முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, July 19, 2011

பாவங்களை போக்கும் பராஅத் இரவு தொடர் : 2

இதை பெரிதாக படிக்க வேண்டுவோர், அந்த பகுதியில் கிளிக் செய்யவும். அதன் மூலம் பெரிதாக படிக்கலாம்.





வஸ்ஸலாம்

மதுரை நாபிஈ

Saturday, July 16, 2011

பாவங்களை போக்கும் பராஅத் இரவு:

எதில் மறுமையின் வெற்றி:

நாம் இவ்வுலகில் பிறந்தது எதற்காக மறுமையின் வெற்றிக்காக. ஆனால் சில காலங்களாக மார்க்கத்தில் கரையான்களாக புகுந்திருக்கும் சிலர், இருக்கும் விஷயத்தை கூட இல்லை என்று கூற ஆரம்பித்துள்ளார்கள். அல்லாஹ்விற்கு மட்டும் தான் வணக்கம் செய்ய வேண்டும் என்று மக்கள் மத்தியில் நல்ல பிள்ளைகளாக நுழைந்த இவர்கள், அல்லாஹ்விற்கு செய்யும் வணக்கத்தை கூட கொச்சை படுத்த ஆரம்பித்துள்ளார்கள்.

அல்லாஹ்விடமே கையேந்தும் கூட்டு துஆ கூடாது. ஆலிம் கள் உங்களை திட்டி தான் துஆ கேக்கின்றார்கள் என்று இட்டுக்கட்டு. இரவுகளில் செய்யும் அமல்களை குறைக்கும் செயல். இவர்கள் கூறும் எந்த விஷயத்திற்கும் ஆதாரம் இல்லை என்பதே இதில் வேடிக்கையான விஷயம். இவர்கள் தடுப்பதற்காக, இது பலவீனம், அது பலவீனம் என்று சொல்வார்களே தவிர, இந்த வசனம் இருப்பதால் இது செய்யக்கூடாது இந்த ஹதீஸ் இப்படி இருப்பதால் செய்யக்கூடாது என்று சொல்வதே இல்லை. காரணம் அப்படி ஒரு ஹதீஸ் இருக்கவே இருக்காது. இதில் இருந்து நாம் விளங்கி கொள்ளலாம், சுன்னத் ஜமாத்தினர் தான் உண்மையான வழியை பின்பற்றுபவர்கள். இவர்கள் சஹீஹான ஹதீசையும் புறம் தள்ள ஆரம்பித்துள்ளார்கள். அதனால் இவர்கள் ஹதீஸை பற்றி பேசுவதற்கு தகுதியே இல்லை என்பது வேறு விஷயம்.

நன்றி உள்ள அடியான் யார்:


மேலும் குர்'ஆனை கூட ஓதக்கூடாது என்பார்கள். அதுவும் பித்'அத் என்பார்கள். அதனடிப்படையில் பராஅத் இரவையும் சேர்த்துள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஒவ்வொரு இரவும் கால் வீங்கும் அளவிற்கு நின்று தொழுவார்கள். அன்னை ஆயிஷா ரழி... அவர்கள் கேட்பார்கள், யா ரசூலுல்லாஹ், தாங்கள் தான் முன் பின் பாவங்கள் அனைத்தையும் மன்னிக்கப்பட்டவர்கள் ஆயிற்றே. இருந்தும் ஏன் கால் கடுக்க வணங்குகின்றீர்கள் சிறிது ஒய்வு எடுக்கலாமே, என்று கூற, அதற்க்கு நபி ஸல்... அவர்கள்,


يا عائشة افلا ان اكون عبدا شكورا


அதாவது நான் நன்றியுள்ள அடியானாக மாற வேண்டாமா என்று கூறிவார்கள். அல்லாஹ்வும் நபியவர்களுக்கு சிறிது நேரத்தை தவிர பெரும் பாலான நேரங்கள் வணக்கத்தில் கழிக்க கூறியுள்ளான். மேலும், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், உங்களுக்கு சிரமம் என்று மட்டும் நான் கருதாமல் இருந்தால் ஒவ்வொரு தொழுகையிலும் மிஸ்வாக் செய்வதையும், இஷாவை பிந்தி தொழுவதையும் கடமையாக்கி இருப்பேன் என்று கூறினார்கள். அப்படியானால், பிந்தும் இரவுகளில் செய்யும் வணக்க வழிபாடுகளில் உள்ள பலன்கள் மிகுதியானவை என்பதை தெரிந்து கொள்ளலாம்.


உபரியான வணக்கத்தின் நன்மை:

மேலும் அல்லாஹ் கூறுவதாக நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறுகின்றார்கள். ஹதீஸ் குத்சியில் ஒரு அடியான் நபீலான (உபரியான) வணக்கங்களின் மூலம் நான் நேசிக்கின்ற வரை என்னை நெருங்கி கொண்டே வருகின்றான். நான் நேசிக்க ஆரம்பித்து விட்டால் அவன் பார்க்கும் கண்ணாக, கேட்கும் செவியாக, பிடிக்கும் கரமாக, நடக்கும் காலாக மாறி விடுகின்றேன் என்று அல்லாஹ் கூறுவதாக கூறுகின்றார்கள்.(புகாரி) ஆனால், இப்படி இரவில் நின்று நபீலான வணக்கம் செய்வது பித்'அத் என்றால், P (poiyyan) J (Jainulaabdeen) வின் TV நிகழ்ச்சி பார்ப்பது தான் சுன்னதா? புகாரியில் இஷா தொழுகையை முடித்தவுடன் பேச கூட அனுமதி இல்லாமல், தூங்கி விட வேண்டும் என்று வழியுறுத்தும் ஹதீஸ்கள் இருக்கும் நிலையில், பத்து மணியளவில் ஆரம்பித்து பனிரெண்டு மணி வரை டி வீ ப்ரோக்ராம் நடத்த என்ன ஆதாரம். அது மார்க்க விஷயமே இல்லை. மற்றவர்களை சாட தானே பயன் படுத்துகின்றீர். அதை விட்டு விட்டு, வணங்குவதை குறை கூற ஆரம்பித்துள்ளார்கள். இவர்கள் எப்பிடி சொல்லலாம் என்றால், பராஅத் இரவில் மட்டும் தொழுகின்றார்கள். நபிகளாரை பின்பற்றி எல்லா நாளும் இப்படி உபரி வணக்கம் செய்தால் அது தான் சரியான விஷயம் என்று கூறினால் இது வரவேற்க்கத்தக்க காரணமாக இருக்கும். அதை எப்படி இவர்கள் கூறுவார்கள். இவர்கள் தான் அமல்களை குறைக்க தானே வந்துள்ளார்கள்.

குர்'ஆன் ஓதுவது எதற்கு:

மேலும் பராஅத் இரவில் மூன்று யாசின் ஓத வேண்டும். அதை கிண்டல் செய்கின்றார்கள். அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான்,


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَابْتَغُوا إِلَيْهِ الْوَسِيلَةَ


ஈமான் கொண்டோரே, அல்லாஹ்வை அஞ்சி கொள்ளுங்கள், அல்லாஹ்வை நெருங்க வசீலாவை தேடிக்கொள்ளுங்கள் (5 : 35) வசனத்தில் கூறுகின்றான்.

நாமாவது இறைவணக்கமும் வசீலா, இறை நேசர்களும் வசீலா என்று கூறுகின்றோம். இந்த வஹ்ஹாபிகள், பாவிகள், இறை வணக்கம் மட்டும் வசீலா என்று கூறக்கூடியவர்கள், இறைவனை வணங்குவது பித்'அத் என்கின்றார்கள், குர்'ஆனின் யாசீன் சூராவை ஓதி, அதன் பொருட்டால் அல்லாஹ்விடமே அதிக வயதிற்காக, நல்ல சுகத்திற்க்காக, ரிஸ்கின் விஸ்தீரனத்திற்காக கேட்கும் துஆவை பித்'அத் என்கின்றார்கள். குர்'ஆன் மறுமையில் (கூட) பரிந்துரை செய்யும் என்று ஹதீஸ்கள் இருக்க, குர்'ஆனை வசீலாவாக ஆக்கக்கூடாது என்று இவர்கள் சொல்வதற்கு ஆதாரம் என்ன? தர முடியுமா? மேலும் குர்'ஆனை வசீலாவாக ஆக்கலாமா கூடாதா? அப்படி ஆக்கலாம் என்றால் யாசீனை ஓதலாமா இல்லையா? ஆக்க கூடாது என்றால், குர்'ஆனை ஓதுவது வணக்க வழிபாட்டில் கட்டுப்படாதா? (கேடு கேட்டு, உங்கள் சுய மனோ இச்சையை உள்ளடக்கி கொண்டுள்ள) உங்கள் மொழியாக்கம் மட்டும் தான் வணக்கம் ஆகுமா? பதில் சொல்ல வேண்டும்.

