முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, October 5, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (இரண்டாம் பாகம்) - தொடர் - 2


ஷிர்க்கிற்கு சொந்தக்காரர் PJ:

உயிராக உள்ளவர்கள் தான் உதவி செய்வார்கள் என்று கூறும் PJ வின் கூற்று ஷிர்க். இது அல்லாஹ் ஜல்.... வுடைய ஆற்றலை குறைக்கும் வழிமுறையாகும். ஆனால் Phone, Mobile Phone, Computer, மைக், போன்றவைகள் செய்யும் உதவிகளை (உயிரற்ற ஜடப்பொருளின் உதவியை தேடிக்கொண்டிருக்கின்றார் இந்த P.குருஜி. நாம் வலிமார்களிடம் உதவி தேடினால் ஷிர்க், அல்லாஹ்விடம் மட்டும் தான் உதவி தேட வேண்டும் என்று சொல்லி கொண்டு திரிந்த இந்த P.குருஜி, தற்போது 4 காவல் காரர்களின் பாதுகாவலில் இருக்கின்றார் (அல்லாஹ்வின் பாதுகாவல் இவருக்கு இல்லை). நாம் எல்லாம், அல்லாஹ்விடம் தான் பாதுகாவல் தேடுகின்றோம். உதவி தான் வலிமார்களிடம் தேடுகின்றோம்.)அல்லாஹ்விடம் தான் கேட்க வேண்டும் என்று சொல்லிவிட்டு ஷிர்க் செய்யும் மக்களை அல்லாஹ் இப்படி தான் தனது பாதுகாப்பை விட்டு அப்புறப்படுத்துவான். ஆனால் தசாவதானி, சதாவதானியை எல்லாம் ஒத்துக்கொண்டார் இந்த P.குருஜி. ஆனால் அல்லாஹ்வின் சக்தியை குறைக்க முயற்சித்து காபிராக மாறினார்.

கற்பனைகளை திணிக்கப்பார்த்த PJ:

உயிர் உள்ளவர் மூலமாக அல்லாஹ் உதவி செய்வதை போல, உயிர் இல்லாதவர்களின் மூலமும் அல்லாஹ் தான் உதவி செய்கின்றான் என்றும், ஒரு ஆள் பேசினாலும் சரி, பல ஆள் பேசினாலும் சரி நமக்கு எந்த சொந்த சக்தியும் கிடையாது. கேட்கும் தன்மை அல்லாஹ் தான் வழங்கியுள்ளான் என்று நமது பக்கா தவ்ஹீத் கொள்கை யை மக்கள் மத்தியில் ஜமாலி அவர்கள் எடுத்து வைத்த போது, நமது நிலைப்பாட்டை பற்றி ஒன்றும் விவாதிக்க வரவில்லை இந்த PJ விற்கு. அதனால் ஒரு தந்திரத்தை கையில் எடுத்தார். உங்கள் நிலைப்பாடு, நீங்கள் வலிமார்களை அல்லாஹ்வின் தரத்தில் தான் வைக்கின்றீர்கள், என்று தனது கற்பனையை திணித்து வாதம் செய்ய ஆரம்பித்தார். இப்படி விவாதம் செய்தால் தான் இந்த பரமார்த்த குரு தனது எஞ்சி இருக்கும் இந்த கம்மியான சிஷ்யர்களை தன்னோடு தக்க வைத்து கொள்ள முடியும் என்கின்ற நிலைஅவருக்கு. தரம் பிரிக்கும் ஆற்றல் அல்லாஹ் யாருக்கும் வழங்கவில்லை (ஆதாரம்: PJ யின் மனோ இச்சை), என்று கூறிய இவர்களை பற்றி அல்லாஹ் ஜல்.... அழகாக வசனமாக பதித்து இருக்கின்றான்.

أَرَأَيْتَ مَنِ اتَّخَذَ إِلَـٰهَهُ هَوَاهُ

தன்னுடைய மனோ இச்சையை தன்னுடைய இறைவனாக ஆக்கிகொள்பவர்கள் இருக்கின்றார்கள்.(25:43).

சப்தம் ஒரு அளவுகோல்:

இறந்தவர்களை அழைக்கும் நம்மை பார்த்து, எத்தனை டெசிபல் இருந்தால் இறந்தவர்களுக்கு கேட்கும் என்று கேள்வி கேட்கின்றார். என்ன இவரின் அறியாமையை சொல்வது. Lie Detector கேள்வி பட்டிருக்கின்றீர்களா? அது பொய் சொன்னால் கண்டு பிடித்து விடும் கருவி. வெளியில் என்ன தான் சொன்னாலும் அதுக்கு கேக்காது. கத்தினாலும் கேக்காது. மனசுல இருக்குறது தான் கண்டு பிடிக்கும். அது மனதில் உள்ளதை கண்டு பிடிக்கின்றதே? அது அல்லாஹ்வா? சப்தம் தான் ஒரு அளவுகோலாக இருந்தால், இங்கு சப்தம் இல்லாமலும் கண்டுபிடிப்பு நடந்து கொண்டிருக்கிறது. இது மனத்தால் நினைக்கின்றதை கண்டு பிடித்துவிடும் போது, வலியுல்லாஹ்விற்கு ஏன் அல்லாஹ் இப்படி பட்ட சக்தியை வழங்க முடியாது. ஏன் அல்லாஹ்வின் சக்தியை குறைத்து மதிப்பிடுகின்றீர்கள். நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கூறினார்கள், உங்கள் ருகூ எப்பிடி இருக்கும் என்பது தெரியும். உங்கள் பயபக்தி எப்பிடி இருக்கும் என்பதும் தெரியும். இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டினால் இந்த வஹ்ஹாபிகள் அது அந்த நேரத்தில் மட்டும் தான் தெரியும் மற்ற நேரத்தில் தெரியாது என்று கூறுவார்கள்.

ஒரு கேள்வி: Lie Detector என்னும் கருவியில் அந்த ஒரு நேரத்தில் மட்டும் தான் பொய் கண்டு பிடிக்க முடியுமா?

பதில்: இல்லை. எப்போது தேவையோ அப்போது Lie Detector வைத்து பொய்யை கண்டு பிடித்துக்கொள்ளலாம். இந்த Lie Detector காட்டிலும் நபிகளாரின் அந்தஸ்து குறைவு இல்லை. அதனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு எப்போது தேவையோ அப்போது மற்றவர்களின் உள்ளத்தை பார்ப்பார்கள். (ஹழ்ரத் உமர் ரழி.... அவர்களுக்கு அப்படி தானே முழுமையான ஈமானில் உள்ளதாக கூறினார்கள்).

அல்லாஹ்வின் நிலை, அல்லாஹ்வின் நிலை என்று விவாதத்தின் பல இடங்களில் குறிப்பிட்டார் இந்த PJ. நம்மை பொறுத்தவரை அல்லாஹ்விற்கு ஒரு எல்லையே இல்லை. அது தான் எதார்த்தம். அது சென்னையின் முதலாம் விவாதத்தில் நிரூபித்துக்காட்டப்பட்டது.

பாடம் எடுத்த ஜமாலி, பாடத்தில் தேர்ச்சிபெற்ற PJ:

சென்னையில் நடந்த முதலாம் விவாதத்தின் போது அல்லாஹ் ஹக் சுப்ஹானஹு 'ஆலா வைப்போல யாரும் (உருவம்) இல்லை என்ற தலைப்பில் ஜமாலி ஹழ்ரத் அவர்கள்

لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ

அதாவது அவனை போல எதுவும் இல்லை, அவன் கேட்பவன் பார்ப்பவன் (42:11) என்ற வசனத்தின் மூலம் இறைவனின் மேல் கலங்கப்படுதப்பட்ட உருவத்தை அடித்து நொறுக்கினார்கள். PJ அடிக்கடி இவர்கள் காட்டிய ஆதாரத்தை மறந்து விட்டு ஆதாரம் காட்டுங்கள் என்று கேட்டதால் இந்த வசனத்தை அடிக்கடி ஓதும் சூழ்நிலை ஏற்பட்டது. அதை நன்றாக மனப்பாடம் செய்து கொண்ட PJ இரண்டாவது விவாதத்தில் கற்று ஜமாலி கற்றுக்கொடுத்ததால், இந்த விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத நிலையில் இந்த வசனத்தை ஓதிக்கொண்டே இருந்தார். இந்த வசனத்தை ஒன்றுமே விளங்காத PJ விற்கே மனப்பாடம் செய்து வைத்து ஒரு சாதனை படைத்தார் ஜமாலி.

ஆனால் இந்த வசனத்தில் என்ன இருக்கின்றது? அல்லாஹ் கேட்கின்றான், பார்க்கின்றான் என்றால் தானாக கேட்கின்றான், பார்க்கின்றான், மனிதன் கேட்கின்றான், பார்க்கின்றான் என்றால் அல்லாஹ் கேட்க செய்கின்றான், பார்க்க செய்கின்றான். இது தான் வலிமார்கள் விஷயத்திலும் வித்தியாசமாக வைத்திருக்கின்றோம். எந்த காரியம் மனிதர்களோ வலிமார்களோ செய்தாலும் எல்லை உள்ளது. அல்லாஹ்வின் பார்வை, கேள்வி எல்லை இல்லாதது. இவர்களுக்கு அல்லாஹ் ஜல்... வழங்கி இருக்கின்றான் என்று கூறுவதின் மூலம் உண்மையான கொள்கையின் பக்கம் நாம் சாய்ந்து விட்டோம்.

எல்லை பிரச்சனை:

இவ்வுலகில் எங்கு பார்த்தாலும் எல்லை பிரச்சனை தான். நாம் இந்திய திருநாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நமது எல்லையை எடுத்துக்கொண்ட பாகிஸ்தான் தனது எல்லை என்று சொல்லி வருகின்றது. அதே போல சீனாவும் நமது பகுதியை சொந்தம் கொண்டாடி வருகின்றது. இந்நிலையில் அல்லாஹ்விற்கு ஒரு எல்லையை வைத்துள்ளார்கள் (இது என்ன நாடா எல்லை வைத்துக்கொள்ள) இந்த நவீன வாதிகள். யூதர்களின் கை கூலிகள். அல்லாஹ்வின் எல்லையை நாம் எடுத்து வலிமார்களுக்கு கொடுத்துவிட்டதாக கூறுகின்றார்கள். அல்லாஹ்விற்கு எல்லையே இல்லை என்று நாம் கூறுகின்றோம். ஒரே நேரத்தில் பல பேர் கேட்பார்கள் என்று நீங்கள் சொல்லி வந்தீர்களே அதற்கு ஆதாரம் காட்டுங்கள் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்களிடம் கேட்டு தன்னிடம் ஆதாரம் இல்லை என்று ஒத்துக்கொண்டார் PJ. இதன் மூலம் இந்த வாதத்திலும் தோற்று விட்டார் இந்த PJ.


நாம் கூறும் எல்லை எது:


வலிமார்களுக்கு எத்தனை பேரும், ஒரே நேரத்தில், பல இடத்தில் இருந்து, பல மொழிகளில் கேட்டால் விளங்கும் இது அல்லாஹ் வழங்கியது என்று கூறுகின்றோம். இப்படி என்னதான் கூறினாலும் அதற்கு ஒரு எல்லை என்று கூறினார்கள் ஜமாலி ஹழ்ரத் அவர்கள். அந்த எல்லை எது? அது உலகம் என்கின்ற எல்லை. பூமி என்கின்ற எல்லை. பூமி உருண்டை என்னும் எல்லை. இதை தாண்டி இவர்களின் சக்தி இல்லை. காரணங்கள்,

  1. சிரியாவில் இருக்கும் மூத்தாவில் நடந்த போரை அப்படியே நபிகள் ஸல்... அவர்கள் விவரித்தார்கள். இது உலகில் உள்ள ஒரு எல்லை.
  2. ஹழ்ரத் சுலைமான் அலை... அவர்களின் அமைச்சரவையில் இருந்த ஆசிப் பின் பர்கிய்யா என்பவர் எங்கோ இருந்த பில்கிஸ் அலை... அவர்களின் சிம்மாசனத்தை பார்த்து, கண் சிமிட்டும் நேரத்தில் கொண்டு வந்தார். இதுவும் உலகில் உள்ள ஒரு எல்லை.
  3. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் வானிலே ஹவ்ழுல் கவ்சர் நீர் தடாகத்தை பார்த்தேன் என்று கூறினாலும், அதுவும் ஒரு எல்லை.
  4. மனதில் இருப்பதை நாயகம் ஸல்... அவர்கள் பார்த்தாலும் அதுவும் ஒரு எல்லை.
  5. நீங்கள் ருகூவு செய்வதும் பார்க்கின்றேன் என்று சொன்னாலும் அதுவும் ஒரு எல்லை.
  6. சாதாரண மனிதர்கள் , ஜின்கள் ஏன் அனைத்து பொருளும் கூட, ஒரே நேரத்தில் பல பாங்கு கேட்டு அதை பற்றி அல்லாஹ் ஜல்... யிடம் மறுமையில் சாட்சி சொல்வார்கள் என்று ஹதீஸில் வருகின்றது. ஆனாலும் எல்லை உள்ளது. (அனைத்து பொருள் பற்றி சொல்லும் போது, கோவிலும் கேட்கும் என்று PJ கூறி நான் காபிர், எனக்கு எப்போதும் கோவில் பற்றி தான் நினைவு வரும் என்று சொல்லாமல் சொன்னார் PJ. மேலும் கோவிலை சுற்றி பார்க்கலாம், அல்லது நண்பரின் வீட்டில் பூஜையறையிலும் பிரவேசிக்கலாம் என்றும் எழுத்தில் எழுதி வைத்ததை சுட்டி காட்டிய போதும் இதில் தவறு இல்லை என்று கூறி நான் காபிர் என்று கூறாமல் கூறினார் இந்த PJ)

