முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Thursday, January 27, 2011

நான் தவ்ஹீத்வாதீ...


ஒரு தவ்ஹீத் அமைப்பை சேர்ந்தவர், தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களை நோக்கி வைத்த சில குற்றச் சாட்டுக்கள்: (மின் அஞ்சல் மூலம் வந்தது)

 • * தொழுகைக்கு பாங்கு சென்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன், மற்ற பள்ளிவாசலில் ஜானாசா தொழுகை மட்டும் தொழுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * நான் சார்ந்து இருக்கு இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன் மற்றவரிடம் பேசமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரயிம் கிண்டலும் கேலியும் செய்வேன் என் நண்பர்கள் என் இயக்கத்தை பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * மேலை நாடுகளின் பொருட்க்களை வாங்காதிர்கள், அவர்களின் கலாச்சரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன் ஆனால் அந்த பொருட்க்கள் என் விட்டில் உபயோகப்படுத்துவேன், அவர்களின் கலாச்சரத்தை நான் பின் பற்றுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன் ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் வலைத்து போட்டு பிறகு விலை ஏற்றி விற்ப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன் ஆனால் நான் சுக போகமாக நவின கண்டுபிடிப்புக்களுடன் வாழ்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று குர் ஆன் வசனம் சொல்லி இருந்து நான் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன் விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட் முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வவேன். அதற்க்கு அப்புறம் நான் அவர்களாய் திரும்பி கூட பார்க்கமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின் போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன் ஆனால் நான் செய்யும் உதவிகளாய் போட்டே எடுத்து விளாம்பரப்படுத்துவேன். ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கள் அனைத்திற்க்கும் என் விட்டில் உள்ள அழைக்காமல் ஊரில் உள்ளவர்களாய் இலவச வாகனம் முலம் அழைத்துச்செல்வேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * சொந்த ஊரில் ஆடு, மாடுகள் விலை குறைவாக கிடைக்கும் போது அதை வாங்கி குர்பானி கொடுக்கமால், விண் சிலவு செய்து ராஜஸ்தான் சென்று அதிகவிலை கொடுத்து ஒட்டகம் வாங்கி வந்து அதை விளம்பரப்படுத்தி குர்பானி கொடுப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * புனிதமிக்க ரமாலானில் வெளிநாட்டில் இருந்து வரும் பித்ரா பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும் கூட போட்டே எடுத்து விளம்பரப்படுத்துவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என்னிடம் உள்ள போன்களையும், கம்பியூட்டர்களையும் பயன் படுத்தாமல் கம்பேனியில் உள்ள தொலைபேசிகளையும், பேக்ஸ் மிஷினையும், கம்பியூட்டர்களையும் என் சொந்த விசயத்திற்க்கு பயன் படுத்துவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * விண் விரயம் செய்யவேண்டாம் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று அழ்கிய முறையில் அடுத்தவருக்கு பயான் செய்து விட்டு என் விட்டு திருமணத்தை பல ஆயிரம் சிலவு செய்து கல்யாண் மண்டபத்தில் நடத்தி அதை விடியோவும் எடுப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நட்த்தும் போராட்டங்களுக்கு அனைத்து முஸ்லிம்களயும் அணி திரண்டு வாரீர் வாரீர் என்று அழைப்பேன் & அழைத்தும் செல்வேன். ஆனால் முஸ்லிம் மக்களின் நல்லவிசயங்களுக்கு பிற அமைப்புக்களூம், ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான் போகமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ்வது சுன்னத்துக்கு மாற்றமானது ( இக்கால கட்டத்தில் குடுப்ம்பத்தோடு இருப்பது ரொம்ப அவசியமானது ) என்றூம் தெரிந்தும் நான் வெளிநாட்டில் தனியாக இருந்து இளமையை காலத்தை கழிப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *என் வருமானத்திற்க்கு தகுந்தார்போல் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ கிரெடிட் கார்டு வைத்து இருப்பேன் பேங்கில் வட்டிக்கு லோனும் வாங்குவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.

இப்படி ஏராளமான விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வாதீ.

மதுரை நாபிஈ.

Monday, January 24, 2011

தலாக் - இஸ்லாமிய நடைமுறையும், PJ வின் குழப்பங்களும், அவதூறுகளும்.

தலாக் என்பது ம(ன)ண முறிவு, விவாகரத்து என்று கூறப்படும். இஸ்லாத்தில் விவாக ரத்து செய்ய ஆண்களுக்கு உரிமை இருக்கின்றது. பெண்கள் விவாகரத்து செய்ய நாடினால் அந்த பகுதியின் ஷரீஅத் நீதிபதியிடமோ, ஜமாஅத் தலைவரிடமோ முறையிட்டு, அவர்களின் வழிகாட்டுதலின் படி விவாகரத்து பெறலாம். இது அழகிய இஸ்லாமிய நடை முறையாகும்.

ஆனால் தமிழ் நாட்டில் இஸ்லாத்தில் குழப்பம் விளைவிக்கும் PJ மற்றும் அவரது கூட்டாளிகள், ஆண்கள் எப்பிடி தலாக் செய்கின்றார்களோ, அப்படி பெண்களும் தலாக் செய்யலாம் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒரு கருத்தை புகுத்தி இருக்கின்றார்கள்.

இதை பயன்படுத்தி தான் பெண்களை தூக்கி நிறுத்துகின்றோம் என்று கூறி கொண்டு திரியும் அவாஸ், சாயா அமைப்புகளை சேர்ந்த பதர் சயீத், நாஸ்நீன் (இவரது கொடுமை தாங்காமல் இவரது கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார், மேலும் இவரது ஒரு மகனை தமிழக காவல் துறையில் IG ஆக பொறுப்பேற்று இருந்த ஜனாப் கலீமுல்லாஹ் கான் என்பவற்றின் மகளை திருமணம் செய்து அவரை சொல்லனா துயரத்தை தந்தார். மேலும் வரதட்சணை கொடுமையையும் மேற் கொண்டார்), புதுக்கோட்டையை சேர்ந்த ஷெரிபா (இவர் ஒரு வார இதழில் தனது கணவரை மூன்று தலாக் கூறி விட்டேன் என்று கூறினார்) எல்லாம் ஆண்கள் கூறும் தலாக் சட்டத்தையே நீக்க வேண்டும் என்று நீதிமன்றங்களில் முறையிட்டு அது அல்லாஹ்வின் மாபெரும் அருளால், தமிழக உலமா சபையின் முயற்சியால் முறியடிக்கப்பட்டது என்பது வேறு விஷயம்.

இப்படி பட்ட அயோக்கியர்கள் உருவாக இந்த PJ தான் காரணம். மேலும் இந்த PJ நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் காலத்தில் இருந்த முத்தலாக் நடைமுறையை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஒரே ஒரு ஹதீஸை மட்டும் வைத்துக்கொண்டு கூறுகின்றார். அதாவது நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கு பின்னும், ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... அவர்கள் காலத்திலும், ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் காலத்திலும் தலாக் என்பது ஒன்றாக தான் கவனிக்கப்படும் என்ற ஹதீஸை கூறி தலாக் மூன்று சொன்னாலும் ஒன்று என்று கூறுகின்றார்.

அதற்கு ஒரு விசித்திர காரணத்தையும் கூறுகின்றார். அதாவது ஒரு மனிதர் தனது மனைவியை முத்தலாக் செய்தால், முதலில் ஒரு தலாக் சொல்கின்றான், அப்போதே அவனுக்கு அவள் மனைவி இல்லாமல் ஆகி விடுகின்றாள். பின் எப்பிடி இரண்டாவது, மூன்றாவது கூற முடியும் என்று கேட்கின்றார். அதனால் அவன் ஒரு தலாக் சொல்லி, பிறகு வாபஸ் வாங்கி சேர்ந்து வாழ்ந்து, பிறகு தலாக் சொல்லி, நிக்காஹ் மீண்டும் செய்து சேர்ந்து வாழ்ந்து, பிறகு தலாக் சொன்னால் தான் தலாக் ஆகும். இது தான் முத்தலாக். இதற்க்கு மாற்றமாக எப்பிடி செய்தாலும் அது நபி வழிக்கு மாற்றமானது ஆகும் என்று எங்கு பார்த்தாலும் இந்த விஷயத்தை கூறி, மத்'ஹபின் ஆலிம்கள் எப்பிடி உங்களை எமாத்துறாங்கே (அவர் பாணி) பார்த்தீர்களா என்று கேட்டு மத்'ஹபின் பக்கம் அவதூறு கூறி மக்களை திசை திருப்புகின்றார்.

அவரது கேள்விகளில் இருந்து, இந்த கேள்வியை அவரிடம் நாம் கேட்கின்றோம், ஒரு மனிதன் தனது மனைவியை, ஒரு தலாக் செய்கின்றார் அவள் திருந்தி வர வில்லை, மூன்று மாதம் ஆகி விட்டது, இப்போது எப்பிடி அவளை மீட்காமல் தலாக் சொல்வது? (தலாக் சொல்லாவிட்டாலும் தானாகவே இரண்டாவது தலாக் விழுந்து விடும் என்பது வேறு விஷயம்) அப்படியே தலாக் சொன்னால் உங்கள் வாதப்படி அவள் மனைவியே இல்லையே அப்படி என்றால் தலாக் சொன்ன ஒரு மனிதன் மீட்டு மீண்டும் குடும்பம் நடத்தி தான் தலாக் சொல்ல முடியும் என்பது எப்பிடி சாத்தியம். அவள் திருந்தி வராவிட்டால் என்ன சட்டம். இதற்கு PJ பதில் சொல்லியே ஆக வேண்டும்.

ஆனால், இதற்கு PJ வால் பதில் சொல்ல முடியாது என்பதே உண்மை. மேலும் அவர் செல்லும் இடங்களில் எல்லாம், இந்த மத்'ஹப் காரங்கே (அவர் பாணி), இந்த மத்'ஹப் ஆலிம்கே முத்தலாக் இருக்கு னு சொல்றாங்கே, ஆனா அவுங்கே குடும்பத்துல, அவுங்கே பொண்ணுங்களுக்கு முத்தலாக் சொல்லப்பட்டால், அவர்களின் சகோதரிகளுக்கு முத்தலாக் சொல்லப்பட்டால் அதை ஒரு தலாக் தான் என்று பத்வா வாங்குவதற்காக நஜாத் காரனிடம் செல்லுங்கள் என்று எங்களிடம் அனுப்பி, எத்தனை பேர் எங்களிடம் வந்து பத்வா பெற்று இருக்கின்றார்கள் தெரியுமா என்று அவரை சார்ந்து இருக்கும் மடையர்களிடம் பீற்றிக்கொள்கின்றார். மேலும் எத்தனை உலமாக்கள் என்னிடம் வந்து நீ பத்வா கொடு நாங்கள் சேர்ந்து வாழுகின்றோம் என்று கேட்டீர்களா இல்லையா என்று கேட்கின்றார். ஏன் கேட்டீர்கள்? உங்களுக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டமா?

அது அவரது சீடர்களுக்கு சரி என்று படலாம். காரணம் நித்யானந்தாவின் லீலைகள் மக்களுக்கு மத்தியில் பரப்பப்பட்டும் அவருக்கு என்று இருந்த சீடர்கள் அவரை நம்பினார்கள். இஸ்லாத்தின் நித்யானந்தா இவர்.PJ முத்தலாக்கை கூறும் ஹதீஸை மறைத்தும், நமது உலமாக்களின் மீது அவதூறும் இட்டுக்கட்டியும் பேசும் வீடியோ:

அவர் நமது ஆலிம்களை நோக்கி சொன்ன பொய் குற்றச்சாட்டு தான் இது. அவர் உண்மையான மூமினாக இருந்தால், எந்த ஆலிம் இப்படி தனது குடும்பத்தவரை அனுப்பினார், எந்த ஆலிம் இவரை தேடி வந்தார்? என்று அவர்களது முழு விவரத்தையும், அவரது பெண்களின் முழு விவரங்களையும் நமக்கு அனுப்ப வேண்டும். நாம் பிறகு அவரை தொடர்பு கொள்வோம். பிறகு இவர் சொன்னது பொய் என்பதை நிரூபிப்போம். அவர் உண்மையாக மத்'ஹபை சேர்ந்தவராக இருக்க வேண்டும். பொய்யாக, செட் அப் செய்து அந்த தொடர்பு விவரங்களை தரக்கூடாது.

பத்து நாட்கள் PJ விற்கு அவகாசம் தருகின்றோம். அதற்குள் அவர் விபரங்களை தரவேண்டும். இல்லாவிட்டால் சொன்ன அந்த விஷயம் பொய், மோசடி என்பதை நாம் எழுதுவோம்.

மேலும் தமிழகத்தின் தாய் மதரசாவான பாகியாதுஸ் சாலிஹாத் ஐயும், லால்பேட்டை மன்பவுல் அன்வாரையும், நீடூர் மிஸ்பாஹுல் ஹுதா வையும், இப்படி சாடுகின்றார். அதாவது மக்களுக்கு ஒரு சட்டத்தை சொன்னீர்கள், உங்களுக்கு என்று வந்து விட்டால் பல்டி அடித்து விட்டீர்களே, ஏன்? தனக்கு என்று வந்தால் தான் தெரியும். மூன்று முறை தலாக் என்று சொன்னால் மூன்றும் விழுந்து விடும் என்று சொன்ன நீங்கள் இப்போது ஏன் மாறினீர்கள்? இப்போது மத்'ஹபின் சட்டம் என்னவானது என்று கேட்கின்றார்.

அப்படி பாகியாத்துஸ் சாலிஹாத்தில் நிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அல்லாஹ்விற்கு பயந்து அதற்க்குண்டான ஆதாரத்தை தரவேண்டும். அதற்கும் பத்து நாட்கள் அவகாசம் தருகின்றோம். அந்த ஆதாரத்தையும் சமர்பிக்க வில்லை என்றால் இவரின் முகமுடியை மேலும் கிழிப்போம். அப்படி ஆதாரங்களை தர முடியாது என்பதே உண்மை. ஆனால் அதே நேரத்தில் முத்தலாகை எத்தனை வஹ்ஹாபியர்கள் ஒரே நேரத்தில் நமது ஜமாஅத் களில் வந்து கேட்கின்றார்கள் தெரியுமா? அப்படி தலாக் செய்த வஹ்ஹாபியின் கடிதமும் நம்மிடம் ஆதாரமாக உள்ளது.


மேலும் தனது கணவரை முத்தலாக் சொன்ன புதுக்கோட்டையை சேர்ந்த ஷெரிபா தலாக் என்பதே இருக்க கூடாது என்று நீதி மன்றம் ஏறிய சாயா, அவாஸ் அமைப்பை சேர்ந்தவர்.
அவர் தனது மகளுக்கு சரியான வாழ்க்கை அமையவில்லை என்பதற்காக, நீதி மன்றத்தில் முறையிட்டு அங்கு தீர்வு கிடைக்காமல், தமிழ்நாடு (போலி) தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களிடம் முறையிட்டு அங்கும் தீர்வு கிடைக்காமல், மதுரை அரசாங்க தலைமை காஜியாரிடம் முறையிட்டுள்ளார் என்ற செய்தி நமக்கு சேர்ந்த போது இவர்களின் சுய ரூபம் தெரிகின்றது. PJ சொன்ன சட்டம் அதாவது தனக்கு என்று வந்தால் ஒரு சட்டம் என்பது அவர்களுக்கு தான் பொருந்தும் என்பதை உறுதி படுத்தி கூறுகின்றோம்.

இதே தான் PJ வின் நிலையாகவும் இருக்கும். மேலும் ஆண்களுக்கு ஒவ்வொன்றாக தான் தான் தலாக் வழங்க முடியும் என்று கூறும் PJ, பெண்கள் மட்டும் ஒரேயடியாக மன முறிவு பெற முடியும் என்று கூறுகின்றார். இது எப்பிடி முடியும்? சட்டம் என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒன்று என்று தானே சென்னையில் நடந்த மூன்றாவது விவாதத்தில் கூறினார்! அப்படி இருக்கும் போது எப்பிடி இதில் மட்டும் விதி விலக்கு ஏற்படுகின்றது.

