முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, October 1, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (இரண்டாம் பாகம்) - தொடர் - 1

சத்தியம் வந்தபோது, அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)

24-07-2010, 25-07-2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் (போலி) தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் நடந்தது..

இணை வைப்போரும் பித்'அத் வாதிகளும் யார் என்ற தலைப்பில், இவ்விவாதம் நடைபெற்றது. ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி, சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையினர் மற்றும் அவரது கொள்கையை பின்பற்றுவோர் அனைவரும் முஷ்ரிக் என்னும் இணைவைப்போர், மற்றும் பித்'அத் வாதிகள் என்பது தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ன் நிலைப்பாடு. தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாஅத் யினர் இணைவைப்பிற்கும், பித்'அத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பது சுன்னத் ஜமாஅத் ன் நிலைப்பாடு.

ஒரு முடிவோடு அதாவது சுன்னத் ஜமாத்தினர் முஷ்ரிக் தான் என்று முடிவு எடுத்துக்கொண்டு வந்து விவாதத்தில் உட்கார்ந்தார்கள் இந்த அறிவு ஜீவிகள். என்ன நடந்தது? முதல் அமர்வு டாஸ் ல் ஜெய்த்த PJ வால் துவக்கப்பட்டது. சரி ஒரு முடிவோடு வந்து உட்கார்ந்து இருக்கின்றார்களே! ஒரு ஆதாரம் தந்து இதனால் இவர்கள் முஷ்ரிக் என்று சொல்வார்களா என்று பார்த்தால் இல்லை. பழைய பல்லவி என்று சொல்வார்களே அதை தான் செய்தார்கள். களியக்காவிளை யில் தோற்று போய், முகத்தை தொங்கப்போட்டு கொண்டு, தமிழகம் எல்லாம் நம் கூட்டம் களைந்து விடும் என்ற பயத்தில் விளக்கம் கொடுத்துக்கொண்டு இருந்தாரே, அந்த வேலையை சென்னையில் செய்ய ஆரம்பித்தார்.

காபிர்கள் முறைப்படி விவாதம்:

விவாதத்தை ஆரம்பிக்கும் போது PJ சலாம் மட்டும் உரைத்து விட்டு (காபிர் களுக்கும் சலாம் சொல்லலாம் என்ற கொள்கையில் இருப்பதால், ஆனால் சில காலத்திற்கு முன் JAQH ன் கொள்கை காரர் காபிர்களுக்கு சலாம் சொல்லும் முறையான

والسلام على من التبع الهدى

அதாவது நேர்வழியில் இருப்பவருக்கு சலாம் உண்டாகட்டும் என்று இவருக்கு கடிதம் எழுதிய போது, பொத்திக்கொண்டு வந்தது இவருக்கு) இஸ்லாத்தின் அடிப்படையான அல்லாஹ்வை புகழ்தல் இருக்கவில்லை, நபிகளார் ஸல்... அவர்களின் மீது சலவாத்தோ, சலாமோ கூறாமல் நேரடியாக இட்டுக்கட்டும் விவாதத்தை ஆரம்பித்தார்.


விவாதத்தின் இறுதியாக மாறிய PJ வின் ஆரம்பம்:

அவரின் முதல் உரை இதோ, எங்களின் அதாவது (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிலை கொள்கை பிரகாரம், ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி எந்த கொள்கையை பிரசாரம் செய்து வருகின்றாரோ அது பகிரங்கமான, பச்சையான இணை வைப்பு என்பதை நாங்கள் திட்ட வட்டமாக சொல்கின்றோம். இணைவைப்பு என்றால் என்ன என்ற ஒரு விளக்கமும் இல்லாமல் இப்படி தான் மொட்டையாக ஆரம்பித்தார். மொட்டையாக ஆரம்பித்து கடைசியாகவும் ஒரே வாசகத்தில் தன்னுடைய விவாதத்தையும் முடித்துக்கொண்டார். இதன் படி தான் இரண்டு நாட்களையும் கழித்தார். ஒரு குர்'ஆன் வசனத்தை காண முடியவில்லை. ஒரு ஹதீஸை காண முடியவில்லை.

இப்படி சொன்னால் ஷிர்க் ஆகி விடுமா. மேலும் அவரின் பேச்சை பாருங்கள் ஒரு சாமானியன் கூட புரிந்து கொள்ள கூடிய அளவில் தான் அவரது உரை இருந்தது. சுன்னத் ஜமாத்தின் நிலைப்பாட்டை, அவர்கள் வைத்திருக்கும் கொள்கையை, அவர்கள் சொல்லி, அது சரியா இல்லையா என்று விவாதம் செய்யவே இல்லை. ஆனால் ஒன்று அதில் குறிப்பிடுகின்றார் இணைவைப்பு என்றால் அல்லாஹ்விற்கு சமமாக கருதுவது. அவனுடைய ذات லோ, பண்பிலோ, செயலிலோ, அவனை போல மற்றவர்கள் இருக்கின்றார்கள் என்று யார் நினைக்கின்றார்களோ, அவர்கள் அல்லாஹ்விற்கு சமமாக மற்றவர்களை ஆக்கிவிட்டார்கள். அதே போல், அல்லாஹ்வின் தரத்திற்கு யார் மற்றவர்களை உயர்த்துகின்றார்களோ, அல்லது தாழ்த்துகின்றார்களோ, அவர்களும் இணைவைப்பவர்கள் . அதே போல, அல்லாஹ்விற்கு செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளை மற்றவர்களுக்கு யார் செய்கின்றார்களோ அவர்களும் இணைவைப்பவர்கள் என்று கூறினார். இப்படி கூறி விட்டு இந்த அம்சங்கள் எல்லாம் ஷைகு அப்துல்லாஹ் ஜமாலியிடம் இருக்கின்றது அதனால் நீங்கள் இணைவைப்பாளர்கள் என்ற ரீதியில் அவரது வாதம் சென்றது என்றால் யாராவது ஏற்றுக்கொள்வார்களா? இது புரியுதா உங்களுக்கு? இவர்கள் தான் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறி, அல்லாஹ்வின் பண்பின் செயலில், எல்லாம் மற்றவர்களை ஒப்பாக்கி விட்டு, அவர்களின் செயலை மற்றவர்களின் மீது திணிக்க பார்க்கின்றார்கள். (திருடன் தான் தப்பித்து கொள்வதற்காக மற்றவர்களோடு திருடன், திருடன் என்று கத்திக் கொண்டு போகின்றதை போல)

இட்டுக்கட்டப்பட்டு திணிக்கப்பட்ட நிலைப்பாடு:

அதாவது, நாம் குறிப்பிட்டிருக்கும் நிலைப்பாட்டின் அடிப்படையில் விவாதம் செய்வதை விட்டு விட்டு, இது தான் உங்கள் நிலைப்பாடு என்று திணித்து (உலகில் எல்லா இயக்கமும் தங்கள் நிலைப்பாட்டை தாங்கள் தான் நிர்ணயிக்கும், PJ கூட்டம் மட்டும் மற்றவர்களின் நிலைப்பாட்டையும் தாங்கள் தான் நிர்ணயிப்பார்கள் போலும்) விவாதம் செய்ய ஆரம்பித்தார் இந்த PJ. (இது பெரிய காமெடி யால இருக்கு, கொஞ்சம் பொறுத்துக்கோங்க, இன்னும் பெரிய காமெடி எல்லாம் வரும்).

நீங்கள் (சுன்னத் ஜமாஅத்) வலிமார்களை அல்லாஹ்வின் இடத்தில் தான் வைத்துள்ளீர்கள் என்று இட்டுக்கட்டி தான் விவாதம் செய்தார். இப்படி விவாதம் செய்தால் தான் இந்த பரமார்த்த குரு தனது சிஷ்யர்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இப்படி இட்டுக்கட்டி விவாதம் செய்தால் தான் விவாதமே செய்ய முடியும். சுன்னத் ஜமாஅத் ன் நிலைப்பாட்டின் அடிப்படையிலோ, குர்'ஆன், ஹதீஸின் அடிப்படையிலோ இவரால் இந்த சுன்னத் வல் ஜமாத்தினரின் கொள்கையில் விவாதம் செய்யவே முடியாத ஒரு நிலை. காரணம் பக்கா வான ஒரு நிலைப்பாட்டில் இருக்கின்றோம் நாம். மார்க்கத்தில் இட்டு கட்டலாமா? பின் எப்பிடி இவர்கள் இட்டு கட்டினார்கள்.

நிலைப்பாட்டில் நிலையில்லாத PJ:

ஆனால் இட்டுக்கட்டு, அறிவீனம், பொய் பேச்சுகளுக்கு ஏக போக சொந்தக்காரரான PJ இந்த விவாதத்தில் எடுத்துக்கொண்ட பெரிய நிலைப்பாடு நான்கு. (சின்ன நிலைப்பாடு எல்லாம் நிறைய வரும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள் ப்ளீஸ்) இந்த விவாதத்தில் மொத்தம் நான்கு நிலைப்பாடுகளை எடுத்துக்கொண்டார் PJ. விவாதத்தின் தலைப்பு ஒன்று தான். (என்ன யோசிக்கிறீங்க! அட உண்மை தாங்க!). விவாதத்திற்கு ஒதுக்கப்பட்ட அமர்வுகள் மொத்தம் நான்கு. முதலாம் நாள் மூன்று அமர்வுகள். இரண்டாம் நாள் ஒரு அமர்வு. எஞ்சியுள்ள இரண்டு அமர்வுகள் கேள்வி பதிலிற்காக என்று தான் ஒதுக்கப்பட்டு இருந்தது. ஒவ்வொரு அமர்விலும் ஒரு நிலைப்பாட்டை எடுத்துக்கொண்டு பேசினார். அதில் அவரின் நிலைப்பாட்டை பாருங்கள்.

நிலைப்பாடு எண்: 1 நீங்கள் அல்லாஹ்வின் தரத்தில் வலிமார்களை வைத்துள்ளீர்கள் (நாங்க அப்படி வைக்கவில்லையே, நீங்களா எப்பிடி சொல்றீங்க, நான் சொல்றேன்ல நீங்க அல்லாஹ்வின் தரத்தில் தான் வைத்துள்ளீர்கள்) அதனால் நீங்கள் ஷிர்க் வாதி.

நிலைப்பாடு எண்: 2 நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு மறைமுக ஞானம் இல்லை (ஆனால் இருக்கு) என்னங்க இப்படிதாங்க நான் நேரில் விவாதம் பார்க்கும் போது இருந்தது. இப்படி தான் குழப்பினார்.

நிலைப்பாடு எண்: 3 களியக்காவிளை ஒப்பந்தத்தின் நிலைப்பாடு பற்றி விவாதிக்க வேண்டும். (இது சென்னை விவாதம்ங்க மறந்துடீங்களா? அட என்னாங்க காமெடி பண்றீங்க!)

நிலைப்பாடு எண்: 4 நீங்கள் (ஜமாலி) எங்கள் (PJ) மீது சொன்ன குற்றச்சாட்டிற்கும் நீங்களே பதில் சொல்லுங்க, நாங்க (PJ) உங்கள் (ஜமாலி) மீது சொன்ன குற்றச்சாட்டிற்கும் நீங்களே பதில் சொல்லுங்க. (இது என்னங்க புது விவாதமா இருக்கு, அதனால தான் சரித்திரத்தில் இல்லாத விவாதம் னு நீங்களே சொன்னது இது தானோ?)

முழுதாக கை விட்ட களியக்காவிளை நிலைப்பாடு:

விவாதத்தை ஆரம்பித்த PJ இறந்தவர்களை அல்லாஹ்வின் இடத்தில் வைத்து அழைக்கின்றார்கள். அல்லாஹ் பார்ப்பதை போல பார்க்கின்றார்கள் என்று நம்புகின்றார்கள். அல்லாஹ் கேட்பதை போல கேட்கின்றார்கள் ன்று நம்புகின்றார்கள். அல்லாஹ்வை போல உள்ளத்தால் நினைத்தாலும், எங்கிருந்து அழைத்தாலும், எப்போது அழைத்தாலும், எந்த மொழியில் அழைத்தாலும் அல்லாஹ் வின் இடத்தில் வைத்து தான் இவர்கள் வலிமார்களிடம் கேட்கின்றார்கள். அதனால் ஷிர்க் என்று ஒரு இட்டுக்கட்டி பேச்சை ஆரம்பித்தார். அல்லாஹ்வின் நிலையை வைத்தால் ஷிர்க்தான் அதில் எந்த ஒரு மாற்றமும் சுன்னத் வல்ஜமாத்தினரிடம் இல்லை. (ஆனால் நீங்கள் தான் உயிர் உள்ளவர்களிடம் உதவி கேட்கலாம், மரணித்தவர்களிடம் உதவி கேட்க கூடாது னு புதிய கொள்கை சொல்றீங்க). நம்முடைய நிலைப்பாடு, அல்லாஹ்வால் இறந்த இறை நேசர்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது என்று கூறுகின்றோம். ஆனால் இந்த PJ அல்லாஹ்வின் சக்தியை கொண்டு மரணமானவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது (உதாரணம் நம் கண்ணை விட்டு மறைக்கப்பட்டு விட்ட மூசா அலை... 50 நேர தொழுகை 5 ஆக குறைத்து உதவினார்கள்) என்று சொன்னால் ஷிர்க் என்று கூறுகின்றார். ஆதாரம்: வழக்கம் போல் வாய்ச்சவடால் தான்.