இதுவெல்லாம் பூமி என்னும் ஒரு எல்லையில் இருக்கின்றது. அதனால் எங்கிருந்து அழைத்தாலும் என்று கூறினாலும் அது பூமியின் எங்கிருந்து அழைத்தாலும் என்று தான் பொருளே ஒழிய, செவ்வாய் கிரகமோ, வெள்ளி கிரகமோ இந்த எல்லையில் வராது. இந்த பூமி தான் எல்லை என்பதற்கு PHONE, CELL PHONE, INTERNET, COMPUTER, TELEVISION போன்றவைகளும் ஆதாரம். காரணம் இதுவெல்லாம் இங்கு தான் இயங்குகின்றது. ஒரு மனிதன் ஜப்பான் யிலிருந்து அமெரிக்க விற்கு Phone Connection மூலம் தொடர்பு கொள்ளலாம். இது விஞ்ஞானம். இதை நம்பும் இந்த (கேடு கெட்ட இந்த கூட்டம்) நாங்களும் இந்த உம்மத் தான் என்று சொல்ல கூடியவர்கள், அல்லாஹ்வின் ஆற்றலிலும், அவன் அவனது அடியார்களுக்கு வழங்கிய ஆற்றலிலும் சந்தேகத்தோடு பார்த்து காபிர் என்ற நிலைக்கு சென்றுள்ளார்கள்.

பரமார்த்தகுரு ஜியின் மேதாவித்தனமும், நமது விஞ்ஞான பதிலும்:

இந்த பரமார்த்தகுரு ஜி, இந்த சக்தி கொடுத்தது அந்த ஒரு மனிதருக்கு தானே, மற்றவர்களுக்கு எப்பிடி வழங்குகின்றீர்கள் என்று கேட்கின்றார். நாம் சொல்றோம், எந்த ஒரு Electronics கருவியை எடுத்துக்கொள்ளுங்கள், உதாரணத்திற்கு, Computer, Mobile, Watch, Radio, TV, எடுத்துக்கொள்ளுங்கள். எந்த விலையில் வாங்கினாலும், எந்த Company Brand வாங்கினாலும் அது உபயோகம் ஆகுது. அந்த ஒரு MOBILE ற்கு தான் தந்ததாக நம்ப வேண்டுமா? இல்லை எல்லா கருவியையும் நம்ப வேண்டுமா? இதில் நம்பும் நீங்கள் ஏன் அல்லாஹ்வின் சக்தியில் நம்ப மறுக்கின்றீர்கள்.

மேலும் இந்த PJ எந்த வலியுல்லாஹ்விற்கு எந்த அளவில் கொடுத்துள்ளான் என்று கேட்கின்றார். அதன் மூலம் அவர் நாம் சொல்வதை ஒப்புக்கொள்கின்றார். நல்லது இப்போவாவது கேட்டீங்களே, இந்த Electronics கருவியில் உள்ள IC, Memory, Chip power, Display, Model. போன்றவற்றை பொறுத்து அதன் Quality இருக்கின்றதல்லவா. அதே போல வணக்கத்தின் மூலம் அந்த வலியுல்லாஹ்விற்கு power கிடைக்கும். அது அவர்களின் வணக்கத்தை பொறுத்து கிடைக்கும் வெகுமதி. துவெல்லாம் ஒரு கேள்வியே அல்ல P.குருஜி.