பராஅத் இரவு என்று ஒன்று இருக்கின்றதா:

وَالْكِتَابِ الْمُبِين

إِنَّا أَنزَلْنَاهُ فِي لَيْلَةٍ مُّبَارَكَةٍ ۚ إِنَّا كُنَّا مُنذِرِينَ
فِيهَا يُفْرَقُ كُلُّ أَمْرٍ حَكِيمٍ

தெளிவான இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம் எச்சரிக்கை செய்வோராவோம். அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன.

அல்குர்ஆன் 44:2-4


இந்த வசனத்தை நாம் ஆதாரம் காட்டினால், இது பராஅத் இரவு அல்ல, கத்ரின் இரவு தான் அது என்று வாதிடுகின்றார்கள். கத்ரின் இரவும், பரக்கத்தின் இரவும் ஒன்றாகாது. காரணம் இரண்டும் ஒரு பொருள் தரும் இரவும் அல்ல ஒரே இரவை குறிக்க கூடியதும் இல்லை. லைலத்துல் கத்ரை பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, லைலதுல் கத்ரு என்று குறிப்பிட்டிருக்கின்றானே. பிறகு ஏன் இங்கு வார்த்தையை மாற்ற வேண்டும். அதனால் இங்கு சுய இச்சையை வைத்து குர்'ஆனின் வசனத்தின் பொருளை மாற்றுகின்றார்களே தவிர வேறு இல்லை.


பராஅத் இரவு சம்பந்தப்பட்ட ஹதீஸ்கள்:

ஹதீஸ் : 1 ஷஅபான் மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள். அந்தப் பகலில் நோன்பு நோருங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து, பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின் பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன். என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹழ்ரத் அலீ ரழி...

நூல்: இப்னுமாஜா 1378

இதை இட்டுக்கட்ட பட்ட ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். ஆனால் இமாம் இப்னு மாஜா இட்டுக்கட்ட பட்ட ஹதீஸ் என்று கூறவில்லை. இது இட்டுக்கட்டக்கூடிய ஹதீஸ் என்று கூறினால், இதை மறுக்கும் ஹதீஸ் இருக்கின்றதா? முரண் பட்டால் தான் பிரச்சனையை. இதற்க்கு முரணான ஹதீஸை காட்ட முடியுமா என்றால் முடியவே முடியாது. மேலும் இது இட்டுக்கட்டப்பட்டது என்று ஒதுக்க நினைத்தால், அல்லாஹ்விற்கு அந்த ஆற்றல் இருக்கின்றதா இல்லையா, என்பதை முதலில் விளக்க வேண்டும். ஆற்றல் இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டுவிட்டால், இதை வைத்து து'ஆ கேட்பதில் தவறு இல்லை, ஆற்றல் இல்லை என்று வாதிட்டால் அவனின் ஈமான் கோளாறு.

ஹதீஸ் : 2 அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில் நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம் 15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப் கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங்களை) மன்னிக்கின்றான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அன்னைஆயிஷா ரழி...

நூல்: திர்மிதி 670

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது இல்லை என்று விமர்சனம் செய்கின்றார்கள். ஆதாரப்பூர்வமானதா இல்லையா என்பது ஹதீஸை பின்பற்றுபவர்களுக்கு. உங்களுக்கு எதுக்கு இந்த பிரச்சனையை. நீங்கள் தான் ஆதரப்பூர்வமானத்தை கூட புறம் தள்ள ஆரம்பித்துவிட்டீர்களே. மேலும், மேல் கூறியதை போல்,அல்லாஹ்விற்கு அந்த ஆற்றல் இருக்கின்றதா இல்லையா, என்பதை முதலில் விளக்க வேண்டும். ஆற்றல் இருக்கின்றது என்று ஒப்புக்கொண்டுவிட்டால், இதை வைத்து து'ஆ கேட்பதில் தவறு இல்லை, ஆற்றல் இல்லை என்று வாதிட்டால் அவனின் ஈமான் கோளாறு.மேலும் இந்த ஹதீஸை மறுக்கும் விதமாக வேறு ஹதீஸ் இல்லை என்பது கூடுதல் தகவல்.

ஹதீஸ் : 3 நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதைப் போன்று வேறு எந்த மாதத்திலும் நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.

அறிவிப்பாளர்: ஹழ்ரத் அதாவு பின் யஸார் ரழி...

நூல்: முஸன்னப் இப்னு அபீஷைபா 9764,

ஃபலாயிலுர் ரமளான் - இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 9, ஹதீஸ் எண்: 8

இந்த ஹதீஸை குறிப்பிடும் போது இந்த வஹ்ஹாபிகள், இது முர்ஸல் வகையான ஹதீஸ் என்று கூறுகின்றார்கள். எனக்கு பின்னால், குர்'ஆனையும் எனது குடும்பத்தவரையும் பின்பற்ற வேண்டும் என்று நபிகளார் ஸல்... அவர்கள் கூறி, அதை ஹழ்ரத் ஜாபிர் ரழி..., ஹழ்ரத் ஜைத் பின் அர்கம் ரழி... ஆகிய இரு பெரும் சஹாபிகள் அறிவித்திருந்தும், முர்சலான ஹதீசான, குர்'ஆனையும், ஹதீசையும் பின்பற்றுங்கள் என்று வந்துள்ள ஹதீஸை பின்பற்றுபவர்கள் இந்த ஹதீஸில் வேறு நிலைப்பாடு எடுப்பதில் நியாயம் இல்லை. நம்மை பொறுத்தவரை முர்சலான ஹதீசையும் ஏற்றுக்கொள்வோம் என்பது வேறு விஷயம்.

மேலும் இந்த ஹதீஸை மறுக்கும் விதமாக வேறு ஹதீஸ் இல்லை என்பது கூடுதல் தகவல். ஆனால், இந்த ஹதீஸ் நாம் மேற்கூறிய, குர்'ஆனின் வசனத்திற்கு விளக்கம் அளிக்க கூடிய வகையில் உள்ளது. அதாவது, உறுதியான காரியங்கள் யாவும் பிரிக்கப்படுகின்றன என்பது குர்'ஆன் வசனமும், மரணிக்கக் கூடியவர்களின் தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பது ஹதீஸாகவும் இருக்கும் போது, சுன்னத் ஜமாத்தினர் நம்பும் நம்பிக்கை தான் பலமானது என்பது விளங்குகின்றது.

ஹதீஸ் : 4 ரமளான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும், ஷஅபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ் எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100 ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை அவர் மரணிக்க மாட்டார்.

அறிவிப்பவர்:
ஹழ்ரத் முஹம்மத் பின் அலீ ரழி...

நூல்: ஃபலாயிலு ரமளான்- இப்னு அபித் துன்யா, பாகம்: 1, பக்கம்: 10, எண்: 9


இதிலும் அதே பொலம்பல் தான். இதை எதிர்க்கும் விதத்தில், மாற்றமாக ஒரு ஆதாரத்தை காட்ட முடியாது என்பது வேறு விஷயம்.

அல்லாஹ்வை அதிகம் வணங்க வேண்டும் என்ற விஷயத்தையும் பித்'அத் என்று கூறி தடுப்பதில் இருந்து வழிகேட்டாளர்கள் யார் என்பதை சமூகம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். மேலும், இறைவன் குர்'ஆனில் கூறுகின்றான்,


وَمَنْ أَظْلَمُ مِمَّن مَّنَعَ مَسَاجِدَ اللَّهِ أَن يُذْكَرَ فِيهَا اسْمُهُ وَسَعَىٰ فِي خَرَابِهَا ۚ


இன்னும், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து, இவற்றைப் பாழாக்க முயல்பவனை விட, பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? (2:114) என்று அல்லாஹ் கேட்கும் இந்த கேள்வி இவர்களுக்கு தான் பொருந்தும் என்பதை இந்த விஷயத்தில் இருந்து நிரூபித்து இருக்கின்றோம்.

இப்படி இறைவனை வணங்க வேண்டும் என்று வழியுறுத்தி வரும் விஷயத்தையே புதைக்க நினைக்கும் இந்த படுபாவிகளிடம் இருந்து அல்லாஹ் நம்மை, நம் குடும்பத்தாரை, நம் சுற்றத்தாரை, நம் நண்பர்களை, நம் வருங்கால சந்ததியினரை காப்பாற்றுவானாக.

ஆமீன்! ஆமீன்!!

யா ரப்பல் ஆலமீன்.