முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, July 31, 2010

PJ மற்றும் TNTJ வின் கிறிஸ்தவ பயணம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்... அவர்களும் எது ஹலால் எது ஹராம் என்று காட்டியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில் انما حرم عليكم الميتت والدم ولحم الخنزير وما اهل به لغير الله என்று கூறிகிறான். அதாவது உங்களுக்கு தானாக செத்த பிராணிகள் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை), இரத்தம், பன்றியின் இறைச்சி மேலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது அனைத்தும் ஹராம்(விளக்கப்பட்டது) என்று கூறுகிறான். செத்தவைகளில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஹதீஸின் மூலம்
மீனை விதிவிலக்கு ஆக்கினார்கள். கடலில் ஒழு செய்யலாமா என்று கேக்கும் போது ஆமாம் கடலில் ஒழு செய்யலாம் அதில் இருக்கும் மீன் கூட ஹலால் என்று கூறி செத்தவைகளில் மீனை சாப்பிட அனுமதி வழங்கினார்கள்.

மேற் கூறப்பட்ட விஷயங்களில் மீனை தவிர ஏனைய விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல்... அவர்களோ அல்லாஹ்வோ எவ்வித விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் ஒரு கூட்டம் வந்தது அதற்கு ஒரு மதி கேட்ட தலைவர் வேற. அந்த தலைவர் கூறுகிறார், அல்லாஹ் பன்றியின் இறைச்சி மட்டும் தான் ஹராம் என்று குர்ஆனில் சொல்லி உள்ளான் அதனால் ஏனைய எலும்பு, குடல், ஈரல், போன்றவற்றை பொருத்தலாம், சாப்பிடலாம் என்று கூறி உள்ளதன் மூலம் கிறிஸ்தவர்களை போன்று நாமும் பன்றியை சாப்பிடுவோம் என்ற நிலைக்கு வந்து உள்ளார்கள். இப்படி இவராக சொல்லுவதற்கு யாரு அதிகாரம் கொடுத்தது, அல்லாஹ்வா? இல்லை அவனின் தூதர் நாயகம் ஸல்... அவர்களா? மார்கத்தில் விதி விலக்கு அளிக்க இவர் யார்?

மார்க்கம் என்ன இவரின் பாக்கெட் இல் தவழும் யூத கிறிஸ்தவர்களின் பணமா, தேவைக்கு ஏற்றாற்போல் செலவு செய்ய? இது நபிகளாரின் மார்க்கம், அந்த நபியை கேவலப்படுத்தி அவர்கள் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எத்தி வைக்கும் பொறுப்பு மட்டும் தான், அவர்கள் மறைவிற்கு பின் அந்த பொறுப்பு இல்லை என்று கூறி, நபிகளாரிடம் இருந்து அந்த பொறுப்பை தான் எடுத்து கொள்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது இவருக்கு? இப்படித்தான் நபிகளாருக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று முனாபிக்குகளும், அக்காலத்து கிறிஸ்தவர்களும், இக்காலத்து கிறிஸ்தவர்களும் நபிகளாரை ஏசி பேசி திரிகிறார்கள். அவ்வழியில் சென்று கொண்டிருக்கிறார் PJ என்பது அல்லாஹ்வின் வசனத்திற்கு புது கருத்தை புகுத்தியதன் மூலம் தெரிகிறது.

நாம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுத்து வலிமார்களுக்கோ, நம் முன்னோர்களுக்கோ ஆட்டையோ, மாட்டையோ, ஒட்டகத்தையோ ஈஸால் செய்தால் ம்ம்மம்மம்ம்ம்ம் அல்லாஹ்வின் பெயரை சொல்லாமல் அறுத்தால் சாப்பிட கூடாது என்று நமது மக்களை குழப்புவார்கள்.

பன்றியை கத்தியால் அறுக்க முடியாது, பன்றியின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டு தான் கொல்லுவார்கள். இஸ்லாம் கூறும் வழிமுறை இல்லாமல், அல்லாஹ் அனுமதி தராமலும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்... அவர்கள் அனுமதி தராமலும், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமலும், தண்ணீர் ஊற்றாப்படாமலும், கத்தியால் அறுக்கப்படாமலும் சாகடிக்கப்படுகிற பன்றியின் ஏனைய உறுப்பை சாப்பிடலாம் என்று பத்வா வழங்கி நாங்கள் கிறிஸ்தவர்கள் வழி நடப்பவர்கள் என்று மார்தட்டுவதை பார்க்கின்றோம்,

இறைநேசர்களை திட்டிய வாய்க்கு அல்லாஹு ஹக் சுபுஹானஹு தஆலா பன்றியின் எலும்பும், ஈரலும், குடலும், தான் தருவான், பின்னே என்ன தேனும் பாலுமா தருவான்?

மேலும் ஹதீஸில் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக வருவது குர்ஆனிற்கு மாற்றம் அதனால் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளமாடோம் என்று சொல்பவர்கள், (குர்'ஆனிற்கு ஹதீஸ் மாற்றம் என்ற உன்னத(!?!?!?!?!?) கருத்தை முன் வைத்து தான் ஒரு அஹ்லுல் குர்'ஆன் என்பதையும் தீர்க்கமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்! அதனால் குர்'ஆனில் வரும் கருத்தை மட்டும் எடுப்பதால்) இனிமேல் கீழ் கண்ட விஷயங்களையும் சீக்கிரமாக சொல்லலாம், அதனால் சிறிது கவனமாக இருக்கவும். அவை,
 • நாய் சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் நாய் கறி சாப்பிடலாம்,
 • மூத்திரத்தை குடிக்க கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் குடிக்கலாம்,
 • மலத்தை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,
 • எலி மற்றும் பெருச்சாளி சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,
 • பூனை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,

இந்த வரிசையில் சீனா, ஜப்பான், போன்ற நாடுகளில் சாப்பிட்டு ஏப்பம் விடும் விலங்கினங்கள்

 • பாம்பு சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் பாம்பு வறுவல் சாப்பிடலாம்,
 • பல்லி சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் பல்லி 65 சாப்பிடலாம்,
 • தவளை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் தவளை ரோஸ்ட் சாப்பிடலாம்,
போன்ற அதிரடி அறிவிப்புகள் வன வாசம் சென்றுள்ள PJ நகரவாசம் வரும் போது கிடைக்கலாம். அதனால் இஸ்லாமிய சகோதர்களே ஜாக்கிரதை.

மேலும் ஒரு மனிதன் உருவாக ஒரு ஆண் ஒரு பெண் தேவை, குர்ஆனில் ஈசா அலை... மட்டும் ஆண் துணை இல்லாமல் பிறந்தார்கள் என்று வருகிறது, இது உலக நியதிக்கு மாற்றமானது அதனால் இந்த வசனத்தையும் ஏற்க மாட்டோம் என்றும் மிகவும் விரைவில் சொல்லலாம், காரணம் இவர்கள் கிறிஸ்தவ வழியை பின்பற்றுபவர்கள். இஸ்லாமியர்களே ஜாக்கிரதை இவர்கள் உங்கள் ஈமானை பாழ் படுத்தி விடலாம்.

மேலும் இவர்கள் கிறிஸ்தவ வழியை பின்பற்றுபவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று இவைகள் தங்களின் நரை முடிகளை டை யின் மூலம் கருப்பாக்கி உள்ளார்கள். இஸ்லாமியர்களின் வழிமுறையான மருதாணியை விட்டுவிட்டு கிறிஸ்தவர்களின் கலாச்சாரமான டை ஐ உபயோகித்ததன் மூலம் நாங்கள் எங்களுக்கு தோது எதுவோ அதை தான் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள்.

இவர்களின் கிறிஸ்தவ முகத்தை பன்றி மற்றும் டை யின் விஷயங்களின் மூலம் கிழித்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்,

