முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, December 31, 2011

இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில்


இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.....

நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது (நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு விடலாம் என்பதற்காக ஒரே ஒரு ஹஜ்ஜு தான் தன் வாழ்நாளில் செய்துள்ளார்கள். அதுவும் அவர்கள் நம் கண்களை விட்டு மறைக்கப்பட இருந்த அந்த கடைசி ஆண்டு. இதுவும் அவர்களின் மறைமுக ஞானத்தால் செய்தார்கள்.) இஹ்ராம் களையும் அடையாளமாக ஹழ்ரத் முஅம்மர் இப்னு அப்துல்லாஹ் ரழி... என்ற தோழரை (நாவிதர்) அழைத்து தங்களுடைய தலையில் இருந்த அந்த திரு முடியை மழிக்க சொன்னார்கள். எதிலும் ஒரு ஒழுங்கை காட்டி தந்த நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் முதலில் வலது பக்க முடியை எடுக்க சொன்னார்கள். பிறகு இடது புற முடியை எடுக்க சொன்னார்கள் இப்படியாக முழுதும் மழிக்கப்பட்ட திரு முடியை ஒன்றாக சேகரித்து, அதை ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் வழங்கினார்கள்.


அப்படி வழங்கிய அந்த திருமுடியை சஹாபா பெருமக்கள் மத்தியில் பங்கு வைக்க சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள். இந்த குறுகிய கால வாழ்க்கையில் 1,40,000 (ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் ) சஹாபாக்கள் நபிகளாரோடு இருந்தார்கள். அனைவருக்கும் பங்கு வைத்து விட்டு சில முடிகள் ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்தது. அங்கே இருந்தது சஹாபிகள் அதனால் நபி ஸல்... அவர்களின் புனிதமிகு அந்த திருமுடியை வாங்கி வாங்கி பாதுகாத்து கொண்டார்கள். ஒருக்கால் இன்றைய நவீன வாதிகள், அயோக்கியர்கள், மார்க்கத்தை நாசமாக்கும் புற்றீசல்கள், கரையான்கள், நபிகளார் மேல் பொறாமை பிடித்தவர்கள், அங்கே இருந்திருந்தார்களேயானால் தலை முடியை என்னிடம் எதற்கு தருகின்றீர்கள் அதை தூர வீசுங்கள் என்று கூறி இருப்பார்கள். அல்லாஹ் நபி ஸல்... அவர்களின் கண்ணியத்தை பாதுகாத்தான் அதனால், அங்கே இருந்தது வஹ்ஹாபி இல்லை சஹாபி.

அப்படி பாதுகாத்ததாலும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் கட்டளைக்கேற்ப யாருடைய வாகனம் எந்த திசையில் இருக்கின்றதோ, அந்த திசையில் சென்று மார்க்கத்தை பரப்புங்கள் என்று சொன்னதாலும், அப்படி சென்ற புனித மிகு சஹாபா பெருமக்களால் உலகம் முழுதும் அந்த புனித திரு முடி வியாபித்து இருக்கின்றது. நபி ஸல்... அவர்களின் பரக்கத் பொருந்திய அந்த பொன் முகத்தை காண முடியாத இந்த பாக்கியம் இல்லா கண்களுக்கு அந்த புனித மிகு முடிகளை காண பாக்கியம் கிடைக்கின்றது. அந்த புனித முடியிற்கு முன்னாலும் சத்தம் போட்டு பேசுவது கூடாது.


எப்படி நபிகள் நாயகம் ஸல்.... அவர்களின் வாரிசுதாரர்களான சையத்மார்கள், தங்கள், மௌலானாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டு, உலகம் முழுதும் இருக்கின்ற சாதாத் மார்களை அடையாளம் காட்டப்படுவதற்கு சில்சிலா என்னும் கொடிவழி ஜாபிதா பராமரிக்கப்படுகின்றதோ அதே போல நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திரு முடிக்கும் அதை வைத்திருப்பவர்கள் அதன் சில்சிலாவை பராமரித்து வருகின்றார்கள். அப்படி இருந்தும் அந்த திருமுடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று இன்றைக்கு ஒரு கூட்டம் நமது மத்தியில் இருக்கின்றது. அவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கே தெரியாத விஷயம் இவர்களுக்கு தெரிந்து விட்டதாம். கண்மணி ரசூலுல்லாஹி ஸல்... அவர்கள் பங்கு வைக்க சொன்னார்கள், நபி வழியை (!?!?!?!?!?!?) பின்பற்றும் இந்த கூட்டம் அந்த முடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று கூறுகின்றது. அந்த முடியின் சொந்தக்காரரான அபுல் காசிம் ஸல்.... அவர்களுக்கே சிறப்பு இல்லை என்று கூறும் கூட்டம் தானே! அவர்களும் நம்மை போன்றவர்கள் என்று கூறுபவர்கள் தானே!! ஆனால் நமது நிலையை பாருங்கள். ஹழ்ரத் முஹம்மத் இப்னு சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அபீதா ரழி... அவர்களிடம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடியை வழங்கி விட்டு கூறினார்கள் என்னிடம் என் தந்தை சீரின் ரழி... அவர்கள் மூலம் நபிகளாரின் திரு முடி எனக்கு கிடைத்தது. ஹழ்ரத் சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் பணியாள். ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தாயார் ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தந்தையின் மறைவிற்கு பிறகு ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களை திருமணம் முடித்து இருந்தார்கள்.

ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்த அந்த திருமுடிகளில் சிலவற்றை ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களிடம் வழங்கி இருந்தார்கள். ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களிடம் வந்து, ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் பணியாள் ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களிடம் இருந்து ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் அந்த திருமுடியை பெற்றார்கள். ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் ஒரு தாபிஈ. ஹழ்ரத் இப்னு சீரின் அவர்கள் கனவின் விளக்கம் சொல்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். இன்றளவும் கனவிற்கு விளக்கம் அளிப்பதில் அவருக்கு நிகர் அவர்களே.அப்படி நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திருமுடியை பெற்றுக்கொண்ட ஹழ்ரத் அபீதா அவர்கள் கூறுவதை பாருங்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடி என்னிடம் இருப்பது,

أحب إلي من الدنيا و ما فيهاஇந்த உலகமும், உலகில் உள்ள எல்லாவும் என்னிடம் இருப்பதை விட என்னிடம் இந்த திருமுடி இருப்பதி மிகவும் பிரியமானதாகும் என்று கூறுகின்றார்கள் (புகாரி).

அவர்களின் திருமுடியும் எனது முடி போல தானே என்று சொல்லுகின்ற துணிச்சலோ, தைரியமோ இல்லையே அவர்களுக்கு, அவர்கள் தானே சஹாபிகளும், தாபியீன்களும். வாங்கி வாங்கி பாதுகாத்தார்களே. அவர்களை தானே பின்பற்ற முடியும். அவர்களின் ஈமான் தானே சரியானது, அவர்களின் முடிவு தானே உண்மையானது. அவர்களின் வழி தானே சாத்தியமானது. ஆனால் இன்று எளிய மார்க்கம் என்றும், தூய மார்க்கம் என்றும் கூறும் இந்த மடையர்கள் இந்த மார்க்கத்தின் பரிசுத்தத்தை அசுத்தம் ஆக்க பார்க்கின்றார்கள். மேலும் இன்றைய சமீப காலமாக


ما أنا عليه و أصحابي


நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அவர்கள் வழியை பின்பற்றுபவர்கள் தான் சுவன வாதிகள் என்ற ஹதீஸிற்கு விளக்கம் கூறக்கூடிய போலி தவ்ஹீதின் பொய்யன் ஜெய்னுல்ஆபிதீன், நாம் தான் அந்த ஹதீஸிற்கு உரியவர்கள், நாம் தான் சுன்னத் ஜமாஅத் என்று கூறி, தன்னுடைய போலி தவ்ஹீத் என்னும் வியாபாரம் சரியாக ஓட வில்லை என்பதால் நமது கூட்டத்தின் பெயரை திருட முயற்சி செய்கின்றார் (ஏனைய 72 கூட்டங்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம் என்பது வேறு விஷயம்) அப்படி செய்யும் போது, இன்றைக்கு எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் என்று தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். அதனால் நாம் தான் ஸல்... அவர்களின் காலத்தில் செய்வதை மட்டும் பின்பற்றுகின்றோம், பின்னால் தோழர்கள் செய்ததை பின்பற்றவில்லை என்று கூறுகின்றார்களே. நபிகளார் ஸல்... அவர்களே பங்கு வைத்து கொடுத்தார்களே, அந்த திருமுடியை இன்று பரிகாசம் செய்வது எதனால்? பதில் சொல்வார்களா?


மேலும் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் அந்த திருமுடி ஹழ்ரத் உம்முல் மூமினீன் உம்மு சல்மா ரழி... அவர்களிடம் இருந்தது. யாரேனும் வயிற்று வழி ஏற்பட்டால் அந்த புனித முடியை தண்ணீரில் முக்கி வெளியில் எடுத்துவிடுவார்கள். அந்த புனித தண்ணீர் மருந்தாகவும் பயன் பட்டிருப்பதும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது...

இப்படி பட்ட ஒரு புனித மிகு நபி ஸல்... அவர்களின் புனித மிகு திரு முடி , (சுன்னத் ஜமாஅத்) முஸ்லிம் மக்கள் அதை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் காலம் தொட்டு பாதுகாத்து, பரக்கத்திற்காகவும், மருந்திற்க்காகவும் உபயகப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் கோழிகோடு என்ற மாவட்டத்தில் கரந்தூர் என்ற ஊரில் செயல் பட்டுவரும் உலக பிரசித்தி பெற்ற சுன்னத் ஜமாத்தின் அரபி கல்லூரியான மார்கஸ் சக்கபாத்தி சுன்னியா என்ற கல்லூரியின் நிறுவுனர் கமருல் உலமா, அபுல் ஆய்தாம், A.P.அபூபக்கர் முஸ்லியார் (பாகவி) (DUBAI AWQAF DIECTER SHEIK HAZRAJI) அவர்கள் கடந்த வருடம் அவர்களின் பாதுகாப்பில் இது வரை பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் (ஸல்)திருமுடியை மர்கசிற்கு வழங்கினார். அதை பாதுகாப்பதற்கும், சுன்னத் ஜமாத்தினர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இந்தியாவில் மிக பெரிய மசூதியை அதன் நினைவாக ருபாய் 40 கோடி செலவில் கேரளா மாநிலத்தில் கோழிகோடு மாவட்டத்தில் மிக விரைவில் கட்ட உள்ளார்கள்.

அதன் அடிக்கல் நாட்டு விழாவும் இன்டர்நேஷனல் மிலாது விழாவும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 30 ம் தேதி நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைகின்றோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்... நம் எல்லோரையும் உண்மையான பாதையாம் சுன்னத் ஜமா'த்தில் என்றென்றும் பாதுகாப்பானாக!

ஆமீன்!
ஆமீன்!!!
யா ரப்பல் ஆலமீன்.!!!!!

வஸ்ஸலாம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

கோவை பைசல்
09382222202,09383333303

பள்ளியின் மாதிரி தோற்றம்: