முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, February 1, 2011

நபி வழியில் தர்கா கட்டிடங்கள்.இன்றைய காலத்தில் எல்லாம் நவீனமயமாகி விட்டது. அதாவது ஆகுமானது எல்லாம் ஆகாதது என்றும், ஆகாதது எல்லாம் ஆகுமானது என்றும் சொல்லும் நிலை வந்து விட்டது.
 • உடை குறைப்பு: ஆகாதது - ஆகுமாகியது.
 • சினிமா: ஆகாதது - ஆகுமாகியது.
 • ஆபாசப்பேச்சு: ஆகாதது - ஆகுமாகியது.
 • பெரியவர்களை மரியாதை குறைவாக பேசுவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • பெரியவர்களை ஒருமையில் பேசுவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • பன்றியின் மாமிசம் அல்லாதது: ஆகாதது - ஆகுமாகியது.
 • அல்கஹால் கலந்த நறுமணம்: ஆகாதது - ஆகுமாகியது.
 • தீபாவளியில் சிலைக்கு படைக்கப்பட்ட பலகாரம்: ஆகாதது - ஆகுமாகியது.
 • கோவிலுக்கு சென்று பார்வை இடுவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • கிருஸ்துமஸ் ற்காக செய்யப்படும் பலகாரம்: ஆகாதது - ஆகுமாகியது.
 • இறைவனுக்கு உருவம் கொடுப்பது: ஆகாதது - ஆகுமாகியது.
 • குர்'ஆனை அசுத்தமானவர்கள் தொடுவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • நெஞ்சில் கை கட்டுவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • தொடை தெரிய உட்காருவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • தொழுகையில் தொடை தெரிவது: ஆகாதது - ஆகுமாகியது.
 • ஆண்களும் பெண்களும் சேர்ந்து உணவருந்தலாம் என்பது: ஆகாதது - ஆகுமாகியது.அதே போல

நபிகளார் ஸல்... அவர்களை புகழ்ந்து பாடுவது: ஆகுமானது - ஆகாததாகியது.
பாத்திஹா (குர்'ஆனில் உள்ள ஒரு சூரா) ஓதுவது: ஆகுமானது - ஆகாததாகியது.
பாத்திஹா ஓதி வழங்கப்படும் உணவு: ஆகுமானது - ஆகாததாகியது.
தொப்பி போடும் சுன்னத்: ஆகுமானது - ஆகாததாகியது.
சுன்னத் ஜமாஅத் வழியில் தக்பீர் கட்டுவது: ஆகுமானது - ஆகாததாகியது.
பெரியவர்களை மதிப்பது: ஆகுமானது - ஆகாததாகியது.
இமாம்களை மதிப்பது: ஆகுமானது - ஆகாததாகியது.
சஹாபாக்களை கண்ணியப்படுத்துவது: ஆகுமானது - ஆகாததாகியது.
நபிகள் ஸல்... அவர்களின் சொல்லை மதிப்பது: ஆகுமானது - ஆகாததாகியது.
பலவீனமான ஹதீஸை ஏற்றுக்கொள்வது: ஆகுமானது - ஆகாததாகியது.
பலமான ஹதீஸ் ஒப்புக்கொள்வது: ஆகுமானது - ஆகாததாகியது.
நபிகளாருக்கு மார்க்கத்தில் வழங்கப்பட்டிருக்கும் தனி சலுகை: ஆகுமானது - ஆகாததாகியது.

இப்படி பட்ட வரிசைகளில் தான்,

நபிகளார் ஸல்... அவர்கள் காட்டிய ஜியாரத்: ஆகுமானது - ஆகாததாகியது.
தர்கா கட்டிடம்: ஆகுமானது - ஆகாததாகியது.
வசீலா தேடுவது: ஆகுமானது - ஆகாததாகியது.
இதுவும் ஏதோ நாம் நமது சொந்த கருத்தால் சொல்வதல்ல. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சொல்லி தந்துள்ளார்கள்.

ஜியாரத் செய்யலாமா:

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் முதலில் ஜியாரத் செய்வதை தடுத்து இருந்தார்கள். அதை ஹதீஸ்களில் பார்க்க முடியும். ஒரு முறை ஹழ்ரத் ஆயிஷா ரழி... அவர்கள் வழியில் பார்க்கின்றார்கள் ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் அபீ முளைக்கா ரழி... அவர்கள். மூமின்களுக்கு தாயாக உள்ளவர்களே எங்கிருந்து வருகின்றீர்கள் என கேட்க, அன்னை ஆயிஷா ரழி... அவர்கள், நான் என் சகோதரர் ஹழ்ரத் அப்துர்ரஹ்மான் பின் அபூபக்கர் ரழி... உடைய ஜியாரத்திற்கு சென்று வந்து கொண்டு இருக்கின்றேன் என கூற, ஹழ்ரத் அப்துல்லாஹ் அவர்களோ, நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கப்ரை ஜியாரத் செய்வதிலிருந்து தடுத்து இருந்தார்களே? என வினவ, அன்னை ஆயிஷா ரழி... அவர்கள், ஆமாம், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தடுத்து இருந்தார்கள், பின்னர் ஜியாரத் செய்வதை அனுமதித்தார்கள் என்று கூறினார்கள்.

அதே போல் அன்னை ஆயிஷா ரழி... அவர்கள் நபிகள் ஸல்... அவர்களின் மறைவிற்கு பின் ஜியாரத்திற்கு செல்வார்கள், ஹழ்ரத் அபூபக்கர் ரழி... அவர்களின் மறைவிற்கு பின்னும் ஜியாரத்திற்கு செல்வார்கள். மக்கள் எல்லாம் கேட்பார்கள் என்ன இப்படி ஜியாரத் செய்கின்றீர்கள் என்று? அப்போது நான் சொல்வேன், இவர்கள் யார்? எனது தந்தையும், எனது கணவரும் தானே இருக்கின்றார்கள். ஆனால் ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்ட பின் நான் என்னுடைய ஆடைகளை நன்றாக அணிந்தவளாக செல்வேன் காரணம் ஹழ்ரத் உமர் ரழி... அவர்களுக்கு வெட்கப்பட்டு என்று கூறுகின்றார்கள்.

மேலும் ஜியாரத் செய்யும் போது ஒரு ஒழுங்கு இருக்க வேண்டும். மரணித்தவர்களுக்கும் ஒரு ஹயாத் இருக்கின்றது அதனால் தான் அன்னை ஆயிஷா ரழி... அவர்கள் இப்படி நடந்து கட்டி உள்ளார்கள். அப்படி தான் நாமும் நடந்து கொள்ள வேண்டும்.


மேற்கண்ட ஹதீஸ்களில் இருந்து ஆண்களும், பெண்களும் ஜியாரத் செய்யாலாம் என்று தெளிவாக இருக்கின்றது. ஆனால் இதை எல்லாம் மறைப்பதற்கு வஹ்ஹாபி புரோகிதர்கள் முயற்சிக்கின்றார்கள் என்பதே உண்மை. அதே போல நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒவ்வொரு வருடமும் உஹுத் போரில் கொல்லப்பட்ட ஷுஹதாக்களை ஜியாரத் செய்வார்கள் என்றும் ஹதீஸ்களில் பார்க்கின்றோம்.

உண்மை இப்படி இருக்க இந்த வஹ்ஹாபி புரோகிதர்களும், அவர்களுக்கு ஜால்ரா அடிக்கும் சுன்னத் ஜமாஅத் என்ற போர்வையில் இருக்கும் காசிமி மார்கத்தின் சூரியன் (சம்சுதீன் காசிமி) யும் இது என்ன நபிகளார் கற்று தராதது என்று கூறுகின்றார்கள். மேலும் நாம் வஹ்ஹாபிகளை வஹ்ஹாபி என்று சொன்னால் இந்த காசிமிக்கு பற்றி கொண்டு வரும். காரணம் அவரும் ஒரு வஹ்ஹாபி தான். ஆனால் சுன்னத் ஜமாஅத் போர்வையில் இருக்கின்றார். இந்த வஹ்ஹாபியும் தர்காவை எதிர்க்கின்றார்.