மதுரை நாபிஈ


Friday, July 30, 2010

யூதர்களின் கைப்பாவை PJ

இந்த உலகில் முஸ்லிம்களாகிய நாம் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தது ஒரு காலம். தற்போது முஸ்லிம் களை ஒரு தீவிரவாதியாகவோ, பிரிவினைவாதியாகவோ மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு காரணம் முஸ்லிம் என்னும் பெயர் தாங்கிகள் தான். உதாரணமாக ஈராக் இல் சதாம் ஹுசைன் ஆட்சியில் இருந்தார், நல்லவரா தீயவரா என்ற சர்ச்சை ஒரு புறம் இருந்தாலும் அமெரிக்க படைக்கு அங்கு தளம் அமைக்க ஆதரவு தந்து அப்பாவி மக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு ஈராக் தேசம் என்றென்றும் தலை நிமிராமல் ஆக்கிய பெருமை குர்திஷ் இன மக்களை (முஸ்லிம் பெயர் தாங்கிகள்) சாரும். அதே போல ஆப்கானிஸ்தானும் அமெரிக்கா வின் சூழ்ச்சிக்கு பலியானது கர்சாயின் மக்கள். ஆப்கானிஸ்தான் நிர்முலம் ஆகியதற்கு காரணமாக திகழ்ந்தார்கள். ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் முஸ்லிம்கள் இரண்டு பட்டால் அமெரிக்கா விற்கு கொண்டாட்டம்.

மேற்கண்ட விஷயங்கள் உலகம் சம்பந்தப்பட்டது. நாம் சொல்லும் மூன்றாம் விஷயம் நம்முடைய மார்க்கம் சம்பந்தப்பட்டது. உலக விஷயத்தில் ஒரு நிலையை எடுக்க அம்மக்களுக்கு ஒரு உரிமை இருக்கலாம், ஆனால் மார்க்க விஷயத்தில் நபிகள் கோமான் ஸல்... அவர்கள் சொல்லிவிட்டதன் பிறகு அதை மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தவ்ஹீத் என்ற பெயரை வைத்து கொண்டு ஷிர்க் செய்து கொண்டிருக்கும் PJ வை யூதர்கள் தங்கள் கையில் வைத்துகொண்டு ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் வேதங்களின் விஷயம் பற்றி கூறலாம்.

அல்லாஹ் தவ்ராத் வேதத்தை தன்னுடைய கையால் எழுதினான் அவனாக மூசா அலை.... அவர்களை அழைத்து அவனே தந்தான் என்று கூறி, அதனால் அவ்வேதம் தான் (குர்ஆனை விட) சிறந்தது என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார். ஒரு முஸ்லிம் இப்படி சொல்லலாமா? அப்படி என்றால் இவர்களுடைய நிலை என்ன? யூதர்களின் கைப்பிடியில் வசமாக சிக்கி இருக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

நம்முடைய விளங்குதல் எப்படி என்றால் மூசா அலை.... அவர்களை வந்து சட்ட திட்டம் வாங்கி செல்லு மாறு அல்லாஹ் கட்டளை இட்டான். 40 நாட்கள் நோன்பு இருந்து, சென்று வாங்கி வந்தார்கள். எல்லா நபிமார்களுக்கும் இப்படித்தான் ஏதோ ஒரு கட்டளையை பிறப்பித்து வேதத்தை வழங்கினான். ஒரே நேரத்தில் அவர்களுக்கு முழு சட்டமும் அமுல் ஆனது. ஆனால் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு சிறுக சிறுக, தேவைக்கு ஏற்றவாறு, மனம் நோகாத வாறு, அவர்கள் திருப்தி அடையும் வரை(وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضى) குர்ஆனை இறக்கினான்.

23 வருடங்கள் சட்டம் இறங்கியது. அதுவும் எதுவும் விசேஷமான செயல்கள் மூலாமாகவா? இல்லையே

நபிகள் நாயகம் ஸல்... குகையில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, போரில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, பயணத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, வீட்டில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, வெளியில் இருந்தாலும் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, கூட்டத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, தனித்து இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, தூக்கத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, விழிப்பில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, ஆக மொத்தம் எந்த ஒரு விசேஷ செயலும் செய்யாமல் குர்ஆன் இறங்கியது.

ஆக அல்லாஹ் குர்ஆனிற்கு கட்டளை இட்டான், குர் ஆன், என்னுடைய நபி மக்காவில் இருந்தால் மக்காவில் இறங்கு, மதினாவில் இருந்தால் மதினாவில் இறங்கு, அதனால் தான்هذه مكية هذه مدنية (இது மக்காவில் இறங்கிய வசனம், இது மதினாவில் இறங்கிய வசனம்) என்று குறிப்பிடப்பற்றுள்ளது.

