முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, February 12, 2013

தூத்துக்குடி விவாதம்

தொடருகின்றது வெற்றி...

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் எப்போதும் சத்தியத்திற்கே வெற்றியை தருவான். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் புனிதமிகு மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு பத்ரு போர் மூண்டது. பத்ரு போர் ஏற்படுவதற்கு முன் மக்காவில் இருந்து அபூ ஜஹல் ஒரு துஆ செய்தான். இறைவனே சத்தியத்திற்கு வெற்றி தா என்பது தான் அந்த து'ஆ. காபாவின் புண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால் அங்கு கேட்கப்படும் து'ஆ அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனால் அல்லாஹ் கேட்பது அபூ ஜஹ்ல் ஆக இருப்பினும், அபூ ஜஹ்லின் து'ஆவையும் ஏற்று கொண்டான், சத்தியத்திற்கு வெற்றியும் தந்தான். இதே போல் தான் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சத்தியத்திற்கே வெற்றி கிடைக்கும். 

அதனடிப்படையில் தான் சுன்னத் ஜமாத்திற்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்து கொண்டிருக்கின்றது. முதன் முதலில் வஹ்ஹாபிகளை களியக்காவிளையில் அவர்களே எதிர்பாராத நிலையில் மடக்கி பிடித்தோம். அங்கு மிகப்பெரும் வெற்றி. இந்த போலி தவ்ஹீத்களோடு இருந்தவர்களே இவர்கள் (போலி) தவ்ஹீத் வாதிகள் மிகப்பெரிய  தோல்வியை சந்தேகத்திற்கு இடமின்றி சந்தித்தார்கள் என்று ஒத்துக்கொண்டு அவர்களின் இணைய தளங்களிலேயே இதை பதிப்பித்து இருந்தார்கள். தொடர்ந்தது சென்னை விவாதம். இதில் அல்லாஹ்விற்கே உருவத்தை கற்பிக்கின்றார்கள் என்று வெளிப்படுத்தியதை உணர்ந்த வஹ்ஹாபி தொண்டர்களே, என்னங்க இது சுன்னத் ஜமாத்தினர் தான் இந்த கருத்தை சொல்கின்றார்கள்  என்று நினைத்து கொண்டிருந்தோம், நீங்களா இதை கூறுகின்றீர்கள் என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இவர் ஆறு மாத காலம் வனவாசம் சென்றது. தற்போது தூத்துக்குடி விவாதம்.  

இந்த விவாதத்தை ஏற்பாடு செய்வதற்குள் சுன்னத் ஜமாத்தினரான நாங்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? களியக்காவிளை விவாதத்திற்கு முன்:  என்னங்க நாங்கள் விவாதத்திற்கு அழைக்கின்றோம், இவர்கள் தான் வருவதில்லை. சத்தியம் சுன்னத் ஜமாஅத் ன் பக்கம் இருந்தால் விவாதத்திற்கு வர வேண்டித்தானே என்று ஒரு பக்கம் சுன்னத் ஜமாத்தின் ஆலிம்களை பற்றி இட்டுக்கட்டிய பொய்யை பொதுமக்களிடம்  கூறி விட்டு, மறு பக்கம் ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் வரும்போது ஷைத்தான் ஓடுவதை போல ஓடி விடுவது வழக்கமாக வைத்து இருந்தார்கள். ஆனால் நாம் விரித்த வலையில் அல்லாஹ் ஜல்... சிக்க வைத்தான். அதற்க்கு பிறகு நாம் விவாதத்திற்கு அழைத்து கொண்டு இருக்கின்றோம். தற்போது விவாதம் என்பதை பற்றி வாயே திறப்பதில்லை. நாங்கள் விவாதத்திற்கு அழைக்கவில்லையே, நீங்கள் தானே அழைக்கின்றீர்கள் என்று  சென்னை விவாதத்தின் போது கூட  பொய்யன் ஜைனுலாபிதீன்கூறினார். அப்படி தான் இந்த விவாதமும்.

இந்த விவாதத்தை பற்றிய அழைப்பு சென்னை விவாதத்திற்கு முன்னே விடுக்கப்பட்டது. ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்கள். யாரோ எங்கோ கொடுத்த விவாத அழைப்பு கடிதத்தை ஏற்று சென்னை விவாதத்தில் மாட்டியவர்கள், நேரிடையாக இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது பேச்சே பேசியது இல்லை. ஏன் தெரியுமா?!?!?!?!? தலைப்பு அப்படி.... அப்படி என்ன தலைப்பு? புனித மிகு குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளதா?

கேள்வி: அது என்னங்க எழுத்து பிழை? முஸ்லிம்களா கூறுவது?
பதில்: இல்லைங்க அது தான் இல்லைங்க, இது யூதர்களின் கை கூலிகள் கூறுவது.

கேள்வி: எங்கு கூறினார்கள் ?
பதில்: இவர்கள் எழுதி இருக்கும் தர்ஜமாவில் கூறினார்கள்.

கேள்வி: ஏன் கூறினார்கள்?
பதில்: யூதர்களிடம் இருந்து பணம் பெற கூறினார்கள்.

கேள்வி: ஏன் அபாண்டமாக முஸ்லிம்கள் மீது குறை கூறுகின்றீர்கள்?
பதில்: ஏங்க, குர்ஆனில் பிழை இருக்கின்றது என்று முஸ்லிமாக கூறுவான்? திருத்தப்பட்ட தவ்ராத்தையும், இன்ஜீலையுமே கூட இன்னும் அது இறை வேதம் என்று தானே அந்தந்த மதத்தவர்கள் கூறுகின்றார்கள். இன்ஜீல் கூட பொய் என்று இவர் விவாதம் எல்லாம் பண்ணினாரே! குர்'ஆனிலும் தப்பு இருக்கின்றது என்று குர்'ஆனை நம்பும் முஸ்லிம் எப்பிடி சொல்வான்?


கேள்வி: இவர்களோடு இருக்கின்றவர்கள் அனைவரும் இந்த கருத்தை ஒத்து கொள்கின்றார்களா?
பதில்: ஏன் இல்லை. இவர்கள் அனைவரும் பீ ஜே வை தானே இமாமாக ஏற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேறு கருத்து இருக்குமா என்ன?

கேள்வி: இவர்கள் சுயமாக தானே ஆய்வு செய்து பின்பற்றுகின்றார்கள்?
பதில்: சுய அறிவு இவர்களுக்கு எங்கே இருக்கின்றது. இவர்கள் எழுதியது தான் எங்கள் கருத்தும் என்று கிடையில் இருக்கும் ஆட்டை போல, பூம் பூம் மாடு போல அல்லவா கலீல் ரசூல் என்பவர் விவாத ஒப்பந்தத்தில் கூறினார். 

கேள்வி: யாரும் எதிர்ப்பு தெரிப்பதில்லையா?
பதில்: எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள், அப்படி எதிர்ப்பு தெரிவித்து விட்டால் உள்ளே இருக்க விடமாட்டார்கள். இவர்களோடு இருந்து, இவர்களை விட்டு பிரிந்தவர்கள் எல்லாம் இந்த கருத்தை எதிர்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சிலர் இந்த கருத்தை எதிர்த்து வெளியேவும் வந்து இருக்கின்றார்கள்.


நமது நிலைப்பாடு புனிதமிகு குர்'ஆனில் எழுத்து பிழையே இல்லை. ஆனால் (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு, குர்'ஆனில் எழுத்து பிழை இருக்கின்றது. பாருங்கள் இதுதான் தூய வடிவின் லட்சணம். ஆலிம்களை குறை கூறினார்கள், பிறகு இமாம்களை இழிவு படுத்தினார்கள், பிறகு வலிமார்களை திட்டினார்கள், பிறகு சஹாபா பெருமக்களை கீழ்த்தரமாக பேசினார்கள். அதற்கு பிறகு நமது உயிரினும் மேலான நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மீது கை வைத்தார்கள். அது படிப்படியாக உயர்ந்து காபிரானார்கள். முதலில் நம்மை போன்றவர்கள் என்றார்கள், பிறகு பலகீனமான ஹதீதை ஏற்க கூடாது என்றார்கள். பிறகு நபி அவர்களுக்கு உலக விஷயத்தில் ஞானம் இல்லை என்றார்கள். பிறகு பலமான ஹதீதுகளை கூட ஏற்க கூடாது என்றார்கள், அதற்க்கு பிறகு நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்றார்கள், பிறகு நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்று கூறி இவர்கள் காபிரானார்கள். 

தற்போது அல்லாஹ்வின் வேதமாம் குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளது என்ற நச்சு கருத்தை நுழைக்க பார்க்கின்றார்கள். சற்று சிந்தியுங்கள். அல்லாஹ் கூறுகின்றான், இந்த வேதம் (மகத்தானது, அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது) அதில் சந்தேகமே இல்லை. (2 : 2 ). இப்படி இவர்கள் கிளப்பி விடுவது இறை வேதத்தில் சந்தேகம் வருமா வராதா? கண்ணியம் நிறைந்த இஸ்லாமிய பெருமக்களே, இதற்கு இவர்கள் கூறும் காரணம் மிக அலாதியானது. குர்'ஆன் என்பது ஓசை வடிவில் தான் வந்தது. எழுத்தில் வரவில்லை. அதனால் எழுதியவர்கள் தப்பு தப்பாக எழுதி வைத்தார்கள் என்று வாதிடுகின்றார்கள். 

ஓசையில் தான் குர்'ஆன் வந்தது என்ற காரணத்தால் தான் போலும் ஒழு இல்லாமல் இருப்பவர்கள்,  குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் உள்ள பெண்கள், பேறு கால உதிரப்போக்குள்ள பெண்கள், காபிர்கள் என அனைவரும் குர்'ஆனை தொடலாம் என்று பத்வா கொடுத்தார்கள். அது எல்லாம் இருக்கட்டும், ஓசை வடிவில் இருப்பது தான் குர்'ஆன் என்று கூறுபவர்கள் ஏன் குர்'ஆனை அச்சு பிரதியாக வெளியிட வேண்டும்? இந்த கேள்வி விவாதத்தில் வைக்கப்பட்டது, பதில் இல்லை. ஓசை வடிவில் தான் பாதுகாக்கப்படுகின்றது, ஏட்டு வடிவில் பாதுகாக்கப்படவில்லை என்று கூறும் இவர்கள் கூட்டத்தில் உள்ள ஹாபிழ்கள் அனைவரும் ஏட்டு பிரதியை தான் பார்த்து மனனம் செய்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இதை பற்றி வினா எழுப்பப்பட்ட போதும் பதில் இல்லை. 

குர்'ஆன் எழுத்தில் இல்லை, ஆனால் நாங்கள் குர்'ஆனை எழுத்து வடிவில் வெளியிட்டு காசு சம்பாதிப்போம் என்று கூறாமல் கூறுகின்றார்கள். எங்கும் நமக்கு (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) பங்கு வேண்டும் என்பது தான் நமது  (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) நோக்கமே தவிர, மார்க்கம் இவர்களது நோக்கம் கிடையாது என்பது தான் உண்மை.

இது போன்ற கேள்விகளையெல்லாம் இவரது ஊரிலேயே (தொண்டி அல்ல, தெண்டியில்) வைத்து ஜாக் அமைப்பை சேர்ந்த முஜீபுர் ரஹ்மான் என்பவர் விவாதம் செய்த போது ஏதோ மழுப்பியவர்கள் இங்கு ஒன்றிற்கும் பதில் கூற வில்லை என்பது தான் உண்மை. பல கேள்விகள் வைக்கின்ற போது, அப்பாஸ் அலி என்பவர் என்ன சொன்னார் தெரியுமா? இதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்று அப்பட்டமாக, இவர்களுக்கு கிடைத்த மூன்றாவது வாய்ப்பிலேயே கூறினார். அப்படியானால் எது உண்மை புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்டால் பதில் சொல்வது தான் விவாதம். அதை விடுத்து விட்டு நமது தரப்பு கேள்வி கேட்கும் போது, இந்த வாதம் எப்போது வைப்பது என்பது நாங்கள் முடிவு செய்வோம், நீங்கள் முடிவு செய்ய தேவை இல்லை என்று கூறுகின்றார்கள் என்றால் எப்பிடி பட்ட தோல்வியை சந்தித்திருக்கின்றார்கள். 

அங்கு வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், இவரது தர்ஜமாவில் இவர் சுட்டி காட்டிய வார்த்தையை பற்றியே கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், இவர்களை பின்பற்றி கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை தங்கள் பக்கம் தக்க வைத்து கொள்ள எப்போதும் இவர்கள் செய்யும் திருப்பு வாதம் செய்ய தொடங்கினார்கள். என்ன தெரியுமா? பிக்ஹு கிதாபை எடுத்து வாதம் புரிய தொடங்கினார்கள். 
 
அய்யா இது பிக்ஹு பற்றிய விவாதம் இல்லை என்று கூறிய போதும் இவர்கள் சென்னையில் எப்பிடி குர்'ஆன் தப்சீர் என்ற தலைப்பின் போது பிக்ஹை எடுத்தார்களோ அப்படியே அதிலேயே நின்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பதற்கு இதுவும் சாட்சி. எந்த விவாதத்தை எடுத்தாலும் இவர்கள் பிக்ஹு கிதாபையே எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். மக்கள் ஏமாளிகள் இல்லை. இன்னும் ஏமாந்து கொண்டு இருக்க. ஆக எந்த கேள்விக்கும் பதில் இல்லை என்பது தான் உண்மை. 

நாங்கள் விவாதத்தில் தோற்றுவிட்டோம் வஹ்ஹாபிகள் ஒப்புதல்:

இவர்கள் தெருவை நாறடிக்க போஸ்டர்கள் ஓட்டுவது வழக்கம். அதில் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் என்பதற்கு மாற்றமாக மக்கத்து காபிர்கள் சொல்வதை போல இறைவனே உன் திருப்பெயரால் பிஸ்மிகல்லாஹும்ம என்று பொருள் தரும் படியான அர்த்தமான இறைவன் திருப்பெயரால் என்று அச்சடிப்பது வழக்கம். தூத்துக்குடி விவாதத்திற்கு முன் கர்த்தரின் திருப்பெயரால் என்று மேலப்பாளையத்தில் அடித்து இருந்தார்கள் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

2010 ம் வருடம் சென்னையில் நடந்த விவாதத்திலும் 2012 ம் வருடம் தூத்துக்குடியில் நடந்த விவாதத்திலும் இறைவனின் திருப்பெயரால் என்று தாங்கள் செய்யும் இந்த மக்கத்து காபிர்களின் வழி முறையை நியாயப்படுத்திய இந்த கருத்து காபிர்கள் தற்போது தங்கள் நிலை தப்பு என்பதை ஒப்பு கொண்டு இருக்கின்றார்கள். கீழே பாருங்கள்.
 


 
இதுவும் இவர்கள் விவாதத்தில் தோற்று விட்டார்கள்  என்று இவர்கள் கூறும் வாக்குமூலமாகவே இருக்கின்றது. மேலும் இவர்களின் தர்ஜமா 10 ம் பதிப்பில் ஏராளமான மாற்றங்கள் நம் இமாம்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் மாற்றி இருக்கின்றார்கள், இதுவும் இவர்கள் அப்பட்டமாக தோல்வியை ஒப்பு கொண்டதற்கு அடையாளமாகும்.

மேலும் இந்த நேரத்தில் இரண்டு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஒன்று, இந்த விவாத ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் போது இவரது தர்ஜமாவை தான் நாங்கள் ஏற்கின்றோம், அதே போல இந்த ஜமாத்தின் தொண்டர்களில் இருந்து பொறுப்பில் உள்ளவர்கள் வரை யார் மார்க்கம் பேசினாலும் அதற்கு எங்கள் ஜமாஅத்தே பொறுப்பாளி என்று கலீல் ரசூல் என்பவர் கூறினார். இதன் மூலம் ஒரு வாக்கு மூலத்தை பதிவு செய்து இருக்கின்றார். அதாவது நாங்கள் சுயமாக சிந்திப்பவர்கள் அல்ல, பீ ஜே வின் முகல்லிதுகள் தான், கிடையில் திரியும் ஆடுகள் தான். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் கலீல் ரசூல் அவர்களே. நன்றி உங்கள் வாக்கு மூலத்திற்கு.


இரண்டாம் விஷயம்.  ஜமாலி ஹழ்ரத் அவர்களிடம் விவாதம் செய்து தோற்று போகும் காலமெல்லாம் இருந்தது. ஜமாலி ஹழ்ரத் அவர்களே இந்த பீ ஜே வை விட மிகவும் இளமையானவர்கள். ஆனால் தற்போது இந்த பீ ஜே சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டிருப்பது, பீ ஜே சங்கரன் பந்தல் மதரசாவில் முதல்வராக பொறுப்பேற்று சில காலம் கடந்த நிலையில் பிறந்த ஒரு மிக இளம் மௌலவி யிடம். இன்னும் எத்துனை சிறிய ஆலிம் பெருமகனார்களிடம் சிக்க போகின்றார், கேவலப்பட போகின்றார் என்பது தெரியவில்லை. அதற்குள் திருந்த வேண்டுமாய் கேட்டு நம்முடைய இந்த வெற்றி தகவலை முடித்து கொள்கின்றோம்.  மேலதிக தகவல் மிக விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்...

இந்த கூட்டத்தாரை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! 

ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!
 
யா ரப்பல் ஆலமீன்.
 
வஸ்ஸலாம்.

மதுரை நாபிஈ