முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, October 29, 2010

PJ வின் தோல்வி ஏன் உறுதியானது.

PJ வின் மொழி பெயர்ப்பில் உள்ள அசிங்கங்கள் என்று தலைப்பு ஏன்?

களியக்காவிளையில் 2006 ஆம் ஆண்டு விவாதம் நடந்தது. தர்கா கட்டலாமா என்ற தலைப்பில் விவாதம் செய்த போது, புகாரியில் வரும் பள்ளிவாசல் சம்பந்தப்பட்ட ஹதீஸை வைத்து, சம்பந்தம் இல்லாமல் தர்கா கட்ட கூடாது என்று சொல்லி கொண்டிருந்தார் இந்த PJ. ஜமாலி ஹழ்ரத் அவர்கள் அது பள்ளிவாசல் கட்டுவதற்குண்டான ஹதீஸ். தர்கா கட்டக்கூடாது என்று இதில் வரவில்லை என்று தெளிவாக கூறி விட்டார்கள். மேலும் அவர் ஆதாரமாக காட்டிய ஹதீஸ் புகாரியில் வருவதால், இவர் புகாரி ஹதீசையே ஏற்றுக்கொள்வதில்லை அதனால் புகாரியை இவர் ஆதாரமாக்கக்கூடாது என்று நபிகளார் ஸல்... அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதை இவர் இவருடைய குர்'ஆன் மொழிபெயர்ப்பின் மூலம் மறுக்கும் ஆதாரப்பூர்வமான ஹதீஸை காட்டி, ஆதாரப்பூர்வமான ஹதீசையே மறுக்கும் உங்கள் நிலை என்ன? என்று கேட்ட போது,

பால் குடி சம்பந்தப்பட்ட ஹதீசையும் மறுக்கின்றோம் என்று கூறி காபிர் ஆகி விட்டார் இந்த PJ. அந்த விவாத தொடர்ச்சியில் எனது தர்ஜுமாவை பற்றி விவாதிக்க வேண்டுமானால் தனி தலைப்பை போடுங்கள், என் தர்ஜுமாவை கொண்டு வர்றேன், நீங்கள் ஏற்றுக்கொண்ட தர்ஜுமாவை யும் கொண்டுவாருங்கள், அதில் இருக்கும் தப்பையும் பேசுவோமா என்று கூறி அறை கூவல் விடுத்தார் இந்த PJ.

அவர் அறை கூவல் விடுக்கும் வீடியோ இதோ:

அதன் சம்பந்தப்பட்டு தான் இந்த தலைப்பில் விவாத ஒப்பந்தம் போடப்பட்டு 23-10-2010 மற்றும் 24-10-2010 ஆகிய தேதிகளில் இந்த தலைப்பில் சென்னையில் விவாதம் நடந்தது.

PJ அந்த விவாதத்தில் தோற்று விட்டதற்கு ஆதாரம் அவரது நிலைப்பாட்டிற்குரிய பேனர் தான். அந்த பேனர் இல் மோசடி செய்து, தான் ஒரு மோசடி மன்னன் என்றும் எனக்கும் நியாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று படம் பிடித்து காட்டி தோற்றுப்போனார் PJ.

போடப்பட்ட ஒப்பந்தம், PJ வின் மொழிபெயர்ப்பில் (?!?!?!?!?!?!?) உள்ள அசிங்கங்கள், PJ வின் நிலைப்பாடு PJ வின் மொழிபெயர்ப்பில் தவறில்லை என்பதும், ஜமாலி (சுன்னத் ஜமாத்தினர்) அவர்கள் ஏற்றுக்கொண்ட தர்ஜுமாவில் தான் பொய்கள் உள்ளன என்பதும் அவரின் நிலைப்பாடு. அந்த நிலைப்பாட்டை கூட, அவர் அவர்களின் நிலைப்பாட்டை விவரிக்கும் பேனர் இல் விவரிக்க முடியாததின் மூலம், காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் தர்ஜுமா தான் உண்மை என்றும், அதில் எந்த தவறும், இல்லை என்றும், பொய்கள் அதில் இல்லவே இல்லை என்றும், இமாம்கள் உண்மையார்கள் என்றும், சுன்னத் ஜமாத்தினர் தான் நேர்வழியில் உள்ளவர்கள் என்று ஒத்துக்கொண்டார் PJ.