என்னுடைய நபி ஸல்... அவர்களை அலைக்கழிக்க கூடாது, அவர்கள் எங்கே இருக்கின்றார்களோ அங்கே நீ செல்லு என்று அல்லாஹ் சொல்லவதை போல இருப்பதை புரியாமல் யூதர்களின் பிடியில் பணத்திற்காக அகப்பட்டு கொண்டார். அவரின் மறுமையை அல்லாஹ் அழித்துவிட்டான். காரணம் மூசா அலை... அவர்களை இப்படி உயர்த்தி பேசிய இவர் நமது உயிருக்கு உயிரான, உயிருக்கும் மேலான நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள், யார் இந்த சத்திய மார்கத்தை இவ்வுலகில் கொண்டு வந்தார்களோ, எந்த நபிக்கு இந்த மார்க்கம் சொந்தமோ, ஏனைய நபிகள் ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டார்கள், நான் இவ்வுலகு முழுதிற்கும் அனுப்பப்பட்டேன் (புகாரி) என்று கூறிய அந்த நபியே மார்கத்தில் மாற்றி மாற்றி பேசினார்கள் என்று சென்னையில் நடந்த இரண்டாவது விவாதத்தில் அப்பட்டமாக கூறினார். இதன் மூலம் மார்க்கம் இவர்களிடம் இல்லை, யூதர்களின் பணம் தான் உள்ளது என்பதும், ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட மூசா அலை... அவர்கள் நபிகளாரை விட சிறந்தவர்கள் என சொல்லியதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தில் இல்லை என்று காட்டி உள்ளார்கள், அவர்களுக்கு அவர்களின் உண்மை முகத்தை காட்டியதற்காக நன்றி.

அபூத் தைய்யார்
PJ வின் மத மாற்றம்

1400 ஆண்டுகளுக்கு முன் நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் கட்டப்பட்ட இஸ்லாம் என்னும் கோட்டை அவ்வப்போது செங்கல் செங்கல்லாக பெயர்த்து எடுக்க முயற்சி செய்யப்பட்டு அது உண்மையான சுன்னத் ஜமாஅத் தினர் மூலம் தடுக்கப்பட்டு கொண்டே வந்து கொண்டே இருக்கின்றது,

1. காரிஜியாக்கள்
2. ஷியாக்கள்
3. கத்ரியாக்கள்
4. கர்ராமியாக்கள்
5. மு'தஜிலாக்கள்

இப்படி பட்ட ஆயிரக்கணக்கான வழிகேட்டு பிரிவுகள் வரிசையில் தவ்ஹீத் ஜமாத்தினர், எந்த ஒரு பிரிவினரும் கூறாத அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற கொள்கையை புனித இஸ்லாத்தில் நுழைவித்து உள்ள (போலி)தவ்ஹீத் வாதிகள் தாங்கள் காபிர்கள் என்று சொல்லாமல் சொல்லி கொண்டு திரிகிறார்கள் வெக்கம் கேட்ட ஜென்மங்கள்.

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்ற இக்கருத்தை நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் சொல்லவே இல்லை , சஹாபாக்களும் சொல்லவே இல்லை, எந்த இமாம்களும் சொல்லவே இல்லை, அப்படிப்பட்ட ஒரு கருத்தை கூறும் பொது பல வஹ்ஹாபிகளே சுன்னத் ஜமாஅத் கொள்கை பக்கம் வந்து விட்டார்கள்,

மேலும் வழிகேடர்களின் தலைவன் PJ இந்த விஷயத்திற்காக 6 மாதம் வன வாசம் சென்றுள்ளான். இப்படியும் சொல்வார்களா என்று யாருக்கேனும் சந்தேகம் தோன்றினால் அவர்கள் செய்த விவாதம் எந்த ஒரு மாற்றமும் செய்யப்படாமல் பார்க்க இங்கே கிளிக் செய்யவும், மேலும் http://www.jamalinet.com என்னும் இணையத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதை பார்க்கும் போது இவர்களின் உண்மை முகம் கண்டு இவர்களின் சகவாசம் வைக்காமல் சுன்னத் ஜமாஅத் தான் உண்மையான கொள்கை என்று தெரிந்து கொள்வீர்கள்.

