முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, September 15, 2017

பிரிவினை வாதிகள் யார்? மத்ஹப் வாதிகளா? (போலி) தவ்ஹீத் வாதிகளா?

இஸ்லாத்திற்குள் பிரிவினை வாதிகள் யார் என்ற கேள்விக்கு சந்தேகம் இல்லாமல் பதில் சொல்வதாக இருந்தால் அது (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்த இயக்க வேறுபாடற்று  ஒட்டு மொத்த தவ்ஹீத் கூட்டம் என்று உரக்க சொல்லலாம்.

தமிழகத்தில் 1980 களில் மத்ஹபை பின்பற்றுபவர்களுக்கு மத்தியில் வயிற்று பிழைப்பிற்காக குளறுபடியான ஒரு மதத்தை ஆரம்பித்தவர்கள் இந்த கூட்டத்தினர். ஆரம்பிக்கும் போது அவர்கள் வைத்த வாதம்.... இஸ்லாத்தில் இறைவன் ஒன்று. மார்க்கம் ஒன்று. வேதம் ஒன்று. ரசூல் நமது நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஒன்று. ஆனால் இவர்கள் 4 மத்ஹபாக பிரிந்து உள்ளார்கள் ஏன் என்று வினா தொடுத்து அதற்கு காலம் காலமாக பதில் கூறப்பட்டும்  வருவது அனைவரும் அறிந்ததே. 

கவாரிஜ்கள் முஃதஜிலாக்கள்  வழக்கப்படி இது மூமின்களுக்கு பொருந்தும் குர்ஆன் வசனம் என்பதை போல் முனாபிகீன் களை பற்றி விழிக்கும் ஒரு ஆயத்தை ஆதாரம் காட்டி மத்ஹபை விமர்சித்து பேசுவார்கள். என்ன செய்வது நபிகளாரின் கூற்று படி அறிவு கம்மியானவர்கள் தானே. ஏற்று கொள்வதற்கும் அறிவிலியான கூட்டம் இருக்க தானே செய்கிறது. 

அந்த வசனம்.... 

وَالَّذِيْنَ اتَّخَذُوْا مَسْجِدًا ضِرَارًا وَّكُفْرًا وَّتَفْرِيْقًۢا بَيْنَ الْمُؤْمِنِيْنَ وَاِرْصَادًا لِّمَنْ حَارَبَ اللّٰهَ وَرَسُوْلَهٗ مِنْ قَبْلُ‌ؕ وَلَيَحْلِفُنَّ اِنْ اَرَدْنَاۤ اِلَّا الْحُسْنٰى‌ؕ وَاللّٰهُ يَشْهَدُ اِنَّهُمْ لَـكٰذِبُوْنَ‏ 

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்க, குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்: “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (9:107)

இந்த வசனம் காட்டி பார்த்தீர்களா நான்காக பிரிந்துள்ளார்கள். இவர்களை நோக்கி தான் இது கூறப்பட்டது என்று கூறுவது. (பொய்யன் பீ ஜே உடைய பேச்சு நம்மிடம் ஆதாரம் உள்ளது). இது முனாஃபிக்கீன் களை  பற்றி கூறப்பட்ட ஆயத் ஆகும். ஆனால் இதை ஒரு அடிப்படையாக வைத்தால் தற்கால முனாஃபிக்கீன்களையும் இந்த ஆயத்  பொருந்துவதை நீங்களே புரிந்து கொள்ளலாம்.    இவ்வசனத்தில் அல்லாஹ் நான்கு விஷயங்களை சுட்டி காட்டுகின்றான். அவை சிகப்பு எண்  கொண்டு விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது.

1. குஃப்ர். குஃப்ர் என்றால் இறை நிராகரிப்பு, இறைவனை  நிராகரிப்பதும், அவனின் சட்டங்களை நிராகரிப்பதும் குஃப்ரிற்கு கொண்டு செல்லுமே...! அதை யார் செய்வது? இறைவனுக்கு உருவம் கொடுப்பவர்கள், யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? குர்ஆனில்  எழுத்து பிழை காண்பது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? ஹதீஸ்களை புறம் தள்ளுவது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? கடமையான ஜகாத்தை மானம்கெட்ட தனமாக மறுப்பது யார்? இது இறை நிராகரிப்பு இல்லையா? இதை யார் செய்வது???? இதை நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும்.