யார் இந்த தலைப்பிற்கு அழைப்பு விடுத்தார்களோ அவர்களை அல்லாஹ் தோற்கடித்தான். (இவர் இந்த தலைப்பில் விவாதம் செய்ய வேண்டும் என்று களியக்காவிளையில் சொல்லி விட்டு, ஜமாலி தான் இந்த தலைப்பில் விவாதம் செய்ய அழைத்தார் என்று சென்னையில் பூசி மெழுகி எனக்கும் உண்மைக்கும், சத்தியத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று படம் பிடித்துக்காட்டினார் PJ.)

மேலும் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் PJ வின் தர்ஜுமாவில் எழுதி வைத்திருந்த பொய்கள், புரட்டுக்கள், ஆபாசங்கள், அசிங்கங்கள், கட்டுக்கதைகளை சுட்டிக்காட்டி கேள்வி கேட்ட போது, யார் இந்த தர்ஜுமாவை எழுதினாரோ, அவருக்கு முன்னால் அவரின் தப்பை காட்டிய போது, ஆம் இது தப்பு தான், இது பொய் தான், இது ஆபாசம் தான், இது அசிங்கம் தான், இது கட்டுக்கதை தான், இது மனோ இச்சை தான் என்று வாய் மூடி (பதில் பேச முடியாமல்) ஏற்றுக்கொண்டார் PJ.

ஒரு தவறை கூட நாம் பின்பற்றும் தர்ஜுமாவில் காட்ட முடியாததின் மூலம் பகிரங்கமாக தோற்றுப்போனார் இந்த PJ.

புவியியல் தேர்வு எழுத சென்ற மாணவன் கணிதத்தை படித்துக்கொண்டு போனானாம், அது போல குர்'ஆன் மொழி பெயர்ப்பு விவாதத்திற்கு மத்'ஹபை பற்றி பேசி தோற்றுப்போனார் PJ.

புதுக்கோட்டைக்கு வழி கேட்டால் கொட்டைப்பாக்கிற்கு வழி சொன்னதைப்போல என்ற பழ மொழிக்கு அர்த்தமாக, இவரின் தர்ஜுமாவில் விவாதம் செய்ததற்கு, தர்ஜுமாவில் விவாதம் செய்யாமல் (செய்ய முடியாமல்) மத்'ஹப் நூலின் பக்கம் தாவினார் (குரங்கு புத்தி, என்ன செய்ய)

தர்ஜுமாவில் உள்ள தவறுகள் என்று ஒப்பந்தம் போட்டு விட்டு, மத்'ஹபை பற்றி பேசிய போது, ஜமாலி ஹழ்ரத் அவர்கள் இது தர்ஜுமா சம்பந்தப்பட்ட விவாதம் என்று நினைவு படுத்திய போது மத்'ஹப் நூல் கள் (பத்'ஹுல் முஈன், ரத்துல் முக்ஹ்தார்) தான் குர்'ஆனின் விளக்கவுரை என்று ஒரு புது தத்துவத்தை உதிர்த்து, எனக்கு மார்க்க அறிவு கொஞ்சமும் இல்லை என்று ஒத்துக்கொண்டார் PJ.

பிக்ஹு மற்றும் குர்'ஆன் விளக்கவுரைக்கு வேறுபாடு தெரியாமல் வழுக்கி விழுந்து அடிப்பட்டு தோற்றுப்போனார் PJ.

அஃலா ஹழ்ரத், மற்றும் சுன்னத் ஜமாத்தினரை கப்ரு வணங்கிகள் என்றும், கப்றிற்கு சஜ்தா செய்பவர்கள் என்றும் அவரின் பத்திரிகையில் அவதூறாக எழுதியதை வாசித்து காட்டி, அஃலா ஹழ்ரத் அவர்கள் கப்ர் ஜியாரத் செய்வது சம்பந்தமாக நமது நிலைப்பாட்டை எழுதியுள்ள கிதாபுகளை வாசித்துக்காட்டி, அதில் நாம் கப்ரை சஜ்தா செய்யக்கூடாது, அது நமது நிலைப்பாடு இல்லை என்று அரபி மற்றும் உர்து கிதாபுகளை வாசித்து காட்டிய போது, அவரின் எழுத்தை நியாயப்படுத்த முடியாமலும், நமது நிலைப்பாட்டை தவறு காண முடியாமலும், தான் சொன்னது அவதூறு என்று மெளனமாக ஒத்துக்கொண்டு குப்புற விழுந்தார் PJ. இதன் மூலம் சுன்னத் ஜமாத்தினரை மட்டும் அல்ல, நமக்கு எதிரான ஏனைய வஹ்ஹாபி பிரிவுகளையும் இப்படி தான் அவதூறு கூறுவது, அபாண்டப்பழி சுமத்துவது, அண்டப்புளுகுவது எனக்கு பழக்கம் என்று சொல்லாமல் சொன்னார் இந்த PJ.

இந்த விவாதத்தின் மிகப்பெரிய வெற்றி என்னவென்றால் விவாதிக்கும் இரு தரப்பிலும் ஜமாலி அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்ததே இந்த விவாதத்தின் மிகப்பெரிய வெற்றி (என்ன ஆச்சரியமாக பாக்குறீங்க! அது தான் ஜமாலி அவர்களோட Clip போட்டு நம்ம நிலைப்பாட்டை காட்டிக்கொண்டே இருந்தார்லே PJ. அதை தான் சொல்றேன் இரு தரப்பிலும் நமக்கு தானே நேரம் கிடைத்தது என்று )


தொடை மறைக்கப்பட வேண்டிய பகுதியாக இருக்க அதை மறைக்கத்தேவை இல்லை என்று ஆபாசத்தை போதித்து விட்டு, பெண்களை பள்ளிக்கு அழைத்து வருகின்றீர்கள் என்று கேட்ட போது ஒத்துக்கொண்டார் PJ. அதன் மூலம் நான் அசிங்கம் பிடித்தவன் என்று ஒத்துக்கொண்டார்.

ஆண்களும் பெண்களும் கலந்து இருக்கலாம் என்று புதிய தத்துவத்தை உதிர்த்த போது, தொடை தெரிய உக்காந்து கொண்டு, ஆண்கள் பெண்கள் கலந்து உரையாடுவது கிருஸ்தவ கலாசாரமே, இஸ்லாத்தில் கூடுமா என்று ஜமாலி அவர்கள் கேட்ட போது, நான் கிறிஸ்துவனின் கை கூலி தானே என்று ஒத்துக்கொண்டார் PJ.

நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக ஹதீஸில் வருகின்றதே அந்த ஹதீஸை எப்பிடி மறுக்கின்றீர்கள் என்று கேட்ட போது, எனக்கு என்ன மனோ இச்சை இல்லையா அதன் படி தானே சொல்வேன் என்று சொல்வதை போல மௌனியாகி மனோ இச்சையை கடவுலாக்கினார் PJ.

ஆரம்பத்தில் மார்கத்தில் ஒன்றை (ஜும்மா விற்கு முன் சுன்னத், பெண்கள் ஜியாரத்) கூடாது என்று சொல்லி, பிறகு கூடும் என்றும், ஆரம்பத்தில் ஒன்றை (பன்றியின் மாமிசம் அல்லாத ஏனைய உறுப்புக்கள்) கூடும் என்று சொல்லி பிறகு கூடாது என்று மார்க்கத்தில் சுய கருத்தை திணித்து, கயமைத்தனம், அயோக்கியத்தனம், அடாவடித்தனம், பொய், புரட்டு, பிராடு, பித்தலாட்டம் ஆகியவற்றிற்கு ஏக போக சொந்தக்காரராக மிளிர்ந்தார் இந்த PJ.

களியக்காவிளையில் நடந்த மத்'ஹப் சம்பந்தமான விவாதத்தில் பொய்யர் ஜைனுலாப்தீன் (PJ) உடைய அணி வைத்த குற்றச்சாட்டிற்கு, அரபியில் வாசித்து அர்த்தம் சொன்னால் நீங்கள் அர்த்தம் வைத்தது தவறு என்று நீங்கள் சுட்டிக்காட்டிய கிதாபில் இருந்து காட்டுவேன் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கூறிய போது வாய் பொத்திக்கொண்டிருந்த PJ, சென்னையில் நடந்த தர்ஜுமா சம்பந்தப்பட்ட விவாதத்தில், தர்ஜுமா பற்றி பேசினால் தோற்றுவிடுவோம் என்ற காரணத்தால் விவாதத்திற்கு சம்பந்தமில்லாத மத்'ஹப் என்ற தலைப்பிற்கு தாவினார் PJ. (صغيرة என்ற அரபி சொல்லுக்கு பெரியவள் என்று அர்த்தம் சொன்னவங்களுக்கு அரபி வாசிக்க சொன்னால் எப்பிடி வாசிப்பாங்க! இதை எல்லாம் இப்படி பச்சையாக சொல்லலாமா)

ஜமாலி அவர்களோ மத்'ஹபை பற்றி பேச வேண்டுமானால் களியக்காவிளையில் தோற்று விட்டதாக எழுதி இந்த அரங்கத்தில் தந்து விட்டால், இப்போதிருந்து அதையே பேசலாம் என்று அறை கூவல் விடுத்தும் மத்'ஹபை பற்றியே பேசியதில் இருந்து இவர்களின் வடிகட்டிய கோழைத்தனம் வெளிப்பட்டது.

ஒரு தலைப்பை பேசி விட்டால், அந்த தலைப்பை பற்றி பேசுவது முறை இல்லை என்னும் ஒரு அடிப்படை அறிவு கூட இல்லை இந்த PJ விற்கு. எப்போது விவாதம் செய்தாலும், எங்கு விவாதம் செய்தாலும் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் மத்'ஹபை பற்றி தான் பேசுகின்றார் இந்த PJ. தலைப்பில் சம்பந்தம் இல்லாமல் பேசிவிட்டு பதில் சொல்லவில்லை என்று கூறினால் இது நியாயமா என்று மக்களே யோசித்துக்கொள்ளவேண்டும்.

விவாதத்திற்கு புது தலைப்பில் அழைத்தால் எல்லா பிரச்சனையையும் பேசவேண்டும் என்று சொன்ன PJ, இப்படி எப்போதும் மத்'ஹபை பற்றியே பேசிக்கொண்டிருந்தால் எப்பிடி புது புது தலைப்பில் விவாதம் செய்ய முடியும், விவாதம் செய்ய இவர் விடப்போகின்றார் என்பதை மக்கள் விளங்கிக்கொள்ள வேண்டும். PJ யும் இதை பற்றி கருத்தில் கொள்ள வேண்டும்.


குர்'ஆன் ஹதீஸ் மட்டும் தான் ஆதார நூற்கள் அதை தான் பின்பற்ற வேண்டும் என்று கூறியவர். ஒருவர் வரும் போது எழுந்து நிக்கலாமா என்று கேட்கும் போது குர்'ஆன், ஹதீஸை ஆதாரமாக்க முடியாமல் கருணாநிதியை ஆதாரமாக்குகின்றார். மேடையில் நான் சென்றால் கருணாநிதி எழும்புவது இல்லை, அதனால் நானும் எழும்புவது இல்லை. கருணாநிதியின் வீட்டிற்கு நிதி பெற சென்றால், அங்கு அவர் எழுந்து வரவேற்கின்றார், அதனால் நானும் எழுந்து வரவேற்க வேண்டும் என்று கூறி, குர்'ஆன் ஹதீஸை புறக்கணித்தார் இந்த PJ. இந்த விஷயத்தை சுட்டிக்காட்டி கேள்வி வைத்த போது, மெளனமாக ஆமோத்தித்தார் PJ.

ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி போன்ற மத்'ஹபுகளை பின்பற்றக்கூடாது என்று சொல்பவர்களுக்கு, நாத்திகரான கருணாநிதியின் மத்'ஹபை பின்பற்ற வைத்தானே அந்த இறைவனின் விளையாட்டை தான் என்னவென்பது. குர்'ஆன், ஹதீஸ் பின் பற்றுவதை விட்டு விட்டு கருணாநிதியை முன் மாதிரியாக வைத்து அவரின் மத்'ஹபை பின்பற்றி தானும் நாத்திகர் என்று பறை சாற்றிக்கொண்டிருக்கின்றார் இந்த PJ.

கடுமையான விமர்சனங்களை மரியாதையோடு விமர்சனம் செய்யும் சுன்னத் ஜமாத்தினர் ஒரு பக்கம், அரங்கத்திலேயே விவாதம் செய்யும் நமது ஜமாலி ஹழ்ரத் அவர்களையே ஒருமையில் திட்டும் ஒரு கூட்டம் மறு பக்கம், நமது இமாம்களை (ஹழ்ரத் இப்னுல் அரபி ரழியல்லாஹு அன்ஹு வை) கூட ஒருமையில் அவர்கள் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளதை சுட்டிக்காட்டி கேட்ட போது, அந்த ஷைத்தானை அப்படி தான் கூறுவோம் என்று ஒரு முஸ்லிமை ஷைத்தான் என்று கூறி, அதற்கு அவர்கள் தகுதி இல்லாத நிலையில் ஷைத்தானாகி போனார் இந்த PJ.

குர்'ஆன் ஹதீஸிற்கு யார் முரணாக விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்கள், குர்'ஆன் ஹதீஸிற்கு முரணாக இறைவனுக்கு உருவம் உண்டு என்று கூறிய இப்னு குதைபா வின் கருத்தை எடுத்துக்கொண்டு, பின்பற்றியதன் மூலம் இவர்களின் சொல்லில் உண்மை இல்லை என்பதும், இவர்கள் இப்னு குதைபாவின் மத்'ஹபை பின்பற்றுபவர்கள் என்பதும் தெளிவாக படம்பிடித்துக்காட்டிக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆட்டை கடித்து, மாட்டை கடித்து, மனிதனை கடிப்பதை போல, மனிதனை கடித்து, இமாம்களை கடித்து, சஹாபாக்களை கடித்து, இப்போது நபிமார்களை கடிக்க ஆரம்பித்துள்ளார்கள் இந்த பரமார்த்த குருஜியின் கூட்டத்தினர்.

அதாவது, அல்லாஹ் குர்'ஆனில் ஹழ்ரத் யூசுப் அலை... அவர்கள் பரிசுத்தமானவர்கள் என்று கூறுகின்றான். அதை மறுத்து ஹழ்ரத் யூசுப் அலை... அவர்களுக்கு ஜுலைகா அலை... மீது அந்த நேரத்தில் ஈர்ப்பு வந்தது என்று குர்'ஆன் வசனத்தை மறுத்து ஒரு நபியை கொச்சைப்படுத்தியதை அவரை உலுக்கி கேட்ட போது, நான் பைத்தியமாகி விட்டேன் என்று சொல்லாமல் சொன்னார் இந்த PJ.

இறைவனுக்கு சக்தி இல்லை என்று ஹழ்ரத் யூனுஸ் அலை.... அவர்கள் நினைத்தார்கள் என்று எழுதியுள்ளதை PJ வை துளைத்து கேட்ட போது, நபியையே களங்கப்படுத்தி, நபிக்கே அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இல்லை என்று நபியை காபிராக்க முயற்சித்ததின் மூலம் காபிராக மாறினார் இந்த PJ.

ஹழ்ரத் ஆதம் அலை... மற்றும் ஹழ்ரத் ஹவ்வா அலை.... ஆகியோர் நிர்வாணமாக தான் சுவனத்தில் இருந்தார்கள் என்றும், அந்த பழத்தை உண்ட பிறகு தான் அவர்களுக்கு பாலுணர்வு வந்தது என்று அசிங்கமாக சிந்தித்து ஒரு நபியை கொச்சைப்படுத்தியதன் மூலம் எப்போதும் அந்த சிந்தனை தான் எனக்கு இருக்கும் என்றும், நான் ஷைத்தான் தான் என்றும் ஒப்புக்கொண்டார் PJ.

கலாலா சம்பந்தமான வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று குர்'ஆனில் இட்டுக்கட்டி கூறி குர்'ஆனின் வசனத்தை மறுத்ததின் மூலம் காபிராகி விட்டார் இந்த PJ. நபிமார்களை காபிர் நிலைக்கு கொண்டு சென்றதால் இந்த நிலை இவருக்கு ஏற்பட்டது.

நமது சுன்னத் ஜமாத்தின் பெரிய உலமாக்களை விவாதத்திற்கு அழைத்துக்கொண்டிருந்தார் இந்த PJ. இந்த கயவரை, முட்டாளை, மூடரை, அறிவீனரை, இட்டுக்கட்டக்கூடியவரை, எதிர்கொள்ள பெரியவர்களான அவர்களெல்லாம் தேவை இல்லை. வயதில் சிறிய இந்த ஜமாலியே தேவை இல்லை, இதை விட சிறிய உலமாக்களே போதுமானது என்பதை இந்த விவாதம் நிரூபித்தது. ஜமாலி அவர்கள் எதிர்கொண்டே தோற்று துவண்டு போன இந்த PJ எங்களின் பெரிய உலமாக்கள் பேச ஆரம்பித்தால் அட்ரெஸ் தெரியாமல் போய் இருப்பார் என்பது உண்மையிலும் உண்மை என்பதை தமிழக மக்கள் உணர்ந்து கொண்டார்கள்.

அசிங்கமுடையவர்கள் செய்யும் செயலிற்கு சட்ட திட்டம் சொல்லிய இமாம்களை அசிங்கமான ஆய்வு செய்யக்கூடியவர்கள் என்று கூறிய PJ, ஆண் உறுப்பை 0 டிகிரி, 180 டிகிரி, 270 டிகிரி 360 டிகிரியில் வளைக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து, இமாம்கள் அசிங்கமானவர்களுக்கு தான் சட்டம் சொன்னார்கள் என்றும், நான் தான் அசிங்கமானவனவன், எனக்கு தான் அப்படி நினைவு வரும் என்று உறுதியாக நிலைநாட்டினார் PJ. இப்படிபட்டதை சுட்டிக்காட்டிய போது ஜமாலி ஹழ்ரத்தை விட வயதில் மிகவும் மூத்த PJ நிதானம் தவறி Tension ஆக பேச ஆரம்பித்தார்.

பெரிய பெரிய இமாம்களை எல்லாம் குறைவு படுத்தி பேசிய PJ, தமிழகத்தின் மூத்த உலமா பெருமக்களை எல்லாம் குறைவு படுத்தி பேசிய PJ வை, இளம் ஆலிமான ஜமாலி அவர்கள் Tension நேரத்திலும் நிதானம் தவறவே கூடாது, என்று நிதானமாக பேசி எப்பிடி பேச வேண்டும் என்று பாடம் எடுத்ததின் மூலம் PJ தோற்று விட்டது தெளிவாக தெரிந்தது.

இப்படிப்பட்ட மிகப்பெரிய வெற்றியை தந்த எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்.... விற்கே புகழ் அனைத்தும்.

மதுரை நாபிஈ