மதுரை நாபிஈ

Wednesday, July 28, 2010

போலி தவ்ஹீதின் உண்மை முகம்

சென்னை விவாதம் சுன்னத் ஜமாஅத்திற்கு வெற்றி - ஓர் ஆய்வு

தவ்ஹீதை போதிக்க வந்த இஸ்லாத்தில் உருவ வழிபாடா? நவூதுபில்லாஹ்! இதை பின்பற்ற ஒரு வழிகேட்டுக்கூட்டமா? இதற்கு ஒரு வழி கெட்ட தலைவரா? இது தான் தூய மார்க்கம் பேணும் லட்சணமா இல்லை தூய இஸ்லாத்தின் கொள்கையை தகர்க்கும் கொள்கையா? அல்லாஹ்விற்கு உருவமா? யூதர்களின் கைப்பாவைகள் தான் இவ் வாஹ்ஹாபிகள் என்பது மிகவும் சரியாக தெரிகிறது, அல்லாஹ்விற்கு உருவம் இல்லை என்று பி ஜே ஒரு ஆதாரமும் சொல்லவே இல்லேயே? சில இடத்தில் நம்முடைய அர்த்தம் கொடுத்த பீ ஜே விற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை என்று சொல்லாமல் சொன்னதற்கு நன்றி, அதாவது முதலாம் வானத்திற்கு அல்லாஹ் வரவில்லை அது அருள் என்பதும், அவர்களுடைய தர்ஜுமா வில் கண்ணிற்கு பார்வை என்று ஒத்துக்கொண்டதற்கும், மறுமையில் எல்லாம் அழியும் அல்லாஹ்வின் முகம் மட்டும் இருக்கும் என்பதற்கு சுன்னத் ஜமாத்தின் அர்த்தமான உள்ளமை என்று ஒத்துக்கொண்டதற்கும், நன்றி. அதே போல மரியாதை இல்லாமல் பேசிய நபரின் கேள்வி யை யே புறக்கணித்து வேறு நபரை கேள்வி கேட்க வைத்து அதற்கு பதில் அளித்த ஜமாலி இது தான் நபியில் வழி என்பதை காட்டி விட்டார், பீ ஜே யோ ஒருமையில் திட்டியவனுக்கு பதில் கூறி எங்களுக்கும், நியாயத்திற்கும் சம்பந்தம் இல்லை என்று நிரூபித்து இருக்கின்றார், நபி வழிக்கும் எங்களுக்கும் தொடர்பே இல்லை என்றும் சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்.


அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சென்னை விவாதத்தில் வாதிட்டவர்கள் தங்களுடைய நிலைப்பாட்டில் தடுமாற்றம் உள்ளவர்கள் என்று நன்றாக தெரிகிறது, காரணம் ஒரு மாற்று மத சகோதரர் இஸ்லாத்தில் உருவ வழிபாடு கிடையாது உட்பிரிவு நிறைய இருக்கு அதை பற்றி என்று கேட்கின்றார், அதில் ஒரு இடத்திலும் அல்லாஹ்விற்கு உருவம் இருக்கின்றது என்று சொல்லவே இல்லை,அந்த கிளிப் ஐ பாருங்கள்,

மேலும் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார், அதை பார்க்கும் போது இவர்களின் 25 வருட பொய் பிரசாரம் தோல்வியில் முடிந்து இருக்கிறது என்பது அப்பட்டமாக தெரிகிறது, இஸ்லாத்திற்குள் புகுத்திய நச்சுக்கருத்துக்கள் மக்கள் மத்தியில் எடுபடவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. மக்கள் தற்போது இந்த இயக்கத்தில் இருந்து வெருண்டு ஓடுகிறார்கள் என்பது இவர்களின் அறிவிப்பிலிருந்து தெரிகிறது.

உடல் சுத்தம் இல்லாவிட்டாலும் குர்ஆனை தொடலாம் இது தான் தூய மார்க்கமா?, தூய மார்கத்தை கிண்டல் செய்வதை போல் உள்ளது. அதே போல அல்லாஹ்வை மட்டும் வணங்க வேண்டும் வலிமார்களை கண்ணியம் செய்தால் தவறு என்று சொல்லும் (போலி)தவ்ஹீத் வாதிகள், அல்லாஹ்விற்கு உருவம் கொடுத்து தவ்ஹீதிற்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை, உண்மையான ஷிர்க் வாதிகள் நாங்கள் என்று மார்தட்டுவதை பார்க்க பார்க்க இப்படி தான் அல்லாஹ் கடைசி கால மக்களை வழிகெடுப்பான்.

மக்களுக்கு மத்தியில் இமாம்களின் ஆய்வுகளை குப்பை என்றும் பின் பற்ற தேவை இல்லை என்றும் சொன்னவர்கள் இன்றைக்கு ஆய்வு செய்ய கிளம்பி இருக்கின்றார்கள் (கிளம்பிட்டாங்கயா...... கிளம்பிட்டாங்கயா...........)


இவர்கள் ஆய்வு செய்து மார்கத்திருக்கு பிரோஜனம் என்ன? இவர்களின் bank balance தான் கூடி இருக்கிறது.

25 வருட பிரசாரம் தோல்வியில் முடிந்து விட்டதை, உண்மை தான் ஜெய்க்கும் என்பதை உணர்ந்து கொண்டவர் சமுதாய பிரச்சனையில் இருந்து 6 மாத ஓய்வை அறிவித்து உள்ளார். மற்ற விஷயங்களில் இவர்களின் போலியான தந்திரமான கவர்சிகரமான பேச்சுக்களில் கவரப்பட்டவர்கள் அல்லாஹ்விற்கு உருவம் உள்ளது என்று சொல்லும் போது இவர்களை விட்டு விலகி விட்டார்கள் என்பதை சென்னையில் நடந்த இரண்டாவது விவாதமே சாட்சி.

இவர்களுடைய (நிரந்தர) ஓய்வு கடிதம் இதோ:


கடந்த காலங்களில் கிறிஸ்துவர்கள் விரும்பி சாப்பிடும் "பன்றியின் எலும்புகளைச நாமும் சாப்பிடலாம்", அமெரிக்கர்கள் போட்டு கொண்டு திரியும் "அரைக்கால் சட்டை போட்டுத் தொழலாம்", போன்ற தடால் புடலான அதிரடி ஃபத்வாக்களை வழங்கி இஸ்லாத்தை தலை குனிவு ஏற்படுத்தினர். (பன்றி விஷயம் பற்றி பேசியதால் மலேசியா வில் செருப்படி வாங்கினார்).

நபிகள் கோமான் ஸல்... அவர்கள் உண்டு என்று கூறிய மார்க்க விஷயத்தில்
தனக்கு மார்கத்தில் சட்டம் சொல்ல உரிமை உள்ளது என்பதை போல "ஜும்மாவிற்கு முன் சுன்னத் தொழுகை கிடையாது", "பெண்கள் கப்ர் ஜியாரத் செய்ய கூடாது", தான் கூறியவைகள் தவறானதென்றுக் கூறித் திரும்ப நக்கி, அவைகளை வாபஸ் பெற்றுக் கொன்றார்.

சென்னையில் நடந்த இரண்டு விவாதங்களின் மூலம் தன்னையும் தன்னுடைய முகல்லிதுகளையும் (தன்னுடைய மத்ஹபை பின் பற்றகூடியவர்களையும்) காபிர்கள் என்று அடையாளம் காட்டியுள்ளார், காரணம்

 • அல்லாஹ்விற்கு உருவம் உண்டு,
 • இஸ்லாத்தை காட்டி தந்த நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் மாற்றி மாற்றி பேசியுள்ளார்கள்.
 • சஹாபாக்கள் முர்தத் (முஸ்லிம் ஆகி காபிர் ஆகி விட்டவர்கள்) ஆவர்கள்

என்று கூறி தானும் தன்னுடைய கூட்டத்தினரும் முர்தத் (முஸ்லிம் ஆகி காபிர் ஆகி விட்டவர்கள்) என்று கூறாமல் கூறியுள்ளார்.

இஸ்லாத்தை குர்ஆன் ஹதீஸின் மொழி பெயர்ப்பை கொண்டு தாமாக விளங்கி கொள்ளவேண்டும், இமாம்களை பின்பற்ற கூடாது என்று கூறி கொண்டிருந்தவர் தற்போது சுயமாக மார்கத்தை பின் பற்ற முடியாது என்று முடிவிற்கு மறைமுகமாக வந்து தான் ஒரு இமாம் என்றும் சட்டத்தை இனிமேல் ஆய்வு செய்து சொல்வேன் என்றும் கூறி உள்ளார்.