மேலும் மத்'ஹபின் ஆலிம்கள் PJ வின் பத்வாவை கேட்கும் நிலையில் இல்லை என்பதே உண்மை. இவரிடம் வந்து பத்வா கேட்டார்களாம் யாரிடம் புளுகுகின்றீர். உங்களுக்கு பத்வா கொடுக்க என்ன அதிகாரம் இருக்கின்றது. உங்களின் பத்வா வை போல ஆலிம்கள் கொடுத்துகொள்வார்களே. அவர்களுக்கும் அந்த ஹதீஸ்கள் தெரியுமே? உங்களிடம் தான் வந்து பத்வா பெற வேண்டும் என்று என்ன தேவை இருக்கின்றது என்பதையும் மக்கள் மன்றம் விளங்கி கொள்ள வேண்டும். இது மக்களை வழி கெடுக்க இவர் செய்யும் சூழ்ச்சிகளில் ஒன்று என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

இது தான் ஒரு பக்கம் என்றால், முத்தலாகின் சட்டம் என்ன என்று ஹதீஸ்களை ஆராய்கின்ற போது, ஏராளமான ஹதீஸ் வருகின்றது. அதில் ஒரு ஹதீசாகின்றது, ஒரு மனிதர் (ஒரே நேரத்தில்) தனது மனைவியை மூன்று முறை தலாக் கூறி விடுகின்றார், அந்த பெண் மற்றொரு நபரை மணம் செய்து கொள்கின்றார். அவரும் (மூன்று முறை) தலாக் விட்டு விடுகின்றார், நபிகள் நாயகம் ஸல்... அவர்களிடம் மக்கள் வந்து இப்போது முதல் கணவரை திருமணம் செய்து கொள்ள முடியுமா என்று கேட்ட போது, இரண்டாம் கணவர் அந்த பெண்ணை உறவு கொள்ளாதவரை அது முடியாது என்று கூறினார்கள் (புகாரி).

அதே போல ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி... அவர்களிடம் ஒரு மனிதர் நான் என் மனைவியை நூறு முறை தலாக் விட்டு விட்டேன் என்று கூறி, இப்போது எனது தலாக்கின் நிலை என்ன என்று கேட்ட போது அவள் மூன்று தலாகால் விடுவிக்கப்பட்டு விட்டாள். மீதி 97 தடவை நீர் அல்லாஹ்வின் வசனத்தோடு போர் புரிந்துள்ளீர் என்று கூறினார்கள்
(முஅத்தா மாலிக்).


அப்படி என்றால் அல்லாஹ்வின் வசனமும் முத்தலாக் ஐ பற்றி கூறி இருக்கின்றது, நபிகளாரின் வாழ்க்கையும் காட்டி தந்துள்ளது. சஹாபாக்களின் கூற்றும் எடுத்துக்காட்டுகின்றது, இமாம்களின் சட்டங்களும் அதை ஆமோதிக்கின்றது, PJ வின் கூமுட்டை அறிவு மட்டும் எதிர்க்கின்றது என்றால் அல்லாஹ்விடமும், அவனது ரசூலிடம் போர் புரிவது என்பதை தான் காட்டுகின்றது. (அழகிய நடைமுறை என்பது ஒவ்வொன்றாக கூறுவது தான். ஆனால் மூன்று கூறி விட்டால் அது மூன்றா ஒன்றா என்பது தான் பிரச்சனை). (இவர் இப்படி நாம் காட்டும் ஹதீஸை மறுக்கலாம், காரணம் இவர் தான் தற்போது பலமான ஹதீஸை கூட நம்பும் இடத்தில் இல்லையே?)

இப்படி பட்ட விஷயங்கள் வைத்து ஹழ்ரத் உமர் ரழி.... மூன்று மூறை கூறினால் மூன்று முறை தான் என்று லட்சோப லட்ச சஹாபா பெருமக்களுக்கு மத்தியில் ஒரு சட்டத்தை கொண்டு வருகின்றார்கள். எந்த சஹாபியும் இதை எதிர்க்கவும் இல்லை. இது நபிகளாரின் நடைமுறைக்கு மாற்றம் என்று அறிவிக்கவும் இல்லை. அப்படி இருக்க இவர் மட்டும் இந்த சட்டத்தை எதிர்க்கின்றார் என்றால் இவரின் உண்மை முகத்தை மக்கள் மன்றம் அறிந்து கொள்ள வேண்டும். இது நபிகளார் ஸல்... அவர்களின் காலத்தில் இருந்த நடைமுறையே தவிர வேறில்லை. இதை மாற்றுவதற்கு யார் முயற்சி செய்தாலும் அது தடுக்கப்பட வேண்டும். நபிகளார் ஸல்... அவர்களின் சட்டத்தை பின் பற்றி நடக்கும் தவுபீகை அல்லாஹ் நமக்கும் நமது சந்ததியினருக்கும் என்றென்றும் தந்தருள்வானாக!

ஆமீன்! ஆமீன்!

யா ரப்பல் ஆலமீன்.
Wednesday, January 19, 2011

நீடூர் மருத்துவக் கல்லூரியும் வஸ்வஸாவை போடும் மனித சைத்தானும்

இறைமறை குர் ஆனில் அல்லாஹ் கூறுவது போல் மனித உள்ளங்களில் சந்தேகவிதைகளை விதைக்கும் சைத்தான்கள் மனிதர்களிலும் உண்டு என்பதற்கு சரியான உதாரணம், பீ.ஜை எனப்படும் பீ.ஜைனுலாப்தீன்.

தன்னை அங்கீகாரம் செய்யாத இயக்கங்களானலும் சரி,மார்க்க மேதையானலும் சரி, ஜமாத்தானாலும் சரி, தனி மனிதராயினும் சரி அவர்கலைப்பற்றி அவதூறு பரப்பி சமுதாயத்தினரை குழப்புவார்.

அதற்கு சரியான சமீப உதாரணம் நீடுர் மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக்கல்லூரி விவகாரம். உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை மறைத்து மருத்துவக் கல்லூரி உருவாகிவிடக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் தங்களிடமிருந்து திருடி விட்டார் என ஒரு இயக்கம் குற்றம் சாட்டிய உணர்வு இதழில் சில சந்தேக விதைகள விதைத்துள்ளார்.

உண்மை என்னவென்று தெரிந்தும் அதனை வெளியே சொல்லமல் மறைப்பவன் ஊமை சைத்தான் என நபி(ஸல்) கூறினார்கள் இப்போது உண்மை என்ன என்பதையும் தெரிந்தும். பீ.சை சாரி பி.ஜை அதனை மறைத்து சந்தேக விதைகளை விதைத்துள்ளார்.

உண்மையை மறைக்கும் ஊமை சைத்தான்

மருத்துவக் கல்லூரி துவக்குவது தொடர்பான முதல் ஆலோசனக்கூட்டம் நீடுரில் நடத்த முடிவு செய்ய முடிவான பொழுது விளக்கம் தர நீடூர் மதரசாவுடன் தொடர்புடைய மூன்று பேர்களின் தொலைபேசி எண்கள் நீடுர் ஆன்லைன் டாட் காம் என்ற இணைய தளத்தில் கொடுக்கப்பட்டது.

நன்றாக கவனியுங்கள் செய்தி தொடர்புக்கு என்று கொடுக்கப்பட்டதே தவிர மருத்துவக் கல்லூரிக்கு இவர்கள் தான பொறுப்பாளர்கள் என அறிவிக்கப்படவில்லை. ஒரு நிருவனத்திற்கோ, இயக்கத்திற்கோ ஒருவரை செய்தி தொடர்பாளர் என அறிவிக்கப்பட்டால் தொடர்புடைய அந்த நிறுவனத்திற்கு அவர்தான் முழு பொறுப்பாளராகி விடுவாரா? அவர்களை மட்டும் நம்பி பல கோடிகளை மக்கள் கொடுத்து விடுவார்களா?

இந்த உண்மை தெரிந்தும் சந்தேக விதைகளை மக்கள் உள்ளத்தில் விதைக்கிறார். அவரின் சைத்தானிய உணர்வலைகள் இப்படி வெளிப்படுகிறது. "எஸ்கொயர் சாதிக், இஸ்மாயில் நாஜி, ஜர்ஜிஸ் ஆகிய மூவரின் செல்போன்கள் தொடர்பு எண்ணாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களை தொடர்பு கொள்ளும் போது ஒவ்வொருவரும் முரண்பட்ட தகவல்களைக் கூறுகின்றனர்.

இவர்களிடம் விசாரிக்கும்போது மருத்துவ கல்லூரியை வக்ப் வாரியம் நடத்துவதாகக் கூறாமல் மக்களிடம் ஷேர் சேர்த்து தனி டிரஸ்டாக நடத்த இருப்பதாகக் கூறுகின்றனர். இது வக்ப் வாரியத்தால் நடத்தப்படுகிறதா என்று கேட்கும் போது இல்லை. நாங்கள் தனியார் நடத்துகிறோம். கவிக்கோ அப்துர்ரஹ்மான் முதல்வரிடம் செல்வாக்கு பெற்றவராக உள்ளதால் அவர் பெயரைப் பயன்படுத்திக்கொள்கிறோம் என்று இவர்கள் கூறியுள்ளனர்.

வக்ப் வாரியத்தலைவரின் பெயரைப் பயன்படுத்தி யாரோ சிலர் உள் வேலை செய்வதாக எழுந்துள்ள சந்தேகத்தை வக்ப் வரியம் நீக்கவேண்டும்"

கவிக்கோ அவர்களை ஏன் தொடர்பு கொள்ளவில்லை?

சகோதரர்களே! பொதுவாக புலனாய்வு இதழ்கள் எனப்படும் ஜூனியர் விகடன் போனறவைகள், ஒரு செய்தியை வெளியிடும் பொழுது, குறிப்பாக மோசடி போன்ற செய்திகளை வெளியிடும்போது தொடர்புடைய அனைவரின் கருத்துகளையும் பதிவு செய்வார்கள்.

பீ.ஜை.என்ற பீ.ஜைனுலாப்தீன் உண்மயான சமுதாய அக்கரை இருந்தால் என்ன செய்திருக்கவேண்டும்? வக்ப் வரியத் தலைவரின் பெயரை யாரோ சிலர் தவறாக பயன்படுத்திகிறார்கள் என சந்தேகம் வந்தவுடன் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களைத் தொடர்பு கொண்டு அவரின் கருத்தையும் கேட்டு வெளிட்டிருக்கவேண்டும்.. தொடர்பு கொள்வதற்காக கொடுக்கப்பட்ட செல்போன் எண்களைத் தொடர்பு கொண்டு கேட்க தெரிந்த இந்த மே(ல்)தாவிக்கு கவிக்கோ அவர்களைக் கேட்க வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை?

உண்மை என்னவென்று தெரிந்தே மக்களைக் குழப்புவதுதானே அவர் நோக்கம்.இதை நாம் உறுதி பட கூறுவதன் காரணம்"

தெரிந்தே வழிகெடுக்கும் சைத்தான்

தனது சைத்தானிய உணர்வலைகளின் துவக்கத்தில் மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஆலோசனை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன என குறிப்பிடுகிறார். ஆலோசனைக் கூட்டங்கள் நடப்பது தெரிந்த அவருக்கு அந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பிதழ் அனைத்தும் கவிக்கோ அவர்களின் கையெப்பத்துடன் அனுப்பப்பட்டது என்பதும், அந்தக் கூட்டத்திற்கு தலைமை ஏற்று நடத்தியதும் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ அவர்கள்தான் என்பதும் பீ.ஜை க்குத் தெரியாதா?.

பீ.ஜை. என்னென்ன சந்தேகங்களை எழுப்பி உள்ளாரோ அத்தனைக்கும் பதில் கவிக்கோ அவர்களின் உரையிலேயே இருக்கிறது.

மருதுவக் கல்லூரி வக்ப் வாரியம் நடத்துகிறதா, இல்லை தனியார் டிரஸ்ட்டா? என்ற கேள்வியை இவர் எழுப்புவது டிசம்பர் 22 ந்தேதி வெளியான உணர்வு இதழில், அந்த இதழ் வெளிவருவதற்கு 18 நாட்கள் முன்பாகவே அதற்கு கவிக்கோ பதில் வழங்கி உள்ளார்.

04/12/2010 சென்னையில் வக்ப் வாரியத் தலைவர் கவிக்கோ தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடை பெற்றது. அதில் பல கல்வியாளர்கள், ஆடிட்டர்கள், செல்வந்தர்கள் என சுமார் 400 பேர் கலந்து கொண்டனர். அக்கூட்டத்தில் மிகத் தெளிவாக கவிக்கோ கீழ் கண்டவாறு கூறினார்கள்:

மிஸ்பாஹுல் ஹுதா வக்ப் மருத்துவக் கல்லூரியை வக்ப் வாரியமோ, மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவோ நடத்தவில்லை, மாறாக பத்து லட்சம் ரூபாய் ஷேர் வாங்குபவர்கள் பொதுக்குழு உறுப்பினர் ஆவார்கள். முழுக்க முழுக்க நமது சமுதாய மக்களிடம் பங்கு வாங்கப்பட்டு பங்குதாரர்களை கொண்ட பொதுக்குழு அமைக்கப்பட்டு பொதுக்குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி மன்ற குழுவினரே மேற்படி கல்லூரியை நடத்தப்போகிறார்கள், என தெளிவாக அறிவித்தார்கள்.

அந்தக் கூட்டத்தின் நிகழ்வுகள் சன் டிவி போன்ற தொலைகாட்சியிலும், தினசரி நாள் இதழ்களிலும் வெளி வந்தன.

இவைகள நன்கு அறிந்தும் பீ.ஜை வக்ப் மருத்துவ கல்லூரி என்ற பெயரில் சமுதாயம் ஒன்று படக்கூடாது என்ற கெட்ட எண்ணத்தில் மனித சைத்தானாக சந்தேக விதைகளை விதைக்கிறார்.

மருத்துவக் கல்லூரியை துவக்கத்திலேயே தடுத்து நிறுத்துவதற்கு அதனை முன் நின்று உழைப்பவர்களின் மீது சமுதாயம் நம்பிக்கை இழக்க வைக்க வேண்டும் என அவரின் சைத்தானிய மூளை வேலை செய்கிறது.

வாரியத் தலைவர் கவிக்கோ அவர்களின் மீது ஏற்கனவே ஊழல் புகார் கூறி வழக்கு என்றதும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார்.

மருத்துவக் கல்லூரி தொடர்பான முதல் கட்ட ஆலோசனைக் கூட்டம் நீடூரில் நாகை, தஞ்சை, கடலூர் மாவட்டத்திற்குட்பட்ட மக்களை அழைத்து நடத்த முடிவு செய்த பொழுது தொடர்பு கொள்வதற்காக மூன்று பேரின் அலைபேசி எண்கள் நீடூர் ஆன்லைன் டாட் காம் எனும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது

இதில் எஸ்.ஏ.சாதிக் மிஸ்பாஹுல் ஹுதா மதரசாவின் பொது செயலாளர். மற்ற இருவர் மதரசாவின் நிர்வாக குழு உறுப்பினர்கள்.

முளையிலே இந்தத் திட்டத்தை கிள்ளிவிட வேண்டும் என்ற சைத்தானிய திட்டத்தில் மக்களின் உள்ளத்தில் அவ நம்பிக்கை ஏற்படும் வகையில் மக்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களை போடும் சைத்தான்கள் ஜின்களிலும்.மனிதர்களிலும் உண்டு என குர் ஆன் (114:5-6) கூறுவதற்க்கேற்ப சாதிக் அவர்களைப் பற்றியும். இஸ்மாயில் நாஜி பற்றியும் மக்கள் உள்ளங்களில் சந்தேக விதைகளை விதைக்க முனைகிறார்.

குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு ஆண்மை வேண்டும், ஆனால் இவர் பெட்டைத்தனமாக புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது, என எழுதுகிறார்.

அவதூறு பரப்புவதை பெறும் பாவமென அல்லாஹ் அந்நூர் அத்தியாயத்தில் விரிவாக கூறியுள்ளான். இவர் உண்மையான ஈமான் கொண்டவராக இருந்தால் ஆணித்தரமாக குற்றம் நடைபெற்றதாக எழுதிருக்க வேண்டும், அதைவிட்டு சைத்தான் போடும் வஸ்வஸாவைப் போல் புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என ஏன எழுத வேண்டும்?

இதில் அல்ஹாஜ் S.A.சாதிக் அவர்கள் மயிலாடுதுறை பகுதியில் முஸ்லிம் மற்றும் முஸ்லிமல்லாத மக்களிடம் மரியாதைக்குறியவர். தொழிலதிபர். பொருளாதாரத்தில் நலிவுற்றிருந்த மிஸ்பாஹுல் ஹுதாவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டபின் அதனை பொருளாதாரத்தில் தன்னிறவு பெறச்செய்தவர். அதனால்தான் மதரசா பொது குழுவினரால் மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து ஏழு ஆண்டுகளாக பொதுசெயலாளராக இருக்கிறார்.

பள்ளிவாசல் நிதி மோசடியைப் பற்றி இவரிடம் கூறியவர்கள் ஏன் நீடூர் ஜமாத்தில் புகார் கூறவில்லை? தலைவரைப் போன்று அவர்களும் பெட்டைகளா? பீ.ஜைக்கு ஆண்மை இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரும் பொழுது முன் நின்று குற்றத்தை நிரூபிக்கட்டும்.

அடுத்து, இஸ்மாயில் நாஜியின் மீது வேறுவிதமான புகார் இருப்பதாகக் கூறப்படுகிறது என எழுதியுள்ளார். ஏற்கனவே இதே உணர்வு இதழில் நாஜியின் வண்டவாளங்களை வண்டி வண்டியாக எழுதலாம் என எழுதினார். அவர் உண்மையிலேயே ஆண்மை உள்ள முஸ்லிமாக இருந்தால் குறிப்பிட்டு ஏதேனும் குற்றச்சாட்டை முன் வைக்கட்டும், இவ்வுலகில் இங்குள்ள நீதி மன்றத்திலும். மறுமையில் அல்லாஹ்வின் மன்றத்திலும் வழக்கு தொடர்ந்து வென்று காட்ட தயாராக இருக்கிறார்.

இன்று நாஜிக்கு 63 வயதாகிறது. 40 ஆண்டுகளாக நீடூர் மக்களுக்குடன் தொடர்பு வைத்திருப்பவர். சிதம்பரத்தில் 25 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிரார்.சிதம்பரம் பகுதி மக்களிடம் நன்கு அறிமுகமானவர். சிதம்பர்ம் தாலூக்கா இஸ்லாமிய ஐக்கிய ஜமாத்தின் தலைவராக இருப்பவர். தமிழ்நாடு உலமாக்கள் மற்றூம் பணியாளர் வாரியத்தின் உறுப்பினர். அவரைப் பற்றிய இவரின் வஸ்வஸாக்கள் மக்களிடம் எடுபடாது.

உங்களைப் பற்றி உணர்வு இதழில் தவறாக எழுதப்பட்டது என்ற தொலைபேசி தகவல் வந்தபோது அல்ஹம்துலில்லாஹ் என மகிழ்ச்சி தெரிவித்தார். காரணம், பீ.ஜை.யின் நாசகார நாவினால் அவதூறு கூறப்படாத நல்லவர்களே இல்லை.

உலமாக்கள் தொடங்கி, முஸ்லிம் அரசியல் தலைவர்கள், இமாம்கள், வலிமார்கள், நபி தோழர்கள் வரை அனைவரின் மீதும் அவர் அவதூறு கூறியுள்ளார், அந்த பட்டியளில் நாஜி யை சேர்த்திருப்பது பெருமைக்குரிய ஒன்றாகத்தான் அவர் கருதுகிறார்.

ஏனென்றால் ஒரு முறை அவரின் குரு கூறினார்" நல்லவர் ஒருவர் உன்னைப் பற்றி வருத்தப்பட்டால் கவலைப்படு. ஏனென்றால் நல்லவர் வேதனைப்படும் ஏதோ கெட்ட செயல் உன்னிடம் இருக்கிறது.அயோக்கியன் ஒருவன் கோபப்பட்டால் சந்தோசப்படு! அவன் கோபப்படும் ஏதோ நல்ல குணம் உன்னிடம் இருக்கிறது என்று பொருள்" என்றார்கள்.

பீ.ஜை ஒருவரைக் குறை கூறுவது அதிசயமல்ல, எனென்றால் இவரின் முன்னாள் சகா ஒருவார் தனது இணையதளத்தில் எதிர்த்து கேள்வி கேட்கும் எவரும் இருக்கக் கூடாது என்பதற்காக தன்னுடைய தவறுகளை மறைப்பதற்காக முந்திக்கொண்டு மற்றவர்கள் மேல் பாலியல் மற்றும் பொருளாதார குற்றச்சாட்டுகளை கூறும் இவர் ":இரண்டு விஷயத்தை யார் மீது எறிந்தாலும் அவன் காலிம்மா! ஒன்று பொம்பள, இன்னொன்று பொருளாதாரம்,” என்று கூறுவது இவரின் கொள்கையாகும் என்று எழுதுகிறார்.

என்வே அவர் மருத்துவக் கல்லூரியை ஆதரித்து இருந்தால்தான் அதிசயம். மனித உள்ளங்களில் தெரிந்தே வஸ்வஸாவை சைத்தான் போடுவதிலிருந்தே நாம் போகும் பாதை சரியானது என்று நம்பலாம். என்வே இந்த மனித சைத்தான் என்னதான் முயன்றாலும் இந்த நல்ல காரியத்தை தடுக்க முடியாது.

இவ்வளவு பேரையும் குறை கூறும் இவர் என்ன குறைகளற்ற கோமேதமா? மாசற்ற மாணிக்கமா? பத்தரை மாற்று தங்கமா? பரிசுத்த ஆத்மாவா என்றால் சாதாரண கிளை நிர்வாகிக்கு உள்ள இஃலாஸ், தக்வா, ஒழுக்கம், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ், இபாதத் என எதுவும் இவரிடத்தில் இல்லை என இவரின் முன்னாள் சகாக்களே கூறுகின்றனர்.

நித்யானந்தா, பிரமானந்தா போன்ற சாமியர்களை விட மோசமானவர் என்றும், தன் குடுப்பத்தின் பொருளாதரத்தை வள்ப்படுத்த ஜமாத்தை எப்படி பயன் படுத்துகிரார் என்றும் இணைய தளங்களில் எழுதியுள்லனர்.

என்வே பீ.ஜை எனும் பீ.ஜைனுலாப்தீனுக்கு சொல்லிக் கொள்கிரோம்... கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிய வேண்டாம். மயிலாடுதுரை அருகே பெரம்பூர் எனும் சின்ன கிராமத்தில் மளிகைக் கடை நடத்திக் கொண்டு, தொடை தெரிய தெரு ஓரங்களில் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தவர், அபூஅப்துல்லாஹ் தொடங்கி பாக்கர் வரை அவரை ஏற்றி விட்ட ஏணீகளை காலில் தள்ளி இண்று பொருளாதாரத்தில் எப்படி தன்னனிரவு பெற்றுள்ளார் என்பதனை வெளி இடநேரிடும்.


நன்றி : KTIC

Saturday, January 8, 2011

இமாம்களின் உதவி தேவையா?

ஒப்பந்தத்தின் அடிப்படையில் நான்காம் தலைப்பு, குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தேதியில் நடைபெற்றது. குர்'ஆனையும் ஹதீசையும் பின் பற்றுவதற்கு இமாம்களின் உதவி தேவையா? என்பது தலைப்பு. உதவி தேவை இல்லை என்பதும். சுயமாக பின்பற்ற முடியும் என்பதும், இமாம்களின் கருத்துக்கள் தான் முட்டுக்கட்டையாக உள்ளது என்பதும் (போலி) தவ்ஹீத் உடைய நிலைப்பாடு. குர்'ஆனையும் ஹதீசையும் பின் பற்றுவதற்கு இமாம்களின் உதவி தேவை. சில வசனங்களுக்கு இமாம்களின் உதவி இல்லாமல் புரிய முடியாது என்பது சுன்னத் வல் ஜமாத்தின் நிலைப்பாடு.

காபிர்கள் முறையில் விவாதம்:

விவாதத்தை துவக்கிய PJ வழக்கம் போல் சலாம் கூறிவிட்டு (காபிர்களுக்கும் சலாம் கூறலாம் என்ற நிலைப்பாட்டில்) அல்லாஹ்வை புகழாமலும், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மேல் சலவாத்து ஓதாமலும் காபிர்கள் வழியில் அவரது விவாதத்தை துவக்கினார். இந்த விவாதத்திற்கு பரிகாசம் செய்வதற்கு என்று (கூலிக்கு) ஆட்களை அழைத்து வந்து, ஜமாலி அவர்கள் பேசும் போது கிண்டல் அடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் அந்த ஆட்கள் இருந்ததின் மூலம், இவர்கள் எல்லாம் ஒரு நாகரிகம் தெரியாத ஒரு பன்னாடைகள் என்பது வெட்ட வெளிச்சம் ஆகியது.

ஒப்பந்தத்திற்கு மாற்றமான விவாதம்:

விவாதத்தை துவக்கும் போதே, இந்த தலைப்பு விவாதத்திற்குரிய தலைப்பே அல்ல என்று கூறினார். இதன் மூலம், நான் இந்த தலைப்பில் விவாதிக்க மாட்டேன், வேறு தலைப்பில் தான் விவாதிப்பேன். அதாவது, என்றைக்கும் எனக்கு என்று இருக்கும் தலைப்பான மத்'ஹபு தான் அந்த தலைப்பு என்று கூறாமல் கூறினார். காரணம் எந்த தலைப்பை போட்டாலும் இவர்களுக்கு இதே பிழைப்பு தான். 2001 ஆம் ஆண்டு இலங்கையில் சுன்னத் ஜமாஅத் என்றால் யார் என்ற விவாத தலைப்பில், இதே PJ சுன்னத் ஜமாஅத் என்றால் யார் என்பதை பற்றி பேசாமல் மத்'ஹபை பற்றி தான் பேசினார்.

2006 ஆம் ஆண்டு களியக்காவிளையில் மத்'ஹபு என்று தலைப்பு இடப்பட்டு, அதில் விவாதம் செய்யுங்கள் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டு, அரங்கத்தில் இருக்கும் போது, அரபியில் இருக்கும் மூல நூலை வாசித்து அர்த்தம் செய்யுங்கள் என்று கூறிய போது, இதே PJ தனது வாய் ஜாலத்தால் அது அப்படி, அது இப்படி என்று திசை திருப்பினாரே ஒழிய, விவாதிக்க வில்லை. அரபியில் வாசித்து காட்டவில்லை. சென்னையில் நடந்த விவாதத்தில் மூன்றாம் தலைப்பான தர்ஜுமா என்ற தலைப்பில் மத்'ஹபு என்று தானாக ஒரு கருத்தை திணித்து விவாதிக்க ஆரம்பித்தார். அதே பாணியை பின்பற்றி நான்காம் தலைப்பிலும் மத்'ஹபு களை பற்றி பேசுவேன் என்று கூறாமல் கூறி அதன் உள்ளே நுழைந்தார்.

எந்த தலைப்பில் விவாதம்?

இதற்க்கு முன் ஒரு விஷயத்தை கூற வேண்டிய கட்டாயம் உள்ளது. அதாவது, இந்த விவாதங்கள் நடைபெறுவதற்கு முன் நடந்த கடித போக்குவரத்தில் இந்த போலி களின் சார்பாக வந்த கடிதங்களில் குறிப்பிடப்பட்ட விஷயம் நமக்குள் கருத்து வேறுபாடுள்ள அனைத்து விஷயங்களையும் விவாதிக்க வேண்டும் என்பது தான் அது. அதற்க்கு பதில் அனுப்பிய சுன்னத் ஜமாஅத் தரப்பு, அனைத்து விஷயங்களையும் விவாதிக்கலாம் ஆனால் தற்போது இந்த தலைப்பு என்று கூறி தான் சென்னையில் நடந்த நான்கு தலைப்பும் கொடுக்கப்பட்டு அதன் படி விவாதம் அமைக்கப்பட்டது. சந்தேகம் இருந்தால் PJ வின் இணைய தளத்திலேயே இந்த கடித நகல் உள்ளது. பார்த்து கொள்ளலாம். இந்த விவாதத்தால் பிரோஜனம் என்ன வென்று பார்த்தல், போலி தவ்ஹீதிடம் எந்த ஆதாரமும் இல்லை என்பது படம் பிடித்து காட்டப்பட்டது தான்.

அனைத்து கருத்து வேறுபாடு உள்ள விஷயங்களை பற்றி பேச வேண்டும் என்று கூறி விட்டு ஏன் எப்போதும் இதே மத்'ஹபை பற்றி இவர்கள் பேசுகின்றார்கள்? இப்படி தலைப்பை மாற்றி பேசினால் தான் சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்தத்திற்கு மாற்றமான நிலையில் பதில் சொல்ல மாட்டார்கள். அதை வைத்து தான் வெற்றி பெற்று விட்டோம் என்று பாமரர்களுக்கு காட்டி விடலாம் என்ற ஒரு அசட்டு தைரியம் தான். ஆனால் உண்மையான முறையில் குர்'ஆனையும் ஹதீசையும் இமாம்களின் உதவிகளோடு பின் பற்றி வருகின்ற உலக முஸ்லிம்கள் இவர்களின் அறியாமையையும், திருகுஜாலத்தையும், அநியாயத்தையும், மனோ இச்சையையும் பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து இப்படியுமா மார்கத்தில் விளையாடுவார்கள் என்று கூறும் காட்சியை பார்க்கின்றோம்.

அனைவரும் குர்'ஆன் ஹதீஸை விளங்க முடியாது PJ வின் ஒப்புதல் வாக்கு மூலம்:

அனைவரும் குர்'ஆன் ஹதீஸை பின் பற்ற முடியும் என்று கூறி கொண்டிருந்தவர்கள், ஜமாலி அவர்கள் வாரிசுரிமை சட்டம் பற்றிய மூன்று வசனங்களை வாசித்து, வசனத்திற்கு நீங்கள் (PJ) அர்த்தம் செய்யுங்கள், அதன் மூலம் ஒரு கேள்வியை உங்கள் தரப்பினரிடம் இருந்து நான் விளக்கம் கேட்கின்றேன் என்று கூறிய போது, இல்லை அது அனைத்தும் (அந்த தரப்பின் ஆலிம்கள் உட்பட) அனைவருக்கும் புரியாது என்று ஒப்புதல் வாக்குமூலத்தை அந்த அரங்கத்திலேயே அல்லாஹ் அந்த PJ வே அறியாமல் PJ வின் வாயில் கொண்டு வந்தானே! அவனது மகத்துவத்தை என்ன வென்பது. இந்த ஒன்றிலிருந்தே, அவர்களின் முழு வாதங்களும் அடிபட்டு போய் விட்டதை தான் பார்க்கின்றோம்.

குர்'ஆன் ஹதீஸை யார் விளக்க வேண்டும்:

விவாதத்தை துவக்கிய PJ அல்லாஹ் குர்'ஆனை மக்கள் விளங்குவதற்காகவே தந்துள்ளான், என்று கூறி விட்ட அடுத்த வார்த்தையே நபிகளாரை அந்த குர்'ஆனை விளக்குவதற்காக தான் அனுப்பினான் என்ற வார்த்தையை கூறுகின்றார். எல்லோரும் குர்'ஆனை விளங்கி விடுவார்கள் என்றிருந்தால் எதற்கு நபிகளாரின் விளக்கம் (அதனால் தானோ என்னவோ நபிகளாரின் பலமான ஹதீஸை கூட இவர்கள் புறம் தள்ள ஆரம்பித்து விட்டார்கள்).

அல்லாஹ்விற்கும் ரசூலிர்க்கும் விளக்கத்தெரியவில்லையா? அப்படி இருக்கும் போது இந்த இமாம்கள் எதற்கு என்று கேட்கின்றார்கள். இமாம்களின் கருத்து தேவை இல்லை என்று கூறியவர்கள், எதற்கு விளக்கவுரை என்று மொழி பெயர்ப்பை செய்தார்கள். அப்படியானால் அல்லாஹ் விளக்கவில்லையா? என்று நமது தரப்பு கேள்வி வைத்ததற்கு பதில் என் கூறவில்லை?

ஹதீஸ்களை முழுமையாக இவர்கள் படித்து இருந்தால் இந்த கேள்வியே வந்திருக்காது. காரணம் நபிகள் நாயகம் ஸல்... அவர்களிடம் ஒரு பெண்மணி மாதவிடாய் பற்றி கேட்கின்றார்கள். அப்போது நபிகள் ஸல்... அவர்கள் விளக்கினார்கள். ஆனால் அந்த பெண்மணிக்கு புரியவில்லை. ஆயிஷா இதை விளக்கி கூறு என்று நபிகள் ஸல்... அவர்கள் கூற, அன்னை ஆயிஷா ரழி... அவர்கள் விளக்குகின்றார்கள்.

இந்த ஹதீஸை புரிந்தாலே, நபிகளாரின் சொல் அனைவருக்கும் புரிந்து விடாது. ஞானவான்களுக்கு தான் புரியும். அந்த ஞானவான்கள் தான் இமாம்கள் என்பதும், அவர்களின் விளக்கம் இந்த மறை மண்டைகளுக்கு தேவை என்பதும் புரியும்.

லைலத்துல் கத்ரு எப்போது?

மேலும் லைலத்துல் கத்ரு என்பது வருடம் முழுதும் வருகின்றது என்று இமாம் அபூ ஹனிபா ரழி... அவர்களும், இமாம் இப்னு அரபி ரழி... அவர்களும் கூறியதாக கூறினார். இது தலைப்பிற்கு சம்பந்தம் இல்லை என்றாலும் கூட ஜமாலி அவர்கள் ரமழானிலும் வருவதாக தான் இந்த இமாம்கள் கூறியுள்ளார்கள் அதனால் இந்த விஷயம் ஒன்றும் பெரிய பிரச்சனையான விஷயம் இல்லை என்று கூறினார்கள். இந்த PJ அல்லாஹ் குர்'ஆனில் லைலத்துல் கத்ரு ரமழானில் தான் வருகின்றது என்று கூறியுள்ளான் என்று கூறினார். அப்படி நேரிடையான வாசகம் குர்ஆனில் இல்லை. இரு வேறு வசனம், அதாவது நிச்சயமாக நாம் லைலத்துல் கத்ரில் குர்'ஆனை இறக்கினோம் என்று ஒரு வசனமும், ரமழான் மாதத்தில் குர்'ஆனை இறக்கினோம் என்று ஒரு வசனமும் காட்டி இரண்டும் ஒன்று என்று கூறினார். அது எப்பிடி ஒன்றாகும். இரண்டும் வெவ்வேறு என்பது தான் உண்மையாகும்.

மேலும் லைலத்து கத்ரு என்று மூன்று முறை அந்த சூராவில் வருகின்றது. அந்த லைலத்து கத்ரு என்பது ஒன்பது வார்த்தைகள் கொண்டது. (3 * 9 = 27) என்று இருப்பதாகவும் கூறினார். (27 இல் தான் லைலத்துல் கத்ரு என்று ஹதீஸ்கள் இருக்கின்றது என்பது வேறு விஷயம்). இருப்பினும், அல்லாஹ் குர்'ஆனில் அனைத்திற்கும் தீர்வு வைத்துள்ளான். அதனால் இப்படியாக இருக்க கூடும் என்பது ஆய்வு.

யார் உள்ளம் பிரகாசிக்கும்?

மேலும் இமாம் கஜ்ஜாலி ரழி... அவர்களின் உள்ளத்தை பிரகாசிக்க செய்ததை போல எங்களுக்கும் பிரகாசிக்க செய்வாயாக என்று அல்லாஹ்விடம் கேட்கும் துஆவின் அரபி வாசகத்தை தமிழில் கூறும் போது இருள் அடைய செய்ததை போல என்று திருத்தி அர்த்தம் கொடுத்து, அதனால் தான் இவர்கள் இருளடைந்து போய் உள்ளார்கள் என்று கூறியதன் மூலம், இவர்களுக்கு அரபியே தெரியாது என்பதும் நன்றாக விளங்குகின்றது. இப்படி இவர்கள் துஆ செய்யாததினால் தான் இவர்களின் (போலி தவ்ஹீத் வாதிகளின்) உள்ளத்தில் பிரகாசம் இல்லை என்று ஜமாலி அவர்கள் பதில் கூற கப்சிப் என்று வாய் பொத்திக்கொண்டார்கள்.

இஸ்லாமிய முறைப்படி விவாதம்:

ஜமாலி ஹழ்ரத் அவர்கள் பதில் கூறும் விதமாக விவாதத்தை துவங்கினார்கள். இஸ்லாமிய முறைப்படி சலாம் சொல்லப்பட்டு, அல்லாஹ்வை புகழ்ந்து, நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீது சலவாத்து கூறிய பின்பு வாதம் எடுத்து வைத்தார்கள். அனைத்து வசனங்களுக்கும், அனைத்து ஹதீஸ்களுக்கும் இமாம்களின் உதவி தேவை இல்லை. சில வசனங்களும், சில ஹதீஸ்களும், இமாம்களின் உதவி இல்லாமல் புரிய முடியாது என்பது தான் நிலைப்பாடு என்று கூறினார்கள்.

விவாதம் எப்பிடி இருக்க வேண்டும்:

இமாம்களின் அந்த கிதாபில் அப்படி இருக்கின்றது என்று கூறாமல், தங்களின் கருத்தை மட்டும் தான் கூற வேண்டும். மேலும் மறைமுகமாக இமாம்களின் கருத்தை படித்து விட்டு, அது உங்களது கருத்து போல கூற கூடாது என்று விவாதிப்பவருக்கும், அவருக்கு உறுதுணையாக இருப்பவருக்கும் அல்லாஹ்வை சாட்சியாக்கிககொள்கின்றேன் என்று கூறினார்கள். மேலும் அல்லாஹ்வே தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறுகின்றான்.

அல்லாஹ் யாரிடம் கேட்க சொல்கின்றான்:

فاسئل اهل الذكر ان كنتم لا تعلمون

இதற்க்கு பதில் அளித்த PJ இது நபிமார்களில் பெண்கள் வரவில்லை, ஆண்கள் தான் வந்தார்கள் என்று தெரியாதவர்கள், தெரிந்தவர்களிடத்தில் கேளுங்கள் என்று கூறிய வசனம் என்று கூறினார். அதற்க்கு பதில் கூறிய ஜமாலி ஹழ்ரத் அவர்கள், அனைத்து சட்டங்களுக்கும் இப்படி தான் பொருந்துமா? வாரிசுரிமை சட்டத்திற்கும் இப்படி தான், யாருக்கு சொல்லப்பட்டதோ அவர்களுக்கு தான் என்று விளங்க வேண்டுமா என்று கூறிய போது வாய் மூடி மௌனி ஆகி விட்டார்.

மேலும் ஜமாலி ஹழ்ரத் அவர்கள், எதிர் தரப்பும், அவர்களில் தெரிந்தவர் என்று கருதி கொண்டிருக்கும் நபரின் விளக்கத்தை தான் பின் பற்றுகின்றார்கள். ஆனால் அவர்களுக்கும் புரியாது என்பது நமது நிலைப்பாடு என்று கூறினார்கள். அல்லாஹ் குர்ஆனில் லைலத்துல் கத்ரில் குர்'ஆனை இறக்கி விட்டோம் என்று கூறுகின்றான். அப்படியானால் முழுதும் இறக்கினானா? சிலவற்றை இறக்கினானா என்பதற்கு PJ பகுதியாக இறங்கினாலும் அது குர்'ஆன் என்று கூறினார் (பின் ஏன் பாத்திஹா சூராவை மட்டும் கிண்டல் அடிக்கின்றார்கள் என்று தெரியவில்லை. நேர் வழியை அந்த சூரா உள்ளடக்கியதாக உள்ளதாலோ, என்னவோ?)

வாரிசுரிமை சட்டத்தின் உண்மை நிலை:

மேலும் வாரிசுரிமை பற்றி அல்லாஹ் கூறும் போது, இறந்து போனவர்களின் தாய்க்கு மூன்றில் ஒன்றை கொடுக்க வேண்டும் என்று கூறுகின்றான். ஒரு மையித்திற்கு தாய் தந்தை, கணவர் இருந்தால் எப்பிடி பிரித்து தரவேண்டும். தாய்க்கு பங்கு தாரர்களுக்கு போக, மூன்றில் ஒரு பங்கு என்று இமாம்கள் கூறி இருக்கின்றார்கள் இதற்க்கு உங்கள் சட்டம் என்ன? என்ற கேள்விக்கு பதில் தாய்க்கு, தந்தையை விட அதிகம் தர வேண்டும் என்ற இஸ்லாத்தில் இல்லாத புது கருத்தை திணித்தார். தாய்க்கு அதிகம் தரவேண்டும் என்று கூறியதன் மூலம் அல்லாஹ்விற்கு எதிராக யுத்தம் செய்துள்ளார். தந்தைக்கு தான் பொறுப்பு அதிகம். அதனால் தான் தரவேண்டும். எல்லா இமாம்களும் இந்த சட்டத்தை தான் கூறி உள்ளார்கள். தனக்கு தெரியாததால் கலாலா சட்டமே மாற்றப்பட்டு விட்டது என்று கூறியவர்கள் தானே இவர்கள். அதனால் இப்படி தான் கூறுவார்கள் என்று கூறியும், கலாலா விஷயத்தை விளக்க வேண்டும் என்றதற்கு மூன்றாவது மற்றும் நான்காவது ஆகிய இரு விவாதம் முழுதிலும் பதில் இல்லை.

ஈலாவின் சட்டம் என்ன:

ஒருவர் தன் மனைவியை கோபத்தில், சத்தியமாக உடல் உறவு கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றான். 4 மாதத்தில் அதை வாபஸ் வாங்க வேண்டும். அப்படி வாபஸ் வாங்கவில்லை என்றால் தலாக் விழுமா? அல்லது தலாக் கூற வேண்டுமா? அப்படி தலாக் ஆனால் வாபஸ் வாங்கும் தலாக்கா? வாபஸ் வாங்க முடியாத தலாக்கா? ஈலாவில் நான்கு மாதம் முடிந்து விட்டால் தலாக் கொடுக்க உறுதி கொண்டு விட்டால், வாபசும் வாங்கவில்லை, தலாகும் கொடுக்க வில்லை. இப்போ என்ன தலாக் ஆகிவிட்டதா? இல்லை தலாக் கொடுக்கனுமா? என்று கேட்டதற்கும் பதில் இல்லை. ஒருவர் தன் மனைவியை உடல் ரீதியான காரணத்தால், சத்தியமாக உடல் உறவு கொள்ள மாட்டேன் என்று கூறுகின்றான் என்றால் இவனின் நிலை என்ன வென்று விளக்கவும் என்றதற்கும் மௌனமே பதிலாக வந்தது.

இமாம் என்றால் யார்? எந்த இமாமிடம் கேட்க வேண்டும்:

சஹாபா பெருமக்கள் எந்த இமாமிடத்தில் கேட்டார்கள், நபிகளார் இருந்தார்களே என்று PJ வினவ, அதற்க்கு பதில் கூறிய ஜமாலி ஹழ்ரத் அவர்கள், நபிகளார் ஸல்... அவர்கள் இருந்தால் அவர்களிடம் கேட்பார்கள். அவர்களை விட பெரிய இமாம் தேவை இல்லை. நபிகளார் ஸல்... அவர்கள் இல்லாத போது, அவர்களில் தெரிந்த சஹாபாக்களிடம் கேட்டார்கள். அன்னை ஆயிஷா ரழி... ஹழ்ரத் இப்னு உமர் ரழி... ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி..., ஹழ்ரத் இப்னு மஸ்ஊத் ரழி... ஆகியோரிடம் கேட்டார்கள். மேலும், யுத்தக்குழு, பிரயானக்குழு செல்லும் போது அதில் தெரிந்தவர்களிடம் கேட்டார்கள். மூத்தா போர் களத்தில் சஹாபாக்களை ஹழ்ரத் காலித் பின் வலீத் ரழி... அவர்களை படை தளபதியாக நியமித்தார்கள். நபிகளார் கூறாமலே எப்பிடி நியமிக்க முடிந்தது. ஹழ்ரத் முஆத் பின் ஜபல் ரழி... அவர்கள் யமன் தேசத்திற்கு செல்லும் போது குர்'ஆனின் தீர்ப்பு தருவேன், அதில் பெற்றுக்கொள்ளவில்லை எனில் ஹதீஸில் இருந்து தீர்ப்பு வழங்குவேன், அதிலும் பெற்றுக்கொள்ளவில்லை எனில் ஆய்வு செய்து சட்டம் சொல்லுவேன் என்று பெருமானார் ஸல்... அவர்களிடம் கூறினார்கள். இதை வைத்து ஹழ்ரத் முஆது பின் ஜபல் ரழி... அவர்களிடம் யமன் தேசத்தில் உள்ளவர்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள் என்று ஜமாலி ஹழ்ரத் கூறிய போது PJ முகத்தில் ஈயாடவில்லை. முகம் வெளிறிப்போய் விட்டது.

இமாம்களின் விளக்கத்திற்கு PJ விளக்கம் தர வேண்டும் என்பதா தலைப்பு?

ஜமாலி ஹழ்ரத் அவர்கள் சட்டத்தை முன் வைத்து இதற்கு நீங்கள் எப்பிடி இமாம்களின் உதவி இல்லாமல் புரிந்தீர்கள் என்று கேட்ட போது, உங்கள் இமாம்கள் எப்பிடி விளக்கி உள்ளார்கள் என்று நீங்கள் விளக்குங்கள் அதில் இருந்து நான் பதில் சொல்வேன் என்று வேறு ஒரு ரூட் ன் பக்கம் போகலானார் PJ. கலாலா விற்கு இமாம்கள் கூறிய விளக்கம், கலாலா என்பது குழந்தையும் இல்லை, தந்தையும் இல்லை. இதற்கு பதில் தாருங்கள். உங்கள் தப்சீரில் எழுதியதி போன்று கலாலாவின் சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்றாவது சொல்லுங்கள். உங்கள் தப்சீரில் குழந்தை இல்லாதவர்கள் தான் கலாலா என்று எழுதியுள்ளீர்கள். அதையாவது பதிலாக தாருங்கள். நீண்ட நேரம் (இரு விவாதங்களில்) மௌனத்தை பதிலாக தந்தவர், இமாம்களின் வழியில் பதில் கூறினார். இது அவரின் முந்தைய நிலைப்பாடான (சந்ததி இல்லாமல் சகோதர சகோதரிகளை விட்டு செல்பவர்) என்பதற்கு மாற்றம். மேலும் இந்த விஷயம் அபுஜஹலிற்கு கூட (குர்'ஆனும் ஹதீசும்) தெரியும் என்று சொன்னார்களே, ஏன் இவ்ளோ நாள் அதை மறுத்து வந்தார்கள். தற்போது இமாம்களின் வழிக்கு வந்தார்கள் அது வரை சந்தோசம் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கூறிய போது அவர்களின் முகத்தில் அசடு வழிந்தது. இதன் மூலமும் இமாம்களின் விளக்கம் தான் சரி என்பது நிரூபணம் ஆனது.

ஹஜ்ஜின் மாதங்களில் தோற்ற PJ யின் ஒப்புதல் வாக்கு மூலம்:

ஹஜ்ஜுடைய மாதங்கள் எல்லோரும் அறிந்த சில குறிப்பிட்ட மாதங்கள் என்று கூறுகின்றான். எந்த மாதங்கள் என்று குரானிலும் இல்லை. நபிகளாரும் கூறவில்லை. எப்பிடி கூறுகின்றீர்கள் என்ற கேள்விக்கும் பதில் சஹாபாக்கள் அறிந்து இருந்தார்கள் என்று தான் பதில் வந்தது. ஆக இமாம்களை தான் பின்பற்றுகின்றார்கள். ஆக குர்'ஆனிலும் ஹதீஸிலும் இல்லை என்று மறைமுகமாக கூறினார். சஹாபா பெருமக்களின் கூற்றுக்களை பின்பற்றலாமா? என்று கேட்ட கேள்விக்கும் (என்னயா நா பேசினாலும் வம்பா இருக்கு, மௌனமா இருந்தாலும் வம்பா இருக்கு! விட மாற்றாங்களே? என்ற ரீதியில் ) மௌனமே பதிலாக வந்தது.

அல்லாஹ் அதிகப்படியான வார்த்தையை உபயோகிப்பானா?

لا اقسم بهذا البلد

அல்லாஹ் இந்த ஊரின் மீது சத்தியம் செய்கின்றேன் என்று கூறுகின்றான். இது இமாம்களின் விளக்கம். நீங்கள் என்ன அர்த்தம் செய்கின்றீர்கள். சத்தியம் செய்ய வில்லை என்று தானே நேரடி அர்த்தம் அப்படி கொடுப்பீர்களா? இமாம்களின் கருத்துக்களை வைத்து தான் நீங்கள் மொழி பெயர்ப்பு செய்கின்றீர்கள். இல்லை என்றால் எப்பிடி லா விற்கு அர்த்தம் தராமல் மொழியாக்கம் செய்தீர்கள் என்று கேட்டதற்கு நீண்ட நேரம் மௌனத்தை பதிலாக தந்தவர் பிறகு அரபி இலக்கணம் அப்படி தான் என்று பூசி மெழுகி நான் தோற்று போய் விட்டேன் என்று படம் பிடித்து காட்டினார்.

அல்லாஹ்வை எப்பிடி புரிய வேண்டும்:

அல்லாஹ் ஆகு என்று கூறினால் ஆகிவிடும். என்ற வசனத்திற்கு இமாம் கஜ்ஜாலி ரழி... அவர்கள் மனிதன் விஷயத்தில் இணைக்கும் போது இது சாத்தியமே இல்லை. காரணம், பொருள் உருவாவதற்கு முன் பேசுவது (மனிதன் விஷயத்தில்) சாத்தியம் இல்லாதது. இல்லாத ஒன்று உரையாடலை விளங்காது. இருக்கும் பொருளை ஆகு என்று கூற முடியுமா? அது தான் முதலிலேயே ஆகி விட்டதே, ஆகி விட்ட பொருளை எப்பிடி மீண்டும் ஆகு என்று கூற முடியும். அதனால் இந்த வசனத்தின் மூலம் அல்லாஹ்வின் சக்தியை புரிந்து கொள்ள வேண்டும் என்ற இமாம் அவர்களின் விளக்கத்தை கிண்டல் அடித்த PJ, அல்லாஹ் கற்பனையாகவும் பேசுவான். இது மனிதன் விஷயத்தில் பொருத்தி பார்க்க கூடாது. காரணம் அல்லாஹ் உண்ணவில்லை. நாம் உன்ன மாட்டோம் என்று கூறுவது சரியா? என்று கேட்டார்! இதற்க்கு பதில் அளித்த ஜமாலி ஹழ்ரத் அவர்கள் நாம் பொய் சொல்கின்றோம், அல்லாஹ்வும் பொய் சொல்வான் என்றா கூறுவது. நம்மை கவனித்து தான் பேசுவது முறை. அல்லாஹ்வின் சக்தி உண்டா இல்லையா? என்று கேட்ட போது பொறியில் சிக்கிய எலியாய் முழித்தார்.

சொத்து பிரச்சனையில் இமாம்களின் தீர்வு ஜெய்த்தது - PJ வின் ஒப்புதல்:

அல்லாஹ் கூறியதை அப்படியே தான் பின் பற்ற வேண்டும் என்று கூறுபவர்கள், இந்த வசனத்திற்கு என்ன விளக்கம் என்று கூறவேண்டும். என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் ஒரு கணக்கை கேட்டார்கள். ஒரு மையத்திற்கு மனைவி, இரு மகள், ஒரு தாய், ஒரு தந்தை. குர்'ஆனின் சட்டப்படி மனைவிக்கு எட்டில் ஒன்று, மகளுக்கு மூன்றில் இரண்டு, தாய் தந்தைக்கு ஆறில் ஒன்று. இதில் எட்டில் ஒன்று தர முடியுமா? அதில் விளக்கம் தானே இவர்கள் தருகின்றார்கள் என்று கேட்ட போது அல்லாஹ் இப்படி கூறி இருந்தாலும் இப்படி பிரித்து கொடுக்க முடியாது என்பதை ஒத்துக்கொண்டார். இதன் மூலமும் இமாம்களின் விளக்கம் தேவை என்ற வாதம் ஜெய்த்தது.

குர்'ஆன் வசனத்திற்கு விளக்கம் தர இயலாமை:

கனீமத் பொருள் கிடைத்தால், அல்லாஹ்விற்கு ஐந்தில் ஒன்று தரவேண்டும். மேலும் மற்றவற்றில் அல்லாஹ்வின் ரசூலிற்கும், உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், வழிப்போக்கர்கள் ஏழைகளுக்கும் கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அல்லாஹ்விற்கு கொடுப்பதை எப்பிடி புரிகின்றார்கள். என்று கேட்டார்கள், மேலும் அல்லாஹ் தன்னை ஒரு இடத்தில் அஹத் என்றும், மற்றொரு இடத்தில் வாஹித் என்றும் கூறுகின்றானே, ஏன்? அதற்க்கு ஒரே அர்த்தமா? இல்லை வித்தியாசம் உள்ளதா? என்றும் கேட்கப்பட்டது. அனைத்திற்கும் பூசி மெழுகளும், மௌனமும், திசை திருப்பலும் தான் பதிலாக கிடைத்தது. மேலும் கனீமத் அல்லாஹ்விற்கு தாருங்கள் என்று சொன்னாலும் அது ஏழைகளை தான் குறிக்கும் என்று கூறினார். அப்படியானால் ஏன் அந்த வசனத்தில் ஏழைக்கும் கொடுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்டதற்கும் மௌனம் தோற்றுவிட்டதற்கு சம்மதம் என்ற ரீதியில் இருந்தார்கள்..

மேலும் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் குரானையும் ஹதீசையும் விளங்க இமாம்கள் சொல் தேவை இல்லை என்று ஒப்பந்தம் போட்டு விட்டு, நீங்க இமாம்களின் விளக்கம் தாருங்கள் நான் அதில் விளக்குவேன் என்று PJ கூறினால், இமாம்களின் விளக்கத்திற்கு விளக்கம் என்பதா தலைப்பு? என்று கேட்டார்கள், இருந்தும் இவர்கள் திருந்த வில்லை. கலாலா விஷயம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுகின்றார்கள் 1400 ஆண்டுகளாக யாரும் கூறாத கருத்து. அந்த சட்டத்தில் தாய் வழி சகோதரிக்கு பங்கே கொடுக்கவில்லை. ஏன் என்று கேட்டால் தாய் வழி சகோதரி எங்கு வருகின்றார்கள் என்று நீங்கள் கூறுங்கள் என்று கூறுகின்றார். மாற்றப்பட்டதற்கு நீங்கள் ஆதாரம் தாருங்கள் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்க அதற்கும் மௌனமே பதிலாக வந்தது.

இமாம்களின் உதவி உறுதியாக தேவை - PJ வாக்குமூலம்:

அத்தஹியாத் அமர்வில் 53 ஐ போல வைக்க வேண்டும் (முஸ்லிம்). இதை எப்பிடி புரிந்து கொண்டீர்கள் என்று கேட்கப்பட்டது. அதை ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்களின் விளக்கத்தில் நின்றும் புரிந்து கொண்டோம் என்று கூறியதில் இருந்தும் சுன்னத் ஜமாத்தின் நிலைப்பாடு சத்தியம் என்று எடுத்துக்காட்டப்பட்டது. மேலும் அல்லாஹ் குர்ஆனில் பஜ்ர் நேரத்தின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக. என்று கூறுகின்றான். பத்து இரவு எது? அதை எப்பிடி புரிந்து கொண்டீர்கள். கேட்ட கேள்விக்கு பதிலே வரவில்லை.

வளர்ப்பு மகனின் மனைவியை நபிகள் நாயகம் ஸல்... ஏன் மணம் முடித்தார்கள்:

இந்த நேரத்தில் நபிகளார் ஸல்... அவர்கள் மீதும், தப்சீரின் இமாம்கள் மீதும் இட்டுக்கட்ட ஆரம்பித்தார்கள். அதாவது, ஜைனப் பின்த் ஜஹஷ் ரழி... அவர்களை பார்த்து அவர்களை அடைய வேண்டும் என்று எண்ணம் நபி ஸல்... அவர்களுக்கு வந்தது. அவர்களின் வீட்டில் முடியால் ஆனா திரை இருந்தது, காற்று அந்த திரையை அகற்றியது. அப்போது பார்த்து (மற்றவரின் மனைவியை) அடைய வேண்டும் என்ற எண்ணம் வந்தது. என்று தப்சீரில் கூறப்பட்டதாக கூறினார். அதற்க்கு பதில் கூறிய ஜமாலி அவர்கள் சென்ற தலைப்பில் தப்சீரில் என்ன பிரச்சனையை இருக்கின்றது என்று கேட்கப்பட்ட போது மௌனத்தை பதிலாக தந்த இவர்கள், தற்போது தப்சீரை இமாம்களின் விளக்கம் முட்டுக்கட்டை என்று கூற ஆரம்பித்துள்ளார்கள். பல பேர் எங்க தப்சீரில் ஒன்றும் பேசவில்லை என்று கேட்டு இருப்பார்கள். அதனால் தப்சீரை திறந்துள்ளார்கள். இது ஒப்பந்தத்திற்கு மாற்றமானது. என்றாலும் பதிலை கூறினார்கள்.

எந்த நபிமார்களை பற்றியும் தப்சீரிலோ, வேறு கிதாப் களிலோ, தவறாக எழுதப்பட்டிருந்தால் புறம் தள்ளப்பட வேண்டும் என்பது நமது நிலைப்பாடு, ஆனால் இதை எல்லாம் பதிவுக்காக எழுதப்பட்டது என்பதை மூன்றாம் விவாதத்தில் யூசுப் அலை... அவர்களின் விஷயத்திலேயே கூறப்பட்டு விட்டது. இமாம்கள் இதை ஆதரிக்கவில்லை. ஆதரித்தார்கள் என்று கூறினால், அந்த வாசகத்தை காட்ட வேண்டும். இப்படி எல்லாம் கருத்து இருக்கின்றது என்று தான் பதிவு செய்யப்பட்டது. வளர்ப்பு மகனின் மனைவியாக இருந்தவர்களை எப்பிடி திருமணம் முடிப்பது என்பதில் தான் தயங்கினார்கள். ஏன் மற்றவர்களை பயப்படு கின்றீர்கள், பயப்பட தேவை இல்லை என்றும், திருமணம் முடியுங்கள் என்றும் அல்லாஹ் அனுமதி தந்தான். இதை தான் அல்லாஹ் நான் திருமணம் முடித்து வைத்ததாக கூறுகின்றான்.

மேலும் இந்த விவாதத்தின் தலைப்பு குரான் ஹதீஸை இமாம்களின் உதவி இல்லாமல் புரிய முடியாது. இதில் தப்சீரில் உள்ள குறைபாடு என்று கூறி கொண்டு செல்கின்றார்கள், சென்ற தலைப்பு தப்சீர் அதில் காட்ட முடியவில்லை. அதே போல் களியக்கவிலையில் மத்'ஹபில் உள்ள வாசகத்தை காட்ட சொல்லி இருக்க, சென்ற தலைப்பில் மத்ஹபை பற்றி பேசினார்கள். தப்சீரில் பதிவு என்பது, அந்த காலத்தில் இருந்த கருத்துக்கள் என்று கூரியதை இவர்கள் மறுத்தார்கள். ஆனால் அதே தப்சீர் பகவியில், சனத் அடிப்படையில் பார்த்தால் இப்படி பட்ட சம்பவங்கள் எல்லாம் பலவீனமானது, நபிகள் நாயகம் ஸல்... அவர்களின், பண்புக்கும், மாண்பிற்கும், மகத்துவத்திற்கும் இது முரண்பாடானவை. இன்னும் அடுக்கி கொண்டு செல்கின்றார்கள். சில தப்சீர்களில் விளக்கமாக எழுதுவார்கள். சிலதில் சுருக்கமாக எழுதுவார்கள். இதை எந்த இமாமும் ஆதரிக்கவில்லை. மேலும் ராஜி இமாம் அவர்கள் தப்சீரில், இந்த சம்பவத்தை குறிப்பிடும் போது, இது நபிகளாரின் இச்சையை தணிப்பது நோக்கமல்ல. மாறாக, இதன் மூலம் அந்த காலத்தில் வளர்ப்பு மகனின் மனைவியை திருமணம் முடிக்க கூடாது என்றிருந்த சட்டத்தை மாற்றுவதற்காக தான் ஏற்படுத்தப்பட்டது என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் இடி போல உண்மையை உடைக்க அங்கிருந்த நியாயவான்கள் இத்தூய பாலை அள்ளி பருகின்றார்கள். இந்த கூமுட்டைகள், நாற்றமெடுத்த சாக்கடையின் பக்கம் திரிந்தார்கள்.

முரண்பாடான சட்டங்களின் நிலை:

மேலும் இவர்கள் கருத்து வேறுபாடு உள்ள பல சட்டங்களை எடுத்து வைத்தார்கள். நாடு தொழுகை அசர் என்று புகாரியில் வருகின்றது என்று கூறினார்கள் (திர்மிதியில் ஐந்து தொழுகையும் நடு தொழுகை என்று வருகின்றதே PJ அதை படிக்கலியா நீங்க? இல்லை வழக்கம் போல் இனிமேல் தான் படிப்பீர்களா?)

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்ய கூடாது. (அபூதாவூது) என்று ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒரு சஹாபியை நோக்கி உன் தந்தை மீது சத்தியமாக என்று கூறியுள்ளார்களே இதற்கு விளக்கம் என்ன என்று கேட்ட போது? (சின்ன பயலே, இத்தனை விஷயத்திற்கும் நான் பதிலா கூறிவிட்டேன் இதற்கு நான் பதில் கூற, போயா போய் வேற வேலைய, வேற ஆளை பாரு) என்ற ரீதியில் மௌனத்தை கடைபிடித்தார் இந்த PJ.

தீன் என்பதற்கும் ஜைத்தூன் என்பதற்கும், பொருளை கூறி பகுதியை நாடும் மஜாசி என்னும் அரபி களை சம்பந்தப்பட்டது என்று கூறிய போது மீண்டும் அதை தோண்டி எடுக்க பார்த்து கீழே விழுந்து அமுங்கி போனார் இந்த PJ.

கருத்து வேறுபாடு உள்ள பல மஸ்அலாக்களை இவர்கள் எடுத்து வைத்தார்கள். இது தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாதது. குரான் ஹதீஸை மட்டும் பின்பற்றுபவர்கள் கூட கருத்து வேறுபாடுகளை பல வசனங்களுக்கும், ஹதீசிற்கும் வைத்துள்ளார்கள். ஜும்மாவிற்கு சுன்னத் உண்டா இல்லையா இரு கருத்துக்கள், ஜகாத்தின் சட்டத்தில் இரு கருத்துக்கள், தற்கொலை செய்து கொண்டால் தொழுக வைப்பதில் இரு கருத்துக்கள், பிறை விஷயத்தில் இரு கருத்துக்கள் என்று மஸாயில் களில் புகுந்து விளையாடி இருக்கின்றார்கள் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கூறிய போது, ஹ்ம்ம்ம்...... எங்களை நீர் பார்க்க கூடாது. நீங்கள் செய்வது மட்டும் தான் பேச வேண்டும் என்ற ரீதியில் பதிலை கூறினார்.

எதை பின் பற்றினால் நேர்வழி:

தப்சீர் சாவியில் நான்கு மத்'ஹபை தவிர வேற பின்பற்றுவது கூடாது. சஹாபாக்களின் கருத்திற்கு ஒத்து இருந்தாலும் சரி, சஹீஹான ஹதீஸிற்கு ஒத்து இருந்தாலும் சரி. ஆயத்திற்கு ஒத்து இருந்தாலும் சரி. பின் பற்றக்கூடாது. நான்கு மத்'ஹபில் இல்லாதவன் வழி கெட்டவன், வழி கெடுப்பவன். நான்கு மத்'ஹபில் இருந்தால் தான் நேர்வழி, குர்'ஆன் ஹதீஸை நேரடியாக பின்பற்றுவது குப்ரின் அடிப்படை என்று PJ குற்றம் சாட்டினார். இதற்க்கு பதில் அளித்த ஜமாலி அவர்கள், அந்த கருத்து உண்மை தான்! சஹாபாக்களின் கருத்துக்கள் இருந்தாலும் ஒத்துக்கொள்வதில்லை, ஸஹிஹ் ஹதீஸை மறுக்கின்றார்கள் இவர்கள். ஹதீஸ் தேவை இல்லை என்கின்றார்கள். முன்னுக்கு பின் முரண்பாடு உள்ளது. ஹதீஸ்களை ஆய்வு செய்யும் பக்குவம் இல்லாமல் இப்பதான் கிடைத்தது என்று கூறி விட்டு அதற்க்கு ஆதாரமாக, இமாம்கள் மாற்றி கூறினார்களே, நாம் சொல்ல கூடாதா? என்று கூறுகின்றார்கள். இமாம்கள் ஒரு கருத்தை கூறி அதை விட வலுவான கருத்து கிடைக்கும் போது மாற்றி கூறுவார்கள். அப்போது ஹதீஸ்கள் அச்சாக இல்லை. அந்த நிலை இப்போது இல்லை. அதனால் அந்த விஷயம் தற்போது பொருந்தாது என்று கூறிய போது, உரலில் இடிக்கப்பட்ட புளியாய் மாறிப்போனார்.

ஹதீஸ்களையும், நபிமார்களையும் கேவலப்படுத்தும் அவலம்:

மேலும் ஹதீஸை மறுப்பது குப்ர் என்று இவர்களும் ஒப்புக்கொள்கின்றார்கள். சாலிம் ரழி... அவர்களின் ஹதீஸை மறுக்கின்றார்கள். யூசுப் அலை... தடுமாற ஆரம்பித்தார்கள் என்று கூறுகின்றார்கள், யூனுஸ் அலை... அல்லாஹ்விற்கு சக்தி இல்லை என்று நினைத்தார்கள் என்று கூறுகின்றார்கள். இது தான் இறை மறுப்பு. தொழுகை விஷயத்தில் (மத்'ஹபை பின்பற்ற வேண்டும் என்று தப்சீர் சாவியில்) கூறப்பட வில்லை. குர்ஆனை ஆய்வு செய்கின்றேன் என்று சொல்லி கொண்டு நபிமார்களை கேவலப்படுத்துகின்றார்கள். உம்மு ஹராம் ரழி... அவர்களின் ஹதீஸ், நபிகள் ஸல்... வந்தார்கள், திண்ணையில் அமர்ந்தார்கள். பேன் பார்த்தார்கள். இப்படி எல்லாம் செய்யலாமா என்று கேட்கின்றீர்கள். இது ஹதீஸை கிண்டல் செய்கின்றீர்கள். இது தான் இறை நிராகரிப்பு என்று நீங்களும் ஒத்துக்கொண்டீர்கள் என்று கூறிய போது உண்மை தவ்ஹீத் வெளிப்பட்டது. போலிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டது.

அமல்கள் அழியும் என்பது என்ன:

யார் முர்தத் ஆகி மரணம் அடைகின்றார்களோ, அவர் செய்த அமல்கள் எல்லாம் அழிந்து போகும் என்று அல்லாஹ் குர்ஆனில் கூறுகின்றான். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறுகின்றார்கள்

, من ترك صلوة العصر فقد حبط عمله

யார் அசர் தொழுகையை விட்டாரோ, அவரது அமல்கள் அழிந்து போகும். (புகாரி). களா தொழுகை வேறு இல்லை என்று கூறுகின்றீர். இந்த கருத்துக்களை எப்பிடி விளங்க முடியும் என்று கேட்டதற்கும் கிடைத்த பதில் மௌனமே. (பிறகு அந்த ஹதீஸை மறுத்தார்கள்)

மூல நூலை தான் ஆதாரமாக தர வேண்டும் என்பது ஒப்பந்த விதி. நாம் புசூசுள் ஹிகம் என்னும் புத்தகத்தின் பிரதியை கேட்டோம், ஆனால் அவர்கள் தந்ததோ, புசூசுள் ஹிகமை பற்றி யாரோ புத்தகம் எழுதியதை தந்துள்ளார்கள். அது, விமர்சனத்தில் நூல். மேலும் எந்த இடத்தில் நீங்கள் பிரச்சனையை எங்கு கண்டீர்கள் என்பதை குறித்து தாருங்கள் என்று ஜமாலி ஹழ்ரத் கூறிய போது அசதி வழிந்து கொண்டிருந்தார்கள்.

ஹதீஸ்கள் விளையாட்டு மைதானம் ஆனது:

ஒரு மனிதர் நான் ஒரு பெண்ணை முத்தம் விட்டு விட்டேன் என்று பெருமானார் ஸல்... அவர்களிடம் கூறுகின்றார்கள். அதற்க்கு பெருமானார் ஸல்... அவர்கள் ஒரு வசனத்தை ஓதி, நல்ல விஷயங்கள் தீமையை அழித்து விடும் (அதனால் நன்மையை செய்) என்று கூறுகின்றார்கள். அப்போது அந்த நபர் இது எனக்கு மட்டுமா என்று கேட்கின்றார்கள். இல்லை எல்லோருக்கும் என்கின்றார்கள் (புகாரி). அதனால் எல்லா மனிதர்களும் இப்படியே முத்தம் இட்டு விட்டு இரண்டு ரக்'அத் தொழுதால் போதுமா?. இப்படி எல்லாம் இருக்குமா அதனால் ஹதீஸை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்றால் சரியாகுமா? என்று கேட்கப்பட்ட போதும் பதில் இல்லை. அதற்காக தான் இமாம்களின் விளக்கம் தேவை என்கின்றோம். ஆளாளுக்கு ஹதீஸை புறம் தள்ள யார் அதிகாரம் வழங்கியது என்று திருப்பி திருப்பி கேட்ட போது, டைசியில் இந்த ஹதீசையும் புறம் தள்ளுகின்றோம் என்று கூறி இந்த உலகத்தில் ஹதீஸை இல்லாத ஒரு நிலையின் பக்கம் தள்ளி, தான் அஹ்லுல் குர்'ஆன், காதியானி, என்று எத்தனை பிரிவிகள் இருக்கின்றதோ, அத்தனையையும் விஞ்சி காபிர் என்ற நிலையில் உயர்ந்தார்.

அபூ ஜஹல் அறிந்த குர்'ஆன், இஸ்லாம்:

லா உக்சிமு என்று வருகின்றதே என்று கேட்ட போது இது அந்த காலத்தின் பழக்கம் இது அல்லாஹ்விற்கும் தெரியும், நபிகள் ஸல்.... அவர்களுக்கும் தெரியும், அபூ ஜஹல்ற்கும் தெரியும் என கூறி, அபூ ஜஹல் குர்'ஆனை முழுமையாக விளங்கியவன் என்று சான்றளிப்பதை போன்று பேசினார். லா என்பது தேவை இல்லை என்பதற்கு ஹிதாயா என்னும் இமாம்களின் நூலை ஆதாரமாகினார். இதுவும் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும். ஆனால் அல்லாஹ் சத்தியம் செய்யும் மற்றொரு இடத்தில் வ அக்சமு பில்லாஹி என்று லா இல்லாமல் கூறுகின்றானே, பின் இங்கு ஏன் அந்த காலத்தின் வழமை கடைபிடிக்கப்படவில்லை என்று கேட்ட போது குப்புற விழுந்து உருண்டார் இந்த PJ.

மேலும் ஒரு சஹாபி வந்தார்கள், அவர்கள் சாப்பிட அமர்ந்து இருக்கும் போது விளக்கை அணைத்தார்கள். இப்படி செய்யலாமா, இது அறிவிற்கு பொருந்துதா என்று கேட்ட போதும் மௌனத்தை பதிலாக தந்தார்கள். பிறகு அந்த ஹதீஸை மறுத்தார்கள்.

الهكم والهم واحد

என்ற இடத்தில் வணக்கத்திற்குரிய இறைவன் என்று எப்பிடி குறிப்பிட்டீர்கள், இது இமாம்களின் விளக்கம் தானே என்று சொன்ன போதும் மௌனமே மிஞ்சியது.

ஒப்புக்கொள்ளுதல்களும் , இட்டுக்கட்டுதல்களும்:

குர்'ஆன் ஹதீஸ் அனைத்தையும் விளங்க முடியுமா என்பது தான். அனைவரும் விளங்க முடியுமா என்பதா தலைப்பு என்று இந்த PJ கேட்டதின் மூலம் அனைவரும் குர்'ஆன் ஹதீஸை சுயமாக விளங்க முடியாது என்பதை ஒப்புதல் வாக்கு மூலம் அளித்தார் இந்த PJ. எந்த விஷயத்திற்காக விவாதம் நடைபெற்றதோ அது முழுமையாக ஒப்புக்கொள்ளப்பட்டு விட்டது.

ஹஜ்ஜின் மாதங்களை நபிகளாரின் விளக்கத்தின் மூலம் தான் தெரியும் என்று எழுதி வைத்துள்ளீர்கள். அந்த ஹதீஸ் எது என்று கேட்கப்பட்டது. அப்படி ஹதீஸே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு, இது அஹ்லுல் குர்'ஆனை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காக பொய்யாக எழுப்பட்டது என்று நிரூபிக்காட்டப்பட்டது.

உம்மு சுலைம் ரழி.... அவர்கள் வீட்டிற்கு நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் செல்வார்கள், அவர்களின் விரிப்பில் படுப்பார்கள். வியர்வை துளிகள் முத்து முத்தாய் இருக்கும். அதை சேர்ப்பார்கள், நபிகளார் ஸல்... என்ன செய்கின்றீர்கள் என்று கேட்டார்கள். இது நறுமணம் உள்ளதாக இருக்கின்றது. எனகளது சிறுவர்களுக்கு பரக்கத்திற்காக உபயோகிப்போம் என்று கூறுவார்கள்,. இது சரி தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் நீங்கள் சரி தான் என்றார்கள் (முஸ்லிம்) இதையும் ஆபாசப்படுத்த போறீங்களா? என்றதற்கும் பதில் இல்லை.

பிர்'அவ்ன் மரணத்தின் போது ஈமான் கொண்டு வந்தான் என்று ஹழ்ரத் இப்னு அரபி ரழி... அவர்கள் எழுதி வைத்துள்ளார்கள். மேலும் அவன் ஈடேற்றம் பெற்றவன் என்று எழுதியுள்ளதாக கூறினார் PJ. அதற்க்கு பதில் அளித்த ஜமாலி அவர்கள், அவன் கடைசி நேரத்தில் ஈமான் கொண்டு வந்தது உண்மை. ஆனால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும் அவன் ஈடேற்றம் பெற்றவன் என்று இமாம் இப்னு அரபி ரழி... அவர்கள் கூறவில்லை. புதூஹாத்துல் மக்கியாவில் பிர்'அவ்ன் ஹாமான் போன்றவர்கள் நிரந்தர நரகில் இருக்கின்றார்கள் என்று எழுதி உள்ளார்கள். மேலும் இவர்கள் எல்லாம் அல்லாஹ் தடுத்த ஒன்றை செய்தார்கள் என்று காட்டி, இவர்கள் இட்டுக்கட்டி முழுமையாக செய்கின்றார்கள் என்று தோலுரித்தார்கள்.

நபிகளாரை இழிவுபடுத்தும் அவலம்:

உம்மு ஹராம் ரழி... அவர்களின் வீட்டிற்கு, அதாவது ஒரு அந்நிய பெண் தனியாக இருக்கும் போது நபிகளார் செல்ல மாட்டார்கள். இது அசிங்கம், ஆபாசம், விபசாரத்திற்கு நெருங்கியது, இது இட்டுக்கட்டப்பட்டுள்ளது, என்று PJ கூறி, இந்த சஹீஹான ஹதீஸை ஏற்கமாட்டோம் என்கின்றார். இதற்க்கு பதில் கூறிய ஜமாலி இவர்கள், இதிலும் முன்னுக்கு பின் முரண் உள்ளது. இதே ஹதீஸை சஹாபா பெருமக்களை காபிர் ஆக்குவதற்காக, ஆதாரமாகி ஏகத்துவத்தில் (பேன் பார்த்தல் என்பதை மட்டும் விட்டு விட்டு) எழுதி இருக்கின்றார்கள். பின் ஏன் இந்த ஹதீஸை ஆதாரமாக்கினார்கள். மேலும் விவாதத்தின் கடைசியில் பேன் பார்ப்பது மட்டும் தான் ஆபாசம் என்பதை கூறினார். (தனியாக ஒரு பேன் இருக்கும் போது போகலாம் என்பதை மறைமுகமாக ஒத்துக்கொண்டார், இதில் விபசாரத்திற்கு நெருக்கம் வரவில்லையா? என்பது தெரியவில்லை. )

உம்மு ஹராம் ரழி... அவர்களின் மடியில் ஸல்... அவர்கள் படுத்தார்கள் என்று ஒரு வார்த்தையை PJ கூறினார். ஹதீஸில் அப்படி ஒரு வார்த்தையை காட்ட வேண்டும் என்று கூறினார்கள் ஜமாலி ஹழ்ரத் அவர்கள். ஏன் என்றால் அப்படி ஒரு வாசகமே ஹதீஸில் இல்லை. குர்ஆனில் ஹழ்ரத் யூசுப் அலை... அவர்கள் ஜுலைகா அலை.... கூறிய விஷயத்தை ஜுலைகா அலை.... அவர்கள் கூறியதாக நீங்கள் உங்கள் தர்ஜுமாவில் எழுதி உள்ளீர்கள். அதற்க்கு ஆதாரம் தரவேண்டும் என்றும் இதை எப்பிடி யூசுப் அலை... அவர்கள் தான் கூறினார்கள் என்றும் புரிந்தீர்கள் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்டும் தரவில்லை (இருந்தால் தானே தருவார்கள்).

யூசுப் அலை... அவர்களும், அவர்களின் ஒரு சகோதரரும் (புன்யாமின்) ஒரு தாரத்து பிள்ளைகள் என்றும், மற்றவரால் அடுத்த தாரத்தின் பிள்ளைகள் என்றும், எந்த குர்'ஆனின் வசனத்தில், எந்த ஹதீஸில் எடுத்தீர்கள், இல்லை இமாம்களின் விளக்கத்தில் எடுத்தீர்களா என்று கேட்டதற்கு பதில் இல்லை.

PJ விற்கு அரபி தெரியுமா:

இவர்களுக்கு அரபியே தெரியாது என்பது தான் உண்மை. காரணம் அபூ தலாயில் என்பதற்கு ஆதாரங்களின் தந்தை என்று பொருள். அதனால் ஆதாரங்களை (புதிதாக) உருவாக்குவார் என்று கூறினார். நபி ஸல்... அவர்கள் ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்களுக்கு அபூ துராப் (மண்ணின் தந்தை) என்று பெயர் கொடுத்தார்கள். அப்படிஎன்றால் இவர்கள் மண்ணை உருவாக்குவார் என்றா பொருள்? அதே போல ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழி... நபிகளார் வைத்த இந்த பெயரிற்கு பூனையின் தந்தை என்று பொருள். அதனால் பூனையை உருவாக்குவார் என்றா கூற முடியும்?

கருணாநிதி மத்'ஹபு:

குர்'ஆனையும், ஹதீசையும் பின்பற்றுவோம் என்று கூறி கொண்டிருந்தவர்கள் உட்கார்ந்திருந்தவர்கள் வருபவர்களுக்கு மரியாதை தருவதற்கு எழுந்து நிற்கலாம என்ற விஷயத்தை கூறும் போது, கருணாநிதி எழுந்தால் நாமும் எழும்பலாம் என்று கூறி கருணாநிதியின் மத்'ஹபை பின்பற்றிவிட்டார்கள்.

தற்கொலை செய்து கொள்பவர் காபிரா:

ஹதீஸை விளங்குவதற்கு, ஆதாரப்பூர்வமானதா, பலவீனமானதா, இட்டுக்கட்டப்பட்டதா என்று தெரிவதற்கும் இமாம்களின் உதவி தேவை. இதுவும் நமக்கு மிகப்பெரிய ஆதாரமாகும். மேலும் ஸாலிம் ரழி...அவர்கள் மார்பில் வாய் வைத்து குடிக்க முடியுமா என்று கேட்டார்கள். அதில் வாய் வைத்து பால் கொடுங்கள் என்று எங்கே இருக்கின்றது அந்த ஹதீஸில், காட்ட வேண்டும் என்று கேட்டும் காட்ட வில்லை. ஒரு ஆள் ஆயுதத்தாலோ, விஷம் குடித்தோ, மலையில் இருந்து குதித்தோ, தற்கொலை செய்தால் அவன் நிரந்தரமாக நரகில் இருப்பான் என்று நபிகளார் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்லிம்) ஆனால் நபிகள் நாயகம் ஸல்... தற்கொலை செய்து கொண்டவருக்கு பாவ மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதை துபைல் பின் அம்ர் ரழி... அவர்கள் கூறுகின்றார்கள், நானும் எனது தோழரும் ஹிஜ்ரத் செய்தோம். எனது நண்பருக்கு சுகவீனம் ஏற்பட்டு அவர் ஆயுதத்தை எடுத்து கையை வெட்டிக்கொண்டார். தற்கொலை செய்து கொண்டார். அவரை கனவில் துபைல் ரழி... பார்க்கின்றார்கள். கையை மட்டும் மறைத்து உள்ளார் அந்த தோழர். ஏன் கையை மறைத்துள்ளீர் என்று கேட்ட போது, நான் ஹிஜ்ரத் செய்ததால் எனது பாவத்தை அல்லாஹ் மன்னித்து விட்டான். ஆனால் கையை வெட்டியதால் இப்படி இருக்கின்றது. இதை நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் யா அல்லாஹ் இவரின் கையை மன்னித்து விடுவாயாக என்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் துஆ செய்தார்கள் (முஸ்லிம்). ஆனால் இவர்கள் மூமினானவர்கள் தற்கொலை செய்தவர்கள் காபிர் என்பதை போல் சித்தரிக்கின்றார்கள். இது நபிவழிக்கு மாற்றம் என்பதும் சுட்டிக்காட்டப்பட்டது. அதற்கும் பதில் இல்லை.

அநாகரீகமான விவாதம்:

சாலிம் ரழி... அவர்கள் சம்பந்தப்பட்டஇந்த ஹதீஸை வாசித்து ஆபாசம் இருக்கின்றதா என்று காட்ட வேண்டும். மேலும் ஒரு சட்டத்தை பற்றி பேசுவதை விட்டு விட்டு, இப்படி உங்கள் வீட்டு பெண்களை இந்த மாதிரியான விஷயங்களை விரும்புவீர்களா என்று கேட்கின்றீர். (பெரியவர்கள் உங்கள் வீட்டு பெண்களின் மார்பில் வாய் வைத்து குடிக்க அனுமதிப்பீர்களா என்று கூறுகின்றீர்) இந்த விவாதம் அநாகரிகமான விவாதம் என்று கூறிய போது அசதி வழிந்தார் இந்த PJ.

கப்ரில் அடக்கம் செய்யும் சட்டம்:

நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மகளார் வபாத் ஆன போது, நபிகளார் ஸல்... அவர்களின் கண்ணில் இருந்து கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. பெருமானார் ஸல்... அவர்கள், யார் கடந்த இரவு மனைவியுடன் சேரவில்லை என்று கேட்டார்கள். அதற்க்கு ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்கள் நான் சேரவில்லை என்று கூறினார்கள். அப்போது பெருமானார் ஸல்... அவர்கள் நீங்கள் கப்ரில் இறங்கி அடக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் என்று ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி). அப்படிஎன்றால் மனைவியுடன் சேராதவர்கள் தான் கப்ரில் இறங்க வேண்டுமா என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்டும் அதற்க்கு பதில் அளிக்க முடியாமல் உருண்டு விழுந்து தோற்றுப்போனார் இந்த PJ.

நபிகளார் மீது இட்டு கட்டுபவனின் நிலை:

மேலும் யார் அசர் தொழுகவில்லையோ அவனது நல்அமல்கள் எல்லாம் அழிந்து போகும் என்று கூறி இருக்கின்றார்கள். இதை பற்றி உங்கள் கருத்து என்ன என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்ட போது. இந்த ஹதீஸை நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறி இருக்க மாட்டார்கள், என்று ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸை இட்டுக்கட்டி, அவதூறு கூறி, பொய்யாக்கி தான் ஒரு காபிர் என்ற நிலைக்கு உயர்ந்தார் இந்த PJ. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், யார் ஒருவன் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டுகின்றானோ, அவன் தனது இடத்தை நரகமாக்கி கொள்ளட்டும் என்று கூறி இருக்கின்றார்கள். அந்த அடிப்படையில் இவர்கள் காபிர்கள், நரகவாதிகள் (காபிர்கள் தான் நரகில் இருப்பார்கள் என்பது இவர்களின் நிலைப்பாடு, அதனால் தான் தற்கொலை செய்பவருக்கு ஜனாஸா தொழ வைப்பதில்லை) என்று மிக சரியாக தெரிகின்றது.

நபிகளார் சில காலம் ஷிர்க் செய்தார்கள் (நவூதுபில்லாஹ்) என்று கூறிய அவலம்:

மேலும் அல்லாஹ்வை தவிர வேறு நபர்களின் மீது சத்தியம் செய்வது ஷிர்க் என்பது அவர்களின் நிலைப்பாடு. இதை பற்றி கேட்ட போது, இதை ஆரம்பத்தில் அனுமதித்தார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் என்று கூறி, ஆரம்பத்தில் ஷிர்க் செய்ய நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒத்துக்கொண்டார்கள் என்று பொருள்பட கூறினார்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் இவ்வுலகில் வந்ததே ஷிர்கை ஒழிக்கத்தான். அப்படி இருக்கும் போது நபிகளாரே ஷிர்க் செய்தார்கள் என்ற பொருள் பட கூறியதன் மூலம் இவர்கள் தான் பக்கா முஷ்ரிக் என்று ஒத்துக்கொண்டார்கள். இப்படி ஒத்துக்கொண்டதின் மூலம் மேல் கூறிய வழியில், நபிகளாரை இட்டுக்கட்டி, அதற்குரிய தண்டனைக்கு சொந்தக்காரர்கள் ஆனார்கள்.

ஹஜ்ஜின் மாதங்கள் எவை என்று கேட்ட போது, அது மற்றவர்கள் கூறி தான் விளங்கி கொண்டோம் என்று ஒத்துக்கொண்டார்கள். இது விவாதத்தின் மிகப்பெரிய வெற்றியாகும். மேலும் அல்லாஹ் விளக்கவில்லை, நபிகள் நாயகம் ஸல்... அவர்களும் விளக்கவில்லை என்று கூறி, இவர்களின் மொழிபெயர்ப்பில் நபிகளார் கூறி இருக்கின்றார்கள் என்று நபிகளார் மீது இட்டுக்கட்டினோம் என்று இட்டுக்கட்டி நரகத்திற்குரிவர்கள் ஆகிபோனர்கள்.

அல்லாஹ் தேவை இல்லாததை குர்'ஆனில் கூறி இருக்கின்றானா:

மேலும் அல்லாஹ் பல இடங்களில் சத்தியம் செய்வதை (பஜ்ரின் மீது சத்தியமாக, பத்து இரவுகளின் மீது சத்தியமாக, நேரங்களின் மீது சத்தியமாக, காலங்களின் மீது சத்தியமாக) சுட்டிக்காட்டி இதற்க்கு என்ன விளக்கம் என்று கேட்ட போது, அல்லாஹ் எதையோ கூறி உள்ளான், அது எனக்கு தெரியாது என்று கூறி, எனக்கு விளக்கவுரை எழுதும் தகுதி இல்லை என்று ஒத்துக்கொண்டார். மேலும் அல்லாஹ் தேவை இல்லாத விளக்கங்களை கூறியுள்ளான் என்பதை போல கூறினார். இதன் மூலமும் நிரகரிப்பிற்குள்ளே பிரவேசித்து விட்டார்.

வாபஸ் வாங்க முடியாத ஒரு தலாக்:

மேலும் ஈலா விஷயத்தில் தலாக் தானாக ஆகிவிடும் என்று கூறுகின்றார்கள். மேலும் அது ஒரு தலாக் தான், வாபஸ் வாங்க கூடிய தலாக் தான் மார்கத்தில் இருக்கின்றது. வாபஸ் வாங்க முடியாத தலாக் மார்கத்தில் இல்லேவே இல்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் ஒரு தலாக் சொல்லும் போது வாபஸ் வாங்க முடியாத தலாகும் இருக்கின்றது. ஒரு பெண் தன கணவரிடம் இருந்து குல்வு முறையில் தலாக்கை பெரும் போது, அது ஒரு தலாக் வாபஸ் வாங்க முடியாத தலாகாக இருக்கின்றதே என்று கேட்ட போது பொசுக்கென்று அமுங்கி விட்டு என்னை ஏன் இப்படி பாடா படுத்துறே என்று கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

இவர்கள் இமாம்களை பின்பற்றவில்லை என்று கூறுகின்றார்கள். ஆனால் உண்மையில் இமாம்களை பின்பற்றிக்கொண்டு தான் இருக்கின்றார்கள். ஹதீஸ் கலையில் இமாம்களின் உதவி இல்லாமல் இவர்கள் எது சரியான ஹதீஸ், எது பலவீனமான ஹதீஸ், எது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்பதே தெரிய முடியாது. (ஆனால் இவர்கள் பலமான ஹதீஸை கூட சமீப காலமாக மறுத்துக்கொண்டிருக்கின்றார்கள். மறுக்கும் பட்டியல் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது என்பது வேறு விஷயம்)

ஒப்பந்தம் மீறல்:

அதிகமான நபர்கள் அவர்கள் தரப்பில் இருந்து வந்திருந்தார்கள். ஆரம்பத்திலேயே கேலி கிண்டல் செய்வதற்கு என்று கூட்டம் சேர்த்து இருந்தார்கள் என்று கூறி இருந்தோம். அதன் மணி மகுடமாக, அதிகமான நபர்கள் உள்ளே அமர்ந்து இருந்தார்கள். அவர்கள் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் பேசும் போது ஊளை இட்டுக்கொண்டு வேறு இருந்தார்கள். பின்னர் சுட்டிக்காட்டிய போது சென்ற விவாதத்தில் உங்களிலும் அதிகமான நபர்கள் இருந்தார்கள் என்று பொய்யை வேறு கூறினார்கள். சரி அப்படியே வந்திருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டாலும் அவர்கள் எந்த பிரச்சனையையும் செய்யவில்லை. பேச்சிற்கு இடையூறு அளிக்க வில்லை. இரண்டாம் விவாதத்தில் நம் தரப்பின் கேள்விகளை சமாளிக்க முடியாத PJ, தக்பீர் உரக்க சொன்னது தான் பிரச்சனையை என்று கூறி (அந்த விவாதத்திலும் எதிர் தரப்பினர் தக்பீர் சொல்லி கொண்டே இருந்தார்கள். ஒரு முறை நாம் தக்பீர் சொல்லும் போதே பயம் வந்து விட்டது) கேள்வி பதில் நிகழ்ச்சியை பின் வந்த இரு விவாதத்திலும் ரத்து செய்ய கேட்டு அப்படியே நடந்தது. ஆனால் இங்கு மூன்றாவது, மற்றும் நான்காவது விவாதத்தில், ஜமாலி ஹழ்ரத் அவர்கள் பேசும் போதும், PJ இமாம்களின் கருத்துக்களை கிண்டல் அடித்த போதும், இந்த சீர்திருத்த வாதிகள் (?!?!?!?!?!, இப்படி செய்வதற்கு நபிகளாரின் வழியில் ஆதாரம் இல்லை. இப்படி ஸல்.... பரிகாசம் செய்ய கூறவும் இல்லை. ஆனால் அல்லாஹ் பரிகாசம் செய்பவர்களை மறுமையில் பரிகாசம் செய்வதாக வாக்குறுதி தருகின்றான், அது நிச்சயமாக நடக்கும் என்பது வேறு விஷயம்) கிண்டல் அடித்துக்கொண்டும், சிரித்துக்கொண்டும் இருந்தார்கள். அதை தடுக்காத PJ சத்தமாக சிரிக்காதீர்கள் என்று கூறி, சிரிப்பதை அங்கீகரித்து ஒப்பந்தத்தை மீறினார்.

மத்'ஹபின் உண்மைகள்:

எங்களுக்கு களியக்கவிலையில் அரபியில் வாசித்து கேட்டதற்கு பதில் கொடுக்க வில்லை, அதே போல் சென்னையின் மூன்றாவது விவாதத்தில் மத்'ஹபை பற்றி கேட்ட போதும் பதில் கொடுக்க வில்லை என்று கூறினார் மோசடி மன்னன் PJ. அதற்க்கு பதில் கொடுத்த ஜமாலி அவர்கள் மூன்றாம் விவாதத்தில் பதில் கொடுத்தால் நான் தப்சீர் கிதாபை பற்றி விவாதிக்காமல் நீங்கள் பிக்ஹு கிதாபை தப்சீர் என்று கூறியது உண்மை என்றாகி விடும். ஆனால் களியக்காவிளையில் நீங்கள் இருக்கும் போது அரபியில் மூல நூலில் இருந்து வாசித்து காட்டுங்கள் என்று கேட்ட போது தப்பு தப்பாக Xerox எடுத்து (தேவை இல்லாததை ஒட்டி, தேவை உள்ளதை வெட்டி) தான் வாசித்தீர்கள். இவர்கள் திருப்பு செய்வார்கள், மோசடி செய்வார்கள் என்பதற்கு ஆதாரமாக அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி என்பவர் ஒரு பெண் ஹஜ்ஜிற்கு செல்கின்றார், அங்கு கழுதையின் குறியை தன குறியில் நுழைத்தால், மேலும் வெட்டப்பட்ட குறியை நுழைத்தால் ஹஜ் முறியாது என்று எழுதி இருக்கின்றது (ரத்துல் முக்தார் பாகம் பக்கம் அனைத்தும் கூறி இருக்கின்றது) என்று ஒரு அபாண்டமான பொய்யை, அண்டப்புளுகை கூறினார். அந்த முழு வாசகத்தை ஜமாலி ஹழ்ரத் அவர்கள் Projector ல் போட்டு காட்டும் போது அதில் فسد ஹஜ் முறிந்துவிடும் என்று தான் இருக்கின்றது. இப்படி தான் அனைத்தையும் காட்ட முடியும். ஒத்துழைக்க வில்லை என்று கூறிய போது, அவர்கள் வாயில் இருந்து அசட்டுத்தனத்தால் ஜொள்ளு ஆறாக ஓடியது.

மேலும் விலங்கோடு ஒருவன் உறவு கொண்டால் அவனிற்கு ஹத் இல்லை. அதனால் மத்'ஹபு விலங்கோடு புணர அனுமதியளித்துள்ளது என்று கூறி கொண்டு திரிகின்றார்கள், ஆனால் அந்த அரபி வாசகத்தை Projector இல் காட்டி அந்த வாசகத்தில் ஹத் (கல்லால் அடித்து கொல்வது) கிடையாது, ஹத் இல்லை, ஏன் என்றால், அதற்க்கு தக்க காரணம் வேண்டும். அதனால் தான் ஹத் இல்லை.வேறு தண்டனை உண்டு என்று எழுதி உள்ளது. இப்படி தான் இருப்பதை வெட்டுவார்கள். இல்லாததை ஓட்டுவார்கள் என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் இமாம்களின் மீது இட்டுக்கட்டப்பட்டதை பொறுக்காமல், இமாம்களுக்கு பரிந்து விஸ்வரூபம் எடுத்த போது வஹ்ஹபிகளே வெட்கத்தால் வெலவெலத்துப்போனார்கள்.

மேலும் மூன்றாம் விவாதத்தில் PJ , சிறந்த பல் துலக்கும் முறை, என்பது ஒரே நேரத்தில் இரு கையின் விரலையும் வாயில் வைத்து விளக்க வேண்டும் என்று கூறினார். இதற்கும் பதில் அளித்த ஜமாலி ஹழ்ரத் அவர்கள் அந்த அரபி வாசகத்தை Projector இல் காட்டி அந்த வாசகத்தில் ஒரு விரலால் விளக்கிய பின்பு, அடுத்த விரலால் துலக்க வேண்டும் என்பதை காட்டிய போது அந்த அணியினரே, இப்படி PJ யும் அப்பட்டமாக பொய் கூறி இருக்கின்றார் என்று ஏளனமாக சிரித்து ஒத்துக்கொண்டார்கள். மேலும், பல் துலக்க வேண்டிய முறையை மேலும் கீழுமாக தான் துலக்க வேண்டும் என்று இன்றைய விஞ்ஞானமும் கூறுகின்றது.

அதை தான் இமாமும் கூறுகின்றார்கள் என்று கூறினார்கள். மேலும் ஒருவன் ஒரு பெண்ணோடு தனியாக வரும் போது மாட்டிக்கொண்டால் அவளை மனைவி என்று கூறி தப்பித்துக்கொள்ளலாம் என்று மத்'ஹபில் இருக்கின்றது என்று அவர்களின் கூறினார்கள். அதற்கும் பதில் கூறிய ஜமாலி ஹழ்ரத் அவர்கள் அது ஒரு ஊருக்கு செல்லும் போது ஒரு மனைவியே இல்லே வேறு பொம்பளை தான் என்று தவறுதலாக கூறுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால் விசாரிக்காமல் செய்யகூடாது என்று தான் வருகின்றது. ஏன் இப்படி மாற்றி கூறுகின்றீர்கள் என்று கூறி, தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாததால் பதில் கூறவில்லை. இதே நிலை தான் இவர்களின் எல்லா விஷயங்களிலும் உள்ளது என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கூறும் போது அரங்கமே அங்கீகரித்தது.

பல வசனங்களுக்கு அர்த்தம் எந்த அடிப்படையில் வைத்தீர்கள், ஹதீஸில் இருக்கின்றதா என்று கேட்டும் பதில் இல்லை. (அடிக்க அடிக்க அம்மியும் நகரும் என்பார்கள். இங்கு ஒன்றும் நகரவில்லை. இடிச்ச புளி எப்பிடி நகரும்???????). மேலும் ஜமாலி ஹழ்ரத் வாதம் வைக்கும் போது, இது கேள்வி பதில் என்று கூறிய PJ அதே பாணியில் தான் கேள்வி கேட்டார். முழுமையாக விளக்கி கேட்கவில்லை. ஆனால் முழுமையாக விளக்கி கேட்டோம் என்று கூறி கொண்டிருந்தார். (விவாதத்தை இவர் தான் துவக்கினார், இவர் வைத்த வழி பின்னால் தொடர்ந்த போது, மாட்டிக்கிட்டோம்யா, மாட்டிக்கிட்டோம்யா என்பதை போல் மாறி மாறி பேசி கொண்டிருந்தார்). ஜமாலி ஹழ்ரத் அவர்கள் விளக்கினால், இது தான் தங்களது ஆய்வும் என்று கூறுவார்கள் என்பது வேறு விஷயம். இமாம்களின் ஆய்வை தான் குற்றம் கண்டு பிடித்தார். ஒப்பந்தத்திற்கு மாற்றமான ஒரு நிலைப்பாடாக இருந்தாலும், குர்'ஆனில் இப்படி இருக்கின்றது, ஹதீஸில் இப்படி இருக்கின்றது. அதற்க்கு இந்த ஆய்வு முரண் என்றா கூறினார்? இல்லை. மேலும் இது எதற்கு ஆய்வு செய்தார் என்று தான் கேட்டுக்கொண்டிருந்தார்.

இரு தலைப்பு? ஒரே விவாதம் ஆகுமா?

மேலும் விவாதத்தின் கடைசியில், மூன்றாம் தலைப்பும், நான்காம் தலைப்பும் ஒன்று, அதனால் அதில் கேட்ட கேள்வியும், இதில் கேட்ட கேள்விக்கும் பதில் சொல்ல வில்லை என்று தொகுப்புரையில் கூறினார். அது எப்பிடி இரு தலைப்பும் ஒன்றாகும். பின் எதற்கு வெவ்வேறு பெயரில் பேனர் வைக்கப்பட்டது? எதற்கு வீண் செலவு? PJ வின் தர்ஜுமாவில் உள்ள அசிங்கங்கள் என்ற தலைப்பும், இமாம்கள் உதவி இல்லாமல் குர்'ஆன் மற்றும் ஹதீஸை விளங்க முடியாது என்பது எப்பிடி ஒன்றாகும். இந்த அடிப்படை அறிவு கூட இந்த PJ விற்கு இல்லை.

பதில் தெரியாவிட்டால் என்ன செய்யலாம் - PJ எடுக்கும் பாடம்:

இந்த விவாதத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரச்சனைகளை முன் வைத்த ஜமாலி அவர்களின் ஒரு பிரச்சனையை கூட தொட முடியவில்லை இந்த PJ வால். காரணம், இவர்கள் அசத்தியக்கொள்கையில் இருப்பதால். இவர்களுக்கு பதில் தெரியாவிட்டால், குர்'ஆன் வசனம் மாற்றப்பட்டு விட்டது என்று கூறுவார்கள், ஹதீஸை ஒப்புக்கொள்ள மாட்டோம் என்பார்கள். பலவீனமான ஹதீஸை தான் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று கூறியவர்கள், அறிவிற்கு பொருந்தாவிட்டால் பலமான ஹதீஸை கூட கிண்டல் அடிப்பார்கள், ஆபாசப்படுத்துவார்கள், நிராகரிப்பார்களா? (விவாத அரங்கிலேயே அசர் தொழுகை பற்றிய பலமான ஹதீஸை நிராகரித்தார்கள்).

PJ வின் முரண்பாடுகள்:

மேலும் இவர்களிடம் வைத்த கேள்விகள், தொடை பகுதி மறைப்பது, ஜகாத் கொடுப்பது, பெண்கள் ஜியாரத் செய்வது, நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்ட விஷயம், தஸ்பிஹ் தொழுகை விஷயம், ஜும்மாவின் முன் சுன்னத், இறைவன் முதலாம் வானத்திற்கு வரும் விஷயம், பிறை விஷயம் இதில் எல்லாவற்றயும் மாற்றமான கருத்துக்களை கூறினீர். எப்பிடி என்று கேட்டும் பதில் இல்லை.

மத்'ஹபு வேண்டாம் என்றொரு மத்'ஹபு:

அதனால் ஆய்வு செய்யும் தகுதி இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது என்பதால், இவர்கள் ஆய்வு செய்ய கூடாது என்பதை கூறி கொள்கின்றோம். அதே போல் பார்வையாளரில் இருக்கும் ஆலிம்கள் உட்பட்ட யாருக்கும் விளங்காது என்று கூறி நாங்கள் மத்ஹபை தான் உருவாக்கி இருக்கின்றார்கள் என்பதை ஒப்புக்கொண்டார்கள். அல்லாஹ்வும், நபிகளாரும் விளக்கம் கொடுத்து விட்டார்கள் அதனால் இமாம்களின் கருத்து தேவை இல்லை என்று கூறியவர்கள், எதற்கு விளக்கவுரை என்று மொழி பெயர்ப்பை செய்தார்கள். அப்படியானால் அல்லாஹ் விளக்கவில்லையா? என்று கேட்டு, அந்த விவாதம் எதிர் தரப்பையும் தாக்கிய போது பிரச்சனையை கிளப்பினார்கள்.

பொய்களின் சங்கமம் போலி தவ்ஹீத்:

அதில் பொய்யான தகவலை பதிவு செய்தார்கள். அதாவது கத்தாதீர்கள் என்று நமது தரப்பு கூறியதை, கத்தியால் குத்தி விடுவேன் என்று கூறியதாக கூறினார்கள். அது இல்லை என்பது நிரூபிக்கப்பட்டது. அல்ஹம்து லில்லாஹ். இந்த பகுதியை அவர்கள் கத்தரித்து விட்டார்கள். ஏன் என்றால் இது அவர்களின் பொய்க்கு ஒரு சான்று. இது இது போல ஒரு தீவிர வாத போக்கு நமக்கு வரவே வராது. நாம் இஸ்லாம் காட்டிய அற வழியில் தான் போராடுவோமே தவிர அவர்களை போன்று வன்முறையை காட்ட மாட்டோம் என்பதும் காட்டப்பட்டது.

இந்த நாடகம் எல்லாம், ஒரு நிறைவாக ஜமாலியின் வாதம் இருக்கின்றதே என்ற ஒரு நிலையில் தான் ஏற்பட்டது. எப்படியும் களங்கத்தை சுன்னத் ஜமாஅத் மக்களின் மீது ஏற்படுத்த வேண்டும். மேலும் விவாத தொகுப்பை குளறுபடி செய்ய வேண்டும். என்ற நோக்கில் செய்யப்பட்டது. அது செய்ய முடியாமல், அல்லாஹ்வின் அருளால் சுன்னத் ஜமாஅத் நான்கு தலைப்புகளிலும் எந்த சந்தேகமும் இல்லாமல் வெற்றி பெற்றது.

அல்லாஹ்வை தவிர உதவி தேடுதல்:

களியக்காவிளையிலும், சென்னையில் நடந்த இரண்டாவது விவாதத்திலும், அல்லாஹ் அல்லாதவர்களிடம் உதவி தேடுவது ஷிர்க் என்று கூறி கொண்டிருந்தார். ஆனால் சென்னையில் நடந்த மூன்றாவது மற்றும் நான்காவது உயிர் பயத்தினால் போலீஸ் களின் பாதுகாவலோடு வந்திருந்தார். அல்லாஹ்வின் பாதுகாப்பு முற்றிலும் அகற்றப்பட்டு விட்டதற்கு இதுவே சான்று.

PJ வின் வறட்டு சவால்கள்:

மேலும் ஆரம்ப காலம் முதல், நமது உலமா பெருமக்களை பார்த்து, தைரியம் இருக்கின்றதா? என்னிடம் விவாதத்திற்கு வாருங்கள், உண்மை உங்கள் பக்கம் என்றால் என்னோடு விவாதம் செய்ய தயாரா என்பதை போல கூறிக்கொண்டிருந்தார். நமது மூத்த உலமா பெருமக்கள் இந்த அசிங்கம் பிடித்தவர்கள் நெருங்க வில்லை. காரணம் ஆபாசம் மிகுந்தவர்கள், பேசுவது பொய், செய்வது மோசடி, ஒரு மரியாதை இல்லை என்ற நிலையில் செல்ல வில்லை.

இப்படியே விடக்கூடாது என்று முடிவு எடுத்த ஜமாலி ஹழ்ரத் போன்ற இளம் வயதுடைய உலமாக்கள் இவரை எதிர் கொண்ட போது, துண்டை காணோம், துணியை காணோம் என்ற ரீதியில் ஓட்டம் எடுக்க ஆரம்பித்துள்ளார்கள். ஆரம்பத்தில் நாங்கள் சவால் விட்டோம் இவர்கள் வர வில்லை என்று கூறி கொண்டிருந்தவர்கள், இப்போது நாங்களா விவாதத்திற்கு அழைத்தோம், நீங்கள் தானே அழைத்தீர்கள் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டார்கள் என்றால் எது சத்தியம், எப்பிடி அல்லாஹ் சத்தியத்தை வாழ வைக்கின்றான் என்பதை விளங்கி கொள்ள வேண்டும். மேலும் 1983 ல் PJ சங்கரன் பந்தலில் அரபுக்கல்லூரியின் முதல்வராக இருக்கும் போது ஜமாலி அவர்கள் அப்போது தான் படித்து வெளியே வந்திருக்க வேண்டும், அல்லது படித்து குறைவான ஆண்டுகள் இருந்திருக்க வேண்டும். அப்படி பட்ட ஒரு ஆலிம் பெருமகனாரிடமே தோற்று விட்ட இந்த PJ, நமது மூத்த உலமாக்களிடம் சிக்கி இருந்தால் சின்னா பின்னம் ஆகி இருப்பார் என்பதே உண்மை.

மேலும் இவர் எங்கு விவாதம் செய்ததிலும் ஜெயிக்கவில்லை. இப்படி தோற்பதற்கு காரணம் என்ன? முதல் காரணம் பொய்யை எடுத்துக்கொண்டு விவாதம் செய்வது. இரண்டாவது காரணம் நன்றாக இட்டுக்கட்டுவது. மூன்றாவது மிக முக்கிய காரணம் தலை கணம். எனக்கு நன்றாக பேச வரும் என்ற தலைக்கனம். இதை 1991 ல் கோவையில் காதியானியுடன் PJ தொப்பி இல்லாமல் விவாதம் செய்யும் போதே (எனக்கு நன்றாக வாத திறமை இருக்கின்றது என்று) கூறி இருக்கின்றார்.

இனி அவர்கள் தலை எடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. எப்பிடி களியக்காவிளையில் தோற்ற பிறகு விளக்கத்தை வெளியில் வந்து சொல்லி கொண்டிருந்தார்களோ, அதை விட மேலாக இங்கு தோற்ற பிறகு வனவாசம் சென்று இருக்கின்றார்கள். மேலும் வருங்காலத்தில் விவாதம் நடை பெற வேண்டுமானால், பேசிய தலைப்பை விட்டு விட்டு, புதிதாக பேச வர வேண்டும். அதில்லாமால் தலைப்பிற்கு சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டிருக்கக்கூடாது என்பதையும், பார்வையாளர்களான எங்களின் சார்பாக PJ விடம் கோரிக்கை வைத்துக்கொள்கின்றோம்.

மேலும், PJ வின் ஆதரவு இணைய தளத்தில், ஜமாலி ஹழ்ரத் உடைய இணையத்தில் வீடியோக்கள் போடப்படவில்லை, இதில் இருந்தே தோற்று விட்டார்கள் என்று எழுதி இருந்தார்கள். இணைய தளம் என்பது சில பிரச்சனைகள் இருக்கும், அந்த விதத்தில் தான் மூன்றாவது நான்காவது விவாதங்கள் இணைய தளத்தில் வெளியிட கால தாமதம் ஆனதாக ஜமாலி இணைய தளத்தின் நிர்வாகி கூறினார்.

மேலும், இணையதளத்தில் வீடியோக்கள் வெளியிடுவதை தான் வெற்றிக்கு ஒரு அளவாக PJ வின் அடிவருடி வைத்ததினால் இதை கூறுகின்றோம். ஜமாலி ஹழ்ரத் அவர்களின் இணையதளத்தில் அந்த மூன்றாம் மற்றும் நான்காம் விவாதத்தின் வீடியோக்கள் கத்தரிக்கப்படாமல் வெளியிடப்பட்டதின் மூலமும் சுன்னத் ஜமாஅத் தான் வெற்றிபெற்றது என்பது நிரூபிக்கப்பட்டது.

PJ வின் கைப்பாவையின் இணையத்தில், வீடியோவை வெளியிடுவது தான் வெற்றிக்கு ஒரு அளவுகோல் என்று ஒரு அளவுகோலை வைத்துள்ளார். அப்படியானால், சென்னையில் நடந்த முதலாம் மற்றும் இரண்டாம் விவாதங்களை ஜமாலி ஹழ்ரத் அவர்களின் இணைய தளத்தில் விரைவாக வெளியிட்டதின் மூலம், PJ யின் அடிவருடியின் அளவுகோலின் படி, முதல் இரு விவாதத்திலும் PJ தோற்று போய் விட்டார் என்று அவரை பின்பற்றும் அவரது அடிவருடியே ஒப்புக்கொண்டுவிட்டார். இதன் மூலமும், சுன்னத் ஜமாஅத் தான் வெற்றி பெற்றது. போலி தவ்ஹீத் தோற்று போய் விட்டது என்பதை அறிகின்றோம்.

இந்த விவாதத்தின் மூலம் உண்மையான சுன்னத் ஜமாஅத் கொள்கை தான் உண்மை என்று PJ வின் வாயாலேயே வரவழைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

மேலும் உண்மையான இந்த சுன்னத் ஜமாத்தில் அல்லாஹ் ஜல்.... நம் அனைவரையும் என்றென்றும் ஆக்குவானாக!


ஆமீன்! ஆமீன்! யா ரப்பல்ஆலமீன்.