நாம் வஹ்ஹாபியை வஹ்ஹாபி என்று சொல்லும் போது இவர் கூறுகின்றார், இவர்கள் ஏன் தெரியுமா வஹ்ஹாபி என்று கூறுகின்றார்கள். முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் என்று ஒருவர் இருந்தார். அவர் சமய சீர்திருத்த வாதி. சவூதியில் இருந்த தர்காக்களை இடித்து தகர்த்தார். (ஆனாலும் அந்த கொடுங்கோலனால் கூட நபிகளார் ஸல்... அவர்களின் தர்காவை நிர்மூலம் ஆக்க முடியவில்லை. முடியவும் முடியாது). தர்கா என்பது பித்'அத் ஆன வழிமுறை. இவர்களை பின் பற்றி இந்த இயக்க வாதிகள் இருப்பதினால் தான் வஹ்ஹாபி என்று கிண்டல் அடிக்கின்றார்கள், இதில் கிண்டல் அடிக்க ஒன்றும் இல்லை என்று, இந்த வஹ்ஹாபிகளையும், அவர்களின் குருநாதர் இப்னு அப்துல் வஹ்ஹாபையும் வக்காலத்து வாங்குகின்றார் இந்த போலி சுன்னத் ஜமாஅத் வாதி.

பேசாமல் இவர் இயக்கங்களுக்கு பிரசார பீரங்கியாக செயல்படலாம். காரணம் இப்னு அப்துல் வஹ்ஹாபை வக்காலத்து வாங்கும் இவர், நமது உலாமாக்களை சாடுகின்றார். ஒரு மார்க்க அறிஞர் என்று சொல்லப்படுபவர், நமது ஆலிம்களை இழிவான, மோசமான பட்டப்பெயர் சூட்டி மகிழ்கின்றார் என்றால் இவர் உண்மையான மார்க்க அறிஞராக இருக்க முடியுமா என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.

மேலும் இப்னு அப்துல் வஹ்ஹாப் செய்தது சீர்திருத்தம் என்கின்றார். அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், நீங்கள் பூமியில் குழப்பம் விளைவிக்காதீர் என்று கூறப்பட்டால், நாம் சீர்திருத்த வாதி என்று தான் கூறுவார்கள் என்று இவர்களை பற்றி தெளிவாக அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான். அந்த வழியில் இப்னு அப்துல் வஹ்ஹாபையும், காசிமி யையும் நாம் வைத்து கொள்கின்றோம்.
இப்னு அப்துல் வஹ்ஹாப் செய்த செயல்கள் என்ன மார்க்கமா? நபிகளாரின் வழியா? இல்லையே! அது நபிகளாரின் வழிக்கு மிகவும் விரோதமானது. சரி! இவர் செய்த சீர்திருத்தம் (?!?!?!?!?) தான் என்ன என்று பார்த்தால் அநேகம் பேரை மார்கத்தின் பெயரை சொல்லி மரண தண்டனை வழங்கியதும், அவர்களின் பொருள்களை அபகரித்ததும். மேலும் சஹாபா பெருமக்கள், வழிமார்கள், இறைநேசர்களின் தர்காக்களை இடித்தது. இவர் இடித்த தர்காக்களில் சில,

அன்னை கதீஜா ரழி... ஹழ்ரத் ஹம்ஜா ரழி... ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ஜஹஷ் ரழி... ஹழ்ரத் அன்னை பாத்திமா ரழி... ஹழ்ரத் அப்பாஸ் ரழி... ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி....
இன்னும் அடுக்கிகொண்டே செல்லலாம்.

இவர்களில், சஹாபா பெருமக்களின் தர்காவை இடித்ததை தான் சீர்திருத்தம் என்று கூறுகின்றார்கள். என்ன கேடு கேட்ட சீர்திருத்தமோ தெரியவில்லை.

ஆனால் பாருங்கள், நபிகளார் ஸல்... அவர்களின் புனிதமிகு தோழர்களின் பூவுடலை தாங்கி இருக்கும் ஜன்னத்துல் பகியில் இன்று நடக்கும் ஒரு செயலை கேளுங்கள். மதீனா மாநகரில் மழை பொழிந்தால், ஜன்னத்துல் பகியிலும் தண்ணீர் தேங்கும். அப்படி தேங்கும் போது, மணல் விலகி இன்றளவும் அல்லாஹ்வால் பாதுகாக்கப்படும் புனித தோழர்களின் பூவுடல் தெரிகின்றதாம். அதை மணலால் அரவணைத்து மூட என்று ஊழியர்களை நியமித்து இருக்கின்றது சவூதி அரசு.

அதன் விளைவு தான் சவூதி மன்னர் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் முன் கை எடுத்து துஆ செய்யும் காட்சியை நமது YOUTUBE channel ல் பார்த்து கொள்ளலாம். (இப்படி பார்த்தால் தான் நம்புவீர்களா? சொன்னால் புரியாதா?)


மேலும் தர்கா என்பது நபிகளார் ஸல்... அவர்களின் சுன்னத் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். எப்பிடி? நபிகளார் ஸல்... அவர்கள் கப்ரின் மீது கட்டடம் கட்டுவதை தடை அல்லவா செய்துள்ளார்கள். நீங்கள் என்ன இப்படி கூறுகின்றீர்கள் என்று கேட்டால் இரண்டு ஹதீஸ்களையும் அலசி ஆராய நாம் கடமையுள்ளவர்களாக இருக்கின்றோம்.

1. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், கடைசி காலத்தில் கூறினார்கள், அல்லாஹ் யஹுதிகளையும், நசராக்களையும் சபிப்பானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் கப்ரை மஸ்ஜிதாக ஆக்கி கொண்டார்கள்.

2. மேலும் அபீசீநியாவில் அன்னை ஹழ்ரத் உம்மு சல்மா ரழி... அவர்களும், அன்னை ஹழ்ரத் உம்மு ஹபீபா ரழி... அவர்களும் சென்று ஒரு ஆலயத்தை (நல்லவர்களை அடக்கி அதற்க்கு மேல் வணக்கஸ்தலத்தை ஆக்கி கொண்டதை) பார்த்து அதை நபிகள் அவர்கள் தெரியும் விதத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். அந்த ஆலயத்தில் உருவப்படங்கள் எல்லாம் இருந்தது. அதை பற்றி ஸல்... அவர்களிடம் கூறிய போது, நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். அந்த ஆலயத்தை கட்டுபவர்கள், அவர்களில் ஒரு நல்லடியார் இறந்து விட்டால், அவருடைய கப்ரை மஸ்ஜிதாக ஆக்கிவிடுவார்கள். அதில் உருவப்படங்களையும் வைத்து கொள்கின்றார்கள். இவர்கள் யார் தெரியுமா? இவர்கள் தான் மறுமையில் மகா கெட்ட படைப்பாக இருக்கின்றார்கள் என்று பெருமானார் ஸல்... அவர்கள் கூறினார்கள்.

3. மேலும் ஸல்... அவர்கள் கப்ரை பூசுவதையும், கப்ரின் மீது உட்காருவதையும், கப்ரின் மீது கட்டிடம் கட்ட கூடாது என்பதையும் தடுத்தார்கள்.

இதில் உண்மை என்னவென்றால், யூதர்களும் கிறிஸ்தவர்களும் அவர்களில் நபிமார்களோ, நல்லடியார்களோ இறந்து விட்டால் அவர்களை அடக்கம் செய்து அங்கு அவர்களின் முறைப்படி வணங்கும் ஒரு இடத்தை உருவாக்கி கொள்வார்கள். இதை வஹ்ஹாபிகளின் காலடி தடம் என்ற CD ஐ பார்த்தாலே தெரியும். அதில் ஹழ்ரத் ஹாரூன் அலை... அவர்களின் கப்ரை அடக்கம் செய்து ஒரு ஆலயத்தை கட்டி உள்ளார்கள். (அங்கு அவர்களின் மதப்படி வணங்கும் முறைகள் நடந்து கொண்டிருக்கின்றது).

இப்படி பட்ட ஆலயங்களில் அந்த நல்லவர்களின் உருவப்படத்தையும், சிலைகளையும் செதுக்கிகொள்கின்றார்கள், இவர்கள் மகா கெட்டவர்கள் என்பதில் நமக்கும் மாற்றுக்கருத்து இல்லை. அதனால் தான் எந்த ஒரு தர்காவிலும் உருவப்படமோ, சிலையோ இருக்காது. மேலும் தர்காவில் தொழுகையும் நடக்காது. தொழுகைக்காக பள்ளியும், நபிகளாரின் சுன்னத்தை பின் பற்ற தர்காவும் தான் நமது வழி. எக்காரணம் கொண்டும் தர்காவில் வணக்க வழிபாடு கிடையாது.

மேலும் நபிகள் நாயகம் ஸல்.. அவர்கள் கப்ரின் மீது உட்காருவதை தடுத்தார்கள். கப்ரு என்பது தெரிந்தால் தான் உட்காருவதை விட்டு தவிர்ந்து கொள்ள முடியும். மேலும் கப்ரின் மீது கட்டடம் கட்ட கூடாது என்று கூறியுள்ளார்கள் என்பது வணக்கம் செய்யப்படுகின்ற ஒரு வழிபாட்டுத்தலம் என்பதே மேலுள்ள ஹதீஸின் மூலம் தெரிகின்றது. மூன்றாவதாக கூறப்பட்டது கப்ரை பூசக்கூடாது என்பது. இதை திரிக்கும் வஹ்ஹாபிகள் கப்ரை பூசக்கூடாது என்பது மேலே என்று கூறுகின்றார்கள். அந்த ஹதீஸில் கூறப்படும் உட்காருவது, கட்டடம் கட்டுவது என்ற இரு விஷயத்தையும் கூறிய பெருமானார் ஸல்... அவர்கள் கப்ரின் மீது என்று கூறி இருக்கின்றார்கள். பூசுவது என்று கூறும் போது கப்ரை பூசக்கூடாது என்று கூறுகின்றார்கள். அப்படி என்றால் கப்ரின் உள் பகுதியை தான் அது குறிக்கும்.

அது தான் கப்ராக கருதப்படும். இதை தான் தடை செய்தார்கள் நபிகளார். மேலும் இது பொது கப்ரஸ்தான் ற்கு பொருந்தும் சட்டம் ஆகும். பொது கபரஸ்தானில் உள் பகுதி பூசப்பட்டு கப்ரு இருக்க கூடாது என்பது தான் இதன் அர்த்தம் ஆகும். அப்படி அடக்கம் செய்வதால் இட நெருக்கடி ஏற்படும். இது பொது கப்ரஸ்தான் ற்கு தான் பொருந்தும் என்பதற்குரிய ஆதாரமாக கிறிஸ்தவர்களின் அடக்கஸ்தலம் எப்பிடி இருக்கின்றது என்பதை பார்த்து நாம் முடிவு செய்து கொள்ளலாம். கிறிஸ்தவர்கள் கீழிருந்து கட்டிடம் எழுப்பி தான் பொது கப்ரை கட்டுவார்கள். இதை தான் நபிகள் ஸல்... அவர்கள் தடை செய்துள்ளார்கள். இது அந்த காலம் முதலே கிறிஸ்தவர்களின் கலாச்சாரமாக இருக்கின்றது. அதற்க்கு ஆதாரமே நபிகள் ஸல்... மஸ்ஜித் நபவி கட்டுமான பணியை மேற்கொள்ள குழி தோண்டிய போது கட்டிடங்கள் இருந்தன, அதை களைந்தெறிய உத்தரவிட்டார்கள் நபிகள் ஸல்... அவர்கள்.

இப்படியாக வஹ்ஹாபிகளின் ஹதீஸை திரிப்பு செய்யும் வேலைக்கு நாம் முட்டுக்கட்டை கொடுக்கும் போது, அவர்கள் நம்மிடம் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தர்கா கட்ட சொல்லியுள்ளார்களா? ஒரு ஆதாரம் தாருங்கள். அப்படி நீங்கள் தந்து விட்டால் நாங்கள் தர்கா கட்டுகின்றோம் என்று PJ களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் கூறினார்.

நாம் அப்படி ஒரு ஹதீஸை தந்து விட்டால் வாக்குறுதி மாறாத(?!?!?!?!) PJ நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில் இதை தருகின்றோம்.


நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மறைவிற்கு பின் கிலாபத் யாருக்கு சொந்தம் என்ற விஷயத்தில் சிறு சலசலப்பு மக்களுக்கு மத்தியில் ஏற்பட்டது. மூன்றாம் நாள் ஹழ்ரத் அபூபக்கர் ரழி... அவர்கள் அனைவரையும் ஒன்று கூட்டினார்கள். மேலும் சொன்னார்கள். மக்களே தற்போது நமக்கு வஹி வர போவதில்லை. நபிகளார் ஸல்... எதை சொல்லி விட்டு சென்றுள்ளார்களோ அதை தான் நாம் பின் பற்ற வேண்டும். அதனால் நான் எதை கேட்டேனோ அதை கூறி விடுகின்றேன். அதற்கு பிறகு உங்களின் இஷ்டம் என கூறி. தலைவர் என்பவர் குறைஷிலிருந்து தான் இருப்பார் என்று பெருமானார் ஸல்...அவர்கள் கூறி இருக்கின்றார்கள் என கூற, அன்சாரிகள் ஒட்டு மொத்தமாக கிலாபத்தில் சொந்தம் கொண்டாடுவதில் இருந்து பின் வாங்கினார்கள். முஹாஜிரீன்களுக்கு கலிபா வை தேர்ந்தெடுக்கும் பொறுப்பையும் வழங்கி முஹாஜிர்கள் ஹழ்ரத் சித்தீகுல் அக்பர் ரழி... அவர்களை தேர்ந்தெடுத்தார்கள்.


பிறகு, நபி ஸல்... அவர்களின் புனிதமிகு உடலை எங்கு அடக்கம் செய்வது என்ற பிரச்சனையை எழுந்தது. அப்போது ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... அவர்கள் கூறினார்கள். நான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களிடம் இருந்து செவியேற்றேன், அதாவது நபிமார்களின் கப்ரு, அவர்களின் ருஹ் எங்கு எடுக்கப்படுகின்றதோ அங்கு தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று கேட்டு இருக்கின்றேன். அதனால் எனது மகள் ஆயிஷா ரழி.. யின் வீட்டில் தான் அடக்கம் செய்யப்படவேண்டும் என்று கூறிய போது அப்போதிருந்த லட்சக்கணக்கான சஹாபாக்களும் ஒரே மனதாக ஒத்துக்கொண்டு, யாரும் ஆட்சேபனை தெரிவிக்காமல் அடக்கம் நடை பெற்றது.

இந்த வஹ்ஹாபிகள் எங்கு பார்த்தாலும் மருமகன் அலீயை அழைத்து கப்ரை தரைமட்டமாக்க சொன்னார்கள் ஸல்... அவர்கள். அப்படி இருக்கும் போது இந்த கப்ரு வணங்கிகள் (அவர்களின் பாஷை) இப்படி கட்டி கொண்டு இருக்கின்றார்கள் என்று ஒரு கருத்தை சொல்வார்கள். ஆனால் நபிகள் ஸல்... அவர்களின் அடக்கம் நடை பெற்ற போது ஹழ்ரத் அலீ ரழி.. அவர்களும் இருந்தார்கள். அவர்களும் எதிர்ப்பு தெரிவிக்க வில்லை.

தர்காவின் அமைப்பு கூடாது என்றிருந்தால், நபிமார்களின் உயிர் எங்கு பிரிகின்றதோ, அங்கு கட்டிடங்கள் இருந்தால் அதை தரைமட்டமாக்கி விட்டு அங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்றல்லவா ஹதீஸ் வந்திருக்க வேண்டும். அப்படி வரமால் இருப்பதாலே ஹழ்ரத் அலி ரழி... அவர்களும் அங்கீகரித்தார்கள். மேலும் இந்த தர்காவின் அமைப்பில் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் புனிதமிகு ரவ்ழா ஷரீபில் இறங்கியதும், அவர்களை புனிதமிகு ரவ்ழா ஷரீபில் அடக்கம் செய்ததும் ஹழ்ரத் அலி ரழி... அவர்கள் தான் என்பதை வரலாறு பறை சாற்றிக்கொண்டிருக்கின்றது.

மேலும், இறை நேசர்களுக்கும் தர்கா என்னும் அமைப்பு பொருந்தும் என்பதற்கு ஆதாரம், நபிகளார் ஸல்... அவர்கள் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் கட்டிடத்தில் தாங்களும் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... அவர்களும், ஹழ்ரத் உமர் பாரூக் ரழி... அவர்களும் விரும்பி அப்படியே நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் நமக்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்றா பார்க்கின்றீர்கள். கட்டடம் கட்டுவதற்கு தான் ஆதாரம் இருக்கின்றது. கட்டிடம் கட்டிவிட்டு கப்ரை வைப்பதும், கப்ரின் மீது கட்டிடம் கட்டுவதும் மேற்கண்ட ஹழ்ரத் அபூபக்கர் ரழி... அவர்களின் ஹதீஸின் மூலம் ஒன்றாக தான் இருக்கின்றது.
இல்லை வெவ்வேறு என்று இந்த வஹ்ஹாபிகள் கூறுவார்களா? வெவ்வேறு தான் என்று இந்த வஹ்ஹாபிகள் கூறினால் அவர்களிடம் ஒரு கேள்வி (முதலில் கேட்ட இரண்டு சவாலுக்கே இன்னும் பதில் இல்லை, இதற்கு எப்பிடி பதில் கொடுக்கப்போகின்றார்கள்?). நீங்கள் வெவ்வேறு என்று சொன்னால், இறை நேசர்களுக்கு, அவர்களை கட்டப்பட்டிருக்கும் ஒரு கட்டிடத்தில் கப்ரு வைக்கலாமா? இதற்க்கு பதில் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
மேலும் களியக்காவிளையில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கட்டிடம் கட்ட சொன்னார்கள் என்று காட்டுங்கள் நாங்கள் கட்டுகின்றோம் தர்காவை, யார் எதிர்த்தாலும் கட்டுகின்றோம் என்று கூறினீர்களே PJ அவர்களே? தற்போது மர்பூ (مرفوع) ஆன ஹதீஸை காட்டி, நபிகளாரே கப்ரின் மீது கட்டடம் கட்டுவதற்கு ஆதாரமாக வார்த்தையை கூறியுள்ளார்களே. கட்டடம் கட்ட கூடாது என்றால், நபிமார்களின் உயிர் எங்கு பிரியுமோ, அங்கு கட்டிடம் இருந்தால் தகர்க்கப்பட்டு அங்கு அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றல்லவா வந்திருக்க வேண்டும். அப்படி வர வில்லையே. அப்படியானால் தற்போது நாங்கள் சுட்டிக்காட்டும் இடத்தில் வலிமார்களின் தர்காவை கட்டுவதற்கு தயாரா? PJ பதில் தர வேண்டும்.

இந்த ஹதீசையும் இவர்கள் மறுக்கலாம்! ஆனால் முஸ்லிம்கள் மறுக்க முடியாது. இது ஒரு பலவீனமான ஹதீஸ் என்ற நிலையை இவர்கள் எடுத்தாலும், இட்டுக்கட்டப்பட்டது என்ற நிலையை எடுத்தாலும், பலமானது தான் என்ற ஒரு நிலையை எடுத்தாலும், ஒன்று மட்டும் உறுதி, பெருமானார் ஸல்... அவர்களின் புனித பாதுகாக்கப்பட்ட உடல் அன்னை ஆயிஷா சித்தீகா ரழி... அவர்களின் இல்லத்தில் அடக்கப்பட்டிருக்கின்றது என்பது தான்.

மேலும் நபிமார்களின் கப்ருகளில் தர்கா கட்டலாம் என்பதற்கும், வலிமார்களின் கப்ரின் மீது தர்கா கட்டலாம் என்பதும், பொது கப்ரின் மீது கட்டிடம் கட்டக்கூடாது என்பதை நபிகளார் ஸல்... அவர்கள் தடுத்த அந்த விஷயத்தின் மூலமும் நிரூபிக்கப்பட்டது. ஆனால் அதே நேரத்தில் தர்கா என்பது பள்ளிவாசல் அல்ல. அங்கு தொழுகை நடை பெறுவதில்லை. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் அனுமதித்த ஜியாரத் தான் நடைபெறுகின்றது என்பதையும் நாம் விளங்கி கொள்ள வேண்டும். மேலும் தர்காவில் அனாச்சாரங்கள் நடைபெறுகின்றது என்று சொன்னால், அந்த அனாசாரம் எப்பிடி மற்ற இடங்களில் நடந்தால் அந்த அனாசாரத்தை மட்டும் எதிர்க்கின்றோமோ, அப்படி தர்காவிலும் அனாச்சாரங்கள் தடுக்கப்படவேண்டும். ஏனைய சுன்னத்தான காரியங்களை தடுக்க முயற்சிக்க கூடாது.

இவ்வளவு ஆதாரங்கள் இருந்தும், இந்த வஹ்ஹாபிகள் களியக்காவிளையில் நடந்த விவாதத்தில் மதினா ஷரீபையும் இடிக்க வேண்டும் என்று கூறினார். கட்டவும் கூடாது, கட்டி இருந்தால் இடித்து தரை மட்டமாக்க வேண்டும் என்று கூறினார். பின் இப்படி பட்ட ஹதீஸ்களை எல்லாம் என்ன செய்வது என்பதை PJ தான் கூற வேண்டும். (என்ன செய்வதா! என் கூமுட்டை அறிவிற்கு பொருந்த வில்லை அதனால் தூர எரிய வேண்டும். இது கூட தெரியாம என்னயா கேட்டுட்டு இருக்கே).

மேலும் நாம் வசீலா தேடுகின்றோம். அதை இன்றைய வஹ்ஹாபிகள் கொச்சைபடுத்துகின்றார்கள். அவர்கள் கேட்பார்களா? எத்தனை மொழியில், எத்தனை மனிதர்கள் கேட்டாலும், எந்த இடத்தில் இருந்து கேட்டாலும், இவர்கள் செவியுருவார்களா? அல்லாஹ்வின் புறத்தில் இருந்து பெற்றுத்தருவார்களா? என்று கிண்டல் அடிக்கின்றார்கள்! இவர்கள் நம்மை பார்த்து கேள்வி வைக்கவும் இல்லை, கொச்சை படுத்தவும் இல்லை, கிண்டல் அடிக்கவும் இல்லை. இவர்கள் நபிகள் ஸல்... அவர்களை நோக்கி கிண்டல் அடிக்கின்றார்கள், கொச்சை படுத்துகின்றார்கள், கேள்வி வைக்கின்றார்கள்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், என்னுடைய உம்மத்தில் ரஹ்மத் செய்யப்பட்டவர்களிடம் உங்களின் தேவையை கேளுங்கள் என்று கூறியுள்ளார்கள். (اطلب الحوائج ذوالرحمة من امتي)
மேலும் ஸல்... அவர்கள் கூறினார்கள் உங்களுக்கு ஒரு உதவி தேவை பட்டால் யா இபாதல்லாஹ் அஈநூநீ. (அல்லாஹ்வின் அடியாரே எனக்கு உதவி செய்யுங்கள்) (ان اراد عونا فليقل ياعبادالله اعينوني) என்று கூறுங்கள் என்று பெருமானார் ஸல்... அவர்கள் கூறி இருக்கின்றார்கள். அதனால் தான் கேட்கின்றோம்.


சுன்னத் ஜமாத்தாகிய நாம் அல்லாஹ்வும் ரசூலும் காட்டி தந்த வழியில் தான் நடக்கின்றோம். இதற்கு மாற்றமாக தான் வஹ்ஹாபிகளும் காசிமிகளும் நடக்கின்றார்கள். இவர்கள் பேசுவது நம்மை அல்ல. அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் ரசூலையும் என்பதை விளங்க வேண்டும். மேலும் அல்லாஹ் நம்மையும், நம் சந்ததியினரையும், உற்றார் உறவினரையும், உலக முஸ்லிம்கள் அனைவரையும் சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதன் படி நடக்க இன்று போல் என்றும் தவுபீக் செய்வானாக!

ஆமீன்! ஆமீன்!

யா ரப்பல் ஆலமீன்.