முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, August 31, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 21)
இன்று இஸ்லாத்தின் நான்காம் கலீபாவும், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் பெரிய தந்தையின் மகனாரும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மகளார் சுவனத்து பெண்களின் தலைவியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் கணவரும், சுவனத்து இளைஞர்களின் தலைவர்களான இமாம் ஹசன் ரழி..., இமாம் ஹுசைன் ரழி... ஆகியோரின் தகப்பனாரும், சூபியாக்கள் எனப்படும் ஆன்மீக குருமார்களின் முதன்மை ஆசிரியரும், உலகத்தில் உள்ள சாதாத்மார்கள் எனப்படும் நபிகளாரின் வாரிசுகளின் பாட்டனாரும், மிகுதியான வலிமார்களின் பாட்டனாருமான ஹழ்ரத் அலி கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களின் உரூஸ் தினம் ஆகும்.

இவர்கள் காபாவில் பிறந்தார்கள். முதலில் பார்த்தது நபிகளார் ஸல்... அவர்களை. பிறந்து மூன்று நாட்கள் கண் திறக்கவில்லை. நபிகளார் இவர்களை பார்க்க சென்ற போது கண்திறந்தார்கள். சிறு வயதிலேயே (7 அல்லது 9 வயது, அதாவது வயதிற்கு வருவதற்கு முன்னமே) இஸ்லாத்தை ஏற்று கொண்டார்கள். ஆரம்ப கால முதல் நபிகளாரின் தோழமை இவர்களை மிகவும் பண்படுத்தியது. ஏழ்மையான நிலையிலும் அல்லாஹ்வின் திருப்திக்காக வாழ்ந்தவர்கள். நபிகளார் இவர்களை புகழ்ந்து يحب الله ورسوله ويحبه الله ورسوله அதாவது இவர்களை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்ற சோபன செய்தி புகாரியில் இடம் பெற்றுள்ளது. தங்களுடைய கஷ்ட ஜீவனத்திலும் எந்த காரியமும் அல்லாஹ்விற்காக செய்வார்கள்.

ஒரு முறை தங்களுடைய பிள்ளைகளின் காய்ச்சல் சரியாகிவிட்டால் மூன்று நாட்கள் நோன்பு நோற்கின்றோம் என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களும் அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்களும் நேர்ந்து இருந்தார்கள். அப்படியே நோன்பும் இருந்தார்கள். முதல் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், மிஸ்கீன் வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே இரண்டாம் நோன்பை நோற்றார்கள். இரண்டாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், அநாதை வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே மூன்றாம் நோன்பைநோற்றார்கள். மூன்றாம் நாள் நோன்பு முடிந்தது. சாப்பிட அமர்ந்தார்கள், கைதி வந்துள்ளேன் என்று கூற அப்படியே அல்லாஹ்வின் பாதையில் வழங்கி விட்டு பசித்த படியே அடுத்த நாளின் ஏனைய காரியங்களில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அல்லாஹ் இவர்களை புகந்து சூரா தஹர் இறக்கி வைத்துள்ளான். அதில் இந்த சம்பவத்தின் வசனத்தையும் இறக்கியுள்ளான்.
وَيُطْعِمُونَ الطَّعَامَ عَلَىٰ حُبِّهِ مِسْكِينًا وَيَتِيمًا وَأَسِيرًا إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنكُمْ جَزَاءً وَلَا شُكُورًا

அவனுடைய (அல்லாஹ்வுடைய) பிரியத்தில் ஏழைக்கும், அனாதைக்கும், கைதிக்கும் உணவளிப்பார்கள், அப்படி உணவளித்து விட்டு நாம் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக தான் வழங்கினோம் என்று கூறுவார்கள். (76: 8,9)

ஆரம்ப காலம் முதல் கடைசி காலம் வரை நபிகளார் ஸல்... அவர்களுடனே இருந்து தபூக் தவிர அனைத்து போர்களிலும் பங்கேற்றார்கள். இவர்களின் தலைமையில் அனைத்து போர்களிலும் வெற்றி கிடைத்தது. பத்ரு போரில் 20 களில் வயது இருப்பினும் முஹாஜிரீன்களின் கொடி இவர்களிடம் தான் இருந்தது. வலீத் உட்பட பல காபிர்களை இஸ்லாத்திற்காக வீழ்த்தினார்கள். உஹதில் இவர்கள் காட்டிய வீரத்தால் எதிரிகள் சிதருண்டார்கள். அகழ் போரில் நடந்த ஒரே யுத்தத்தில் அமர் என்ற வீரமிகு எதிரியை, இஸ்லாத்திற்காக உயிரை பணயம் வைத்து அவனோடு போர் புரிந்தார்கள் அதில் வெற்றியும் கண்டார்கள்.

கைபர் யுத்தத்தில் மூன்று நாட்கள் போர் புரிந்தும் கிடைக்காத வெற்றி, நாளை ஒரு இளைஞன் யிடம் கொடியை தரப்போகின்றேன், அவரை அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் பிரியப்படுகின்றனர், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் இவர்களும் பிரியப்படுகின்றார் என்றும் கூறி அவரின் கையில் வெற்றி கிடைக்கப் போகிறது என்ற சோபனமும் கூறினார்கள் (புகாரி) அப்படியே வெற்றி கிடைத்தது. அங்கு நடந்த ஒரு சம்பவம் மூலம் எப்படி இவர்கள் இஸ்லாத்திற்காக போர் புரிந்தார்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

ِ

ஒரு எதிரியை தாக்க வாள் தூக்கி கொண்டு போக, அவன் இவர்கள் மீது துப்பி விடுகின்றான். இயல்பாக கோபம் அதிகரித்திருக்க வேண்டும். ஆனால் அலீ ரழி... அவர்களோ அவனை விட்டு முகத்தை திருப்பி கொண்டார்கள். அவனுக்கு ஆச்சரியமாக போக என்ன என்று விசாரிக்கின்றார். நான் அல்லாஹ்விற்காக வாள் ஓங்கினேன். நீ துப்பி விட்டதால் பகைமை நமக்குள் வந்துவிட்டது. அதனால் அல்லாஹ்விற்காக மற்றொரு முறை உன்னை பார்த்து கொள்வேன் என்று கூற அந்த யூதர் இஸ்லாம் ஆனார்.

அல்லாஹ்விற்காக செய்த அதன் ஒரு காரியத்தில் அவருடைய சந்ததிகளுக்கு இஸ்லாம் கிடைத்தது என்று பெருமக்கள் கூறுவார்கள். அதே கைபரில் கடைசி கோட்டையில் மிர்ஹப் உடைய கிரீடத்தை உடைத்தார்கள். அதில் இருந்த நவரத்தினங்களை போரில் கிடைத்த பொருள் (கனீமத்) ஆக சஹாபாக்கள் எடுக்க, அலீ ரழி... அவர்களையும் எடுக்க சொன்ன பொது நான் உடைத்தது அல்லாஹ்விற்காக, நான் இதை எடுத்து விட்டால் அல்லாஹ் நீ சுயநலத்திற்கு உடைத்தாய் என்று கூறி விட்டால் என்ன செய்வேன் அதனால் எடுக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

இவர்களுடைய பெருமைகள் சொல்லி முடியாது. தபூக் யுத்ததிற்கு ஹழ்ரத் அலீ ரழி... அவர்களை நபிகளார் வர வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். அழுது கொண்டு சென்றார்கள் நபிகளாரிடம், யா ரசூலுல்லாஹ் ஸல்... நான் என்ன தவறு செய்தேன் இல்லை போர் புரிய தகுதியை இழந்து விட்டேனா என்று கேட்க இல்லை, உங்களை மூஸா அலை... அவர்கள் ஹாரூன் அலை... அவர்களை விட்டு சென்றதை போல் நான் விட்டு செல்கின்றேன், எனினும் எனக்கு பிறகு நபி இல்லை.(நபி இருந்து இருந்தால் நீங்கள் தான் நபி)

انت بمنزلة هارون من موسى الا انه لا نبي بعدي ياعلي


நபிகளாரை குளிப்பாட்டி கப்ரில் அடக்கம் செய்ததும் இவர்கள் தான்.

இவர்களின் அல்லாஹ்வின் பயத்தால் இரவில் நின்று அழுதவர்களாக இருப்பார்கள். போரில் புன்முறுவல் பூத்தவர்களாக செல்வார்கள். இதை பற்றி ஒரு கவிஞர் சொல்லும் போது هو البكاء فى المحراب ليلا - هو الضحاك في يوم الضراب அதாவது, இவர்கள் இரவில் மிஹ்ராபில் (தொழுகையில்) அழுவார்கள், போரிலே சிரித்தவர்களாக செல்வார்கள்(கடினத்தை முகத்தில் காட்டமாட்டார்கள்)

இவர்களை பற்றி

انت مني وانا منك ياعلي

அலீயே நீர் என்னிலிருந்தும் நான் உம்மிலிருந்தும் இருக்கின்றோம் என்றும்,

انت اخي فى الدنيا والاخرة ياعلي

நீர் இந்த உலகிலும் மறு உலகிலும் என்னுடைய சகோதரராக இருக்கின்றீர் என்றும்,

انا مدينة العلم وعلي بابها

நான் அறிவின் பட்டணம், அலீ அதன் நுழைவாயில்

என்றும் நபிகளார் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள்.

கணிதத்தில் மிகவும் உயரத்தில் இருந்தார்கள். தப்சீர் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்று இருந்தார்கள். தப்சீர் கலையில் தலைவராக கருதப்படும் ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி... அவர்கள், ஹழ்ரத் அலீ ரழி... அவர்களிடம் பாடம் பயின்றார்கள். ஹழ்ரத் அலீ ரழி... அவர்கள் கூறுகின்றார்கள், குர்'ஆன் எங்கு, எப்போது, எதற்கு, யாருக்கு, இறங்கியது என்ற ஞானம் எனக்கு உள்ளது போல் சஹாபா பெருமக்களில் வேறு ஒருவருக்கு இல்லை என்று கூறிஉள்ளார்கள்.

ஏனைய கலீபாக்களின் ஆட்சிகளின் போது அவர்களுடனே இருந்து மார்க்கப் பிரச்சனைகளில் தீர்வு கண்டார்கள். நஹு சட்டம், வாரிசு உரிமை சட்டங்களின் தலைமை ஆசிரியராக விளங்கினார்கள். இவர்களின் ஆட்சி 4 1/2 ஆண்டுகள் நடந்தது. ஒரு நாளும் நிம்மதியாக இருக்கவில்லை. கலீபாவாக இருப்பினும் ஏழ்மையை தேர்ந்தெடுத்தார்கள். தலை சிறந்த நிர்வாகியாக இருந்தாலும் நீதத்தில் (واقضاهم علي) நபிகளார் கூறியதை போல் நீதி வானாக இருந்தார்கள். உமையாக்களின் அட்டூழியத்தால் ஹிஜ்ரி 40 இல் பள்ளிவாசலில் வைத்து ஷஹீதாக்கப்பட்டார்கள்.

அல்லாஹ் நம்மவர்களின் பிழையை இப்புனிதர்களின் பொருட்டால் மன்னித்தருள்வானாக. நம்முடைய நாட்ட தேட்டங்களை நிறைவேற்றி அருள்வானாக. நம்முடைய அமல்களை ஏற்றுக்கொள்வானாக. ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்.

அபூத் தைய்யார்

குறிப்பு: இவர்களுடைய சிறப்பை பற்றிய பயான் இன்று மதுரை காஜிமார் பெரிய பள்ளிவாசலில் நடைபெறும்.

Saturday, August 28, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 17)பத்ரு போர் நினைவு நாள்


நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து விட்ட பிறகு இரண்டாம் ஆண்டில், இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத மக்கத்து காபிர்கள் நபிகளார் ஸல்... அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். அந்த திணிக்கப்பட்ட போரில் இஸ்லாம் வென்றது. அந்த போர் நடந்தது ரமழான் 17. இந்த நாளை நாம் நினைவு கூறுவோம். இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதிற்கு வருடாந்திர உரூஸ் தினத்தை கொண்டாடும் வஹ்ஹாபிகள், ஒரு உன்னதமான இப்படிப்பட்ட தினத்தையோ, தியாகம் செய்த சஹாபா பெருமக்களையோ நினைவு கூறுவது இல்லை. அல்லாஹ் குர்'ஆனில் நல்லவர்களை நினைவு கூறுங்கள் என்று கூறுகின்றான், மர்யம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இப்ராஹிம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இத்ரிஸ் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இஸ்மாயீல் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், என்று கூறுகின்றான். அதனால் நாம் சஹாபிகளை நினைவு கூர்ந்து வஹ்ஹாபிகளை புறம்தள்ளுவோம்.

மேலும் நபிகள் நாயம் ஸல்... அவர்கள் اذكرو محاسن موتاكم உங்கள் முன் சென்றவர்களின் நல்லவைகளை நினைவு கூறுங்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அதன் படி நாம் நினைவு கூறுவோம். சுன்னத் ஜமாஅத் ஆகிய நாம் அல்லாஹ்வையும், அவனின் ரசூலையும் தான் பின் பற்ற வேண்டும். வஹ்ஹாபிகளை அல்ல. இந்த பத்ரு போரில் கலந்து கொண்ட சஹாபாக்களை பற்றி அல்லாஹ் اعملو ما شئتم فقد غفرت لكم நீங்கள் நாடியவைகளை செய்யுங்கள் உங்களை மன்னித்து விட்டேன் என்றும் கூறுகின்றான். அப்படிப்பட்ட சஹாபாக்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவோம்.

மேலும் இவர்களின் வசிலாவை தேட வேண்டும். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், اطلب الحوائج ذوى الرحمة من امتي என்னுடையா உம்மத்தினரில் ரஹ்மத் செய்யப்பட்டவர்களிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள் என்று கூறி உள்ளார்கள் (பைஹகி). பத்ரு சஹாபாக்களை போல யாரும் ரஹ்மத் செய்யப்பட்டவர்கள் இல்லை, அதனால் அவர்களிடம் நம்முடைய நாட்டத்தை கேட்போம். மேலும் உங்களுக்கு உதவி தேவை பட்டால், اعينوني يا عبادالله அல்லாஹ்வின் அடியாரே உதவி செய்யுங்கள் என்றும் அழைக்க சொல்லி உள்ளார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள்.

சுய விளம்பரத்திற்காக இல்லாமல் இம்மை மறுமை வாழ்வு சிறக்க வேண்டுமானால் இவர்களின் பொருட்டினால் நாம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் பத்ரு சஹாபாக்களின் பொருட்டால் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யா ரப்பல்ஆலமீன்.


அபூத் தைய்யார்

Friday, August 27, 2010

ஜமாலியிடம் PJ பயின்ற பாடம்
பிஜே ஜமாலி அவர்களிடம் பயின்ற பாடங்களில் ஒன்று, இமாம் நஸாயீ அவர்களின் பெயரைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொண்டது. பிஜே தனது பற்பத்தாண்டு கால வாழ்க்கையில், "நஸாயீ" என்ற இமாம் அவர்களது பெயரினை "நஸயீ" என்றே தொடர்ந்து எழுதி வந்தார்.

இதனை ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கிண்டலடித்து, கித்தாபுப் பெயர்கூடத் தெரியாதவர்தான் இந்தப் பிஜே என்று பல மேடைகளில் கூறிய யூடியூப் வீடியோக்கள் உள்ளன. அவைகளில் ஒன்று ஜமாலி அவர்களின் இந்த பயான். (கேட்பதற்கு கிளிக் செய்யவும்).

ஜமாலி அவர்களின் முயற்சி பலனளிக்கிறது. தற்போது பிஜே திருத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது. பிஜே-யின் இணையதளத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டினைக் கீழே காட்டியுள்ளேன். அதில் "நஸாயீ" என எழுதியுள்ளதினை வட்டமிட்டுள்ளேன்.ஹதீஸ் புத்தகத்தின் பெயரைப் பீஜே இப்போது தெரிந்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு "ஆறு மாதம் கால ஆய்வுக்கு செல்கிறேன்; எனவே யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அறிவிப்பு செய்தது உண்மைதானோ ?!! இனிமேல் ஹதீஸ்களையும் விளங்கிக்கொள்வார் என நம்பலாமா ?

பிஜே ஜமாலியிடம் பயின்ற பாடங்களில் இன்னொன்று, களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி உண்டு என்று ஒத்துக்கொண்ட பாடம். அவ்வாறு ஒத்துக்கொண்டுத் தன்னைத் திருத்திக்கொண்டதாக பிஜே கூறும் வீடியோ இந்தத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது. பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க.

Monday, August 23, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 13)நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் சைய்யித் வம்சத்தில் தமிழகத்தில் தோன்றி, கல்விக்கடலாக திகழ்ந்து, தமிழகத்தில் மாத்திரம் இல்லாமல் தென் இந்தியாவின் பெரிய மார்க்க அறிஞர் பெருமக்களுக்கேல்லாம் ஆசானாகவும், தமிழகத்தின் தாய் மதரசாவான பாகியாத்துஸ் சாலிஹாத்தை தோற்றுவித்த அஃலா ஹழ்ரத் அவர்களுக்கு ஆசானாகவும் விளங்கியவர்கள்
 • மதுரை பெரிய ஹழ்ரத்
 • சின்ன ஹழ்ரத்

ஆகியோர். அவர்களில் மஹான் மீர் அஹமத் இப்ராஹீம் @ பெரிய ஹழ்ரத் ரழி... அவர்களின் உரூஸ் தினம் இன்று ஆகும். அல்லாஹ் அவர்களின் பொருட்டால் நம் அனைவரின் பிழைகளை மன்னிப்பானாக.

ஆமீன்.

கூடுதல் தகவல்: மதுரையிலுள்ள அவர்களின் மக்பரா ஷரீபில் மவ்லித் ஷரீப் நடைபெற்றது. அவர்களின் வஸீலா கொண்டு அல்லாஹு த'ஆலா விடம் துஆ கேட்கப்பட்டது.


மதுரை நாபிஈ

Saturday, August 21, 2010

PJ வின் கோஷ்டிகளுக்கு ஒரு கேள்விஆற்றல் அனைத்தும் அல்லாஹ்விற்கே!பிறப்பு - இறப்பு மட்டுமல்ல நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நட்க்கும்" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஏர்வாடி தர்காவில் நடந்த 'தீ' விபத்து, கோரிப்பாளையம் தர்காவில் நடந்த சம்பவம் இவை இரண்டுமே அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் உணர்வார்கள். இதை விடுத்து 'அவுலியாக்கள் காப்பாற்றினார்களா?' என்று வினவுவது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். 'மினா' தீ விபத்தில் பக்தர்கள் பலி, 'ஷைத்தானுக்கு கல்லெறியும் இடத்தில் - கூட்ட நெரிசலில்' பக்தர்கள் பலி, ஹாஜிகளை ஏற்றி வந்த விமானம் விழுந்து ஹாஜிகள் பலி என்றெல்லாம் செய்திகள் பார்க்கிறோம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற சென்றவர்களை அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று கேட்பதும், அல்லாஹ்வின் தூதர் 'தாயிஃப்' நகரத்தில் இரத்தம் சிந்தியது, மார்க்கத்திற்காக போர் புரிந்து எண்ணற்ற சகாபாக்கள் உயிர் தியாகம் செய்தது, வீரர் 'ஹம்ஜா' (ரலி) அவர்கள், கண்மணி நாயகத்தின் பேரப்பிள்ளைகள் 'ஹஸன் - ஹுஸைன்' அவர்கள், ஹழ்ரத் உமர், உஃத்மான், அலி (ரலி) இவர்களின் மரணம் எப்படி சம்பவித்தன? இவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா? இவர்களெல்லாம் இஸ்லாத்தை வளர்க்க முனைப்புடன் செயல் பட்டவர்கள். இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வின் ரசூலுக்கு துணையாக இருந்தவர்கள். இவர்களையெல்லாம் அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று வினவுவதும் எப்படி அர்த்தமற்றதாக இருக்குமோ அப்படித்தான் நீங்கள் கேட்ட கேள்வியும். இவைகளெல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.


மேலும் கணவனை இழந்த பெண் தன் மகனை அழைத்துக்கொண்டு தர்காவிற்கு சென்றது தீமை என்றே வைத்துக் கொள்வோம். அந்த தீமையை நாடியது மேலே கண்ட இறை வசனத்தின்படி இறைவன் தான் என்பது உறுதியாகிறது. அந்த தீமையை யார் தடுக்க முடியும்? கணவனை காவு கொடுத்து, பின்னர் மகனையும் காவு கொடுத்த அந்த பெண்ணுக்கு தீமையை நாடி நிம்மதியை பறித்தது யார்?.........அல்லாவா? அவுலியா?

நமது சிற்றறிவு இதுபோன்ற விஷயங்களில் நமக்கு தெளிவை தராது. "ஷரீயத்தையும், நாவையும் பேணுங்கள்"


அபூத் தைய்யார்

வஹ்ஹாபி பிரிவுகள் - தொழுகைக் குழப்பங்கள்

நான் புதுக்கல்லூரியில் படித்த காலங்களில் என் சக அறைவாசிகள் வஹ்ஹாபிகள். அவர்களுடனான ஒரு அனுபவத்தினை எனது கடந்த பதிவு ஒன்றில் எழுதிவிட்டு அழித்துவிட்டேன். அது எழுதிய சமயத்தில், எனக்குள் ஒரு குழப்பம் ஏற்பட்டது, அப்பதிவு தேவையற்ற ஒன்றோ என்று. எனவே அழித்தேன். ஆனால் அழித்தது தவறு என்று எனக்கு இப்போது புரிகிறது. வஹ்ஹாபிகளின் குறைகளை அடையாளம் காட்டிவரும் வரை, மேலும் பலர் வஹ்ஹாபிகளாக ஆவதிலிருந்து தடுக்கலாம்.

நான் கல்லூரிகளில் படித்தக் காலங்களில், எனது சக-அறைவாசிகள் இருவரும் வஹ்ஹாபிகள் ஆவார்கள். அவைகள் 14 வருடங்களுக்கு முற்பட்ட அனுபவங்கள்.

எனக்கும் வஹ்ஹாபிகளுக்கும் ஏற்பட்ட முரண், அவர்கள் முஸ்லீம்களுக்கு மத்தியில் குழப்பம் விளைவிக்கும் காரணத்தினை முன்வைத்தே. வஹ்ஹாபி என்ற பதம் மேற்குலக ஊடகங்களில் வேறொருக் காரணத்திற்காக, அவர்களை அடையாளம் காட்ட அச்சொல் பயன்படுத்தப் படுகிறது. தீவிரவாதம், உரிமை மீறல்கள் மற்றும் மடமைத்தனம் போன்றவற்றை அடையாளம் காட்ட இந்த சொல், அந்த மேற்கு உலக ஊடகங்களில் பயன்படுத்தப் படுகிறது. ஏனெனில் இப்னு அப்துல் வஹ்ஹாப் என்பவர் தீவிரவாதத்தினைக் கொண்டே மடமைத்தனத்தினை சவுதி அரேபியாவில் அரங்கேற்றி, தனது வஹ்ஹாபியத்தினை அரசாங்கமதமாக்கினார். ஆனால் மேற்குலத்தினரின் போக்கு சற்று ஆட்சேபனைக்குறியது. எல்லா தீவிரவாதத்தினையும், வஹ்ஹாபிசம் என்பது தவறு. சில தீவிரவாதங்கள் நல்ல காரணங்களின் மீது வேறூண்றியவை. உயிர், உடமை மற்றும் உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற காரணத்திற்காக எதிர்த்து நின்றல் சில சமயங்களில் தீவிரவாதம் எனப் பொருள் கொள்ளப்படுகிறது. இத்தகைய நல்ல காரணங்களால் எழும் போராட்டங்களை "வஹ்ஹாபியம்" என்று அழைத்தால், வஹ்ஹாபியர்களைப் புகழ்வது போன்றதாகும். இந்த தவறு ஏற்படச்செய்கிறது. இந்தத் தவறினை மேற்குல ஊடங்கள் செய்வதற்கான காரணம், உயிர் மற்றும் உரிமைகளுக்காகப் போராடுபவர்களை தரக் குறைவாகக் காட்டவேண்டும் என்பதற்காக இந்த சொல்லைக் கையாளுகிறார்கள். மூல காரணம், அந்த மேற்குலகினரே உரிமை மீறல்கள், படுகொலைகளை நிகழ்த்துவதால்.

வஹ்ஹாபிகளின் தீவிரவாதம் வேறுபட்டது. அது "காத்தல்" என்ற படியிலிருந்து "தாக்குதல்" என்றப் படியினைச் சென்றடைந்தது. தாக்குதல் என்பது காத்தல் என்பதற்காக நிற்கும்போது மட்டும் அந்த தாக்குதலை நபி அவர்களது வாழ்க்கை வரலாறு அங்கீகரிக்கிறது. ஆனால் இப்னு-அப்துல்-வஹ்ஹாபின் தீவிரவாதம், தனது கொள்கை பரப்பிற்காக நிகழ்த்தப்பட்ட ஒன்று.

வஹ்ஹாபிகள் என்றப் பதத்தினை ஏற்றுக்கொள்ள அவர்கள் தயாராக இருப்பதில்லை. ஆனாலும் அவர்கள் வஹ்ஹாபிகளே. வஹ்ஹாபிகளிடத்தில் பல பிரிவினர் உள்ளனர். இயக்க-ரீதியாக, தனித்தனி அமைப்புகள் கொண்டு செயல்படும் வஹ்ஹாபி இயக்கங்களைத் தவிர கொள்கை ரீதியான பிரிவுகள் உள்ளன. அவைகளை அறியும் பொருட்டு கீழே பட்டியல் இடுகிறேன்.

1) சவுதி அரசாங்கத்தினைக் காக்க செயல்படும் வஹ்ஹாபிகள்:

இந்தப் பிரிவினர், சவுதி அரசாங்கத்தினால் பராமரிக்கப்படும் சில பேச்சாளர்கள் மற்றும் அறிஞர்களால் வளர்க்கப்படும் பிரிவு. உதாரணத்திற்கு இப்னு பாஸ், அபூ கதீஜா போன்றவர்களைக் கூறலாம். இப்னு பாஸ் வாழ்ந்து மறைந்தவர். அபூ கத்தீஜா இன்னும் இங்கிலாந்தில் வாழ்பவர். இளவயது காரர். இந்தப் பிரிவினரின் கொள்கைப் படி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் சார்பாகக் கொள்கைக் கொண்டிருப்பவர்கள். அவர்கள் சார்பாகா இருந்து தனது முடியாட்சியினை அங்கீகாரம் பெற்றதொன்றாகவும், மேற்குலகில் செல்வாக்குப் பெற்றதாகவும் ஆக்க சவூதி அரசினர் விருப்பப்படிகின்றனர். அதனை இஸ்லாம் ரீதியாக அங்கீகரிக்க ஃபத்வாக்கள் கொடுக்க அவர்களால் இந்த வஹ்ஹாபிய ஆலீம்கள் (அறிஞர்கள்) போற்றப்படுகின்றனர். இவர்களது போதனைகளில், அமெரிக்காவினை நண்பனாகக் காட்டுவதும், இஸ்ரேலினை வெறுக்கத்தக்க நாடு அல்ல எனக்காட்டுவதும், ஈரானை எதிரியாகக் காட்டும் போக்கும் தென்படும்.

2) அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான "வஹ்ஹாபிகள்":

இவர்களுக்கு உதாரணம், பின் லேடன், அன்வர்-அல்-அவ்லாக்கி, தாலிபான்கள். இவர்கள் முற்கூறிய வஹ்ஹாபிகளைவிட மத விஷயங்களில் சற்று மிருதுவானவர்கள். இவர்கள், ஷியாக்களைக் காஃபிர்கள் என்றுப் புறந்தள்ளுவதில்லை. மத்ஹபுகளை (சட்ட நுணுக்கங்கள் ரீதியாக வேறுபட்ட பள்ளிகளை) வெறுப்பவர்களில்லை. மேலும் மேற்கூறப்பட்ட ஒன்றாம் வகை வஹ்ஹாபிகளின் நயவஞ்சகம் அற்றவர்கள் இந்த வஹ்ஹாபிகள். ஆனால் உண்மையைச் சொல்லப் போனால் இவர்களை வஹ்ஹாபிகள் என அழைப்பது, மேற்குலச் சித்தாந்தத்தின் படி மட்டுமே. உண்மையில் வஹ்ஹாபி என்ற சொல் இவர்களுக்குப் பொருந்தாது. இந்த ரகத்து "வஹ்ஹாபிகள்" தங்களை "ஸலஃபிக்கள்" என அழைத்துக் கொள்வதை விரும்புகின்றனர். முதல் ரகத்தில் சொல்லப்பட்ட சவுதி சார்பு வஹ்ஹாபிகளும் தங்களை "ஸலஃபிக்கள்" என அழைத்துக்கொள்ள விரும்பினாலும், அவர்களது நயவஞ்சகத்தினாலும், கொள்கைத் தீவிரவாதத்தினாலும், "வஹ்ஹாபிகள்" என்றே அம்பலப் படுகின்றனர்.

3) "குர்ஆன் ஹதீஸ்" வஹ்ஹாபிகள்:

இவர்கள் நபித்தோழர்களின் கூற்றுக்களையோ அல்லது குர்ஆன்-ஹதீஸ் பற்றி நபித்தோழர்களின் அபிப்ராயங்களையோ ஏற்றுக் கொள்வதில்லை. தனது மனோ இச்சையினை மட்டுமே பின் பற்றுவார்கள். உதாரணத்திற்கு பி.ஜெயினுல் ஆபிதீன்

4) "ஸலஃபிக்கள்":

இவர்கள் குர்ஆன்-ஹதீஸினையும் பின்பற்றுவார்கள், மேலும் நபி அவர்களின் அடுத்த தலைமுறையினரான "தாபியீன்கள்" மற்றும் "தபஉத்தாபியீன்கள்" ஆகியோரின் அபிப்ராயத்தினையும் மதிப்பவர்கள். ஆனால் வஹ்ஹாபிகளைப் போல மத்ஹபுகளை விமர்சிப்பவர்கள்.


5) கலவையான வஹ்ஹாபிகள்:

இந்த வஹ்ஹாபிகளைப் பற்றி புரிந்துக் கொள்ளலாம், ஆனால் அவைகளை எழுத்துக்களாக எழுத முற்பட்டால் குழப்பம் ஏற்பட வாய்ப்புண்டு; இருப்பினும் சொல்கிறேன். இந்தப் பிரிவில் மேலே சொன்ன நான்குப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர். ஒருவர் ஸலஃபியாகவும் இருப்பார், அதே சமயத்தில் சவுதி, அமெரிக்கா, இஸ்ரேல் சார்பாகவும் இருப்பார். ஒருவர் அமெரிக்காவிற்கு எதிராகவும் இருப்பார், குர்ஆன்-ஹதீஸ் மட்டும்தான் பின் பற்றுவேன் என்றும் இருப்பார்.


தமிழக முஸ்லீம்களைப் பொருத்தவரை முதல் இரு பிரிவு வஹ்ஹாபிகளால் அவ்வளவு பிரச்சனை கிடையாது. 3-ம் பிரிவும் 4-ம் பிரிவும் தான் பிரச்சனைக்குறியவர்கள்.

குறிப்பாக சுவுதிக்கு சென்று தொத்திக்கொண்டு வந்த வியாதிகளைத் தமிழகத்தில் பரப்பிய சிலராலும், அதே வியாதியினால் பீடிக்கப்பட்டவர்களாலும் பள்ளிவாசல்களில் பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த வஹ்ஹாபிக்களைப் பொறுத்தவரை, வஹ்ஹாபியல்லாத ஹனஃபி மத்ஹபு பிரிவினர்தான் ஹதீஸ்களிலிருந்து அதிக பட்சமாக முரண்படுபவர்கள். ஹன்பலி மத்ஹபு பிரிவினர்தான் தங்களுடன் அதிகபட்சமாக ஒத்து போகுபவர்கள்.

இந்த வஹ்ஹாபிகள், வஹ்ஹாபியல்லாதவர்களின் பள்ளிவாசல்களில், "தொழுகிறேன் பேர்வழி" என்ற பேரில் குழப்பங்களை விளைவிப்பார்கள். ஹனஃபி பள்ளிகளுக்கு சென்று அவர்களை வெறுப்பேத்தும் தொனியில், மிக சப்தமாக தொழுகையின் போது ஆமின் சொல்லுதல்; இரு நபர் நிற்க வேண்டிய இடத்தில், காலை அகட்டி வைத்துக் கொண்டு தான் ஒருவனாக மட்டும் இருத்தல் அல்லது அருகில் நிற்பவனை நெறுக்குதல்; நெஞ்சில் கைக்கட்டுகிறேன் என்ற பேரில், அருகில் உள்ளவனுக்கு சிரமம் ஏற்படுத்தல்; தொழுகை அமர்வில், விரலைத் துடிப்பது போல ஆட்டிக் கொண்டே இருத்தல்; தொப்பி அணிந்து தொழுபவர்களை விட அணியாது இருப்பதே சிறந்தது என்பது போல இத்தகைய அனைவரும் தொப்பி அணியாதிருத்தல். தொழுகை முடிந்தவுடன், பிரார்த்திப்பவரை ஏளனம் செய்யும் தொனியில், எழுந்து செல்லுதல் போன்றவைகள் இவர்கள் செய்யும் குழப்பங்கள். இவர்கள் வணங்குவது இறைவனையா அல்லது தனது இறுமாப்பினையா என்பதை அல்லாஹ் அறிவான் என்றாலும், அவர்களது நடத்தைகள் மூலம் நமக்கும் இறைவன் காட்டவே செய்கிறான்.

இத்தகைய வஹ்ஹாபிகளுக்கு ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் பதில் அளிக்கிறார்கள்: http://www.jamalinet.com/category/thavarana-kolgaikalum-thakka-badhiladiyum

நன்றி - அப்துல் மாலிக்


Monday, August 16, 2010

அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா?புகாரியில் இடம் பெரும் செய்தியின் நிலை என்ன?
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை அவர்களின் பெரிய தந்தை அபூலஹபிடம் கூறுவதற்காக அவனது அடிமைப் பெண் ஓடி வரும் போது மகிழ்ச்சி மிகுதியால் தன் சுட்டுவிரல் நீட்டி அந்தப் பெண்ணை அபூலஹப் விடுதலை செய்தான். இதன் காரணமாக அவன் நரகில் வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதுஇ அந்த விரலை மட்டும் நரகம் தீண்டாது. மாறாக அந்த விரலிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும். அதைச் சுவைத்து அவன் தாகம் தீருவான்.

حَدَّثَنَا الْحَكَمُ بْنُ نَافِعٍ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّ حَبِيبَةَ بِنْتَ أَبِي سُفْيَانَ أَخْبَرَتْهَا أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ انْكِحْ أُخْتِي بِنْتَ أَبِي سُفْيَانَ فَقَالَ أَوَتُحِبِّينَ ذَلِكِ فَقُلْتُ نَعَمْ لَسْتُ لَكَ بِمُخْلِيَةٍ وَأَحَبُّ مَنْ شَارَكَنِي فِي خَيْرٍ أُخْتِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ ذَلِكِ لَا يَحِلُّ لِي قُلْتُ فَإِنَّا نُحَدَّثُ أَنَّكَ تُرِيدُ أَنْ تَنْكِحَ بِنْتَ أَبِي سَلَمَةَ قَالَ بِنْتَ أُمِّ سَلَمَةَ قُلْتُ نَعَمْ فَقَالَ لَوْ أَنَّهَا لَمْ تَكُنْ رَبِيبَتِي فِي حَجْرِي مَا حَلَّتْ لِي إِنَّهَا لَابْنَةُ أَخِي مِنْ الرَّضَاعَةِ أَرْضَعَتْنِي وَأَبَا سَلَمَةَ ثُوَيْبَةُ فَلَا تَعْرِضْنَ عَلَيَّ بَنَاتِكُنَّ وَلَا أَخَوَاتِكُنَّ قَالَ عُرْوَةُ وثُوَيْبَةُ مَوْلَاةٌ لِأَبِي لَهَبٍ كَانَ أَبُو لَهَبٍ أَعْتَقَهَا فَأَرْضَعَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا مَاتَ أَبُو لَهَبٍ أُرِيَهُ بَعْضُ أَهْلِهِ بِشَرِّ حِيبَةٍ قَالَ لَهُ مَاذَا لَقِيتَ قَالَ أَبُو لَهَبٍ لَمْ أَلْقَ بَعْدَكُمْ غَيْرَ أَنِّي سُقِيتُ فِي هَذِهِ بِعَتَاقَتِي ثُوَيْبَةَ

சுவைபா என்பவர் அபூலஹபின் அடிமையாக இருந்தார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தான். சுவைபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் பாலூட்டியிருக்கிறார். அபூலஹப் மரணித்த பின் அவனது குடும்பத்தில் ஒருவரின் கனவில் மோசமான நிலையில் அவன் காட்டப்பட்டான். "நீ சந்தித்தது என்ன'' என்று அவர் அவனிடம் கேட்டார். அதற்கு அவன் "சுவைபாவை நான் விடுதலை செய்ததால் இதில் நீர் புகட்டப்படுகிறேன் என்பதைத் தவிர வேறு எதையும் நான் சந்திக்கவில்லை'' என்று கூறினான்.
நூல் : புகாரி 5101

கனவில் காண்பது மார்க்கம் ஆகாது. ஆனால் கனவில் கண்ட பல விஷயங்கள் நடந்து உள்ளது என்பதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும். மேலும் நபிகளாரும் கனவு என்பது நுபுவத்தின் ஒரு பகுதி என்று கூறி உள்ளார்கள்.

இதை எல்லாம் விட ஹதீஸாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் புகாரியில் இருக்கின்றது. ஆனால் வஹ்ஹாபிகள் இந்த ஹதீஸை ஏற்பது இல்லை. காரணம் நபிகளார் ஸல்.... அவர்களால் ஒருவருக்கு பெருமை கிடைப்பதை விரும்புவதில்லை. மேலும் இந்த ஹதீஸ் சஹீஹ் தரத்திலும் உள்ளது. ஆனாலும் கட்டுக்கதை என்று வஹ்ஹாபிகள் ஹதீசையே கூற ஆரம்பித்துவிட்டார்கள். குர்'ஆனிற்கும் ஹதீசிற்கும் இந்த ஹதீஸ் முரண் என்று கூறுகிறார்கள். அப்படியானால் புகாரி இமாம் அவர்களுக்கும் மார்க்கம் தெரியாது என்று கூறும் இந்த வஹ்ஹாபிகள், ஹதீஸை மறுத்ததின் மூலம் குர்'ஆன் ஹதீஸ் என்று சொல்வதெல்லாம் மனோ இச்சைக்கு உகந்த விஷயத்தில் தான் என்றும், இவர்கள் நரகவாதிகள் என்றும் நன்றாக தெரிகிறது. இவர்களை விட்டு முஸ்லிம்கள் அனைவரையும் அல்லாஹ்பாதுகாப்பானாக!

மதுரை நாபிஈ


Saturday, August 14, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 3)

நாயகம் ஸல்... அவர்களின் கடைசி புதல்வியாக இந்த உலகில் பிறந்த அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்கள்
 • சுவனத்தின் தலைவி பாத்திமா என்றும்,
 • பாத்திமா என்னில் இருந்து ஒரு பகுதி என்றும்,
நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் பாராட்டப்பெற்றவர்கள்.

 • இவர்களின் தாயார் பெயர் உம்முள் மூமினீன் அன்னை கதீஜா நாயகி ரழி....
 • இவர்களின் கணவர் பெயர் அமீருல் மூமினீன் ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு
 • இவர்களின் புதல்வர்கள் சுவனத்தின் இளைஞர்களின் தலைவர்கள் என்று நபிகள் ஸல்... அவர்களால் பாராட்டபெற்ற ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி... மற்றும் ஹழ்ரத் இமாம் ஹுசைன் ரழி....
 • இவர்களின் புதல்விகள் அன்னை ஜைனப் ரழி... அன்னை உம்மு குல்சூம் ரழி...
இவர்களின் சிறப்பை பற்றி எழுத காலங்கள் போதாது, மிகவும் சின்ன விஷயமாக சொல்ல வேண்டுமானால் ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி.... அவர்கள் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் கூறினார்கள், நபியின் குடும்பத்தவர்களே உங்களை பற்றி ஒன்று சொன்னால் போதும் உலகில் உள்ள அனைவரும் உங்கள் அந்தஸ்தை உணர்ந்து கொள்வார்கள், அது என்ன தெரியுமா? தொழுகையில் உங்கள் மீது யாரு சலவாத் சொல்ல வில்லையோ அவர்களின் தொழுகை பரிபூரணம் அடையாது.

மேலும் அன்னை பாத்திமா நாயகியின் வாரிசுகள் கியாமத் நாள் வரை வரக்கூடியவர்கள் அனைவருக்கும் கழிவுப்பொருளான ஜகாத் மற்றும் சதகா ஹராம் ஆகும்.

அப்படிப்பட்ட சிறப்பிற்குரிய நமது உயிரினும் மேலான நபிகள் நாகம் ஸல்.... அவர்களின் கண்மணியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் உரூஸ் நினைவு தினம் இன்று (ரமழான் 3) ஆகும் . அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் பொருட்டால் துஆ கேட்டு ஈருலகத்திலும் நபிகளார் ஸல்... அவர்களின் குடும்பத்தோடு சுவனத்தில் இருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.

ஆமீன், யா ரப்பல் ஆலமீன்,

மதுரை நாபிஈ

Wednesday, August 11, 2010

இரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதம்
இரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதம்


யார் பொய் சொல்கிறார்? உன்மை சொல்கிறார்? இரட்டை வேசமுடைய இரு பிஜே விவாதத்தை படித்தாலே தெரிந்து கொள்ளலாம்.

புதிய பிஜே பதில்:

அல்லாஹ் தன்னைப் பற்றி பேசும் போது தனது ஆற்றலைப் பற்றியும் பேசுகிறான், தனது தோற்றத்தைப் பற்றியும் பேசுகிறான்

ஆற்றலைப் பற்றி பேசும் வசனங்களில் கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனது கை எனது முகம் என்பன போன்ற சொற்களை அல்லாஹ் பயன்படுத்துகிறான். அல்லாஹ்வின் கை என்றால் கை என்றே நபித்தோழர்கள் காலத்தில் புரிந்து கொள்ளப்பட்டது, கை என்றால் அல்லாஹ்வின் ஆற்றல் என்று கருத்து கொடுக்கப்படவில்லை, நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்களும் இவ்வாறே பொருள் கொண்டனர்.

ஆதம்(அலை) அவர்களை எனது கையால் படைத்தேன் என்று அல்லா சொல்வது கையால் படைத்தான் என்ற அர்த்தத்தில் எடுத்து கொள்ள வேண்டும்

இறைவனுக்கு கை, கால் முகம் ஆகிய உறுப்புகள் இருப்பதாகவும், உருவம் இருப்பதாகவும் குர் ஆன் கூறுகின்றது. இறைவன் அர்ஷின் மீது அமர்ந்திருக்கின்றான் எனவும், அவன் பார்க்கின்றான் கேட்கின்றான் எனவும் அவன் நடந்து வருவான் எனவும் மறுமையில் இறைவனை நல்லவர்கள் காண்பார்கள் எனவும் குர் ஆன் கூறுகின்றது.

பழைய பிஜே பதில்:

நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா? ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?


சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?


அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.


எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)


அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.


கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.


அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?


இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.


அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.
இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?


மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.


மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
நூல்: முஸ்லிம் 5021


இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.


இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.

விவாதம் 2:

தலைப்பு: அப்போ ஸஹாபாகளை குர்ஆன், ஹதிஸ் நிலைபாட்டில் இருந்தார்களா?