இவ்வளவு நேரம் நாம் குறிப்பிட்டிருந்தது அவரின் முதலாவது நிலைப்பாட்டில் விவாதம் நடந்ததில் இருந்து ஆகும். முதல் அமர்வு முடியும் தருவாயில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு இல்முல் கைப் இருக்கின்றதா என்ற நிலைப்பாட்டிற்கு தன்னை மாற்றிக்கொண்டு விவாதம் செய்ய ஆரம்பித்தார். இதிலும் தோல்வியை கண்டார் PJ.

நபிகளார் ஸல்... அவர்களுக்கு மறைமுக ஞானம் உள்ளதா:

மறைமுக ஞானம் உண்டு என்று விவாதித்த PJ:

நாம் மேலே நாம் கூறும் எல்லை எது என்ற தலைப்பில் கூறும் போது குறிப்பிட்ட 6 விஷயங்களை மறைமுக ஞானம் என்ற விஷயமாக எடுத்து அதை ஒத்துக்கொள்கின்றோம் என்று ஒத்துக்கொள்கின்றார். பிறகு மறைமுக ஞானம் இல்லை என்று சில சப்பைக்கட்டு வாதத்தால் மறைமுக ஞானம் இல்லை என்று கூறி அதுவும் தவறு என்று சுட்டிக்காட்டப்பட்ட போது வாபஸ் வாங்குகின்றார்.

மறைமுக ஞானம் இல்லை என்று விவாதித்த PJ:

ஆயிரம் மடங்கு இல்முல் கைப் இல்லை என்று ஆதாரம் இருக்கின்றது என்று கூறும் PJ , நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சொன்ன மறைமுக ஞானம் ஒன்று என்று சொன்னால் சொல்லாத மறைமுக ஞானம் ஆயிரம் என்று கூறுகின்றார். (கால் சதம் அளவிற்கு அதாவது 25 கூட இல்முல் கைப் இல்லை என்பதற்கு பட்டியல் போட முடியவில்லை. 24 விஷயங்கள் தான் சொல்ல முடிந்தது. ஆனால் அல்லாஹ் ஜல்... வின் மாபெரும் கிருபையால் அதுவும் தவறு என்று நிரூபித்தாகிவிட்டது.)


PJ காபிரான தருணங்கள்:

இந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் நிலைப்பாடானது, தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாஅத் இணைவைப்பிற்கும், பித்'அத்திற்கும் சொந்தக்காரர்கள் என்று தான் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் என்ன நடந்தது. இணைவைப்பிற்கும், பித்'அத்திற்கும் சொந்தக்காரர்கள் என்பதற்கும் மேலாக காபிராக மாறி போனார்கள். ஜூலை 24 காலை அமர்வினுடைய கடைசி அமர்வில், சூரியன் உச்சியில் இருக்கும் 12 மணி கடந்த 37 வது நிமிடத்தில்

அதாவது (12:36:35) மணியில்

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மார்க்கத்தில் தப்பு தப்பாக முடிவெடுத்து (நவூது பில்லாஹ்) மாறினார்கள்
.

என்று கூறி தான் ஒரு பக்கா காபிர் என்று கூறிவிட்டார்.

யார் இந்த மார்க்கத்தை கொண்டு வந்தார்களோ, , யார் அல்லாஹ்வை காட்டினார்களோ, யார் குர்'ஆனை தந்தார்களோ, அந்த நபியை, கேவலப்படுத்தி, கண்ணியம் குறைத்து, நம்மை போன்ற மனிதர் தான் என்பதை எல்லாம் தாண்டி, தப்பு தப்பாக பேசினார்கள், என்று கூறினார். (நவூது பில்லாஹ், அல்லாஹ் இவர்களின் தீங்கில் இருந்து நம்மையும், நம் சந்ததியினரையும், வருங்கால சந்ததியினரையும், தற்போது சுன்னத் வல் ஜமாஅத் ல் இருப்பவர்களையும், என்றென்றும் காப்பாற்றுவானாக) இப்படி தான் அல்லாஹ் தனது நபி மீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களை காபிர் ஆக்கி அல்லாஹ் நரகத்தில் தள்ளுவான்.


அவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும் வீடியோ

கப்ர் வணங்கி PJ:

மேலும் அதே உரையின் கடைசியில் நாங்கள் (PJ கூட்டம்) கப்ர் வணங்கி கொண்டு இருந்தோம் என்று ஒத்துக்கொண்டார் (ஆனால் நாம் கப்ர் வணங்க வில்லை, எந்த காலக்கட்டத்திலும் கப்ரை வணங்க மாட்டோம், அல்லாஹ் வை மட்டும் தான் வணங்குகின்றோம்). இதன் மூலமும் இவர் காபிர் என்று காட்டிக்கொண்டார். மேல் உள்ள வீடியோவில் பதியப்பட்டுள்ளது.

கெஞ்சும் PJ:

குர்'ஆன் ஹதீஸ் படி விவாதம் செய்வதில் தோற்றுப்போன PJ, நெஞ்சில் கையை வைத்து (நீங்களும் எங்கள் பக்கம் வாருங்கள்) என்று அழைப்பு விடுத்து கெஞ்ச ஆரம்பித்து விட்டார். இந்த விஷயத்தையும் மேல் உள்ள வீடியோ வில் பார்த்துகொள்ளுங்கள்.

உதவி தேடுதலில் மாட்டி கொண்ட PJ:

யாரிடமும் ஒரே நேரத்தில் உதவி தேடினால் ஷிர்க் என்ற நிலைப்பாட்டில் விவாதம் செய்ய ஆரம்பித்த PJ, ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம் அல் ஜன்னத் என்ற பத்திரிகையில் (Pj ஆசிரியராக இருக்கும் போது) ஒரு மருத்துவரின் குழந்தை கொடுப்பேன் என்ற விளம்பரத்தை பிரசுரித்து ஒரே நேரத்தில் பல மனிதர்களிடம், பல ஊர்களில் இருப்பவர்களிடம் உதவி கேட்டு இருக்கின்றார். குழந்தை கொடுப்பது அல்லாஹ்வின் வேலை. மருத்துவருக்கு அந்த தகுதியையும் கொடுத்துள்ளார். உயிரை காப்பாற்றுவதற்கு உணர்வு என்ற பத்திரிகையில் ரத்த தானம் செய்வோம், உயிரை காப்போம் என்றும் விளம்பரம் செய்துள்ளார். இவ்விரண்டு விஷயங்களை கேட்கும் போதும் இவரின் மன முரண்டை பதிலாக தந்தார். உதவி தேடுதலில் மாட்டிக்கொண்டார்.

Google Search Engine உம் PJ வின் உதவி தேடுதலின் ஒப்புக்கொள்ளலும்:

ஒரே நேரத்தில் உதவ முடியுமா என்ற நிலையில் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் மனிதனால் உருவாக்கப்பட்ட Google இணைய தளம் ஒரே நேரத்தில் உதவுகின்றது. (ஏன் அல்லாஹ்வால் உருவாக்கப்பட்ட அந்த புனித மனிதர்கள் உதவ முடியாது). அதே போல Bank இல் ஒரு Doctor ன் Account ல் ஒரே நேரத்தில் பணம் போடப்படுகின்றது. இப்படி ஏன் முடியாது என்று கேட்கப்பட்ட போது, PJ கூறினார், அதில் Micro Second (Computer ற்கு சொல்லும் போது Nano Second னு தான் சொல்லணும் PJ) Difference இருக்கின்றது. அப்போது ஜமாலி அவர்கள் கேட்டார்கள், அப்படியானால் வலிமார்களும், அந்த Micro Second உடைய நேரத்தில் உதவி செய்வார்கள் என்று ஒத்துக்கொள்கின்றீர்களா? என்று கேட்ட போது வழக்கம் போல் பொசுக் என்று அமுங்கி விட்டார் இந்த P.குரு ஜி. வலிமார்களின் விஷயத்தில் நாம் எடுத்திருக்கும் நிலைப்பாட்டை தவிர்த்து, அல்லாஹ் வின் இடத்தில் தான் வைக்கின்றீர்கள் என்னும் வேறு ஒரு நிலைப்பாட்டை எங்கள் மீது திணித்து விவாதித்து எங்கள் மேல் அபாண்ட குற்றச்சாட்டு வைக்கின்றீர்கள் என்று ஜமாலி அவர்கள் கூறியதற்கும் எந்த பதிலும் இல்லை. இப்படி பட்ட நிலையில், தனது சிஷ்யர்கள் கேள்விகள் கேட்டு (நானேநொந்து நூலாய் போன நேரத்தில் நீ வேறயா?) இந்த பரமார்த்த குருவை துளைத்தபோது எடுத்த முடிவு தான் இந்த (நிரந்தர) வனவாசம்.

(தொடரும்..... இன்ஷா அல்லாஹ்)

மதுரை நாபிஈ

0 comments: