களுக்கு அவர்களையே கொன்று சந்தோஷித்தால் பெருமையா? தலை குனிவா? அதுவும் முஸ்லிம்கள் என்ற பெயர் தாங்கிகள் மூலம் அது நடந்தது என்றால் கியாமத் நாள் வரை அந்த கரை நமது உடம்பில் படர்ந்து கொண்டு தான் இருக்கின்றது.

ஏன் நடந்தது இந்த கர்பலா?

நேர்வழி பற்றி நடந்த சஹாபா பெருமக்களின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாத்தில் எப்படியோ நுழைந்து விட்ட புல்லுருவிகள், அந்த நேர்வழி நடந்த சஹாபாக்களின் ஹழ்ரத் சித்தீக் ரழி... அவர்களை தவிர ஏனைய மூன்று சஹாபாக்களையும் ஷஹீதாக்கியது. பின்னும் அந்த வெறி தணியவில்லை. பின்னும் அந்த புல்லுருவிகளின் தாகம் தணியவில்லை. பிறகு இமாம் ஹசன் ரழி... அவர்கள் ஆட்சியை உமையாக்களின் கையில் ஒப்படைத்த பின்னும் அவர்களையும் விடவில்லை. அவர்களின் மனைவியான 'அதா வை பணத்தால் வளைத்து உலக ஆசையை காட்டி இமாம் ஹசன் ரழி... அவர்கள் தூங்கும் போது விஷம் கொடுத்து ஷஹீதாக்கியது.

அதற்க்கு பின் தான் அந்த வெறியர்களின் பார்வை ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் மேல் பட்டது. எந்த வம்பிற்கும் போகாததால் ஒன்றும் செய்ய முடியவில்லை, மேலும் ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி... அவர்களை போல் சாந்த குணத்தில் இல்லாமல், வீரம் நிறைந்தவர்கள் என்பதால் இக்கொடியவர்கள் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை நெருங்க யோசிக்க வைத்தது. ஆனாலும் இவர்கள் உயிரோடு இருந்தது இவர்களின் கண்களை உறுத்தி கொண்டு தான் இருந்தது. இந்த நேரத்தில் தான் உமையாக்களின் சார்பில் முஆவியா விற்கு பின்னால் யஜீது ஆட்சிக்கு வந்தான். முஆவியாவாலே அமீராக பிரகனப்படுத்தப்பட்டான். (இஸ்லாமிய ஜனநாயக ஆட்சி, மன்னராட்சியில் நுழைந்தது)


இவன் குடிகாரனாக இருந்தான். ஒரு முறை சஹாபாக்களின் குழந்தைகளோடு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தான். அப்போது மதுவும் பரிமாறப்பட்டது. சஹாபாக்களின் குழந்தைகள் என்ன இது என்று யஜீதிடம் கேட்ட போது கிருஸ்தவ மதத்தில் இது ஆகுமாக்கப்பட்டது தான். அதனால் இன்று ஒரு நாள் மட்டும் ஈசாவின் மதத்தில் மாறி இதை குடித்துக்கொள்ளுங்கள் என்றான். மேலும் இஸ்லாம் தடை செய்து இருந்தும் ஒரு சேர இரு சகோதரிகளை திருமணம் முடித்து இருந்தான். இப்படிப்பட்ட யஜீதை இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பை'அத் செய்ய மறுத்து விட்டார்கள். இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு ஹழ்ரத் அப்துர் ரஹ்மான் பின் அபூபக்கர் ரழி.... ஹழ்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரழி... ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழி... ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரழி... ஆகியோரும் இந்த குடிகாரன் யஜீதை பை'அத் செய்ய மறுத்துவிட்டார்கள்.

ஜனநாயகம் தழைக்க வந்தது தான் இஸ்லாம். இஷ்டம் இருந்தால் தான் பை'அத் செய்ய முடியும். ஆனால் இந்த யஜீத் மற்றவர்கள் பை'அத் செய்ய வேண்டும் என்று கண்டிப்பாக்கினான். அன்றைய தினம் மதீனா வின் கவர்னராக இருந்த வலீத் பின் உத்பா என்பவர்கள், இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் நபியின் குடும்பமாக இருந்த காரணத்தால் மென்மையை தேர்ந்தெடுத்தார்கள், ஆனால் நபிகளாரின் லஃனத் ல் பிறந்த மர்வான் இமாம் ஹுஸைன் மீது கடுமை காட்ட கூறினான். அதை இவர்கள் மறுத்து விட்டார்கள்.

மேலும் மேலும் நெருக்கடி கொடுக்கப்படவே ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜுபைர் ரழி... அவர்களை போன்றே மக்கா நோக்கி பயணம் மேற்கண்டார்கள். அங்கு கவர்னராக இருந்தவன் அமர் பின் சயீத் பின் ஆஸ். இவனும் இமாம் அவர்களுக்கு நெருக்கடி கொடுத்தான். இது ஒரு பக்கம் இருக்க இராக் தேசத்தில் இருந்து இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை அழைத்து கடிதம் வர ஆம்பித்து விட்டது. இந்த கடிந்தங்களில் எங்களுக்கு தொழுக வைக்க சரியான இமாம் இல்லை. எங்களுக்கு மார்கத்தை போதிக்க சரியான வழிகாட்டி இல்லை. அதனால் நீங்கள் வாருங்கள் என்று எழுதி இருந்தார்கள். ஆரம்பத்தில் சிறிதளவே வந்து கொண்டிருந்த இக்கடிதங்கள் பின்னால் மூட்டை, மூட்டையாக வர ஆரம்பித்து விட்டது. பின்னர் கூட்டம் கூட்டமாக ஆட்களும் வந்து அழைக்க ஆரம்பித்தனர். (இதை இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் ஹழ்ரத் ஹுர் பின் யஜீத் ரழி... அவர்களிடமும், கர்பலாவில் எதிராக போரிட வந்த அந்த கயவர்களிடமும் காட்டினார்கள். இமாம் அவர்களுக்கு கடிதம் எழுதியவர்களே அங்கு போரிடவும் வந்து இருந்தார்கள், சில தோழர்களை தவிர). சிலர் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு தோல் கொடுத்தார்கள். அவர்களுள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் ரழி... ஆகியோர் அடக்கம்.


சரியான இமாம் ஏன் இல்லை என்று ஈராக் வாசிகள் எழுதினார்கள் என்று சரித்திரங்களை புரட்டினால் கீழ் காணும் சம்பவங்கள் காட்சி அளிக்கின்றது. அவை, உமையாக்களின் ஆட்சியில் ஷரீஅத் காற்றில் பறக்க விடப்பட்டது. எகிப்தில் கவர்னராக இருந்த அப்துல்லாஹ் பின் அபீ சர்ஹ் ஆமிரி (முர்தத் ஆகி ஒரு அன்சாரி தோழரை கொன்றவன். மக்கா வெற்றியின் போது காபாவின் திரையை பற்றி இருந்தான், அவனை இழுத்து வரும் படி நபிகளார் கூறினார்கள், ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக மன்னிப்பு பெற்றவன்) என்பவன் ஸுபுஹ் உடைய தொழுகையை காலை 10.00 மணிக்கு நேரத்தை மாற்றி அமைத்தான். கூபா வின் கவர்னராக இருந்த வலீத் பின் அகபா பின் அபீ முயீத் என்பவன் நன்றாக குடித்து விட்டு ஸுபுஹ் தொழுகையை நான்கு ரக்'அத் தொழ வைத்தான். அங்கு நிறைந்து இருந்த சஹாபாக்களின் பிள்ளைகள் எல்லாம் என்ன இப்படி செய்கின்றாயே என்று கேட்டதற்கு இதற்க்கு மேலும் தொழ வைக்கவா என்று கேட்டான். (அல் பிதாயா வன் நிஹாயா, புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இன்னும் பல கிதாபுகள்).

மேலும் ஹழ்ரத் அலீ ரழி... அவர்களையும், குடும்பத்தவர்களையும் ஜும்மாவின் குத்பாவில் திட்டும் வழக்கம் முஆவியாவின் ஆட்சி முதல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ் ரழி... அவர்கள் தான் இவ்வழக்கத்தை நீக்கி,

என்ற வசனத்தை ஓதும் பழக்கம் ஆரம்பித்து வைத்தார்கள். ஹழ்ரத் அலீ ரழி... உடைய குடும்பத்தவர்களும், உறவினர்களும், தோழர்களும் காதால் கேட்டு கொண்டு தான் இருந்தனர்.

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَىٰ وَيَنْهَىٰ عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ ۚ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ


(தபரீ பாகம் : 4 ,பக்கம்: 188
இப்னுல் அசீர்: பாகம்: 3 பக்கம்: 234
அல்பிதாயா வன் நிஹாயா பாகம்: 8 பக்கம்: 259; பாகம்: 9 பக்கம்: 80; )

இதற்காக தான் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் கர்பலா நோக்கி சென்றார்கள். ஆனால் இன்று வஹ்ஹாபிகள் பதவிக்காக தான் இமாம் ஹுஸைன் ரழி... சென்றார்கள், இஸ்லாத்திற்காக இவர்கள் உயிர் துறக்க வில்லை என்று நாகூசாமல் கூறுகின்றார்கள். எப்போதும் ஹதீஸ் படியே வாழும் (?!?!?!?!?!?!?) இந்த வஹ்ஹாபிகள், ஹதீஸ்களை பார்த்து இருந்தால் இந்த பிரச்சனையை வந்து இருக்காது. காரணம் ஹதீஸ்களில் தெளிவாக வருகின்றது, இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் கர்பலாவில் கொல்லப்படுவார்கள் என்று. ஆனால் என்ன செய்வது யூதர்களிடம் வாங்கிய காசிற்கு ஏதாவது செய்ய வேண்டுமே, அதனால் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் மீது கை வைக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், ஹழ்ரத் உம்முல் பழ்ல் ரழி... அவர்களிடம் கூறுகின்றார்கள் என்னுடைய இந்த மகன் எனது சமூகத்தாலேயே கொல்லப்படுவான், உம்முல் மூமினீன் அன்னை ஆயிஷா ரழி... மற்றும் உம்முல் மூமினீன் அன்னை உம்மு சல்மா ரழி... ஆகியோரிடம் இந்த மண்ணில் தான் ஷஹீதாக்கப்படுவான் என்று அந்த மண்ணும் கொடுக்கப்படுகின்றது. என்னுடைய மகன் ஹுஸைன் கர்பலா என்று சொல்லக்கூடிய இடத்தில் தான் கொல்லப்படுவான். இவை எல்லாம் ஹதீசுகளில் பதியப்பட்டவைகள். சொந்த கருத்து, சோக கருத்து அல்ல. இவ்வளவும் தெரிந்துமா இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பதவிக்காக சென்று இருப்பார்கள்! நாம் யோசிக்க வேண்டாமா?

சரி! பதவிக்காக தான் சென்றார்கள் என்று இவர்களின் வாதத்தை ஏற்றுக்கொண்டால், இமாம் அவர்களை பின்பற்றும் அனைவரையும் அல்லவா அழைத்து சென்றிருக்க வேண்டும். பிள்ளை குட்டிகளை எதற்கு அழைத்து சென்றார்கள். அவர்களின் குடும்பத்தவர்கள் மட்டும் தானே மக்காவில் இருந்து பயணப்பட்டார்கள். மேலும், அங்கு சென்றும், நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்ல அனுமதியுங்கள் என்று தானே சொன்னார்கள், என்னிடம் பை'அத் செய்யுங்கள் என்று எங்கே சொன்னார்கள்? இமாம் அவர்களை பற்றி பேசும் போது நாவை அடக்கி வாசியுங்கள் வஹ்ஹாபிகளே! நபிகளாரின் கோபத்தை பெற்று மறுமை வாழ்க்கையை அழித்து விடாதீர்கள்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் ஷஹாதத் பற்றி முஸ்லிம் அல்லாத அறிஞர்கள் கூறுவதை பாருங்கள்:


இந்த லிங்கை கிளிக் செய்தால் படிக்கலாம்

நமது நிலை என்ன?

ஒவ்வொரு கர்பலாவிற்கு பின்னும் இஸ்லாம் உயிர் பெறுகின்றது - அல்லாமா இக்பால். என்று சொன்னதற்கு ஏற்ப, கர்பலா என்பது இஸ்லாத்தை உயிர்பிக்க நடந்ததே தவிர பதவிக்காக இல்லை. அப்படி பதவிக்காக செல்பவர்கள் 6 மாத குழந்தை அலி அஸ்கர் ஷஹீதாக்குவார்களா, 1 வயது குழந்தை அப்துல்லாஹ்வை முத்தமிட்டவாறு ஷஹீதாக்குவார்களா?? 18 வயதுடைய வாலிபரான அலி அக்பரை ஷஹீதாக்குவார்களா? உயிர் கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சென்று விட்டால் குழந்தை என்ன? குட்டி என்ன? வாலிபன் என்ன? கிழவன் என்ன? என்றவாறு அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தார்கள் என்பது தான் உண்மை.

இமாம் ஹுஸைன் ரழி..., உண்மையில் ஈராக் வாசிகள் உள்ளமையோடு அழைக்கின்றார்களா, இல்லை குழப்பம் விளைவிக்க அழைக்கின்றார்களா என்று அறிவதற்காக இமாம் முஸ்லிம் பின் அகில் ரழி... அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று குழப்பம் விளைவிக்க அல்ல, உண்மையில் தான் அழைக்கின்றார்கள் என்று கூறிய பின், ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரழி... அவர்கள் தடுத்தும், குழந்தை குட்டிகளை விட்டுச்செல்லுங்கள் என்று கூறியும் கேளாமல், உங்களுடைய நிலை ஹழ்ரத் உஸ்மான் ரழி... போன்றே பெண்கள், குழந்தைகள் முன்னாள் ஷஹீதாக்க்ப்படுவீர்கள் என்று கூறப்பட்டும் கேளாமல், நபிகளாரின் சொல்லப்பட்ட ஹதீசுகளை உண்மை படுத்த துல்ஹஜ் மாதம் 8 ம் தேதி மக்காவை விட்டு ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... புறப்பட்டார்கள்.

வழியில் இமாம் அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், இமாம் அவர்களின் தங்கையான ஹழ்ரத் ஜைனப் ரழி.... அவர்களை மணந்த ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜஃபர் ரழி... அவர்கள், இமாம் அவர்கள் ஈராக்கை நோக்கி செல்ல வேண்டாம் என்ற கோரிக்கை கடிதம் வந்தது. அதற்க்கு பதில் அளித்த இமாம் அவர்கள், நான் ஒரு கனவை கண்டேன். என்னிடம் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒரு வேலையை ஏவி இருக்கின்றார்கள். அது என்னவென்று அல்லாஹ்வை சந்திக்கும் வரை கூற மாட்டேன் என்று தான் ஷஹீதாக போவதை சூசகமாக அறிவித்து விட்டு மக்காவை விட்டு ஈராக்கை நோக்கி பிரயாணப்பட்டார்கள்.


இந்த நேரத்தில் கூபாவில் கவர்னராக இருந்த ஹழ்ரத் நுஃமான் பின் பஷீர் அன்சாரி ரழி... அவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டு யஜீதின் சகோதரனான இப்னு ஜியாத் என்பவன் நியமிக்கப்பட்டான். இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை ஷஹீதாக்கும் வரை நிம்மதியாக உறங்கவும் கூடாது, சரியாக உண்ணவும் கூடாது என்று யஜீதால் கட்டளை இடப்பட்டது.

கவர்னராக நியமிக்கப்பட்ட இப்னு ஜியாத் முதலில் ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... அவர்களை பிடித்து இமாம் முஸ்லிம் ரழி... அவர்களை ஒப்படைக்குமாறு கூறினான். அவர்கள் மறுத்துவிடவே வயது முதிர்ந்த இந்த சஹாபியை சிறையில் அடைத்தான். இதை கேள்விப்பட்டு படையை திரட்டி வந்தார்கள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்கள். அந்த படை இப்னு ஜியாதின் பயம் கலந்த பேச்சில் பயந்து இமாம் முஸ்லிம் ரழி... விட்டு கிளம்பினார்கள். இறுதியாக தனித்து விடப்பட்ட ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்கள் ஒரு வீட்டில் தஞ்சம் அடைந்தார்கள். அதையும் கேள்வியுற்ற இப்னு ஜியாத் 450 பேர் கொண்ட படையை ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்களை பிடித்து வர அனுப்பினான். அதில் அநேகம் பேரை பந்தாடினார்கள் ஹழ்ரத் முஸ்லிம் ரழி... நேரிடையாக இமாம் முஸ்லிம் அவர்களை எதிர்க்க துணிவில்லாத அந்த படை நாளா புறமும் சுற்றி வளைத்து கற்களால் அடிக்க ஆரம்பித்தது. இதில் சோர்வடைந்த இமாம் முஸ்லிம் ரழி... அவர்களை பிடித்து, இப்னு ஜியாத் முன் அழைத்து சென்றது. அங்கு ஹழ்ரத் அமீருல் மூமினீன் அலீ முர்தழா கர்... அவர்களையும், ஹழ்ரத் இமாம் ஹுஸைன் அவர்களையும் லஃனத் செய்தான் இப்னு ஜியாத். பின்பு ஹழ்ரத் முஸ்லிம் ரழி... அவர்களை ஷஹீதாக்கும் படி உத்தரவிட்டு அது நடந்தேறியது. பின்பு ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... அவர்களை சிலாட்டரில் ஆடுகளை அறுப்பதை போன்று அறுக்குமாறு உத்தரவிட்டான்.

அவர்களின் உடல்கள் தெரு தெருவாக கயிறு கட்டி இழுக்கப்பட்டது. இறந்தவர்களின் உடலை சின்னாபடுத்த்ப்படும் வழமையும் உமையாக்களின் ஆட்சியில் இருந்து தான் ஆரம்பித்தது. மேலும் ஷஹீதானவர்களின் தலையும் தெரு தெருவாக பார்வையக்கப்பட்டதும் இந்த ஆட்சிகளில் தான்.


வழியிலேயே இமாம் முஸ்லிம் ரழி... அவர்கள் கோரிக்கைப்படி இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு கூபாவின் பக்கம் வர வேண்டாம், இவர்களின் மனம் மாறிவிட்டது என்று எழுதப்பட்ட கடிதமும் வந்து சேர்ந்தது. ஜுபாலா என்னும் இடத்தில் இமாம் முஸ்லிம் ரழி... மற்றும் ஹழ்ரத் ஹானி பின் உர்வா ரழி... ஆகியோரின் ஷஹீதான செய்தியும் வந்து சேர்ந்தது. மேலும் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் வருகையை தெரிந்து கொண்ட இப்னு ஜியாத் ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்களை பறக்கும் படையாக அனுப்பி பிடித்து வருமாறு கட்டளை இட்டான். வரும் வழியில் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்கள் சுற்றி வளைத்து இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்று ஹழ்ரத் இமாம் ஹுர் ரழி... இடம் கூறினார்கள். அதற்க்கு மறுத்த ஹழ்ரத் ஹுர், இப்னு ஜியாதை சந்திக்க வைப்பது தான் தன்னுடைய பணி என்றும் அது தான் தனக்கு இடப்பட்ட கட்டளை என்றும் கூறினார்கள். அதற்கு இமாம் அவர்கள் அவனை சந்திப்பதை விட இறப்பதே மேல் என்று கூறினார்கள்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் முன்னேறி செல்லும் போது இப்னு ஜியாத் இடம் இருந்து ஹழ்ரத் ஹுர் ரழி... அவர்களுக்கு கடிதம் வந்தது. அதில் இமாம் ஹுசைன் அவர்களையும், அவர்களோடு இருப்பவர்களையும் மரம் இல்லாத, கட்டிடம் இல்லாத, ஆறோ, குளமோ, குட்டையோ, ஏரியோ இல்லாத இடத்தில் இறக்குமாரும், விரைவில் தமது படை வந்து எதிர் கொள்ளும் என்றும் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்து கர்பாலாவில் இமாம் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள்.

மறுமையில் யாரு கௌசர் தண்ணீர் நமக்கு தருவார்களோ, அந்த குடும்பத்தவர்களே மூன்று நாட்கள் பச்சை தண்ணீர் கூட அருந்த வில்லை. இமாம் ஹுஸைன் ரழி... நினைத்து இருந்தால் எத்தனையோ நீரூற்றுக்களை கண்சிமிட்டும் நேரம் கொண்டு வர முடியும். ஆனாலும் அல்லாஹ் ஜல்... வின் பொறுத்தத்திற்காக பொறுமை காத்தார்கள். ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்கு பகரமாக இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை பழி வாங்குகின்றார்களாம். சிறு குழந்தைகள் உட்பட யாருக்கும் தண்ணீர் வழங்கப்படவில்லை. எத்தனை பேரிடத்தில் அதுவும் அஹ்லே பைத்திடம் ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக பழிவாங்குவார்கள் என்பது தெரியவில்லை. ஹழ்ரத் இமாம் அலீ ரழி... அவர்களோடும் இதே காரணங்களை கூறி போரிடப்பட்டது, குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இப்னு ஜியாத் இடம் இருந்து காபிர்களை நோக்கி போரிட இருந்த படை (அந்த படையினரின் கெட்ட நேரம்) இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை நோக்கி அனுப்பப்பட்டது. இமாம் அவர்களோ நான் வந்தது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் என்னை விட்டு விடுங்கள் நான் எங்கிருந்து வந்தேனோ அங்கே திரும்பி விடுகின்றேன் என்றார்கள். மேலும் கடிதம் எழுதிய அநேகம் பேர் அங்கிருந்தார்கள், அவர்களின் கடிதங்களை காட்டும் போது, இன்றைய வஹ்ஹாபிகளை போன்றே அவர்களும், அவர்கள் எழுதிய கடிதத்தையே மறுத்தார்கள்.

போர் மூண்டது முதலில் போரிட்ட முஸ்லிம் என்ற ஸல்... அவர்களின் சஹாபி ஷஹீதானார்கள், பிறகு இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் உயிர் (தியாகம் செய்யும்) நண்பர்கள் ஒவ்வொருவராக வந்து அப்படியே தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தார்கள்.

போர் நடந்து கொண்டிருக்கும் போது முஸ்லிம் என்ற பெயரில் எதிரிப்படை இருந்த நிலையிலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் தொழுகை நடத்த அனுமதி கேட்டும் மறுக்கப்பட்டது. மாறாக, இன்றைய வஹ்ஹாபிகளை போல கிண்டல் அடித்தார்கள். மேலும் போர் நடந்து கொண்டிருக்கும் போது, பெண்கள் தங்கியிருந்த கூடாரத்தில் புகுந்த ஷும்ர் தலைமையிலானா கொள்ளைக்கூட்டம் (இப்னு ஜியாதின் படையினர்) அங்கிருந்த பொருட்களை கொள்ளையடிக்க ஆரம்பித்தது (அங்கு ஒன்றும் கிடைக்கவில்லை. காரணம் அங்கு ஒன்றும் இருக்க வில்லை).

நண்பர் வட்டம் முடிந்த பிறகு அஹ்லுல் பைத் யிலிருந்து இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் மகனான ஹழ்ரத் இமாம் அலி அக்பர் ரழி... அவர்கள் களம் புகுந்தார்கள். அந்த நேரத்திலும் ஒரு கவிதையை படித்தார்கள்.
انا علي ابن الحسين ابن علي
نحن وبيت الله اولى بالنبي
تالله لايحكم في نبن البغي(بدعي)
كيف ترون ستري عن ابي

நான்
அலீயாவேன், ஹழ்ரத் ஹுஸைனின் மகன், ஹழ்ரத் அலீ யின் பேரமகன். நாங்களும் (அஹ்ல பைத்) இறை இல்லமாம் 'பாவும் நபிகள் ஸல்... அவர்களால் முதன்மை படுத்தப்பட்டோம். அல்லாஹ்வின் மீது ஆணையாக ராஜ துரோகியின், காட்டுமிராண்டியின் (மற்றொரு அறிவிப்பில் பித்'அத் வாதியின் மகன்) மகன் யஜீத் எங்கள் மீது ஆட்சி செய்வதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். நான் என்னுடைய தகப்பனாரை எவ்வாறு பாதுகாப்பாக (போரிட்டவாறு) இருக்கின்றேன் பார்த்தீரா? என்று பாடிய வண்ணம் போர் களத்தில் புகுந்தார்கள். (அல் பிதாயா வன் நிஹாயா.)

இமாம் அலீ அக்பர் ரழி... அவர்களின் அடியை தாங்க முடியாத எதிரிப்படை சிதறுண்டது. அதனால் இமாம் அலீ அக்பர் ரழி... அவர்கள் மீது கொடூரத்தாக்குதல் நடத்தி கீழே சாய்த்தார்கள். பின்பு அவர்களின் உடல் கண்டம் துண்டமாக வெட்டப்பட்டது.

அதன் பிறகு அஹ்லே பைத்திலிருந்து ஒவ்வொருவராக வந்து தங்கள் இன்னுயிரை தியாகம் செய்தார்கள். அதில் ஹழ்ரத் இமாம் ஹஸன் ரழி... அவர்களின் மகனார் ஹழ்ரத் காசிம் ரழி... அவர்களும் ஷஹீதானவர்களில் அடக்கம். இமாம் காசிம் ரழி... அவர்களை எதிரிப்படையை தலைமை தாங்கி கொண்டிருந்த உமர் அல்லது அமர் என்பவன் ஷஹீதாக்கினான். எனது சிறிய தந்தையே என்று சப்தமிட்டார்கள். ஓடோடி வந்த இமாம் ஹுஸைன் ரழி... உமர் மீது தாக்கினார்கள். அவன் அதை கையால் தடுத்ததால் அவன் கை துண்டானது. அஹ்லே பைத் திலிருந்து மொத்தம் 17 நபர்கள் ஷஹீதானார்கள். அவர்களுள் சிறு குழந்தைகளான ஹழ்ரத் அலீ அஸ்கர் ரழி... மற்றும் ஹழ்ரத் அபூபக்கர் ரழி... ஆகியோரும் அடக்கம்.

இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு முன் கடைசியாக பெரியவர்களில் ஷஹீதானவர்கள் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் பதாகையை சுமந்து கொண்டிருந்த இமாம் அவர்களின் சகோதரர் ஹழ்ரத் அப்பாஸ் ரழி... ஆவர்கள். இவர்களின் ஷஹாததிற்கு பின் இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் தனித்து விடப்பட்டார்கள். ஆனாலும் அந்த நிலையிலும் எதிரிகள் இமாம் அவர்களை நோக்கி முன்னேற தயங்கினார்கள். காரணம் இமாம் அவர்கள் வீரம் மிகுந்தவர்கள். இரண்டாவது காரணம் மன உறுத்தல், நாம் தானே அழைத்தோம், இப்படியாகி விட்டதே. இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் பெண்களோடு அவர்கள் தங்களுக்கு பின் எப்பிடி நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவித்துக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அங்கு இருந்து சிறு குழந்தையான அபுபக்கரை மடியில் வைத்துக்கொஞ்சி கொண்டிருந்தார்கள். அப்போது ஹுர்முளா என்ற ஒரு கயவன் அம்பை எய்தினான். அது அந்த குழந்தையின் கழுத்தில் குத்தியது. இமாம் அவர்களின் மடியிலேயே அக்குழந்தை ஷஹீதாகியது. பின்பு இமாம் அவர்கள் வெளியில் வந்து ஷஹீதாகிய சடலங்களை ஒன்று சேர்த்துக்கொண்டிருந்தார்கள். எதிரிகள் இமாம் அவர்களை நெருங்கவே இல்லை. பிறகு பெண்கள் பக்கம் நெருங்கினார்கள். அப்போது அங்கிருந்த அலி அஸ்கர் என்ற குழந்தையை கொஞ்சிக்கொண்டிருந்தார்கள். எதிரிகளில் மூகிதுன் நார் என்பவன் அம்பு எய்த அது இமாம் அலீ அஸ்கரின் தொண்டையில் இறங்கியாது. அம்பை பிடுங்கிய இமாம் அவர்கள் இரத்தத்தை பிடித்து அல்லாஹ்விடம் சாட்சியாக்கினார்கள்.

பிறகு இமாம் அவர்கள் வெளியேறினார்கள். புறாத் ஆற்றை நோக்கி சென்றார்கள். அங்கு தண்ணீர் எடுத்து குடிக்கும் போது ஒரு அம்பு இமாம் அவர்களை நோக்கி வந்தது. இமாம் அவர்களின் வாயில் குத்தியது. இமாம் அவர்கள் அம்பை பிடுங்கி பீறிட்டு வந்த குருதியை அல்லாஹ்விடம் சாட்சியாக்கி, அல்லாஹ்விடம் இவர்களின் கணக்கை மறுமையில் வைத்துக்கொள்வாயாக என்று பிரார்த்தித்தார்கள். அம்பு எய்தவனையும் சபித்தார்கள். அதன் காரணமாக அவனுக்கு தாகம் ஏற்பட்டது. அதன் கடுமையாலே மரணத்தை தழுவினான். பிறகு இமாம் அவர்கள் போர்க்களம் சென்றார்கள். யாரும் இமாம் அவர்களை எதிர்க்க துணிவில்லை.

இமாம் அவர்கள் , ஹழ்ரத் உஸ்மான் ரழி... அவர்களுக்காக பழி வாங்குகின்றோம் என்று கூறப்பட்டதால் தான் யார் என்று ஒரு கவிதையை இமாம் ஹுஸைன் ரழி... அங்கே படித்தார்கள்.

اَنَا ابْنُ عَلِيّ الْخَيْرِ مِنْ الِ هَاشِمِ

كَفَانِيْ بِهذَا مَفْخَرٌ حِيْنَ اَفْخُرُ

وَجَدّيْ رَسُوْلُ اللهِ اَكْرَمُ مَنْ مَشى

وَنَحْنُ سِرَاجُ اللهِ فىِ النَّاسِ يَزْهُرُ

وَفَاطِمَةٌ اُمّيْ سُلاَلَةُ اَحْمَدِ

وَعَمّيَ يُدْعى ذَالْجَنَاحَيْنِ جَعْفَرُ

وَفِيْنَاكِتَابُ اللهِ اُنْزِلَ صَادِقًا

وَفِيْنَا الْهُدى وَالْوَحْيُ وَالْخَيْرُ يُذْكَرُ

وَنَحْنُ اَمَانُ اللهِ لِلْخَلْقِ كُلّهِمْ

نَقُوْلُ بِهذَا لِلاَمَانِ وَنَجْهَرُ

وَشِيْعَتُنَا وَاللهِ اَكْرَمُ شِيْعَةِ

وَمُبْغِضُنَا يَوْمَ الْقِيَامَةِ يُخْسَرُ


இதில் தனது தந்தை யார், தாய் யார், பாட்டனார் யார், பெரிய தந்தை யார், யாரிடம் குர்'ஆன் இறக்கப்பட்டது. எங்களை இந்த சமூதாயத்தில் அமானிதமாக ஒப்படைத்தார்கள் நபிகளார் என்றும், அதுவே ஈமான் என்றும், எங்கள் மீது யார் பொறாமை கொள்வாரோ அவரின் மறுமை வாழ்வு அழிக்கப்படும் என்று பொருள் பட இக்கவிதையை படித்தார்கள்.

இதை படித்ததும் எதிரிகள் இமாம் அவர்களை தாக்க துணிந்தார்கள். இமாம் அவர்களும் தாக்கினார்கள். இமாம் அவர்களின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் கூட்டம் சிதறுண்டது. பிறகு ஒன்று பட்டு ஒட்டு மொத்தமாக இமாம் அவர்களை சுற்றி நின்று தாக்க ஆரம்பித்தார்கள். இமாம் அவர்கள் அணிந்திருந்த ஹெல்மெட் உடைக்கப்பட்டது. தலைப்பாகையை அணிந்த இமாம் அவர்கள் மீண்டும் போரிட்டார்கள். அப்படியே இமாம் அவர்களின் இடது கையும் துண்டிப்பட்டது. இமாம் அவர்கள் வலது கையில் வாளை எடுத்து போரிட்டார்கள். சினான் பின் அனஸ் என்பவன் இமாம் அவர்கள் புனித மிகு நெஞ்சத்தில் ஈட்டியை பாய்ச்சினான். நிலை தடுமாறி இமாம் அவர்கள் கீழே விழுந்தார்கள். சுதாரித்து எத்தனிக்கையில் ஷுமர் என்பவன் இமாம் அவர்களின் புனிதமிகு நெஞ்சில் அமர்ந்து கழுத்தை அறுக்க முனைந்தான். அப்போது இமாம் அவர்கள் நபிகளார் ஸல்... அவர்கள் உண்மை கூறினார்கள் என்று உரைத்தார்கள். அது என்ன? நபிகளார் ஸல்... அவர்கள் கூறினார்கள் எனது அஹ்லே பைத் உடைய ரத்தத்தை ஒரு மரநாய் குடிக்கும் என்றார்கள். இந்த ஷுமர் வெண்குஷ்டரோகி. அதனால் மரநாய் என்று குறிப்பிட்டார்கள். இமாம் அவர்களை ஷுமர் ஷஹீதாக்கினான்.

இமாம் மற்றும் ஷுஹதாக்களின் தலைகள் ஈட்டியில் எந்தப்பட்டு தெருக்களில் பார்வையாக்கப்பட்டது. யார் மூலம் பர்தா இந்த உலகத்தில் அறிமுக மானதோ அந்த குடும்பத்தின் பெண்கள் தெருக்களில் பர்தா இல்லாமல் அலைக்களிக்கப்பட்டனர். யார் நபிகளாரின் மீது சவாரி செய்து நபிகளார் சவாரி மட்டும் சிறந்தது அல்ல சவாரி செய்பவரும் சிறந்தவர் (திர்மிதி) என்று கூறினார்களோ, அந்த புனித உடல்களின் மீது குதிரைகள் ஒட்டப்பட்டு, உடல்கள் சின்னா படுத்தப்பட்டன. (தபரீ, பிதாயா) ஷியாக்களின் அறிவிப்பு என்று இதை கூற முடியவில்லை. காரணம் ஷுஹாதாக்களின் தர்காக்கள் தொலைவில் இருக்கின்றது. இமாம் ஔன் என்ற இடம், இமாம் ஹுர் உடைய மகாம், ஹழ்ரத் ஹபீப் பின் மழாஹிர் உடைய தர்பார் (இமாம்களோடு இருந்து போர் புரிந்தவர்கள்) எல்லாம் தொலைவில் இருக்கின்றது.

இமாம் அவர்களின் புனித தலை இப்னு ஜியாதின் மத்தியில் கொண்டு வரப்பட்ட போது, அவன் இமாம் அவர்களின் மூக்கில் கம்பை வைத்து (இமாம் ஹுஸைன் ஐ) போல அழகை நான் பார்க்கவில்லை என்று கூறினான் (ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழி..., திர்மிதி). இறந்தவர்கள் எப்பிடி இழிவு படுத்தப்பட்டார்கள் பாருங்கள். மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களின் இரு உதடிற்கு மத்தியில் அந்த கைத்தடியை வைத்தான் அதற்க்கு அங்கிருந்து சஹாபா பெருமக்கள் வாக்குவாதமே செய்தார்கள். அவர்களையும் தரக்குறைவாக பேசினான் என்பதையும் வரலாற்றில் பார்க்கலாம்.


அஹ்லே பைத் களின் மீது நாம் உண்மையாக பாசம் வைக்க வேண்டும். கர்பலா வின் நோக்கமே, அதிகாரம் தனியாக இருக்க வேண்டும். அந்த காலத்தில் அதிகாரி யாரோ அவர் தான் தொழ வைக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அது மாற வேண்டும். கர்பலா நடந்தேறாமல் இருந்து இருந்தால் எந்த ஆலிமும் பள்ளியில் தொழ வைத்திருக்க முடியாது. ஆட்சி தான் பிடிக்க வந்தார்கள் என்று குற்றச்சாட்டு இன்று PJ கோஷ்டிக்களால் கூறப்படுகின்றது. இமாம் ஹுஸைன் ரழி... அவர்கள் ஈராக் வந்து தான் ஆட்சி பிடிக்க வேண்டும் என்பதல்ல. மக்காவில் இருந்த வண்ணம் எப்பிடி ஹழ்ரத் இப்னு ஜுபைர் ரழி... ஆட்சி பிடித்தார்களோ அப்படி பிடித்திருக்க முடியும் (ஹழ்ரத் இப்னு ஜுபைர் கூட இமாம் ஹுஸைன் ரழி... அவர்களை தலைமை தாங்க சொன்னார்கள்). இமாம் அவர்கள் ஆட்சியை விரும்பவில்லை.

மேலும் இந்த PJ இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுக்கு பழைய பைத்தியம் பிடித்தது, பழைய கிறுக்கு பிடித்தது என்று கூறுகின்றார். அந்த வீடியோ வை பார்க்க வேண்டுமானால் இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


நாவடக்கம் பற்றி தெரியாத PJ சஹாபாக்களை எல்லாம் திட்டி கடைசியில் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களையும் திட்டுகின்றான் என்றால் இவரை என்னவென்பது. மார்கத்தில் ஒன்றும் தெரியாது என்று தானே விளங்க முடிகின்றது. நபிகளாரின் குடும்பத்தவர்களின் சிறப்பானது, அவர்களுக்கு சதகா பொருளும், ஜகாத் பொருளும் ஹராமானவை. இன்று இருக்கின்ற சாதாத் மார்கள், சையது மார்கள், மௌலானாக்கள், தங்கள் கள் அனைவருக்கும் இந்த சட்டம் இன்றளவும் இருக்கின்றது. இதை சில வருடங்களுக்கு முன் மதுரையில் ஒபுளாபடித்துறையில் பேசிய PJ. இது சிறப்பல்ல. ஏன் தெரியுமா நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சதகா, ஜகாத் பொருளை ஹராமாக்கினார்கள்? பின்னால் வரும் என்னுடைய வாரிசுகள் மக்களை சுரண்ட ஆரம்பித்து விடுவார்கள். இதனால் தான் தடை செய்தார்கள் என்று துணிந்து பொய் சொல்லி விட்டு சென்று இருக்கின்றார். அந்த ஒலி நாடா நம்மிடம் உள்ளது. ஆக இந்த மனிதரின் சிந்தனையை பாருங்கள்.

நமது இமாம்களை பாருங்கள், ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் நபியின் குடும்பத்தவர்களே உங்களுக்கு இருக்கின்ற ஒரு சிறப்பை கூறினாலே மக்கள் உங்கள் சிறப்பு என்ன வென்று தெரிந்து கொள்வார்கள். அது என்ன தெரியுமா?

من لم يصلي عليكم فلا صلوة له


உங்கள் மீது யாரு ஒருவன் தொழுகையின் போது சலவாத் கூறவில்லையோ அவனது தொழுகை (பரிபூரணமான) தொழுகையே அல்ல.

அல்லாஹ் குர்'ஆனில் நபிகளாரை தாங்கள் செய்த மார்க்க தியாகத்திற்காக ஒரு உபகாரத்தை எதிர்பார்த்து, கேட்குமாறு கூறுகின்றான்.

قُل لَّا أَسْأَلُكُمْ عَلَيْهِ أَجْرًا إِلَّا الْمَوَدَّةَ فِي الْقُرْبَىٰ


நான் உங்களிடம் என்னுடைய குடுமததவர்களின் மீது உபகாரம் செய்வதை தவிர வேறு ஒன்றையும் எதிர் பார்க்க வில்லை. (42:23).

மேலும் இன்று யஜீதை இந்த வஹ்ஹாபிகளும், தேவ்பந்திகளும் தாபிஈ என்றும் அவனை திட்டக்கூடாது என்றும் கூறுகின்றார்கள். ஆனால் இமாம் அஹமத் அவர்களின் மகனார் இமாம் அஹமதிடம் யஜீதை 'அனத் அனுப்புவதைப்பற்றிய தங்களின் கருத்து என்ன என்று கேட்கும் போது, அல்லாஹ் எவனை சபிக்கின்றானோ, அவனை நான் சபிக்காமல் இருப்பேனா என்று கேட்டார்கள். (பிதாயா வன் நிஹாயா). மேலும் ஹழ்ரத் உமர் பின் அப்துல் அஜீஸ்(ரஹ்...) அவர்களின் அவையில் ஒரு மனிதர் யஜீதை அமீருல் மூமினீன் என கூறினார். அதை கேட்ட ஹழ்ரத் உமர் யஜீதை போய் அமீருல் மூமினீன் என்கின்றாயே என கேட்டு 20 கசையடி வழங்கினார்கள் (தஹ்தீபுத் தஹ்தீப்). அதனால் யஜீதை திட்டலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

யஜீதுடைய ஆட்சிக்காலத்தில் நடைபெற்றாலும் அவன் இதில் நேரிடையாக ஈடுபடவில்லை அதனால் அவனை திட்டக்கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். அவன் ஆட்சியில் நடைபெற்றால் அவன் சம்பந்தமில்லையா. இதே நேரத்தில் ஏதாவது ஒரு நல்ல காரியம் நடந்தால் அது யஜீத் ஆட்சியில் தான் நடைபெற்றது என்று சொந்தம் கொண்டாட வர மாட்டார்களா? (அவன் தான் இந்த சம்பவத்தை நடத்தினான் என்பது வேறு விஷயம்). இந்த சம்பவத்தால் யஜீத் சந்தோஷித்தான் என்பது தான் அவன் பாடிய எங்கே என்னோடு மூதாதையர்கள்? பத்ரில் கொல்லப்பட்டார்களே அவர்கள்! அவர்களுக்கு பகரம் வாங்கி உள்ளேன் என்று பாடிய கவிதை இன்றும் பாதுகாக்கப்பட்டு அவனுடைய முகத்திரையை கிழித்துக்கொண்டிருக்கின்றதே? பத்ருப்போருக்கு பகரம் என்ற இவனின் வார்த்தை இவனின் ஈமானையும் கேள்வி குறி ஆக்கிக்கொண்டிருக்கின்றதே? மேலும் ஹழ்ரத் இமாம் ஹுஸைன் ரழி... அவர்களுடைய இரு உதடுகளுக்கு மத்தியில் கம்பை வைத்து இது தான் எனக்கும் ஹுஸைன் க்கும் மத்தியில் உள்ள தரஜா என்று கூறினானே இதை எல்லாம் என்னவென்பது. யஜீதை திட்டக்கூடாது, தாபிஈ என்பவர்கள் என்ன பதில் சொல்ல போகின்றார்கள் என்பது தெரியவில்லை.

நபிகளார் ஸல்... அவர்கள் இமாம் அவர்களை பற்றி பல விஷயங்களை கூறி உள்ளார்கள்.

  • சுவனத்து இளைஞர்களின் தலைவர்.
  • மணம்தரும் நறு மலர்.
  • ஹுஸைன் என்னிலிருந்தும் நான் ஹுஸைன் யிலிருந்தும் இருக்கின்றோம்.
  • ஹுசைனை யார் நேசிப்பாரோ அவரை அல்லாஹ் நேசிப்பான்.
  • யார் என்னையும், இந்த இருவரையும், இவர்களின் தந்தை, மற்றும் தாயையும் யார் நேசிப்பரோ அவரும் நானும் சுவனத்தில் ஒரே இடத்தில் இருப்போம்.
  • யா அல்லாஹ் இவர்களை நான் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக, யார் இவர்களை நேசிக்கின்றாரோ அவரை நானும் நேசிக்கின்றேன், நீயும் நேசிப்பாயாக.
  • எனக்கு பின்னால் இரண்டை விட்டு செல்கின்றான். அதை பின்பற்றி நடக்கும் காலம் எல்லாம் வழி தவற மாட்டீர்கள். 1 . இறை வேதம் 2 . எனது குடும்பத்தவர்கள். என்னிடம் ஹவுளுள் கவுசரில் என்னிடம் சேர்க்கும் வரை இவர்கள் உங்களை விட்டு இவர்கள் பிரிய மாட்டார்கள்.

இப்படி கூறிக்கொண்டே செல்லலாம். நேரமும் காலமும் பத்தாது.

இமாம் ஹுஸைன் அவர்களின் நினைவாக கண்ணீர் சொறிவது கூடும். மாறாக பஞ்சா எடுப்பது, தீ மிதிப்பது, கத்தி வைத்து கீரிக்கொள்வது, சங்கிலி வைத்தி அடித்துக்கொள்வது, மார் தட்டிக்கொள்வது தடுக்கப்பட்டுள்ளது.

யா அல்லாஹ் எங்களை அஹ்லே பைத் மீது முஹப்பத் வைக்கும் கூட்டத்தில் ஆக்குவாயாக. இவர்களை பழிக்கும் கூட்டத்தை விட்டு தூரமக்குவாயாக. யார் எல்லாம் யஜீதை நல்லவன் என்கின்றார்களோ, மறுமையில் அவர்களை யஜீதோடு எழுப்புவாயாக. எங்களை இமாம் ஹுஸைன் ரழி... அவர்களோடு எழுப்புவாயாக. ஆமீன், ஆமீன் யா ரப்பல் ஆலமீன்.

மூல நூற்கள்:
1. அல் பிதாயா வன் நிஹாயா,
2. தமிழக காழீ பத்ரு தவ்லா சாஹிபின் داستان غم
3. அத் தப்ரீ.
4. தஹ்தீபுத் தஹ்தீப்.
5. திர்மிதி.
6. முஸ்லிம்.
7. புகாரி.