தமிழ் படித்து மார்கத்தை விளங்கலாம் என்று நினைப்பவர்களின் கதி இது தானா? நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக இஸ்லாமியர்களை ஆக்குவதில் இவர்களுக்கு லாபம் தான் என்ன? மத்ஹப் இருக்ககூடாது, மத்ஹப் ஐ பின்பற்றக்கூடாது என்று ஒரு மத்ஹபை உருவாக்கி இருக்கின்றார்கள், இந்த மத்ஹபில் இமாம்களை திட்டலாம், ஆலிம்களையும் திட்டலாம், ஒருமையில் பேசலாம் என்ற கொள்கையும் இருக்கின்றது, இப்படி திட்டி பேச வேண்டும் என்பது நபிகளாரின் கலாச்சாரமா? அல்லது நபிவழியா? மனோ இச்சை தானே? மார்கத்தை குளறு படி ஆக்கும் நோக்கம் தானே?


நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்…. அவர்களின் ஹதீஸில் கூட அவர்களின் (குறு)மதிக்கு புரியாவிட்டால் சஹீஹாக இருந்தாலும் ஏற்றுக்கொள்ள கூடாது என்பதும் ஒரு கொள்கை, இப்படி போனால் குர்ஆனிலும் அறிவிற்கு(ஒரு ஆணும் பெண்ணும் சேர்ந்தால் தான் குழந்தை பிறக்கும், அதனால் ஈசா அலை… ஆண் இல்லாமல் பிறந்தார் என்பது எங்களின் அறிவிற்கு) எட்டவில்லை என்று ஒதுக்க நினைக்கும் வசங்கள் ஏராளம். அந்த வரிசையில் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு, இது பக்கா காபிர்களின் கொள்கை தானே? எங்களை பார்த்து அத்வைதம் கொள்கை என்றா சொல்கின்றீர், வாஹ்ஹாபிகள் காபிர் கொள்கையில் இருகின்றார்கள் அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்று சொன்னதால், அதே போல சாக் என்று ஹதீஸிலும் குர் ஆனிலும் வந்ததற்கு (கடினம் என்ற உண்மையான அர்த்தத்தை விட்டு விட்டு) கால் என்று அர்த்தம் வைக்கும் போது ஒரு கால் என்று தானே வருகிறது என்று கேக்கும் போது ஒன்று வந்தாலும் இரண்டை தான் நினத்துகொள்ள வேண்டும் என்று சொல்பவர்கள், முஸாபா செய்யும் பொது கை என்று தான் வருகிறது அதனால் ஒரு கை தான் என்று எப்பிடி அர்த்தம் கொடுத்தார்கள், மனோ இச்சை வெளிப்பாடாக தெரிகிறது, காபிர்களே எள்ளி நகையாடி, நாங்களும் நீங்களும் ஒன்று தான், உங்கள் மண்டையிலும் தொப்பி இல்லை, இறைவனுக்கு உருவமும் உள்ளது, தூதர் என்று சொல்லப்படுபவரும் நம்மை போன்ற மனிதர் தான் (நவூதுபில்லாஹ்), எப்பிடி விரும்புகின்றீர்களோ அப்படி மதத்தை பின்பற்றி கொள்ளலாம், புராணத்தை தொடுவதை போல குர் ஆனை யும், சுத்தம் இல்லாவிட்டாலும் கூட தொடலாம், கருவறைக்கு செல்லக்கூடாது என்பதை போல பள்ளிவாசலுக்கு மட்டும் போக கூடாது, இனிமேல் நீங்களும் எங்களை போல சிலை வணக்கத்திற்கு வந்து விடுவீர்களா (நவூதுபில்லாஹ்) என்று கேட்பதற்கு வாய்ப்பை உருவாக்கி தந்த வாஹ்ஹபிகளே சிந்திப்பீர்,

வாஹ்ஹாபிகள் மனோ இச்சையின் படி தான் வாழ்பவர்கள், உண்மையில் குர் ஆனிற்கும் ஹதீசிற்கும் சம்பந்தம் இல்லை என்ற உண்மையை வெளிப்படுத்திய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப்புகழும்! மக்கள் இவரின் உண்மையான முகத்தை உணர்ந்து கொண்டு இவர்களை பின்பற்றுவதை விட்டு தவிர்ந்து உண்மையான சுன்னத் ஜமாத்தின் கொள்கையில் வருவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக!

ஆமீன்! ஆமீன்!

யா ரப்பல் ஆலமீன்!