 2. முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும்... ஒரு இயக்க வாதியிடம் மற்றொரு இயக்கத்தின் சட்டத்தை கூறி இது தானே தவ்ஹீத் என்று கூறி பாருங்கள். இல்லை இது சரியான கொள்கை அல்ல அது அவர்களுடைய கொள்கை அது ஷிர்க் அது குஃப்ர்  அது பித்அத்து  அது வழிகேடு என்று ஜகா வாங்குவதை காண முடியும். உதாரணமாக  பிறை பற்றி ஒருவொருக்கொருவர் குறை கூறுவதை நாம் அறிந்தது தான். இருப்பினும் தவ்ஹீத் ஜமாஅத் விவாதம் செய்கின்றது என்று வைத்து கொள்வோம் அவர்களிடம் உங்கள் கொள்கை உலகம் முழுதும் ஒரே  பிறை என்று  வாதிட்டாலோ அல்லது JAQH ஜமாத்தில் இப்படி இருக்கின்றதே என்று கூறினாலோ அவர்கள் என்ன கூறுவார்கள்? எங்கள் கொள்கை பற்றி எங்களிடம் பேசுங்கள் அவர்களை பற்றி நாம் பதில் சொல்லமாட்டோம் அல்லது நாம் எப்பிடி அவர்களின் கொள்கைக்காக பதில் சொல்வது என்று தானே கூறுவார்கள்?????

இப்படி கூறும் இதே நபர்கள் தானே களியக்காவிளை யிலும் கோவை யிலும் மத்ஹப் தலைப்பில் ஹனபி சட்டத்தையும், ஷாஃபி  சட்டத்தையும், மாலிகி சட்டத்தையும், ஹம்பலி  சட்டத்தையும் எங்கள் இமாம்களிடத்தில் சுட்டி காட்டி கேள்வி கேட்டார்கள்...???? அனைத்து மத்ஹப்  களுக்கும் ஒரே  இமாம்கள் தானே பதில் அளித்தார்கள்.... இப்படி இயக்க வாதிகளிடம் எதிர் பார்க்க முடியுமா? பிரிவினை எங்கே இருக்கின்றது??? மத்ஹபிலா???? நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும். பிரிப்பது யார் ???  பிரிவினை வாதிகள் யார்????

 3. அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை  நிறுவியவர்கள்... திருவிடைச்சேரி சம்பவம் யாருக்கும் மறந்து இருக்காது.... செய்தது யார்???  பள்ளி என்ற பெயரை வைத்து கொண்டு ரமழான்  என்றும் பாராமல் கடைசி ஒற்றை படையான இரவின் கண்ணியம் கூட காக்காமல் துப்பாக்கி சூடு நடத்தியது யார்???? 

ஃபித்ரா பணத்தை வைத்து சண்டை போடுவது யார்?? சுனாமி வைத்து பிரச்சனையை செய்வது யார்? ஜகாத் பண மோசடி என்று போர் புரிவது யார்? பொருளாதார மோசடி, பெண் விவகாரம் என்று அசிங்கம் செய்வது யார்? நடு நிலையாக சிந்தித்து மேல் உள்ள வசனத்தில் பொருத்தி பாருங்கள் புரியும்.

4. இப்படி பட்ட நயவஞ்சர்களை பற்றி, நாக்கில் தேன்  தடவி இப்படி பேசும் இந்த அயோக்கியர்களை பற்றி அல்லாஹ் அழகாக பின் வருமாறு கூறுவான்.   “நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை” என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான்.

இதன் தொடர்ச்சியாக இன்றைக்கு எப்படி நடக்கின்றதோ அதை அப்படியே  ஏற்கனவே சஹாபாக்கள் ரழியல்லாஹு அன்ஹும் விஷயத்திலும், அந்த முனாஃபிக்கீன்கள்  விஷயத்தில் நடந்ததை சுட்டி காட்டும் இறைவன் தொடர்ச்சியாக அடுத்த வசனத்தில் இப்படி பேசுகின்றான். 

لَا تَقُمْ فِيْهِ اَبَدًا ‌ؕ لَمَسْجِدٌ اُسِّسَ عَلَى التَّقْوٰى مِنْ اَوَّلِ يَوْمٍ اَحَقُّ اَنْ تَقُوْمَ فِيْهِ‌ؕ فِيْهِ رِجَالٌ يُّحِبُّوْنَ اَنْ يَّتَطَهَّرُوْا ‌ؕ وَاللّٰهُ يُحِبُّ الْمُطَّهِّرِيْنَ

ஆகவே, (நபியே!) அங்கு நீர் தொழுகைக்காக ஒருக்காலும் நிற்க வேண்டாம் - நிச்சயமாக ஆரம்ப தினத்திலேயே பயபக்தியின் மீது அடிகோலப்பட்ட மஸ்ஜிது உள்ளது; அதில் நீர் நின்று (தொழவும், தொழ வைக்கவும்) மிகவும் தகுதியானது; அங்கிருக்கும் மனிதர்கள் தூய்மையுடையோராக இருப்பதையே விரும்புகிறார்கள். அல்லாஹ் தூய்மையுடையோரையே விரும்புகிறான்.(9:108)

 இவ்வசனத்தில் ஏற்கனவே இருக்கும் பள்ளிவாசலை தவிர்த்து புதிதாக பள்ளிவாசல் என்ற பெயரில் இருக்கும் இந்த வழிகேட்டு பள்ளிவாசலில் தொழுகை வேண்டாம் என்று அல்லாஹ் கூறுகின்றான். தொழுவதற்கு ஏற்ற பள்ளி ஏற்கனவே இருக்கும் பள்ளி என்று கூறுகின்றான்.

 1400 ஆண்டுகளாக பள்ளிவாசல்கள் இருக்கும் நிலையில் புதிதாக ஆரம்பிப்பவர்கள் யார்? தக்வா எங்கே இருக்கின்றது??? எந்த பள்ளியில் அல்லாஹ் தொழுகை நடத்த சொல்லுகின்றான்.  1990 களில்  ஒரு பேச்சில் நாங்கள் ஷியாவை போல தனி பள்ளி கட்டி வழிகேட்டு ஜமாஅத்தாக மாட்டோம் என்று கூறிய பீ ஜே... அப்படி புது பள்ளி காட்டினால் அது வழிகேடு என்று ஒத்துக்கொண்ட பீ ஜே  இன்று புதிதாக பள்ளி கட்டி கொண்டு சென்றால் வழிகேடு என்று ஒத்து கொண்டது தானே அர்த்தம்.

இப்படி முனாஃபிக்களின் அடையாளத்தை காட்டி கொண்டு வரும் இறைவன் இதில் இருந்து மீண்டு வருவதற்கு ஒரு வழியையும் கூறுவான். அது 

اَلتَّاۤٮِٕبُوْنَ الْعٰبِدُوْنَ الْحٰمِدُوْنَ السّاۤٮِٕحُوْنَ الرّٰكِعُوْنَ السّٰجِدُوْنَ الْاٰمِرُوْنَ بِالْمَعْرُوْفِ وَالنَّاهُوْنَ عَنِ الْمُنْكَرِ وَالْحٰــفِظُوْنَ لِحُدُوْدِ اللّٰه ِ‌ؕ وَبَشِّرِ الْمُؤْمِنِيْنَ‏ 

மன்னிப்புக்கோரி மீண்டவர்கள், (அவனை) வணங்குபவர்கள், (அவனைப்) புகழ்பவர்கள், நோன்பு நோற்பவர்கள், ருகூஃ செய்பவர்கள், ஸுஜூது செய்பவர்கள் (தொழுபவர்கள்), நன்மை செய்ய ஏவுபவர்கள், தீமையை விட்டுவிலக்குபவர்கள். அல்லாஹ்வின் வரம்புகளைப் பேணிப் பாதுகாப்பவர்கள் - இத்தகைய (உண்மை) முஃமின்களுக்கு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக! (9:112)
 
மத்ஹப் வாதிகள் எந்த பள்ளியிலும் தொழுது கொள்வார்களே... ஆனால் தவ்ஹீத் வாதிகள் அவர்களின் இயக்க பள்ளியை தவிர வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களின் பள்ளியில் தொழுவதில்லையே ஏன்??? அதற்கு சுன்னத் ஜமாஅத் பள்ளியில் தொழுது கொள்வோம் என்று எங்கள் பள்ளியில் தொழுது கொள்கின்றனரே  ஏன்??? பிரிவினை எங்கு இருக்கின்றது??? வார்த்தை ஜாலங்களை  வைத்து மத்ஹபை பற்றி தவறாக கூறி உங்கள் பிரிவினை களை  மறைத்து ஒரு பெரும் கொண்ட சமூகத்தை நரகில் தள்ள யூதர்கள் செய்த சதியே இந்த பிரிவினை வாதமும்... அதற்கு தூண்டுகோலாக இந்த இயக்க போதையும்.

வழி தவறி சென்றவர்கள் இவ்வுலகின் EGO பாராமல் அல்லாஹ்வை பயந்து நடுநிலையோடு சிந்தித்து தெளிவு பெரும் நோக்கோடு விளக்கத்தை பெற்று நேர்வழி வந்தால் அல்லாஹ் மன்னிப்பவனாக தானே இருக்கின்றான். 

அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டு பிரிவினை வாத இயக்க போதையில் இருந்து விடுபட்டு நம் சமுதாய மக்கள் இஸ்லாத்தில் அதன் வடிவாக 1400 ஆண்டுகளாக இருக்கும் வழியில் வாழவும், நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் அவர்களின் அருகாமை கூட கிடைக்காமல் காக்கவும் வேண்டி அல்லாஹ்விடம் துஆ செய்தவனாக முடிக்கின்றேன். அல்லாஹ் நம் துஆ வை ஏற்று கொள்வானாக!!!

ஆமீன்!!! ஆமீன்!!!
யாரப்பல் ஆலமீன்...!!!

வஸ்ஸலாம் 

மதுரை நாஃ பிஈ