இஸ்லாமிய முறைப்படி விவாதம்:

பத்து நிமிட குப்ரின் விவாதத்தை கேட்ட மக்களுக்கு பதினைந்து நிமிடங்களில் ஒரு புத்துணர்ச்சி கிடைத்தது. இந்த விவாதம், இஸ்லாமிய முறைப்படி சலாம் சொல்லப்பட்டு, பிறகு அல்லாஹ்வை புகழப்பட்டு, பிறகு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீதும், அவர்களின் தோழர்கள், குடும்பத்தவர்கள் மீதும் சலவாத்தும், சலாமும் கூறப்பட்டு இந்த இஸ்லாமிய விவாதம் துவங்கியது.

தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்தவர்கள், அவர்களுடைய கொள்கைகளிலும், செயல் பாடுகளிலும், ஷிர்க் ற்கும் பித்'அத் ற்கும் சொந்தகாரர்களாக இருக்கின்றார்கள் என்பது எங்களின் நிலைப்பாடு என்பதை பல ஆதாரங்களின் அடிப்படையில் நிருபித்து காட்டுவோம் இன்ஷா அல்லாஹு த'ஆலா (அல்லாஹ்வின் துணை கொண்டு தான்) என்று விவாதத்தை ஆரம்பித்த ஜமாலி ஹழ்ரத் அவர்கள், விவாதத்தை ஆரம்பித்த PJ ஷிர்க் என்றால் என்ன? பித்'அத் என்றால் என்ன என்று விளக்கம் அளிக்க தவறியதால், அதை பற்றி விளக்கம் கொடுத்தார்கள்.

ஷிர்க் என்றால் என்ன:

இறைவனின் உள்ளமையிலும் (ذات), அவனுடைய பண்பிலும், செயல் பாட்டிலும் இன்னொன்றை, அல்லது இன்னொருவரை இறைவனை கூட்டாக்குவது தான் ஷிர்க். இது மிகப்பெரிய குற்றம் என்று அல்லாஹ் குர்'ஆனில் சுட்டிக்காட்டுகின்றான்.

إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ
ஷிர்க் என்பது கடுமையான அநீதமாகும். (31:13)

قُلْ إِنَّمَا أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ وَلَا أُشْرِكَ بِهِ

நபியே நீங்கள் கூறுங்கள், அல்லாஹ்வை நான் வணங்க வேண்டும், அவனுக்கு இணை வைக்கக்கூடாது என்று நான் பணிக்கப்பட்டு இருக்கின்றேன். (13:36)
قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدًا

நபியே நீங்கள் கூறுங்கள், நான் வணங்குவதெல்லாம் என்னுடைய ரப்பைத்தான், அந்த இறைவனுக்கு ஒருவரையும் நான் இணையாக்க மாட்டேன். (72:20)
இப்படி பல்வேறு இடங்களில் ஷிர்க் கூடாது என்று கூறும் இறைவன், அதனால் ஏற்படும் விளைவையும் எடுத்துக்காட்டுகின்றான்.

إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَن يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَ‌ٰلِكَ لِمَن يَشَاءُ ۚ وَمَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ ضَلَّ ضَلَالًا بَعِيدًا

நிச்சயமாக இறைவன் இணைவைப்பதை மன்னிக்க மாட்டான். அதை தவிர மற்ற பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான், யார் இறைவனுக்கு இணை வைக்கின்றார்களோ, அவர்கள் பகிரங்கமான வழிகேட்டின் இருக்கின்றார்கள். (4:116)

إِنَّهُ مَن يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ

யார் அல்லாஹ்விற்கு இணைவைக்கின்றார்களோ, அப்படி பட்டவர்களுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராம் ஆக்கி விட்டான். (5:72)
இப்படி இணைவைத்தவர்கள், மறுமையில் தோல்வி கண்டு, வெற்றி பெற முடியவில்லை என்ற சூழ்நிலை வரும்போது, நான் உலகத்தில் இருக்கும் பொது நான் இணை வைக்காமல் இருந்து இருக்கணுமே என்று கைசேதப்படுவார்கள் என்று இறைவன் சொல்லி காட்டுகின்றான்.

பித்'அத் என்றால் என்ன:

பித்'அத் என்பது கூடாது, அதாவது பித்'அத் என்பதற்கு மாற்றமானது என்று எடுத்துக்கொண்டால் சுன்னத் என்று எடுத்துக்கொள்ளலாம். சுன்னத்தை பின் பற்றி ஆக வேண்டும். அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ

இறை நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் தூதருக்கும் கட்டுப்பட்டு நடந்து கொள்ளுங்கள் (47:33)

مَّن يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
யார் இறை தூதர் ஸல்... அவர்களை வழிப்பட்டாரோ அவர் அல்லாஹ்விற்கு வழிப்பட்டவராவார். (4:80)

وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانتَهُوا

மேலும் எதை நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கொண்டு வந்தார்களோ அதை எடுத்துக்கொள்ளுங்கள், எதை தடுத்தார்களோ, அதை விட்டு விடுங்கள். (59:7)
لَّقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ

நபிகள் நாயகம் ஸல்... அவர்களிடத்தில் உங்களுக்கு முன் மாதிரி இருக்கின்றது (33:21)
இப்படிபட்ட வசனங்கள் எல்லாம் சுன்னத்தை பின்பற்ற வேண்டும் என்பதை அறிவித்துக்காட்டுகின்றன. சுன்னத்திற்கு மாற்றமானது தான் பித்'அத் என்பது. நபிகளார் ஸல்... அவர்கள் காலத்தில் இல்லாத மார்கத்திற்கு முரணானதை செய்வது தான் பித்'அத் என்பது. பித்'அத் மார்க்கத்தில் விலக்கப்பட்டிருக்கின்றது. நபிகளார் ஸல்... அவர்கள் கூறினார்கள் شر الامور محدثاتها (முஸ்லிம்) என்ற ஹதீஸின் தொடரும் ஓதி காண்பிக்கப்பட்டது, மேலும்
من احدث في امرنا هذا ماليس منه فهو رد

அதாவது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யார் புகுத்துகின்றார்களோ அது மறுக்கப்பட வேண்டும் (புகாரி, முஸ்லிம்)
இதன் மூலம் பித்'அத் செய்யக்கூடாது என்று தெள்ளத்தெளிவாக தெரிகிறது, என்ற விளக்கத்தோடு ஆரம்பித்தது இஸ்லாமிய தரப்பின் விவாதம்.

முதல் வாய்ப்பிலேயே ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கீழ் காணும் விஷயங்களால் இவர்கள் பித்'அத் வாதிகள் என்று வைத்தார்கள். 2 நாட்கள் கொடுக்கப்பட்டிருந்தும் பதில் சொல்ல முடியவில்லை. அந்த விஷயங்கள்,
  1. தமிழில் ஜும்மா குத்பா (காபிர்களின் கலாசாரம், யார் எந்த மொழியிலும் அர்ச்சனை செய்யலாம்). இது பித்'அத்து.
  2. ஒரு கையில் மட்டும் முசாப்ஹா செய்வது. (கிருஸ்துவ கலாசாரம்) இது பித்'அத்து.
  3. காபிர்களுக்கும் சலாம் சொல்லலாம். (அவர்கள் நேர் வழியில் இருப்பதனால் அவர்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று சொல்லலாம். ஆதாரம்: PJ யின் மனோ இச்சை). இது பித்'அத்து.
  4. திடலில் மட்டும் தான் பெருநாள் தொழுக வேண்டும். இது பித்'அத்து.
  5. பெண்களை ஜும்மா தொழுகைக்காக அழைத்து வருகின்றார்கள். இது பித்'அத்து.
  6. பிஸ்மில்லாஹ்விற்கு பதிலாக இறைவனின் திருப்பெயரால் என்று எழுதுவது. இது பித்'அத்து.
என்ற விஷயத்திற்கு பிறகு ஜமாலி ஹழ்ரத் அவர்கள் நம்முடைய நிலைப்பாட்டை எடுத்து சொன்னார்கள்.

ان القوة لله جميعا

ஆற்றல் அனைத்தும் அல்லாஹ்விற்கு மட்டும் (2:165) என்று அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான். அதனால் உண்மையான சக்தி அல்லாஹ்விற்கு, அவன் நாடினால் உயிருள்ளவர் மூலமாகவும், நாடினால் உயிர் இல்லாதவர்கள் (ஹழ்ரத் மூஸா அலை.... போல) மூலமாகவும் உதவி செய்வான். ஆனால் PJ வின் வழிகெட்ட, இட்டு கட்டிய விவாதம், ஒரு எல்லை வரை தான் மனிதன் கேட்பான், ஆனால் தொலை பேசி மூலமாகவும் கேட்பான். (இது எப்பிடிங்க, தொலைபேசி எல்லை ல வராதேங்க? னு சொன்னா, இல்ல அது இதுக்கு பொருந்தாது னு ஒரு முரட்டு வாதம்).

அல்லாஹ் வேறு, நாம் வேறு என்று விளக்கும் வாதம்:

அல்லாஹ் தனக்கு உள்ள பண்புகளை தனது அடியார்களுக்கும் உள்ளதாக கூறுகின்றான், உதாரணத்திற்கு பார்வை, கேள்வி, உயிர்
  • அல்லாஹ் பார்க்கின்றான், நாமும் பார்க்கின்றோம், இருவரின் பார்வையும் வேறு. என்று விளக்கினார்கள் ஜமாலி அவர்கள்.
  • அல்லாஹ் கேட்கின்றான், நாமும் கேட்கின்றோம், இருவரின் கேள்வியும் வேறு. என்று விளக்கினார்கள் ஜமாலி அவர்கள்.
  • அல்லாஹ் உயிருள்ளவன், நாமும் உயிருள்ளவர்கள், இரண்டும் வெவ்வேறு. என்று விளக்கினார்கள் ஜமாலி அவர்கள்.
  • அதே போல எல்லோரும் பேசும் சக்தி வலிமார்களுக்கு கேட்கும், அல்லாஹ்விற்கு கேட்கும், இரண்டும் வெவ்வேறு. எல்லையை கவனித்து மாறுபடும்.
ஆனாலும் நான் பிடித்த முசலுக்கு மூன்று கால் தான் என்ற நிலையில் இருந்ததால் PJ விற்கு ஒன்றும் புரியவில்லை. மார்க்கம் தெரியாதவர்கள், மார்க்கம் பற்றி குதர்க்கமாக பேசினால் இப்படி தான் மாட்டிக்கொள்ள வைப்பான் அல்லாஹ் ஜல்.... என்பது அப்பட்டமாக PJ வின் வாய் அடைத்ததின் மூலம் காட்டினான்.

நமது நிலைப்பாடு:

உண்மையான சக்தி அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும். யார் மூலமும் எதன் மூலமும் உதவி செய்வான். உயிர் உள்ளவருக்கோ, உயிர் இல்லாதவருக்கோ எந்த ஒரு சக்தியோ, ஆற்றலோ கிடையாது. பல பேர், பல மொழிகளில், ஒரே நேரத்தில் அழைப்பது அல்லாஹ்விற்கு மட்டும் தான் கேக்கும் என்று கூறிய PJ அப்படி காட்டக் கூடிய வசனத்தையோ, ஹதீசையோ (சம்பந்தம் இல்லாத குர்'ஆன், ஹதீஸின் விளக்கத்தை கூட இவரால்) காட்ட முடிய வில்லை. மாறாக! அல்லாஹ்விற்கு போய் ஆதாரம் கேட்கின்றார் என்று திசை திருப்ப பார்த்தார் (உங்கள மாதிரி பொய் பேச யாருக்கும் வராது PJ. அதனால தான் நீங்க உங்க சிஷ்யர்களிடம் அல்லாஹ் இல்லை என்று கூட நிரூபிப்பேன் என்று உங்கள் நாத்திக கொள்கையை சொல்றீங்க! நவூது பில்லாஹ்).


எப்போதும் வாய் கிழிய பேசும் பரமார்த்தகுரு ஜி (PJ) யின் வாயை அல்லாஹ் சென்னையில் பேச முடியாமல் ஆக்கினான். காரணம் என்ன? அல்லாஹ் பொய் பேசுபவருக்கு உதவி செய்வதில்லை. உண்மை தான் ஜெய்க்கும் என்பதை நன்றாக காட்டியதால் வந்த விளைவு தான் இவர் (நிரந்தர) வனவாசம் சென்றதின் பின்னணி ஆகும்.

(தொடரும்..... இன்ஷா அல்லாஹ்)

மதுரை நாபிஈ


0 comments: