முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, February 12, 2013

தூத்துக்குடி விவாதம்

தொடருகின்றது வெற்றி...

அல்ஹம்து லில்லாஹ். அல்லாஹ் எப்போதும் சத்தியத்திற்கே வெற்றியை தருவான். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் புனிதமிகு மதீனா ஷரீபிற்கு ஹிஜ்ரத் சென்ற பிறகு பத்ரு போர் மூண்டது. பத்ரு போர் ஏற்படுவதற்கு முன் மக்காவில் இருந்து அபூ ஜஹல் ஒரு துஆ செய்தான். இறைவனே சத்தியத்திற்கு வெற்றி தா என்பது தான் அந்த து'ஆ. காபாவின் புண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றால் அங்கு கேட்கப்படும் து'ஆ அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதனால் அல்லாஹ் கேட்பது அபூ ஜஹ்ல் ஆக இருப்பினும், அபூ ஜஹ்லின் து'ஆவையும் ஏற்று கொண்டான், சத்தியத்திற்கு வெற்றியும் தந்தான். இதே போல் தான் எல்லா இடத்திலும், எல்லா நேரத்திலும் சத்தியத்திற்கே வெற்றி கிடைக்கும். 

அதனடிப்படையில் தான் சுன்னத் ஜமாத்திற்கு வெற்றிக்கு மேல் வெற்றி கிடைத்து கொண்டிருக்கின்றது. முதன் முதலில் வஹ்ஹாபிகளை களியக்காவிளையில் அவர்களே எதிர்பாராத நிலையில் மடக்கி பிடித்தோம். அங்கு மிகப்பெரும் வெற்றி. இந்த போலி தவ்ஹீத்களோடு இருந்தவர்களே இவர்கள் (போலி) தவ்ஹீத் வாதிகள் மிகப்பெரிய  தோல்வியை சந்தேகத்திற்கு இடமின்றி சந்தித்தார்கள் என்று ஒத்துக்கொண்டு அவர்களின் இணைய தளங்களிலேயே இதை பதிப்பித்து இருந்தார்கள். தொடர்ந்தது சென்னை விவாதம். இதில் அல்லாஹ்விற்கே உருவத்தை கற்பிக்கின்றார்கள் என்று வெளிப்படுத்தியதை உணர்ந்த வஹ்ஹாபி தொண்டர்களே, என்னங்க இது சுன்னத் ஜமாத்தினர் தான் இந்த கருத்தை சொல்கின்றார்கள்  என்று நினைத்து கொண்டிருந்தோம், நீங்களா இதை கூறுகின்றீர்கள் என்று கேட்டு நெருக்கடி கொடுத்ததால் ஏற்பட்ட விளைவு இவர் ஆறு மாத காலம் வனவாசம் சென்றது. தற்போது தூத்துக்குடி விவாதம்.  

இந்த விவாதத்தை ஏற்பாடு செய்வதற்குள் சுன்னத் ஜமாத்தினரான நாங்கள் பட்ட பாடு கொஞ்சமா நஞ்சமா? களியக்காவிளை விவாதத்திற்கு முன்:  என்னங்க நாங்கள் விவாதத்திற்கு அழைக்கின்றோம், இவர்கள் தான் வருவதில்லை. சத்தியம் சுன்னத் ஜமாஅத் ன் பக்கம் இருந்தால் விவாதத்திற்கு வர வேண்டித்தானே என்று ஒரு பக்கம் சுன்னத் ஜமாத்தின் ஆலிம்களை பற்றி இட்டுக்கட்டிய பொய்யை பொதுமக்களிடம்  கூறி விட்டு, மறு பக்கம் ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் வரும்போது ஷைத்தான் ஓடுவதை போல ஓடி விடுவது வழக்கமாக வைத்து இருந்தார்கள். ஆனால் நாம் விரித்த வலையில் அல்லாஹ் ஜல்... சிக்க வைத்தான். அதற்க்கு பிறகு நாம் விவாதத்திற்கு அழைத்து கொண்டு இருக்கின்றோம். தற்போது விவாதம் என்பதை பற்றி வாயே திறப்பதில்லை. நாங்கள் விவாதத்திற்கு அழைக்கவில்லையே, நீங்கள் தானே அழைக்கின்றீர்கள் என்று  சென்னை விவாதத்தின் போது கூட  பொய்யன் ஜைனுலாபிதீன்கூறினார். அப்படி தான் இந்த விவாதமும்.

இந்த விவாதத்தை பற்றிய அழைப்பு சென்னை விவாதத்திற்கு முன்னே விடுக்கப்பட்டது. ஓடி ஒளிந்து கொண்டு இருந்தார்கள். யாரோ எங்கோ கொடுத்த விவாத அழைப்பு கடிதத்தை ஏற்று சென்னை விவாதத்தில் மாட்டியவர்கள், நேரிடையாக இந்த விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது பேச்சே பேசியது இல்லை. ஏன் தெரியுமா?!?!?!?!? தலைப்பு அப்படி.... அப்படி என்ன தலைப்பு? புனித மிகு குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளதா?

கேள்வி: அது என்னங்க எழுத்து பிழை? முஸ்லிம்களா கூறுவது?
பதில்: இல்லைங்க அது தான் இல்லைங்க, இது யூதர்களின் கை கூலிகள் கூறுவது.

கேள்வி: எங்கு கூறினார்கள் ?
பதில்: இவர்கள் எழுதி இருக்கும் தர்ஜமாவில் கூறினார்கள்.

கேள்வி: ஏன் கூறினார்கள்?
பதில்: யூதர்களிடம் இருந்து பணம் பெற கூறினார்கள்.

கேள்வி: ஏன் அபாண்டமாக முஸ்லிம்கள் மீது குறை கூறுகின்றீர்கள்?
பதில்: ஏங்க, குர்ஆனில் பிழை இருக்கின்றது என்று முஸ்லிமாக கூறுவான்? திருத்தப்பட்ட தவ்ராத்தையும், இன்ஜீலையுமே கூட இன்னும் அது இறை வேதம் என்று தானே அந்தந்த மதத்தவர்கள் கூறுகின்றார்கள். இன்ஜீல் கூட பொய் என்று இவர் விவாதம் எல்லாம் பண்ணினாரே! குர்'ஆனிலும் தப்பு இருக்கின்றது என்று குர்'ஆனை நம்பும் முஸ்லிம் எப்பிடி சொல்வான்?


கேள்வி: இவர்களோடு இருக்கின்றவர்கள் அனைவரும் இந்த கருத்தை ஒத்து கொள்கின்றார்களா?
பதில்: ஏன் இல்லை. இவர்கள் அனைவரும் பீ ஜே வை தானே இமாமாக ஏற்று இருக்கின்றார்கள். அவர்களுக்கு வேறு கருத்து இருக்குமா என்ன?

கேள்வி: இவர்கள் சுயமாக தானே ஆய்வு செய்து பின்பற்றுகின்றார்கள்?
பதில்: சுய அறிவு இவர்களுக்கு எங்கே இருக்கின்றது. இவர்கள் எழுதியது தான் எங்கள் கருத்தும் என்று கிடையில் இருக்கும் ஆட்டை போல, பூம் பூம் மாடு போல அல்லவா கலீல் ரசூல் என்பவர் விவாத ஒப்பந்தத்தில் கூறினார். 

கேள்வி: யாரும் எதிர்ப்பு தெரிப்பதில்லையா?
பதில்: எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் யாரும் உள்ளே இருக்க மாட்டார்கள், அப்படி எதிர்ப்பு தெரிவித்து விட்டால் உள்ளே இருக்க விடமாட்டார்கள். இவர்களோடு இருந்து, இவர்களை விட்டு பிரிந்தவர்கள் எல்லாம் இந்த கருத்தை எதிர்த்து கொண்டு தான் இருக்கின்றார்கள். சிலர் இந்த கருத்தை எதிர்த்து வெளியேவும் வந்து இருக்கின்றார்கள்.


நமது நிலைப்பாடு புனிதமிகு குர்'ஆனில் எழுத்து பிழையே இல்லை. ஆனால் (போலி) தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாடு, குர்'ஆனில் எழுத்து பிழை இருக்கின்றது. பாருங்கள் இதுதான் தூய வடிவின் லட்சணம். ஆலிம்களை குறை கூறினார்கள், பிறகு இமாம்களை இழிவு படுத்தினார்கள், பிறகு வலிமார்களை திட்டினார்கள், பிறகு சஹாபா பெருமக்களை கீழ்த்தரமாக பேசினார்கள். அதற்கு பிறகு நமது உயிரினும் மேலான நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் மீது கை வைத்தார்கள். அது படிப்படியாக உயர்ந்து காபிரானார்கள். முதலில் நம்மை போன்றவர்கள் என்றார்கள், பிறகு பலகீனமான ஹதீதை ஏற்க கூடாது என்றார்கள். பிறகு நபி அவர்களுக்கு உலக விஷயத்தில் ஞானம் இல்லை என்றார்கள். பிறகு பலமான ஹதீதுகளை கூட ஏற்க கூடாது என்றார்கள், அதற்க்கு பிறகு நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மார்கத்தில் தப்பு தப்பாக பேசினார்கள் என்றார்கள், பிறகு நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஷிர்க் செய்தார்கள் என்று கூறி இவர்கள் காபிரானார்கள். 

தற்போது அல்லாஹ்வின் வேதமாம் குர்'ஆனில் எழுத்து பிழை உள்ளது என்ற நச்சு கருத்தை நுழைக்க பார்க்கின்றார்கள். சற்று சிந்தியுங்கள். அல்லாஹ் கூறுகின்றான், இந்த வேதம் (மகத்தானது, அல்லாஹ்வின் புறத்தில் இருந்து வந்தது) அதில் சந்தேகமே இல்லை. (2 : 2 ). இப்படி இவர்கள் கிளப்பி விடுவது இறை வேதத்தில் சந்தேகம் வருமா வராதா? கண்ணியம் நிறைந்த இஸ்லாமிய பெருமக்களே, இதற்கு இவர்கள் கூறும் காரணம் மிக அலாதியானது. குர்'ஆன் என்பது ஓசை வடிவில் தான் வந்தது. எழுத்தில் வரவில்லை. அதனால் எழுதியவர்கள் தப்பு தப்பாக எழுதி வைத்தார்கள் என்று வாதிடுகின்றார்கள். 

ஓசையில் தான் குர்'ஆன் வந்தது என்ற காரணத்தால் தான் போலும் ஒழு இல்லாமல் இருப்பவர்கள்,  குளிப்பு கடமையானவர்கள், மாதவிடாய் உள்ள பெண்கள், பேறு கால உதிரப்போக்குள்ள பெண்கள், காபிர்கள் என அனைவரும் குர்'ஆனை தொடலாம் என்று பத்வா கொடுத்தார்கள். அது எல்லாம் இருக்கட்டும், ஓசை வடிவில் இருப்பது தான் குர்'ஆன் என்று கூறுபவர்கள் ஏன் குர்'ஆனை அச்சு பிரதியாக வெளியிட வேண்டும்? இந்த கேள்வி விவாதத்தில் வைக்கப்பட்டது, பதில் இல்லை. ஓசை வடிவில் தான் பாதுகாக்கப்படுகின்றது, ஏட்டு வடிவில் பாதுகாக்கப்படவில்லை என்று கூறும் இவர்கள் கூட்டத்தில் உள்ள ஹாபிழ்கள் அனைவரும் ஏட்டு பிரதியை தான் பார்த்து மனனம் செய்துள்ளார்கள் என்பது தான் உண்மை. இதை பற்றி வினா எழுப்பப்பட்ட போதும் பதில் இல்லை. 