புதிய பிஜே பதில்:

குர்ஆன், ஹதிஸ் ஆகிய இரண்டுமே மார்க்க ஆதாரம் என்ற நிலைபாட்டிலேயே ஸஹாபாக்கள் இருந்தார்கள் ,

பழைய பிஜே பதில்:

(புதிய பிஜே பொய் சொல்கின்றார், ஏனென்றால் ஸஹாபாக்கள் பின்பற்ற மாட்டோம் என்றும், அவர்கள் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக இருந்தார்கள் என்று பழியை சுமத்தினார், வேணுகிற போது ஸஹாபாக்களை எடுத்து கொள்வோம், வேணாம் என்கிற போது விட்டுவிடுகிறார், இவர் பொய் பேசினத்திற்கு ஆதாரம் இதோ)

நபித்தோழர்களைப் பற்றி நாம் அன்று கொண்ட அதே மதிப்பீட்டிலும் மரியாதையிலும் ஒரே மாதிரியான நிலைபாட்டில் தான் நாம் இருக்கின்றோம். ஆனால் இவ்வாறு நம்மைக் குற்றம் சாட்டுபவர்கள் தான் தங்களுடைய நிலைபாட்டை மாற்றிக் கொண்டுள்ளார்கள்.
அவர்கள் இதுவரை கொண்டிருந்த நிலைபாட்டிற்கு மாற்றமாக அல்ஜன்னத் என்ற பத்திரிகை அக்டோபர் 2004 இதழில் பக்கம்15ல் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.


அந்த அறிக்கையில் கீழ்க்கண்ட விஷயங்கள் கூறப்பட்டுள்ளன.
1. நபிமார்களுக்குப் பிறகு ஸஹாபாக்களான நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்களாக இருக்கின்றார்கள். இதற்கு ஏராளமான சான்றுகள் குர்ஆன் ஹதீஸில் உள்ளன.
2. நபித்தோழர்களை அல்லாஹ் திருப்திப் பட்டுக் கொண்டதாக குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
3. அல்லாஹ் விரும்பியது போன்று அவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டதினாலேயே அல்லாஹ் அவர்களைப் புகழ்ந்துள்ளான்.
4. நபித்தோழர்களின் ஈமான் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களுடைய ஈமானை விடச் சிறந்ததாகும்.
5. நபித்தோழர்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நன்கு விளங்கியவர்களாவர்.
6. நபித்தோழர்களை சங்கைப்படுத்துவதும், அவர்களின் சிறப்பை மதிப்பதும் முஸ்¬ம்கள் மீது கடமையாகும்.
7 ஸஹாபாக்கள் ஏகோபித்துக் கூறியுள்ள விஷயங்களை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
8. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்கு ஏகோபித்துக் கொடுக்கின்ற விளக்கத்தைக் கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
9. ஸஹாபாக்களுக்கிடையில் கருத்து வேறுபாடான விஷயங்களில் குர்ஆன் சுன்னாவிற்கு மிகவும் நெருக்கமான கருத்தையே ஏற்க வேண்டும்.
10. ஸஹாபாக்கள் குர்ஆன் சுன்னாவிற்குக் கொடுக்கின்ற விளக்கங்கள் அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் கொடுக்கின்ற விளக்கங்களை விடச் சிறந்ததாகும்.
11. குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்த ஒரு விஷயத்தையும் ஸஹாபாக்கள் கூறியதில்லை.
இதுதான் அந்த அறிக்கை விபரம்.
நபித்தோழர்கள் சிறப்பு மிக்கவர்கள், நம்மை விட ஈமானில் சிறந்தவர்கள் என்றெல்லாம் வரக்கூடிய விஷயங்களில் நமக்கு மாற்றுக்கருத்தில்லை. இதற்கு ஏராளமான குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் உள்ளன.


என் தோழர்களைத் திட்டாதீர்கள். ஏனெனில் உங்களில் ஒருவர் உஹது மலையளவு தங்கத்தைச் செலவு செய்தாலும் அவர்கள் செலவு செய்த இரு கைக் குவியல் அல்லது அதில் பாதியளவைக் கூட அந்தத் தர்மம் எட்டாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ர ), நூல்: புகாரி 3673


மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள். பிறகு (சிறந்தவர்கள்) அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ர ), நூல்: புகாரி 2651


அல்லாஹ்வும் தன் திருமறையில் நபித்தோழர்களைப் புகழ்ந்து கூறுகின்றான்.
ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின் தொடர்ந்தோரையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப் பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி. (அல்குர்ஆன் 9:100)


இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தோரையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும், சிரமமான கால கட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களை மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். (9:117)


உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். அவர்கள் பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட மகத்தான பதவியுடையவர்கள். (57:10)
இத்தகைய சிறப்புகள் நபித்தோழர்களுக்கு இருப்பதை நாம் எப்போதுமே மறுத்ததில்லை. நபித்தோழர்களின் சிறப்புகளைச் சீண்டிப் பார்க்கும் ஷியாக்களையும் அவர்களுக்கு தமிழகத்தில் ஆதரவளிக்கும் இயக்கங்களையும் அடையாளம் காட்டி அவர்களது முகத்திரையைக் கிழிக்காமல் நாம் விட்டதில்லை.


ஆனால் அதே சமயம் இத்தனை சிறப்புகள் உள்ளதால் நபித்தோழர்களின் கருத்துக்களை மார்க்கமாகக் கருதும் எந்தவொரு செயல்பாட்டையும் ஏற்றுக் கொள்ள முடியாது. குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டும் தான் மார்க்கத்தின் ஆதாரங்கள். நபித்தோழர்கள் சிறந்தவர்கள் தான் என்றாலும் அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது. அவர்களிடம் தவறுகள் ஏற்படத் தான் செய்யும்.


நபித்தோழர்கள் குறித்து இவர்கள் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையில் ஒன்று முதல் ஒன்பது வரையுள்ள கட்டளைகளைப் பார்த்தால் இவர்கள் சரியான நிலைபாட்டில் இருப்பது போல் தோன்றும். பத்தாவது கட்டளையைப் ஆழமாகச் சிந்தித்தால் விபரீதம் புரியும். ஆனால் இறுதியாக உள்ள பதினோறாவது கட்டளை தான் இவர்களின் கொள்கை மாற்றத்தை அப்பட்டமாக அம்பலப்படுத்துகின்றது.


இவர்கள் எந்த அளவிற்குத் தடம் புரண்டு விட்டனர் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.


நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக எந்தவொரு கருத்தையும் கூறியதில்லை என்பது அவர்களின் பதினோறாவது கட்டளை. இதன் மூலம் நபித்தோழர்கள் கூறிய, செய்த அனைத்தையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற வேண்டும் என்ற நிலைக்கு இவர்கள் மாறி விட்டனர். நபித்தோழர்கள் குர்ஆன் சுன்னாவிற்கு எதிராக எந்தவொன்றையும் கூறியதில்லை என்றால் அவை அனைத்துமே பின்பற்றப்பட வேண்டும் என்பதைத் தவிர வேறு கருத்து இருக்க முடியாது. குர்ஆன், ஹதீஸ், ஸஹாபாக்கள் என மூன்று ஆதாரங்களை இப்போது ஏற்படுத்திக் கொண்டார்கள்.


குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமாக ஒன்றல்ல, இரண்டல்ல. நூற்றுக்கணக்கான விஷயங்களில் ஸஹாபாக்கள் கருத்து கூறியுள்ளார்கள் என்பது தான் உண்மையாகும்.

இப்போ சொல்லுங்கள் ஸஹாபாகளை குர் ஆன், ஹதிஸ் நிலைபாட்டில் இருந்தார்களா?

ஸஹாபாக்களைப் பின்பற்றலாம் என்ற இந்த வாசலைத் திறந்து விட்டால் போதும். எல்லா பித்அத்களையும் நியாயப்படுத்த இது அடிப்படையாக அமைந்து விடும்.

தராவீஹ் 20ரக்அத்கள், ஜும்ஆவுக்கு இரண்டு பாங்கு, முத்தலாக் அத்தனையையும் சரி என்று நியாயப்படுத்தும் நிலை தோன்றி விடும்.

புதிய பிஜே:

ஆரம்ப காலத்தில் தராவிஹ் பற்றி நாம் கூறும் போது இருபது ரக்கத்து இல்லை என்று மறுத்தோம்


உமர்(ரலி) அவர்களின் காலத்தில் 20 ரக்கத்து தொழப்பட்டாலும் நாம் அதை ஏற்று கொள்ள கூடாது என்று கூறினோம்

தொடரும்…

ஆதாரம் தொகுப்புகள்:
புதிய பிஜே:

http://www.onlinepj.com/kelvi_pathil/nambikai_thotarbutaiyavai/salafi_kokai/

பழைய பிஜே:

http://www.onlinepj.com/deen_kula_penmani/2008-dkp/01-2008-dkp/

http://www.onlinepj.com/vimarsanangal/jaqh_vimarsanam/

குறிப்பு:
புதிய பிஜே, பழைய பிஜே என்பது இரண்டும் ஒரே பிஜே, இரண்டு காலங்களில் இரு வேறுகருத்துகள் பதித்தினால் விளங்குவதற்காக அவ்வாறு தொகுக்கப்பட்டுள்ளது.

நான்கு குணங்கள் எவனிடத்தில் உள்ளனவோ அவன் நயவஞ்சகனாவான். அல்லது அந்த நான்கு குணங்களில் ஒரு குணம் அவனிடம் குடி கொண்டிருந்தாலும் அவன் அதைவிட்டுவிடும்வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் இருப்பதாகப் பொருள். (அந்த நான்கு குணங்கள் இவைதாம்:) அவன் பேசும்போது பொய் பேசுவான்; வாக்களித்தால் மாறு செய்வான்; ஒப்பந்தம் செய்தால் மோசடி செய்வான்; வழக்காடினால் அவமதிப்பான். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி)கள் அறிவித்தார். (ஆதாரம்: இமாம் புகாரி(ரஹ்), இமாம் முஸ்லிம்(ரஹ்).)

எதைப்பற்றி உமக்கு(த் தீர்க்க) ஞானமில்லையோ அதை(ச் செய்யத்) தொடரவேண்டாம்; நிச்சயமாக (மறுமையில்) செவிப்புலனும், பார்வையும், இருதயமும் இவை ஒவ்வொன்றுமே (அதனதன் செயல்
பற்றி) கேள்வி கேட்கப்படும். (அல்குர்ஆன் 17:36)

Tuesday, August 10, 2010

சவாலில் தோற்ற PJ
தான் ஒரு சவால் விட்டு அதில் இருந்து பின் வாங்கிய PJ. (உண்மை தான் ஜெயிக்கும், பொய் (PJ) தோற்கும் )24,25.07.2010 சென்னை தியாகராஜர் மண்டபத்தில் நடந்து முடிந்த PJ காட்சி (show) வில் , PJ யினால் விடப்பட்ட அடுத்த காட்சிக்கான சில சீன்கலீல் (scene) ஒரு சீன் பின்வருமாறு: (அவர்களின் இணையங்களில் இடம் பெற்றுள்ள வார்த்தைகள்).

 • " நீங்கள் ஒரு மாநாடு நடத்தி உங்கள் கூட்டத்தை கூட்டிக் காட்டுங்கள் அதே போல் ஒரு மாநாடு நடத்தி நீங்கள் கூட்டிய கூட்டத்தைப் போல் 100 மடங்க கூட்டத்தை நாங்கள் கூட்டிக் காட்டுவோம் சவாலை ஏற்றுக் கொள்கிறீர்களா? என பகிரங்கமாக அறிவித்தார் PJ இந்த சவாலை நீங்கள் ஏற்றுக் கொண்டால் இந்த விவாதக் கலத்திலேயே நாம் ஒப்பந்தம் போட்டுக் கொள்வோம் என்றார் PJ. ஆனால் கடைசி வரை சவாலையும் ஜமாலி ஏற்றுக் கொள்ளவில்லை. என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா? கீழே உள்ள வீடியோ வை பாருங்கள்.


 • அது போல்எங்கள் ஜமாத்தின் வீரியம் நாங்கள் சவால் விட்டு ஒரு எஸ்.எம்.எஸ்ஸில் (SMS) பத்தாயிரம் பேரை உடனே கூட்டிக் காட்டுவோம் உங்களால் முடியுமா? என்றார். மக்கள் கூட்டத்தை கூட்டிக்காட்ட திராணியற்ற ஜமாலியோ வாய் மூடி மௌனித்துப் போனார் பாவம். என்ற பொய்யை பதிவு செய்து உள்ளார்கள். உண்மை என்ன தெரியுமா? கீழே உள்ள வீடியோ வை பாருங்கள். "
இரண்டு விமர்சனங்களுக்கும் இந்த வீடியோ (அவர்களின் இணையத்தில் உள்ள வீடியோ) வில் விளக்கம் உள்ளது. நீங்களே விளங்கி கொள்ளுங்கள்.
SMS மூலம் 10,000 நபர்களை இங்கேயே கூட்டுவோம் என்று சவால் விட்ட PJ வை ஜமாலி அவர்களோ நான் சவால் விடுறேன் SMS மூலம் 10,000 நபர்களை கூட்டி காட்டுங்கள் என்று கூற, PJ பொசுக் என்று அமுங்கி விட்டு, இரு தரப்பும் தான் சேர்க்க வேண்டும் என்று கூறி, நீங்கள் எத்தனை நபர்களை சேர்ப்பீர்கள் 4 லட்சம் பேரை வர சொல்ல வேண்டும் அது தான் சவால் என்று தன்னுடைய சவாலில் பின் வாங்கினார். ஜமாலி இந்த சவாலை விடவும் இல்லையே எப்பிடி நீங்கள் திணித்தீர்கள், மேலும் ஏன் அந்த 100 மடங்கு கூட்டம் சேர்ப்போம் என்று சொன்னீர்களே அது என்னவானது! பொய் என்பது தானே தெரிகிறது. ஏன் இப்படி? பொய் சொல்ல ஒரு எல்லை வேண்டாமா?

சரி ஜமாலி தோற்று தான் போனார் என்று உங்கள் முசலுக்கு மூன்று கால் என்ற கொள்கை இருக்கிறது என்று வைத்துகொண்டாலும், வாதத்திற்கு ஒரு விஷயம்,


உங்கள் கொள்கை / வீரியம் பெருமளவு வளர்ந்துள்ளதே என்பதினால் உங்கள் கொள்கை / வீரியம் சரி அன்று காண்கிறீர்கள் என்றால் உங்களுக்கும் பார்க்க பெரிதாக வளந்திருக்கின்ற கூட்டம் ஷைத்தானின் கூட்டமாகும். இதை நீங்கள் மக்களுக்கு உதாரணமாகக் காட்டுவது எமக்கு ஆச்சரியமில்லை. நாம் எப்பெழுதுமே உதாரணமென்றும், ஆதாரமென்றும் நபி வழியை தவிர்த்து எமது கொள்கை / வீரியம் என்று கூறமாட்டோம். நபி வழியை தவிர எதுவெல்லாமோ மார்க்கமாகி விட்டதோ அவை அனைத்தும் நரகம் செல்லும் வழி என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம.

அல்லாஹ் இதை போல உள்ள வழிகெட்ட கூட்டத்தில் இருந்து நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! ஆமீன்.

மதுரை நாபிஈ

Sunday, August 8, 2010

30 வருடமாக PJ மற்றும் போலி தவ்ஹீத்கள் சாதித்தது என்ன?
PJ மற்றும் போலி தவ்ஹீத்களின் (மார்கத்தில்) விளையாட்டும் அல்லாஹ்வின் பாதுகாத்தலும்.(தமிழகத்தில்) குர்ஆன் ஹதீஸை மட்டும் (இவர்களின் விளக்கத்தில் மட்டும்) தான் பின்பற்ற வேண்டும் என்று கூறி அதில் வெற்றி பெற்று விட்டதாக Media க்களின் உதவியோடு (இறைநேசர்களின் உதவி கேட்டால் ஷிர்க் என்று சொல்லுவார்கள்) ஒரு மாய தோற்றத்தை உண்டாக்கினார்கள். ஆனால் அது தவிடு பொடியாகிவிட்டது.

இவர்களை விட்டு ஒதுங்கி இருக்க வேண்டும் என்ற தாக்கம் தமிழக முஸ்லிம்களின் மார்க்கம் மற்றும் உலக வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை உண்டாக்கியுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய இந்த தீய பிரச்சாரத்தால் அல்லாஹ்வின் மாபெரும் அருளினால் சமுதாய மக்களை நிரந்த நரகத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடியது என்று அவர்களால் சொல்லப்பட்டு அவர்களாலேயே

 • பெண்களுக்கான ஜியாரத் அனுமதி வழங்கப்பட்டு விட்டது. (ஆனால் ஜியாரத் செய்வதே இல்லை இவர்கள். காரணம் ஹதீஸை கொஞ்சமும் பின்பற்றுவதில்லை இவர்கள்).

 • நபிகளார் பெருநாளிற்கு சொன்ன விஷயத்தை மாற்றி சொன்ன விஷயமும் மாற்றி அமைக்கப்பட்டு விட்டது.

 • நபிகளார் ஜும்மா விற்கு முன் சுன்னத் தொழுது இருக்க, ஜும்மாவிற்கு முன் சுன்னத் இல்லை சொன்ன விஷயமும் மாற்றப்பட்டுவிட்டது.

குர்'ஆன் ஹதீஸ் என்று சொன்னது எல்லாம் வெறும் பேச்சு தான் என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.


இந்த கேடு கேட்ட கூட்டம், குர்'ஆன் ஹதீஸிற்கு இமாம்களின் விளக்கத்தின் அடிப்படையிலான சட்டங்களை மறுத்து விட்ட அதே வேளையில், தொழுகை, நோன்பு, ஜகாத், மற்றும் இன்னபிற காரியங்களிலும் குர்'ஆன் ஹதீஸை ஒதுக்கி விட்டு, வழிகேடர்களின் தலைவரான, இப்லீஸின் வாரிசான, PJ வின் மனோ இச்சையின் வெளிப்பாட்டில் உள்ள சட்டங்களை சொல்லிக்கொண்டு திரிந்தது, அந்த மக்களும் சன்னம் சன்னமாக திருந்தி வந்து கொண்டு இருக்கின்ற அந்த வேளையில், அவர்களின் கற்பனை கோட்டையும் இடித்து தகர்க்கப்பட்டு கொண்டு இருக்கிறது. அதற்கு மிக முக்கிய சாட்சி தான் PJ வின் வன (நரக) வாசம்.

அவர் சொல்வது குர்'ஆனிற்கு தொடர்பு உள்ளதா, ஹதீஸிற்கு தொடர்பு உள்ளதா, இல்லை மனோ இச்சையின் வெளிப்பாடா என்பவைகளை ஆராயும் மனோ பக்குவம் மக்கள் மத்தியில் எழுச்சியாககாணப்படுகிறது.

பின்னே இவர்கள் இந்த 30 வருட காலங்களில் என்ன தான் சாதித்தார்கள்,

 • முஸ்லிம்களை காபிர் ஆக்கினார்கள்.

 • நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களை நம்மை போல மனிதர் என்று கூறினார்கள்.

 • நமது கண்மணி நாயகம் ஸல்... மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்று கூறினார்கள்.

 • நமது உயிரினும் மேலான சஹாபா பெருமக்களை ஒருமையில் திட்டி, இவர்கள் முஷ்ரிகீன்கள், பித்'அத் வாதிகள் என்று கூறினார்கள்.

 • நபிகளார் தொழுகையில் சொல்லாத வழிமுறையான நெஞ்சில் கையை கட்டி, காலை அகற்றி வைத்து மற்றவர்களுக்கு இடையூறு அழித்தார்கள்.

 • தொழுகையின் இருப்பில் நபிகளாரின் சொல்லிற்கு மாற்றமாக விரலை ஆட்டினார்கள்.

 • கண்ணியமிகு இமாம்களை ஆபாசமான சட்டம் சொல்லுபவர்கள் என்று அவதூறு கூறினார்கள்.

 • மார்கத்தில் சொல்லப்பட்ட ஜகாத் பொருளை (ஏழைகளின் பங்கு) வருடத்திற்கு ஒரு முறை என்று சொல்லி, தன்னுடைய பொருளாதாரத்தை வளர்த்து கொண்டதன் பிறகு, தான் ஜகாத் கொடுக்கும் நிலைக்கு வந்த பிறகு, ஆயுளில் ஒரு முறை என்று கூறி, நபிகளாருக்கு எதிராக போர் பிரகடனம் செய்தார்கள்.

 • ஏழைகளின் வயிற்றில் அடித்தார்கள்.

 • மத்'ஹபை பின்பற்றக்கூடாது என்று ஒரு மத்'ஹபை உருவாக்கினார்கள்.

 • யாரையும் பின்பற்றக்கூடாது என்று சொல்லி விட்டு சட்டத்தை ஆய்வு செய்து சொல்லி கொண்டு திரிகிறார்கள். காரணம் அவர்களை பின்பற்ற சொல்லிக்கொண்டு இருக்கின்றார்கள்.

 • கற்பனை சிலை வணக்கத்தின் பக்கம் மக்களை அழைத்து சென்றார்கள்.

 • கற்பனை உருவ வழிபாட்டின் பக்கம் மக்களை அழைக்கின்றார்கள்.

 • யூதர்களின் கொள்கைகளின் அடிப்படையிலும், கிறிஸ்தவர்களின் சட்ட திட்டத்தின் அடிப்படையிலும், யூத, கிறிஸ்தவர்களின் பணத்திற்காகவும் சட்டத்தை அவ்வப்போது மாற்றுகிறார்கள்.
 • ஆலிம்களை, பெரியவர்களை, இமாம்களை, சஹாபாக்களை, ஆபாசமாகவும், மரியாதை குறைவாகவும், தரக்குறைவாகவும் பேசுவதற்கு கற்றுக்கொடுத்தார்கள்.
 • அராஜகப்போக்கை கட்டவிழ்த்து உள்ளார்கள்.


 • சஹீஹான ஹதீஸை ஏற்க மாட்டோம் என்று அறிவித்தார்கள்.

 • மார்க்கத்தில் இல்லாத புதிய வழிமுறைகள் ஏற்படுத்தி காட்டினார்கள்.

ஆனால் மக்கள் இவர்களை புறக்கணித்து விட்டார்கள் என்பது தான் உண்மை. இனி எக்காலமும் இவர்களால் தலை நிமிரவே முடியாது. காரணம் சத்தியம் தான் என்றைக்கும் ஜெய்க்கும். என்னத்தான் இவர்களின் தலைவனான ஷைத்தானின் ஆசிகளோடும், யூதர்களின் பணத்தோடும் இஸ்லாத்தில் இல்லாத கருத்துக்களை கூறி விளையாட ஆரம்பித்தாலும் ஒரு காலம் தான் அறியாத மக்களை ஏமாற்ற முடியும். ஆனால் அப்படிப்பட்ட மக்களையும் அல்லாஹ் காத்து அருள் செய்தான்.

இவர்களும் இன்னும் சொல்ல வேண்டிய விஷயங்கள் இரண்டு தான் உள்ளன. அவை,

 • அல்லாஹ் தப்பு தப்பாக கூறி இருக்கின்றான், அறிவிற்கு பொருந்தாத சட்டங்கள், விஷயங்கள் அவை.

 • குர்'ஆனையும் ஏற்க முடியாது. அது அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

அல்லாஹ் இவர்களை விட்டு நம்மையும், நம்முடைய சந்ததிகளையும் காப்பாற்றுவானாக.


மதுரை நாபிஈ

Friday, August 6, 2010

பிறையில் JAQH ன் நிலைப்பாட்டிற்கு PJ காரணம் இல்லை.JAQH மத்'ஹபு, சுன்னத் வல் ஜமாஅத்தின் வழியில்.


பிறையின் விஷயத்தில் 1400 ஆண்டுகாலமாக ஒரு நிலை பின்பற்றப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். வானில் மேகம் சூழ்ந்து இருந்தால் மாதத்தை 30 நாட்களாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதற்கு மாற்றமாக உலகம் அனைத்திற்கும் ஒரே பிறை என்ற நிலையில் தான் PJ வின் (போலி) தவ்ஹீத் களும், TMMK வினரும், JAQH பார்ட்டியும் சிறிது காலத்திற்கு முன் இருந்து ஒரு கொள்கையாக வைத்து அதை பின் பற்றி வந்தன. ஊருக்கு ஒரு பிறை இல்லை, உலகம் முழுதும் ஒரே பிறை தான், நாம் இங்கு அரபா நோன்பு நோற்றால் சவுதியில் பிறை பத்தாக இருக்கின்றது. அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம். ஆனால் அன்று தான் நாம் நோன்பு நோற்கிறோம், இது தவறு என்ற இந்த சட்டத்தை பிறை ஆய்வுக் குழு வான PJ, கமாலுத்தீன் மதனி, அப்துல் காதிர் மதனி, ஹாமித் பக்ரி போன்ற (போலி) ஆலிம்கள் எல்லாம் சேர்ந்து ஆய்வு செய்து சொன்ன சட்டத்தை (அல் ஜன்னத் நவம்பர் 1999), அவர்களின் மத்'ஹபை சேர்ந்த முகல்லிதுகள் ஏற்று அவர்களை வழிபட்டார்கள்.

அவர்களுக்குள் ஏற்பட்ட பணப்பிரச்சனையினால் ஜனவரி 2000 அல் முபீன் பத்திரிக்கையின் மூலம் ஒரு மாற்றம். அதில் பழைய படி நம் ஊரில் பார்க்கும் பிறை கொண்டு தான் அமல் செய்ய வேண்டும். காரணம் பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று திர்மிதியில் நாம் சொன்ன ஹதீஸிற்கு அடுத்தே வருகின்றது. முன்னாள் அந்த ஹதீஸை பார்க்கவில்லை என்று கூறி முழுப்பூசணிகாயை சோற்றில் அமுக்கிய சிறிது காலத்திற்கு பிறகு (போலி) தவ்ஹீத் களின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. கைர். அல்ஹம்து லில்லாஹ். ஆனால் TMMK மற்றும் JAQH நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமலே இருந்தது.

JAQH ற்கு கூட ஒரு நிலை, அதாவது சவுதியில் பார்த்தால் பெருநாள் என்ற ஒரு நிலை. TMMK விற்கு ஒரு நிலை இல்லாமல் இருந்தது. ஒரு முறை சவுதிவிற்கும் நமக்கும் இரண்டு நாள் வித்தியாசம் வந்தது. அப்போது பார்த்தால் JAQH கொண்டாடிய நாளிற்கும் நாம் கொண்டாடிய நாளிற்கும் மத்தியில் உள்ள ஒரு நாளில் கொண்டாடினார்கள். கேட்டால் சவுதி விற்கும் நமக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம், நேற்று அங்கு கொண்டாடப்பட்டு விட்டது, அதனால் இன்று நமக்கு பெருநாள் என்று கூறி நபிகளாரை கிண்டல் செய்தார்கள். இதனால் அவர்களின் வழிபாட்டுத்தலத்தில் 3 நாட்கள் பெருநாள் தொழுகை நடந்தது, இதுஒரு கூத்து. இதை பார்த்து காபிர்களே இவர்களை பார்த்து துப்பினார்கள்.

JAQH இன் நிலைப்பாடு சவுதியில் பிறை பார்த்தால் போதும் என்ற நிலை. ஆனால் அதற்கு மாற்றமாக ரமழான் மாதம் 27 லேயே போஸ்டர் அடித்து இன்ன தேதியில் பெருநாள் என்று அறிவித்து விடுவார்கள். அப்படிஎன்றால் சவுதியில் பிறை என்பது எல்லாம் சும்மா மனோ இச்சை என்பதும் நபிகளாரை கிண்டல் செய்வதும் இதன் மூலம்தெரிகிறது.

இதில் நடந்த ஒரு கூத்து என்ன வென்றால், இரண்டு வருடத்திற்கு முன்னாள் இன்ன தேதி என்று சொல்லப்பட்ட தேதியில் பெருநாள் என்பதற்காக 29 ம் நாளில் இதிகாப் இருந்தவர்கள், இதிகாப் முடித்து விட்டு நாளை பெருநாள் என்று இருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி (சவுதியில் நம்மை விட்டு 2.30 மணி நேரம் வித்தியாசத்தினால்) ஏற்பட்டது. அது என்ன தெரியுமா? சவுதியில் பிறை தெரியவில்லை. அதனால் இந்தியாவின் இரவு 12.00 வரை அழைந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். (இது வெல்லாம் மனோ இச்சையினால் ஏற்பட்டது, நபிகளாரின் ஹதீஸை விலங்காததால் ஏற்பட்டது)

இப்படி ஒரே பிறை என்ற நிலையில் வந்தால், ஒரே சூரியன் அதனால் ஒரே நேரத்தில் தான் தொழுக வேண்டும் என்ற நிலை வந்து விடும். அது சாத்தியமா? இப்படி எல்லாம் நாம் ஹதீஸின் ஆதாரம் வழங்கியும், நாம் இப்படி சூரியனை வைத்து விளக்கம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த JAQH ன் இந்த நிலையில், ஒரு மாற்றம் வந்து உள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்க்கு காரணம், சவுதியும் இவர்களை கழட்டி விட்டது. அதாவது உலகம் முழுதும் ஒரே பிறை இல்லை என்று சவுதியை சேர்ந்தவர்கள் பத்வா வழங்கிவிட்டார்கள்., நம்முடைய ஆதாரம் ஒரு பக்கம். அதனால் தான் இந்த நிலை. மார்கத்தை பின்பற்ற சவுதியை பின்பற்றும் JAQH விரைவில் கபாவிலும், மதீனாவிலும் 20 ரக்அத் தொழும் தராவிஹ் யிலும் சவுதியை பின்பற்றும் என்று விரைவில் எதிர் பார்க்கிறோம்.

இந்த நிலையில் JAQH ன் நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று கூப்பாடு போடுகிறார்கள் PJ வைச்சேர்ந்த (போலி) தவ்ஹீத்கள். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. காரணம் இவர்களே அந்த நிலையில் தான் இருந்தவர்கள். அதனால் ஊருக்கு ஒரு பிறை என்பதின் சொந்தக்காரர்கள் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்தவர்களே தவிர (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்தவர்கள் இல்லை.

உண்மை தான் ஜெய்க்கும் என்பதை பிறையின் மூலம் உலகத்திற்கு எடுத்துக்காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

மதுரை நாபிஈ.

Thursday, August 5, 2010

காமெடி பண்ணாதீங்க PJ
படம் காட்டுதல் என்றால் என்னவென்று தெரியுமா?இது 2009 ஆம் வருட படம் காட்டுதல்.


2010 ஆம் வருட படம் காட்டுதல் ஆகஸ்ட் மாதம் 3 ம் தேதி சென்னையில் நடந்தது.

என்ன தெரியுமா?

(போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிறுவனர் PJ, JAQH ன் தலைவர் S. கமாலுத்தீன் மதனியை மருத்துவமனையில் சந்தித்தார்.

ஏன் இந்த படம் காட்டுதல் எல்லாம் தெரியுமா?

விவாதத்தில் தோற்றதனால் தான், அவர் கூட்டத்திற்கு ஆள் சேர்கின்றார். வேறு ஒன்றும் இல்லை. (PJ பற்றி தான் தெரியும்ல, யாரோடு பகைத்து கொள்ராரோ அவரோட எப்போவும் தனக்கு லாபம் இல்லாமல் சந்திக்கவே மாட்டார் (அந்த பகைவர் நோயுற்றிருந்தாலும் சரியே)). JAQH ஐ சேர்ந்தவர்கள் சற்று ஜாக்கிரதை (பன்றி பசியோட அலையுது).


ஜூலை மாதம் 24 மற்றும் 25 தேதிகளில் சென்னையில் நடந்த விவாதத்தில் தோற்று விட்டு (நிரந்தர) வன வாசம் சென்று விட்டேன் என்று சொல்லி விட்டு, கொள்கையில் JAQH ற்கு பிடிப்பு இல்லை, களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத் ற்கு உதவ பார்த்தார்கள் என்று சொல்லிவிட்டு. ஜகாத் விஷயம், சஹாபாக்கள் விஷயம் உட்பட 15 விஷயத்தில் கொள்கையில் மாற்றம் உள்ளது என்று சொல்லிவிட்டு இப்படி படம் காட்றீங்களே PJ அண்ணே? என்ன உங்கள் அரசியல் ஸ்டன்டு.

அபூத் தைய்யார்

உண்மை வழிக்கு மீண்டு(ம்) வந்த ஹாமித் பக்ரி PJ விற்கு வைத்த செக்.

நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர் வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர் வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.

ஆனால் நேர் வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்(28:56)

நபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் , அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர் வழியில் வைப்பான் அவன் நினைத்தால் அவரையே வழி கேட்டிலும் தள்ளி விடுவான். நேர் வழியை தேர்ந்தேடுப்பவர்களுக்கே மறுமையில் வெற்றி கிட்டும். அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக் காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.

ஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கம் அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.

போலியான தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலை நாட்டுவதற்காக போலி தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அனைவருக்கும் தலைவர் இவர்தான். மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது குர்'ஆன் ஹதீஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டு PJ வின் சொற்கள் தான் அவருடைய நாவில் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும்.

 • இன்று இதே நாவில் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் புகழான மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
 • சஹாபாக்களை திட்டிகொண்டு திரியும் கூட்டத்தில் இருந்த வந்த இந்த பக்ரி சஹாபாக்களின் விஷயத்தில் புண்ணியமிகு சஹாபாக்களை பரிந்து பேசி PJ வின் முகத்திரையை கிழித்துக்கொண்டுஇருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
 • வலிமார்களிடம் தான் உதவி தேட கூடாது என்று சொன்ன கூட்டம், அல்லாஹ்விடம் கேட்கும் கூட்டு து'ஆ வை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த இவர், நசாயி வுடைய ஹதீஸை கொண்டு பலமாக கூட்டு து'ஆசெய்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
 • மத்ஹபை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த பக்ரி, மத்ஹபை ஆதரித்து பேசிக்கொண்டு இருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஹாமித் பக்ரி இந்த (போலி) தவ்ஹீத் வாதியான PJ வுடன் சேர்ந்து 2001 ம் வருடம் இலங்கையில் நடந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத்திற்கு எதிராக கலந்து கொண்டார். பின்னர் எப்பிடி ஹிதாயத் கிடைத்தது? அல்லாஹ் நாடிவிட்டான்!

நடந்தது என்ன?

பணத்தை பிரச்சனையாக காட்டி எப்பிடி இவருக்கு வேண்டாதவர்களை கழட்டி விடுவார்களோ அப்படி இவரையும் கழட்டி விட்டார்கள். (எங்கே சிஷ்யன் குருவை மிஞ்சி விடுவானோ என்ற பயம்) அவருக்கும் போலி தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எந்த பதவியிலும் இல்லாத PJ வின் உத்தரவில் அதிரடியாக அறிவித்தது.

சென்ற வழியில் திரும்பியதன் காரணம் என்ன?

எதேதோ பேசும் போது ஜால்ரா தட்டி கொண்டு இருந்த பக்ரியின் மனது கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிக்கும் போது சமாதானம் அடையவில்லை. அல்லாஹ்வின் ஹிதாயத்தும் சேர்ந்து நேர் வழியான சுன்னத் ஜமாத்தின் பக்கம் அழைத்து வந்து விட்டது.

PJ கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிப்பதை விளக்கும் வீடியோஅதாவது பி.ஜெ பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் ,அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம். இது பக்ரியின் பதிவு செய்யப் பட்ட வாக்கு மூலம்.

அதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.

இந்த PJ வும் அவரின் ஜால்றாக்கூட்டமும் எதை சொன்னாலும் தங்களுடைய வளர்ச்சியாக காட்டுவது மன்னர் ஹெர்குலிஸ் நபிகளாரின் கூட்டம் பற்றி அந்த கூட்டத்தில் இணைபவர் வெளியே வருகின்றார்களா என்று கேட்டதை சுட்டிக்காட்டி அப்படித்தான் எங்கள் கூட்டமும் என்று இந்த கேடு கேட்ட கூட்டத்தை அந்த கண்ணியமிகு கூட்டத்தை ஆதாரமாகக்காட்டுவார்கள். மேலும் யாரையேனும் அப்படி வெளி ஏறியவரை காட்ட முடியுமா என்று மார் தட்டும் போது, மாறிய மக்கள் நிறைய இருந்தாலும், அவர்களை ஆதாரமாக வெளியில் சொன்னால் ஒத்து கொள்ளும் மனபக்குவம் தான் இவர்களிடம் இல்லையே (தான் பிடித்த முசலுக்கு மூன்று கால் என்று சொல்லும் கூட்டமாச்சே). அதனால் தான் அல்லாஹ் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தலைவரேயே மாற்றிகாட்டினான்.

அது மட்டுமல்ல, ஹெர்குலிஸ் மன்னன் சம்பந்தமாக வரும் ஹதீஸை இவர் புரிந்ததும் தவறு தான். காரணம் அவர் மார்கத்தில் நுழைந்தவன் கொள்கை பிடிப்பில் எப்பிடி என்ற நோக்கத்தில் கேட்டு, அதில் உறுதி கொண்டவர் என்ற பதிலை பெற்றார். இவர்களிடம் கொள்கை பிடிப்பு சரியாக இருக்கிறதா? Jaqh, tmmk, intj, tntj, என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, (கொள்கை இல்லாத கூட்டம் கொள்கை பிடிப்பான அருமைமிகு பெருமைமிகு, கண்ணியமிகு சஹாபாக்களின் கொள்கையை ஒப்புமை ஆக்கிக்கொண்டு திரிகிறது)அனைவரும் ஒன்றாக இருந்து பிரிந்து போனவர்கள். வெட்கமாக இல்லையா உங்களுக்கு இந்த ஹதீஸை உங்களுக்கு உதாரணம்காட்டுவதற்கு?


பக்ரியின் இன்றைய நிலை என்ன?

(போலி) தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்

அன்று : PJ சொல் மாத்திரமே நேர்வழி

இன்று : குர்ஆனும், ஹதீஸும், இமாம்களின் கருத்து மட்டுமேநேர்வழி

அன்பின் சகோதரர்களே அனைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இவரை போல உண்மையை உணர்ந்து பலர் வந்து விட்டார்கள். இன்னும் இருக்கின்ற மிச்ச சொச்சமும் வந்து விட எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஹக் சுபுஹானஹு த'ஆலா அருள் புரிவானாக.ஆமீன்.

மதுரை நாபிஈ

Tuesday, August 3, 2010

விவாதத்திலும் தோற்று, மறுமையிலும் தோற்க இருக்கின்ற PJ மற்றும் போலி தவ்ஹீத் ஜமாஅத்விவாதத்தில் தோற்று விட்டு
வெட்கமில்லாமல் மறுபடியும் வெற்றிக் கோஷமா?17-07-2010, 18-07-2010
மற்றும் 24-07-2010, 25-07-2010 ஆகிய தேதிகளில் சென்னையில் விவாதம் நடந்தது, இதில் தோல்வி கண்ட (போலி) தவ்ஹீத் ஜமாத்தினர் களியக்கவிலையில் தோற்று போன பிறகு போட்ட வெற்றி கூப்பாட்டை போல இதிலும் போட்டு உள்ளார்கள். உண்மையில் யார் வெற்றிபெற்றது?

முதல் விஷயம் களியக்காவிளையில் ஜெயித்தது யார்?

சந்தேகம் இல்லாமல் சுன்னத் ஜமாஅத் தான் வெற்றி பெற்றது. காரணம் 25 ஆண்டுகளாக பெண்கள் பொது கப்ருக்கு சென்று ஜியாரத் செய்ய கூடாது என்று சொல்லி வந்தவர்கள், களியக்கா விலையில் 2006 ஜூன் மாதம் 3, 4 தேதிகளில் நடந்த விவாதங்களில் தர்கா ஜியாரத் என்ற தலைப்பில், பெண்கள் ஜியாரத் செய்த ஹதீஸை காட்டிய பிறகு 8 மாதம் கடந்த பின் 2007 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த ஜகாத் விவாதத்தில் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒன்றே களியக்கா விலையில் நாம் பெற்ற வெற்றிக்கு மிகப்பெரிய ஆதாரம் ஆகும். நாம் அங்கு இருந்த நிலைப்பாட்டில் தான் இன்றளவும் இருக்கின்றோம், என்றைக்கும் இருப்போம், காரணம் உண்மை தவ்ஹீதில் இருக்கிறோம். மனோ இச்சைக்கு நம்மிடம் வேலைஇல்லை.


அதற்கு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நாங்கள் மறு ஆய்வு செய்து மாற்றி இருக்கின்றோம். காரணம் நாங்கள் நிராயுதபாணியாக (போலி) தவ்ஹீத் பிரசாரம் ஆரம்பித்தோம். அப்போது எந்த நூலும் எங்களிடம் இல்லை என்ற பொய்யையும் பதிவு செய்கின்றார். எங்களிடம் இருக்கும் நூலில் தான் சட்டங்களை ஆய்வு செய்து சொன்னோம் என்றும் கூறுகிறார். அப்படிஎன்றால் 10-02-2007 ற்கு முன்னாள் அவர்களிடம் புகாரி, முஸ்லிம், போன்ற ஹதீஸ் கிரந்தங்கள் இல்லையா? நீங்கள் வெளியில் எடுத்து வைத்த ஹதீஸ் எல்லாம் புகாரி இல் இருந்து தானே எடுத்து வைத்தீர்கள் (அதுக்கு அர்த்தம் தவறாக வைத்தீர்கள் என்பது வேறு விஷயம்), ஏனைய சட்டங்கள் சொல்லும் பொது இருந்த புகாரி நூல் ஜியாரத் சம்பந்தமாக சொல்லும் போது எப்பிடி காணாமல் போனது. தன்னுடையமனோ இச்சைக்காக மார்கத்தை எப்பிடி வளைக்கிறார்கள் பாருங்கள்.

எங்களுக்கு சரி என்று தெரிந்த பொது சரி என்று சொல்லுகிறோம், எங்களுக்கு தவறு என்று பட்ட பொது தவறு என்று சொல்லுகிறோம் என்றும் கூறுகிறார். இவர் ஒரு ஆய்வு செய்து சட்டம் சொல்லும் இமாமை போல(அந்த தகுதி இவருக்கு அறவே இல்லை என்பது வேறு விஷயம்) சொல்லி தன்னுடைய ஜால்ராக்களை எல்லாம் தன்னுடைய முகல்லிதுகளாக மாற்றி உள்ளார். தன்னுடைய மனோ இச்சையை இறைவனாக்கிய (அல் குர்'ஆன்) இந்த வழி கேட்டின் தலைவர். அவரின் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை கீழே உள்ள வீடியோ வில் பார்க்கலாம்.இவர்களை பின்பற்றினால் நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆகி விடுவீர்கள், காரணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக சட்டம் சொல்லுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு குர்'ஆனின் ஞானமோ, ஹதீஸின் ஞானமோ கொஞ்சமும் இல்லை என்பது தான் இவர்களின் முன்னுக்கு பின் முரணான விஷயங்களில் இருந்து தெரிகிறது.

அந்த காலத்து இமாம்கள் ஹதீஸின் தேடுதலில் இருந்தார்கள். அப்போது சொன்னால் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளலாம். எல்லா ஹதீஸ்களும் நூல் வடிவில் வந்த பின்னால். அவர்களிடமே இருக்கும் அந்த நூலில் இருக்கும் அந்த சட்டத்தை மனோ இச்சையின் பிரகாரம் பாக்காமல் என்னிடம் அந்த நூல் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் அமுக்கியது போல் ஆகாதா. கேப்பையில் நெய் வடியிது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுபவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் சொல்லுவார்கள்.


(போலி) தவ்ஹீத் ஜமாஅத் தான் ஜெய்த்தது என்று இருந்தால்

 • அங்கு பேசிய விஷயத்திற்கு அங்கு பதில் சொல்ல முடியாமல் (அவர்கள் மக்களே அவர்களை என்னங்க இப்படி தோற்று போய் விட்டீர்களே என்று கேள்வி கேட்ட பிறகு) வெளியில் வந்து விதண்டா விவாதமும், உண்மை(?!?!?!?) விளக்கமும் என்ற தலைப்பில் விதண்டா விவாதத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து இருக்க மாட்டார்கள்.

 • சென்னையில் நடந்த விவாதத்திற்கு அழைக்கும் போது மீண்டும் களியக்கவிலையில் நடந்த அதே தலைப்பில் விவாதம் நடத்துமாறு கோரிக்கை வைத்து இருக்க மாட்டார்கள் (சென்னை விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது களியக்காவிளையில் நடந்த அந்த நான்கு தலைப்பில் விவாதம் வேண்டும் என்று அவர்களின் லெட்டர் பேட் இல் எழுதி தந்தார்கள்).

சென்னையில் நடந்த விவாதத்தில் ஜெயித்தது யார்?

இந்த சென்னையில் நடந்த இரு விவாதத்திலும் சுன்னத் ஜமாஅத் தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வென்றுள்ளது.

காரணம்,

 • அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா விற்கு உருவம் உண்டு என்ற நிலைப்பாட்டில் விவாதித்த PJ பல இடங்களில் அல்லாஹ்வின் உறுப்பு என்று அர்த்தம் வைக்காமல் பண்பின் அர்த்தம் (அதாவது முகத்திற்கு உள்ளமை, கையிற்கு வல்லமை, கண்ணிற்கு கண்காணிப்பு, காலிற்கு கடினம், அடக்கி ஆள்தல்) வைத்து தோற்றோம் என்பதை ஒத்துக்கொண்டார்.

ஷிர்க் வாதி, பித்'அத் வாதி யார் என்ற தலைப்பின் போது,

 • நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள் (நாங்கள் வர மாட்டோம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம்) என்பதில் இருந்தும்,

 • வெளியில் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறியவர்கள் ஒரு ஆதாரம் கூட சென்னையில் எடுத்து வைக்கைப்பட்ட விவாதத்தில் காட்ட முடியாததில் இருந்தும்,

 • சென்னை விவாதத்தில் வாதிக்க முடியவில்லை என்ற நிலையில் களியக்காவிளை ஒப்பந்தம் எடுத்து அதற்கு பதில் கூறுங்கள் என்று சொல்லியதில் இருந்தும்,

 • சரித்திரத்தில் இல்லாத விவாதம் என்று கூறி, நீங்கள் ஷிர்க் செய்கின்றீர்கள் என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள் என்று கேட்டதில் இருந்தும்,

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும் (நாங்கள் செய்றது தப்பு என்று தெரிந்ததால்),

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு ஹதீஸில் இருந்து பதில் தராமல் கெளசுல் அ லம் சொல்லி இருக்கிறார்கள், இமாம் நவவி கூறி இருக்கின்றார்கள் என்பதை காட்டியதின் மூலம் ஹதீஸில் இல்லை என்பதை ஒப்பு கொண்டதில் இருந்தும் (ஒப்பந்தம் ஹதீஸில் இருந்து தான் காட்ட வேண்டும்)

 • சஹாபா பெருமக்களை முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்றும், நரகவாதிகள் என்றும், பித்'அத் வாதிகள் என்றும் நா கூசாமல், நபிகள் நாயகம் ஸல்.... முர்தத் (ஏனைய மதம் மாறி போனவர்கள் ) பற்றி கூறிய ஹதீஸை சஹாபா பெருமக்கள் மீது இட்டுக்கட்டி சாட்டியதில் இருந்தும், அதை பற்றி கேக்கும் போது அதை பற்றி பதில் பேசாமல் இருந்ததில் இருந்தும்,

 • நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... யார் இந்த மார்கத்தை நமக்கு வழங்கினார்களோ அவர்களே மாற்றி மாற்றி பேசினார்கள் (நவூதுபில்லாஹ்) என்று விவாதத்தில் பதிவு செய்ததில் இருந்தும்,(அல்லாஹ் இந்த வழி கேடர்களை விட்டு நம்மையும், நம்முடைய வருங்கால சந்ததியும் காத்து அருள் புரிவானாக)

 • பாங்கின் சத்தம் மனிதர்கள் கேட்டு அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸிற்கு கோவிலும் தான் கேக்கிறது அதுவும் சாட்சி சொல்லுமா என்று கேலி பேசி (கேட்டு தனக்கு எப்போதும் உருவம், கோவில், சிலை, காபிர் என்பது தான் நினைவிற்கு வரும், இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று) கூறியதில் இருந்தும்,

 • முஸ்லிம்கள் காபிர்களின் கோவிலுக்குள் செல்லலாம், அவர்களுக்கு சலாம் சொல்லலாம், பூஜை அறைக்கு செல்லலாம், சிலைகளை காணலாம் என்று வெளியில் கூறியதை எடுத்து காட்டி அதை பற்றி கேக்கப்பட்ட போது வாய் மூடி மௌனியாக இருந்ததில் இருந்தும்,

 • முஸ்லிம்களை காபிர் என்று சொன்னால் (தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம் காபிர் என்று கூறி ஜனாஸா தொழுகை இல்லை) நீங்கள் காபிர் ஆகி விடுவீர்களே என்று ஹதீஸில் இருந்து சுட்டி காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு வாய் பொத்தி கொண்டு இருந்ததில் இருந்தும்,

 • நம்முடைய நிலைப்பாட்டையும், நாம் சொல்லாத விஷயத்தையும், உங்கள் நிலைப்பாடு இது தான் என்றும், இப்படி தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்றும் நம்மின் மீது நம்முடைய நிலைப்பாட்டை திரித்து திணித்ததில் இருந்தும்,

 • சென்னையின் முதல் விவாதத்தில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீதுள்ள சலாமை கேடு கெட்ட மௌலித் (நவூதுபில்லாஹ்) என்று ஒரு கேடுகெட்ட இணையத்தில் பதிவு செய்து, அதை பாதியில் அவர்கள் சுட்டி காட்டும் போது நிறுத்தப்பட்டது (உண்மையில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டது) என்று கூறிய பொய்யில் இருந்தும்,
 • நபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு மறைமுக ஞானம் இல்லை (இது விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத விசயம்) என்று கூறி, பிறகு ஆதாரம் தந்த போது மறுப்பு பேச முடியாததில் இருந்தும்,

 • ஷிர்க், பித்'அத் என்ற இரு தலைப்பில் பித்'அத் பற்றி பிறகு பேசுவேன், என்று கூறி (பாம்பு, கீறி விளையாட்டு போல) கடைசி வரை பித்'அத் பற்றி வாயே திறக்காமல் இருந்ததில் இருந்தும்,

 • உன்னதமான சஹாபா பெருமக்கள் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் விஷயத்தில் நபிகளார் கண்மணி ஸல்... அவர்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக இட்டுக்கட்டியதன் மூலமும்,

 • யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறி உள்ளாரோ அவர் தனது தங்குமிடம் நரகமாக்கி கொள்ளட்டும் என்ற ஹதீஸின் அடிப்படையிலும் (இந்த ஹதீசும் ஓதி காண்பிக்கப்பட்டது) இவர்கள் தோற்று போனார்கள் என்பதும், இவர்கள் காபிர்கள் என்பதும், இவர்கள் நரக வாதிகள் என்பதும் நன்றாக விளக்கி காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

ஆனாலும் சில ஜால்ராக்கள் உண்மையை உணராமல் இன்னும் அவரை பின்பற்றுவதால், தான் ஜெயித்து விட்டோம் என்று (வெளியில்) கூறிக்கொண்டு இருந்தாலும் (உள்ளுக்குள்) அவர் வனவாசம் சென்று தன்னுடைய ஜால்ராக்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்கவும், எப்பிடி சமாளிக்க வேண்டும் என்பதை யோசிக்கவும் சென்று உள்ளதின் மூலமும் தான் தோற்று விட்டோம் என்று அவருக்கு புரிய வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இவரை நம்பி (போலி) தவ்ஹீதில் சென்று மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கி விடாதீர்கள்,

மதுரை நாபிஈ.

Monday, August 2, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (முதல் பாகம்)


சத்தியம் வந்தது. அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழியக்கூடியதாகவே உள்ளது. (அல்குர்ஆன் 17:81)17-07-2010, 18-07-2010 சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் சென்னையில் சுன்னத் ஜமாத் ஐக்கியப் பேரவைக்கும் (போலி)தவ்ஹீத் ஜமாத்திற்கும் இடையில் விவாதம் நடந்தது..

அல்லாஹ்விற்கு உருவம் இல்லை, அவன் உருவமற்றவன், அவனுக்கு கை, கால், முகம், கண் இல்லை. அவன் அர்ஷின் மட்டும் இல்லை என்ற நிலைப்பாட்டில் சுன்னத் ஜமாஅத் சார்பில் மௌலவி ஷைக் அப்துல்லாஹ் ஜமாலியும், எல்லா விஷயங்களையும் உருவமாக படைத்த ரப்புல் ஆலமீன் அல்லாஹ்விற்கு குர்'ஆன் ஹதீஸ் அடிப்படையில் உருவம் உண்டு (நவூதுபில்லாஹ்) என்ற நிலைப்பாட்டில் PJ யும் கலந்து கொண்டு விவாதம் நடந்தது.

முதலில் விவாதிக்க ஆரம்பித்த PJ அல்லாஹ் உருவம் உள்ளவன் என்பதற்கு அல்லாஹ் மறுமையில் காட்சி தருவான் என்ற ஹதீஸை ஆதாரமாக வைத்தார். அந்த ஹதீஸில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சூரியனையும், பெளர்ணமி நிலவை (உங்கள் கண்களால்) பார்ப்பது போல பார்ப்பீர்கள் என்று சொல்லிய விஷயத்திற்கு சூரியனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு, சந்திரனை போல பார்ப்பாய் அதனால அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு. என்ற மடத்தனமான வாதத்துடன் தொடங்கியது. மேலும் அந்த ஹதீஸை முழுமையாக சொல்லும் போது அல்லாஹ்வை இதற்கு முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய். நபிகள் நாயகம் ஸல்... صورت என்று சொல்லி விட்டார்கள் அதனால் உருவம் உண்டு! மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டது என்பது அன்னைக்கு தான் தெரிந்து கொண்டேன் இது தான் என்று.

இதற்கு பதில் அளித்த ஜமாலி அவர்கள், இதில் உருவம் இருக்கு என்று நேரிடையாக எங்கு இருக்கிறது? மேலும் முன்னாள் நீ அறிந்து இருந்த صورت இல் பார்ப்பாய் என்பதை உருவம் என்று வைத்தால் இதற்கு முன் பார்த்த உருவம் என்ன என்று வினவ அதற்கு பதில் இல்லை! சூரியன் சந்திரன் என்ற குழப்பம் தான் வாதமாக வந்தது.


உளரிக் கொட்டிய PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்று வாதிக்க வந்த PJ தனது வாதத்திற்கு இறைவனுக்கு உருவம் இருக்கு என்று நேரிடையான ஆதாரம் குர்'ஆன் லிருந்தும் ஹதீஸில் இருந்தும் விவாதம் முடியும் வரை தரவே இல்லை. தரவும் முடியாது. ஜமாலி வைத்த வாதத்தையும் ஆதாரத்தின் அடிப்படையில் மறுக்க முடியவில்லை.

ஆனால் தாராளமாக உளரிக் கொட்டிக் கொண்டேயிருந்தார்.


அல்லாஹ்வை அவனின் ساق ஐ கொண்டு அடையாளம் கண்டு கொள்வார்கள் என்ற வார்த்தையில் ساق என்பதற்கு شدت கடினம் என்று அர்த்தம் (இமாம்களும் அந்த அர்த்தம் தான் கொடுத்தார்கள்) என்று சொல்லப்பட்டது, இல்லை ساق என்றால் கால் என்று அர்த்தம் வைத்தார் PJ மேலும் கால் இன் மேல் இருக்கும் திரையை அகற்றுவான் என்று PJ கூற, ஆடை தேவையற்ற அல்லாஹ் ஆடை உடுத்தி இருக்கானா என்ற கேள்விக்கு வழி வகுக்கிறீர்கள் என்று சொன்னார்கள் ஜமாலி அவர்கள். அல்லாஹ்வை கேலி பேசாதீர்கள் என்று அல்லாஹ்வை உருவம் கொடுத்து ஆடை அணிவித்து கேலி செய்தார் PJ. மேலும் நமது தரப்பில் சூரா இக்லாஸ் ஓதி காண்பிக்கப்பட்டு அல்லாஹ் ஒருவன், அவன் தேவையற்றவன், யாரும் அவனை பெறவும் இல்லை, யாராலும் பெறப்படவும் இல்லை, அவனுக்கு நிகராக யாரும் இல்லை. என்று சொல்லப்பட்டது அதற்கு எந்த ஒரு பதிலும் இல்லை.

தொடர்ந்தும் இப்படியே அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது ஆனால் இல்லை என்ற பாணியில் தான் PJ உறுதிப்படுத்திகொண்டிருந்தார்.
அது பின்னால் சொல்லப்படும்.

குர்ஆனையே ஏற்பதை போன்று மறுத்த கோமாலி PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வாதிட்ட PJ அதற்கு ஆதாரமாக கீழ் வரும் வசனங்களை முன் வைத்தார், அதில் செய்த திருகு ஜாலங்கள் அடுத்த subtitle (தன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ) இல் சொல்லப்படும்.

அல்லாஹ்வுக்கு கைகள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கண்கள் இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு செவி இருப்பதாக வரும் வசனங்கள்.

அல்லாஹ்வுக்கு கால் இருப்பதாக வரும் வசனங்கள்.

என்று பல வசனங்களை காட்டி அல்லாஹ்வுக்கு உருவம் இருக்கிறது. அதனால் தான் இறைவனுக்கு கை கால் முகம் கண் செவி போன்றவையெல்லாம் இருப்பதாக இறைவன் குறிப்பிடுகிறான் என்று சிறு பிள்ளை தனமாக உளறிக்கொட்டி தான் ஒரு காபிர் (அன்றைய காலத்து மக்கத்து காபிர் எப்பிடி (அல்லாஹ்வை நம்பி நபியே வானிலிருந்து மழை பொழிய வைத்தது யார் என்று அம்மக்களிடம் கேட்டால் அல்லாஹ் என்று பதில் சொல்லுவார்கள் இந்த வசனமும் ஓதி காண்பிக்கப்பட்டது) அல்லாஹ்வை நம்பி விட்டு உருவத்தை வணங்கினார்களோ அப்படி தான் நாங்களும்) என்று நிரூபித்தார். மேலும் அல்லாஹ் குர்'ஆனில் கூறுகிறான் ليس كمثله شيئ அவனை போல யாரும் எதுவும் இல்லை என்னும் போது உருவம் இருந்தால் அவனோடு ஏதோ ஒன்று ஒப்புமை ஆகும் என்று நம் தரப்பு எடுத்து வைத்தால் ஒளி விற்கும் உருவம் இல்லை அதில் ஒப்புமை ஆகாதா என்று கிண்டல் அடித்தார்கள்.

தன்னுடைய வாதத்திற்கு முரண்பட்ட கோமாலி PJ:

 • நேரிடையாக பொருள் கொள்ள வேண்டும் என்று கூறி கண் என்று வந்தால், கண் தான் என்று சொல்லி வந்தவர் ஹழ்ரத் நூஹு அலை.... அவர்கள் விஷயமாகவும், மற்ற நபிமார்கள் விஷயமாகவும் தன்னுடைய குர்'ஆன் மொழி பெயர்ப்பில் அல்லாஹ்வின் கண் என்று வரும் இடத்தில் கண்காணிப்பு என்று அர்த்தம் வைத்து இருந்தது சுட்டிக்காட்டப்படும் போது அந்த வாதத்தில் இருந்து வாபஸ் வாங்கினார்.
 • كل شيئ هالك الا وجهه அந்த நாளில் எல்லாம் அழிந்து போகும், அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்று வசனம் வருகிறதே முகம் என்று அர்த்தம் வைத்தால் அல்லாஹ்வின் உருவத்தில் முகம் மட்டும் தான் இருக்கிறது என்ற பொருள் அல்லவா வரும் என்று வினவும் போது, இல்லை இங்கே மட்டும் உள்ளமை என்று நாம் கொடுக்கும் அர்த்தம் வைத்து அந்தர் பல்டி அடித்தார்.
 • அதே பதில் தான் كل من عليها فان ويبقى وجه ربك ذوا الجلال والاكرام எல்லாம் அழிந்து போகும் அல்லாஹ்வின் உள்ளமை மட்டும் இருக்கும் என்ற கருத்தையும் ஏற்றுக்கொண்டார்.
 • அல்லாஹ் தினமும் இரவில் முதலாம் வானத்திற்கு இறங்கி வருகிறான் என்ற ஹதீஸை சுட்டிக்காட்டும் போது அப்போது அர்ஷ் காலியாக இருக்குமா? மேலும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு நேரம் இரவாக இருக்குமே, அப்படியானால் எந்த பகுதியின் இரவில் என்று கேக்கப்படும் போது இல்லை இங்கேயும் சுன்னத் ஜமாஅத்தின் அர்த்தமான இறங்கி வருதல் என்பதற்கு அருள் என்று அர்த்தம் வைத்து தன்னுடைய உருவத்திற்கு பலம் இல்லாமல் சோர்ந்து போனார்கள்.
 • அல்லாஹ் அர்ஷின் மீது அமைந்தான் என்று தன்னுடைய பத்திரிக்கையில் தன்னுடைய சகோதரர் P. சுல்தான் அலாவுத்தீன் (P.S. அலாவுத்தீன்) எழுதிய அமர்ந்தான் என்பதற்கு விளக்கம் தந்தவர், தன்னுடைய குர்'ஆன் மொழிபெயர்ப்பில் அமர்ந்தான் என்று பொருள் கொடுத்து கேள்வி பதில் நிகழ்ச்சியில் எங்கள் சகோதரரின் சுட்டி காட்டுதலில் மாட்டிக்கொண்டார். மேலும் இங்கே அர்ஷில் அமர்ந்தான் என்று அர்த்தம் வைத்தால் அர்ஷை அல்லாஹ் படைப்பதற்கு முன்னால் எங்கே அமர்ந்தான் என்ற கேள்விக்கு பதில் இல்லாமல், அது அப்படிதான் என்ற ரீதியில் (சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும் என்பதை போல) முடித்துக்கொண்டார்.
 • ساق என்பதற்கு கால் என்னும் போது நேரிடையாக பார்த்தால் ஒரு கால் தானே வருகிறது ஏன் அல்லாஹ்வை கிண்டல் செய்கிறீர்கள் என்று கேட்டால் நீங்கள் என்ன அல்லாஹ்வை கேலி செய்கிறீர்கள் என்று நம்மை பார்த்து கேக்கின்றார்கள். மேலும் ஒன்று என்று வந்தாலும் மற்றதை நாமாக விளங்கி கொள்ள வேண்டும் (என்று கூறி முசா பஹா செய்யும் விஷயத்தில் கை என்று வருகிறது அதனால் ஒரு கை என்று கூறியது பொய் என்பதை போல உளறினார்.)
 • அல்லாஹ்விற்கு கால் இருக்கிறது என்று கூறி நரகவாதிகளை அல்லாஹ் நரகத்தில் போட்டு விட்ட பிறகு அடக்கியாள்வான் என்ற பொருளுக்கு காலால் மிதிப்பான் என்று கூறி அல்லாஹ் நரகத்திற்கு செல்வான் என்ற கருத்தை சொல்கின்றீர்களே என்று கேட்டால் அது கால் தான் அல்லாஹ் நரகத்திற்கு செல்லவில்லை என்று உளறி கொட்டினார். அல்லாஹ் நரகத்தில் கால் வைக்கும் போது அர்ஷில் இல்லையா என்ற கேள்விக்கும் பதில் இல்லாமல் முடித்துக்கொண்டார்.
 • அல்லாஹ் ஒளி யாக காட்சி தருவான் என்று ஹதீஸில் வருவதை ஆதாரம் காடும் போது, ஒளி என்பதும் உருவம் தானே என்று உளறினார், பிறகு ஒளி எங்கு இருந்து பிறக்குமோ அதுக்கு உருவம் இருக்கவேண்டும் தானே, பல்பை போல, என்று ஹதீஸை நக்கல் அடித்தார்.
இப்படி பல விஷயங்களில் தானே தனக்கு முரண்பட்டார். அல்லாஹ்விற்கு உருவம் இருக்கு என்றவர் கை, கண், கால், முகம் என்று வரும் இடத்தில் அவனுடைய பண்பு என்று நாம் வைக்கும் அர்த்தம் வைத்தார்.


உண்டு ஆனால் இல்லை என்று உளறிய PJ

 • அல்லாஹ்விற்கு கண் உண்டு, ஆனால் என் மொழிபெயர்ப்பில் கண்காணிப்பு.

 • அல்லாஹ்விற்கு முகம் உண்டு. ஆனால் முகம் என்று குர்'ஆனில் சொல்லப்பட்டது உள்ளமை தான்.

 • அல்லாஹ்விற்கு கால் உண்டு. ஆனால் நரகத்தில் செல்லும் போது அது அவனுடைய ஆளுமை தான்.

 • அல்லாஹ் வானத்தில் இறங்கி வருகிறான் ஆனால் அது அருள் தான்.இறைவனை இழிவாக்க முயன்ற கோமாலி PJ.

அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக PJ பேச பேச அர்த்தம் வைப்பதில் குளறுபடி ஏற்பட்டதால் வந்த வினையில் ஏற்படும் விபரீதத்தை பாருங்கள். அதன் மூலம் அல்லாஹ்வைவையும் அவனுடைய தூதர், நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் வார்த்தையையும் கேலி செய்ய ஆரம்பித்தார் அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் எதிரி கோமாலி PJ அவர்கள்.

அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று கூறியதால் எழும்

கேள்விகள். (நவூது பில்லாஹ்)

 • அல்லாஹ்வுக்கு உருவம் இருப்பதாக வைத்துக் கொண்டால் நமக்கும் உருவம் இருப்பதால் நாமும் அல்லாஹ்வும் ஒன்றாகி விடுவோமே? பதில் இல்லை.
 • அல்லாஹ் விற்கு உருவம் உண்டு என்று சொன்னால் அல்லாஹ் ஆணா? பெண்ணா? கருப்பா? சிகப்பா? போன்ற கேள்வி எல்லாம் எழும்புமே? உருவம் இல்லாவிட்டால் இந்த பிரச்சனை வராதே!
 • உங்கள் கூற்று பிரகாரம் ساق என்று கூறப்பட்டதால் அல்லாஹ் ஒற்றைக் கால் உடையவனா?
 • அல்லாஹ் திறையை விளக்கி தனது காலைக் காட்டுவான் என்றால் அல்லாஹ் எந்த ஆடையை உடுத்திருந்தான்?
 • ஆடை உடுத்திருக்கவில்லை என்றால் அல்லாஹ் நிர்வாணமானவனா?
 • அல்லாஹ்வுக்கு இரண்டும் வலது கை என்று குர்'ஆனில் வருகிறது அப்படி என்றால் இடது கை எங்கே?
 • அல்லாஹ் விரல்களில் எப்படி உலகத்தை வைத்திருக்க முடியும்? மரங்களை எப்படி ஒரு விரலில் அல்லாஹ் வைத்திருக்க முடியும்? அப்படியானால் அல்லாஹ் எப்படி வானத்தை சுருட்டுவான்?
 • அல்லாஹ் ஆதம் அலை... அவர்களை தன்னுடைய சாயலில் படைதான் என்று கூறுகின்றீர்களே. ஹழ்ரத் ஆதம் அலை.... அவர்கள் 60 அடி உயரம், அப்படியானால் இறைவனின் உயரமும் அது தானா?
 • அல்லாஹ்விற்கு கை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல. என்று கூறுகிறீர்களே, அப்படி என்றால் அல்லாஹ்விற்கு சதை உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு நரம்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு ரத்தம் உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, அல்லாஹ்விற்கு எலும்பு உள்ளது ஆனால் நம்மை போல அல்ல, என்று நீங்கள் சொல்வது போல அமைந்து இருக்கிறதே?
 • அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்றால், உலகத்தை அழிக்கும் போது தன்னுடைய மற்ற பாகத்தை அல்லாஹ் அழித்துக் கொள்வானா?
 • அல்லாஹ் மற்றும் அர்ஷின் எடை 8 மலக்குகள் தூக்கும் அளவு தானா? (குர்'ஆனில் எட்டு மலக்குகள் சேர்ந்து அர்ஷை சுமப்பார்கள் என்று வருகிறது)
 • அல்லாஹ் உருவமுள்ளவன் என்றால் அவனால் படைக்கப்பட்ட அர்ஷின் பால் அவன் தேவை உள்ளவனா!
 • அல்லாஹ் முதலில் ஒரு உருவத்தில் வருவான், பிறகு ஒரு உருவத்தில் வருவான் என்று அர்த்தம் வைத்தீர்களே அப்படியானால் அல்லாஹ்விற்கு எத்தனை உருவம் என்று கேட்டால், அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.

இது போன்ற கேள்விகளை அல்லாஹ்வின் விஷயத்தில் எழும்ப செய்து அல்லாஹ்வை கேளிப் பொருளாக மாற்றிட முயன்றார் PJ என்ற இந்த கோமாலி.
அல்லாஹ் தனது திருமறையில் இப்படிக் கூறுகிறான்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக!(9:65)

அல்லாஹ்வைப் பற்றி திருமறையிலும் நபிமொழிகளிலும் வருகின்ற செய்திகளை ஜமாலி அவர்கள் பண்பு என்று அர்த்தம் வைக்கும் போது, முரண்டு பிடிக்காமல் ஒப்புக்கொண்ட PJ விற்கு நன்றி இதன் மூலம் கோடான கோடி முஸ்லிம்களின் ஈமான் பாதுகாக்கப்பட்டது.

மேலும் அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்து கேலி கிண்டலுக்குள்ளாக்கும் இந்த கேடுகெட்ட PJ வின் மறுமை நிலையை அறிந்து கொள்ள இந்த வசனம் ஒன்றே போதுமான சான்றாகும்.


விவாதத்தின் சில முக்கிய விஷயங்கள்.


 • அசத்தியத்திற்கு ஆதரவாக வாதிட வந்த PJ பல சந்தர்ப்பங்களில் தன்னைத் தானே கட்டுப் படுத்த முடியாத அளவுக்கு உளரிக் கொட்டினார்.
 • உருவம் உண்டு என்று சொல்ல வந்தவர் அல்லாஹ்வுக்கு உருவம் என்று வரும் வசனங்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் பண்பு என்று நமது விளக்கம் அளித்துக் கொண்டிருந்தார்.
 • அல்லாஹ் நாடிய நேரத்தில் நாடிய உருவத்தில் வருவான் என்று ஹிந்துக்களின் அவதார கொள்கையை புகுத்தி, தான் ஒரு காபிர் என்று நிரூபித்துவிட்டார்.
 • மேலும் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்று கூறினால், நாங்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் இல்லை என்று கூறுகிறார்கள். அல்லாஹ்விற்கு உருவம் உண்டு, அவனை வழிபடுகிறோம் என்றால் உருவ வழிபாட்டுக்காரர்கள் இல்லாமல் வேறு என்ன? இதனால் இவர்கள் உருவ வழிபாட்டுக்காரர்கள் என்பதையும் நிரூபித்துவிட்டார்.
 • விவாதத்தில் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனிலும், ஹதீஸிலும், சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் மற்றய இமாம்களுடைய கருத்துக்களிலும் நேரடியான ஆதாரம் உண்டா என்று மௌலவி M.ஷைகு அப்துல்லாஹ் ஜமாலி M.A அவர்கள் PJ அவர்களிடம் கேட்ட போது இறைவனுக்கு உருவம் உண்டு என இப்னு குதைபா கூறியுள்ளார் என்பதை பி ஜே அவர்கள் ஆதாரமாக காட்டினார். இதன் மூலம் இறைவனுக்கு உருவம் உண்டு என்பதற்கு குர்ஆனில் ஆதாரம் இல்லை. ஹதீஸில் ஆதாரம் இல்லை. சஹாபா பெருமக்களுடைய கூற்றிலும் ஆதாரம் இல்லை என்பதை வெளிப்படையாக ஒப்புக்கொண்டுவிட்டார். மேலும் நாங்கள் இப்னு குதைபாவை பின்பற்றக்கூடியவர்கள் என்று வாக்குமூலமும் அளித்துவிட்டார். அல்ஹம்துலில்லாஹ்.


இமாம்களை பின்பற்ற கூடாது என்று சொல்லிவிட்டு இப்னு குதைபாவை ஆதாரம் காட்டியுள்ளீர்களே என்று அவர்கள் தரப்பை அவர்களை மொய்க்க ஆரம்பித்து விட்டது, மேலும் அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்ற அடிப்படை சித்தாந்தத்தை தகர்த்துவிட்டீர்களே என்று அவர்களின் ஜால்ராக்களே துளைக்க ஆரம்பித்து விட்டது. மேலும் தூய்மையான இஸ்லாம் சொன்னீர்கள் என்று தான் உங்களுடன் இருந்தோம் இப்படி மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கிவிட்டீர்களே என்று கூறி சுன்னத் ஜமாஅத் பக்கம் மக்கள் வர ஆரம்பித்ததன் விளைவு!

இப்படி வாய் கொடுத்து வசமாய் மாட்டிக்கிட்டோமே என்ற நிலை தான் அவர் (நிரந்தர) வனவாசம் சென்ற ஒரு பின்னணி ஆகும், இதற்கு ஆதாரமாக சென்னையில் நடந்த இரண்டாவது விவாதமே சாட்சி, காரணம் இவரின் ஈமானை பறிக்கும் காரியத்தில் உடன்படாத போலி தவ்ஹீதில் இருந்தவர்கள் முதல் விவாதத்தில் பங்கேற்றவர்கள், இரண்டாவது விவாதத்தில் பாதி பேர் தான் கலந்து கொண்டார்கள். 150 நபர்களுக்கு அனுமதி இருக்க எங்கும் தன்னுடைய ஜால்ராக்களை கூட்டும் இவர்களால் வெறும் 80 நபர்களையே சேர்க்க முடிந்தது என்பது அல்லாஹ் தந்த மாபெரும் வெற்றி. இந்த மாபெரும் வெற்றி தந்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்.

அவரை (நிரந்தர) வனவாசம் அனுப்பிய இரண்டாவது பின்னணி மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.

மதுரை நாபிஈ.