முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, July 30, 2010

யூதர்களின் கைப்பாவை PJ

இந்த உலகில் முஸ்லிம்களாகிய நாம் நிம்மதியுடன் வாழ்ந்து வந்தது ஒரு காலம். தற்போது முஸ்லிம் களை ஒரு தீவிரவாதியாகவோ, பிரிவினைவாதியாகவோ மக்கள் பார்த்துக்கொண்டு இருக்கின்றார்கள். இதற்கு காரணம் முஸ்லிம் என்னும் பெயர் தாங்கிகள் தான். உதாரணமாக ஈராக் இல் சதாம் ஹுசைன் ஆட்சியில் இருந்தார், நல்லவரா தீயவரா என்ற சர்ச்சை ஒரு புறம் இருந்தாலும் அமெரிக்க படைக்கு அங்கு தளம் அமைக்க ஆதரவு தந்து அப்பாவி மக்கள் எல்லாம் சிதறடிக்கப்பட்டு ஈராக் தேசம் என்றென்றும் தலை நிமிராமல் ஆக்கிய பெருமை குர்திஷ் இன மக்களை (முஸ்லிம் பெயர் தாங்கிகள்) சாரும். அதே போல ஆப்கானிஸ்தானும் அமெரிக்கா வின் சூழ்ச்சிக்கு பலியானது கர்சாயின் மக்கள். ஆப்கானிஸ்தான் நிர்முலம் ஆகியதற்கு காரணமாக திகழ்ந்தார்கள். ஊரு இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்பது போல் முஸ்லிம்கள் இரண்டு பட்டால் அமெரிக்கா விற்கு கொண்டாட்டம்.

மேற்கண்ட விஷயங்கள் உலகம் சம்பந்தப்பட்டது. நாம் சொல்லும் மூன்றாம் விஷயம் நம்முடைய மார்க்கம் சம்பந்தப்பட்டது. உலக விஷயத்தில் ஒரு நிலையை எடுக்க அம்மக்களுக்கு ஒரு உரிமை இருக்கலாம், ஆனால் மார்க்க விஷயத்தில் நபிகள் கோமான் ஸல்... அவர்கள் சொல்லிவிட்டதன் பிறகு அதை மீறி இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் தவ்ஹீத் என்ற பெயரை வைத்து கொண்டு ஷிர்க் செய்து கொண்டிருக்கும் PJ வை யூதர்கள் தங்கள் கையில் வைத்துகொண்டு ஆட்டி படைத்து கொண்டிருக்கிறார்கள்.

உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் வேதங்களின் விஷயம் பற்றி கூறலாம்.

அல்லாஹ் தவ்ராத் வேதத்தை தன்னுடைய கையால் எழுதினான் அவனாக மூசா அலை.... அவர்களை அழைத்து அவனே தந்தான் என்று கூறி, அதனால் அவ்வேதம் தான் (குர்ஆனை விட) சிறந்தது என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார். ஒரு முஸ்லிம் இப்படி சொல்லலாமா? அப்படி என்றால் இவர்களுடைய நிலை என்ன? யூதர்களின் கைப்பிடியில் வசமாக சிக்கி இருக்கின்றார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.

நம்முடைய விளங்குதல் எப்படி என்றால் மூசா அலை.... அவர்களை வந்து சட்ட திட்டம் வாங்கி செல்லு மாறு அல்லாஹ் கட்டளை இட்டான். 40 நாட்கள் நோன்பு இருந்து, சென்று வாங்கி வந்தார்கள். எல்லா நபிமார்களுக்கும் இப்படித்தான் ஏதோ ஒரு கட்டளையை பிறப்பித்து வேதத்தை வழங்கினான். ஒரே நேரத்தில் அவர்களுக்கு முழு சட்டமும் அமுல் ஆனது. ஆனால் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு சிறுக சிறுக, தேவைக்கு ஏற்றவாறு, மனம் நோகாத வாறு, அவர்கள் திருப்தி அடையும் வரை(وَلَسَوْفَ يُعْطِيْكَ رَبُّكَ فَتَرْضى) குர்ஆனை இறக்கினான்.

23 வருடங்கள் சட்டம் இறங்கியது. அதுவும் எதுவும் விசேஷமான செயல்கள் மூலாமாகவா? இல்லையே

நபிகள் நாயகம் ஸல்... குகையில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, போரில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, பயணத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, வீட்டில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, வெளியில் இருந்தாலும் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, கூட்டத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, தனித்து இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, தூக்கத்தில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, விழிப்பில் இருந்தாலும் குர்ஆன் இறங்கியது, ஆக மொத்தம் எந்த ஒரு விசேஷ செயலும் செய்யாமல் குர்ஆன் இறங்கியது.

ஆக அல்லாஹ் குர்ஆனிற்கு கட்டளை இட்டான், குர் ஆன், என்னுடைய நபி மக்காவில் இருந்தால் மக்காவில் இறங்கு, மதினாவில் இருந்தால் மதினாவில் இறங்கு, அதனால் தான்هذه مكية هذه مدنية (இது மக்காவில் இறங்கிய வசனம், இது மதினாவில் இறங்கிய வசனம்) என்று குறிப்பிடப்பற்றுள்ளது.

என்னுடைய நபி ஸல்... அவர்களை அலைக்கழிக்க கூடாது, அவர்கள் எங்கே இருக்கின்றார்களோ அங்கே நீ செல்லு என்று அல்லாஹ் சொல்லவதை போல இருப்பதை புரியாமல் யூதர்களின் பிடியில் பணத்திற்காக அகப்பட்டு கொண்டார். அவரின் மறுமையை அல்லாஹ் அழித்துவிட்டான். காரணம் மூசா அலை... அவர்களை இப்படி உயர்த்தி பேசிய இவர் நமது உயிருக்கு உயிரான, உயிருக்கும் மேலான நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள், யார் இந்த சத்திய மார்கத்தை இவ்வுலகில் கொண்டு வந்தார்களோ, எந்த நபிக்கு இந்த மார்க்கம் சொந்தமோ, ஏனைய நபிகள் ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்டார்கள், நான் இவ்வுலகு முழுதிற்கும் அனுப்பப்பட்டேன் (புகாரி) என்று கூறிய அந்த நபியே மார்கத்தில் மாற்றி மாற்றி பேசினார்கள் என்று சென்னையில் நடந்த இரண்டாவது விவாதத்தில் அப்பட்டமாக கூறினார். இதன் மூலம் மார்க்கம் இவர்களிடம் இல்லை, யூதர்களின் பணம் தான் உள்ளது என்பதும், ஒரு சமுதாயத்திற்கு அனுப்பப்பட்ட மூசா அலை... அவர்கள் நபிகளாரை விட சிறந்தவர்கள் என சொல்லியதன் மூலம் அவர்கள் இஸ்லாத்தில் இல்லை என்று காட்டி உள்ளார்கள், அவர்களுக்கு அவர்களின் உண்மை முகத்தை காட்டியதற்காக நன்றி.

அபூத் தைய்யார்
1 comments:

Ibrahim said...

Masha Allah, Nice post,