குர்'ஆன் எழுத்தில் இல்லை, ஆனால் நாங்கள் குர்'ஆனை எழுத்து வடிவில் வெளியிட்டு காசு சம்பாதிப்போம் என்று கூறாமல் கூறுகின்றார்கள். எங்கும் நமக்கு (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) பங்கு வேண்டும் என்பது தான் நமது  (போலி தவ்ஹீத் வாதிகளுக்கு) நோக்கமே தவிர, மார்க்கம் இவர்களது நோக்கம் கிடையாது என்பது தான் உண்மை.

இது போன்ற கேள்விகளையெல்லாம் இவரது ஊரிலேயே (தொண்டி அல்ல, தெண்டியில்) வைத்து ஜாக் அமைப்பை சேர்ந்த முஜீபுர் ரஹ்மான் என்பவர் விவாதம் செய்த போது ஏதோ மழுப்பியவர்கள் இங்கு ஒன்றிற்கும் பதில் கூற வில்லை என்பது தான் உண்மை. பல கேள்விகள் வைக்கின்ற போது, அப்பாஸ் அலி என்பவர் என்ன சொன்னார் தெரியுமா? இதற்கு எல்லாம் நாங்கள் பதில் சொல்ல மாட்டோம் என்று அப்பட்டமாக, இவர்களுக்கு கிடைத்த மூன்றாவது வாய்ப்பிலேயே கூறினார். அப்படியானால் எது உண்மை புரிந்து கொள்ள வேண்டும். கேள்வி கேட்டால் பதில் சொல்வது தான் விவாதம். அதை விடுத்து விட்டு நமது தரப்பு கேள்வி கேட்கும் போது, இந்த வாதம் எப்போது வைப்பது என்பது நாங்கள் முடிவு செய்வோம், நீங்கள் முடிவு செய்ய தேவை இல்லை என்று கூறுகின்றார்கள் என்றால் எப்பிடி பட்ட தோல்வியை சந்தித்திருக்கின்றார்கள். 

அங்கு வைக்கப்பட்ட கேள்விகள் அனைத்தும், இவரது தர்ஜமாவில் இவர் சுட்டி காட்டிய வார்த்தையை பற்றியே கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொல்லாமல், இவர்களை பின்பற்றி கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை தங்கள் பக்கம் தக்க வைத்து கொள்ள எப்போதும் இவர்கள் செய்யும் திருப்பு வாதம் செய்ய தொடங்கினார்கள். என்ன தெரியுமா? பிக்ஹு கிதாபை எடுத்து வாதம் புரிய தொடங்கினார்கள். 
 
அய்யா இது பிக்ஹு பற்றிய விவாதம் இல்லை என்று கூறிய போதும் இவர்கள் சென்னையில் எப்பிடி குர்'ஆன் தப்சீர் என்ற தலைப்பின் போது பிக்ஹை எடுத்தார்களோ அப்படியே அதிலேயே நின்று கொண்டிருந்தார்கள். இவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது என்பதற்கு இதுவும் சாட்சி. எந்த விவாதத்தை எடுத்தாலும் இவர்கள் பிக்ஹு கிதாபையே எடுப்பவர்களாக இருக்கின்றார்கள். மக்கள் ஏமாளிகள் இல்லை. இன்னும் ஏமாந்து கொண்டு இருக்க. ஆக எந்த கேள்விக்கும் பதில் இல்லை என்பது தான் உண்மை. 

நாங்கள் விவாதத்தில் தோற்றுவிட்டோம் வஹ்ஹாபிகள் ஒப்புதல்:

இவர்கள் தெருவை நாறடிக்க போஸ்டர்கள் ஓட்டுவது வழக்கம். அதில் இஸ்லாமிய முறைக்கு மாற்றமாக அதாவது பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் நிர்ரஹீம் என்பதற்கு மாற்றமாக மக்கத்து காபிர்கள் சொல்வதை போல இறைவனே உன் திருப்பெயரால் பிஸ்மிகல்லாஹும்ம என்று பொருள் தரும் படியான அர்த்தமான இறைவன் திருப்பெயரால் என்று அச்சடிப்பது வழக்கம். தூத்துக்குடி விவாதத்திற்கு முன் கர்த்தரின் திருப்பெயரால் என்று மேலப்பாளையத்தில் அடித்து இருந்தார்கள் அதெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். 

2010 ம் வருடம் சென்னையில் நடந்த விவாதத்திலும் 2012 ம் வருடம் தூத்துக்குடியில் நடந்த விவாதத்திலும் இறைவனின் திருப்பெயரால் என்று தாங்கள் செய்யும் இந்த மக்கத்து காபிர்களின் வழி முறையை நியாயப்படுத்திய இந்த கருத்து காபிர்கள் தற்போது தங்கள் நிலை தப்பு என்பதை ஒப்பு கொண்டு இருக்கின்றார்கள். கீழே பாருங்கள்.
 


 
இதுவும் இவர்கள் விவாதத்தில் தோற்று விட்டார்கள்  என்று இவர்கள் கூறும் வாக்குமூலமாகவே இருக்கின்றது. மேலும் இவர்களின் தர்ஜமா 10 ம் பதிப்பில் ஏராளமான மாற்றங்கள் நம் இமாம்கள் கூறிய விளக்கத்தின் அடிப்படையில் மாற்றி இருக்கின்றார்கள், இதுவும் இவர்கள் அப்பட்டமாக தோல்வியை ஒப்பு கொண்டதற்கு அடையாளமாகும்.

மேலும் இந்த நேரத்தில் இரண்டு விஷயத்தை பதிவு செய்ய விரும்புகின்றேன். ஒன்று, இந்த விவாத ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கும் போது இவரது தர்ஜமாவை தான் நாங்கள் ஏற்கின்றோம், அதே போல இந்த ஜமாத்தின் தொண்டர்களில் இருந்து பொறுப்பில் உள்ளவர்கள் வரை யார் மார்க்கம் பேசினாலும் அதற்கு எங்கள் ஜமாஅத்தே பொறுப்பாளி என்று கலீல் ரசூல் என்பவர் கூறினார். இதன் மூலம் ஒரு வாக்கு மூலத்தை பதிவு செய்து இருக்கின்றார். அதாவது நாங்கள் சுயமாக சிந்திப்பவர்கள் அல்ல, பீ ஜே வின் முகல்லிதுகள் தான், கிடையில் திரியும் ஆடுகள் தான். இதை தான் நாங்கள் எதிர்பார்த்தோம் கலீல் ரசூல் அவர்களே. நன்றி உங்கள் வாக்கு மூலத்திற்கு.


இரண்டாம் விஷயம்.  ஜமாலி ஹழ்ரத் அவர்களிடம் விவாதம் செய்து தோற்று போகும் காலமெல்லாம் இருந்தது. ஜமாலி ஹழ்ரத் அவர்களே இந்த பீ ஜே வை விட மிகவும் இளமையானவர்கள். ஆனால் தற்போது இந்த பீ ஜே சிக்கி சின்னாபின்னம் ஆகி கொண்டிருப்பது, பீ ஜே சங்கரன் பந்தல் மதரசாவில் முதல்வராக பொறுப்பேற்று சில காலம் கடந்த நிலையில் பிறந்த ஒரு மிக இளம் மௌலவி யிடம். இன்னும் எத்துனை சிறிய ஆலிம் பெருமகனார்களிடம் சிக்க போகின்றார், கேவலப்பட போகின்றார் என்பது தெரியவில்லை. அதற்குள் திருந்த வேண்டுமாய் கேட்டு நம்முடைய இந்த வெற்றி தகவலை முடித்து கொள்கின்றோம்.  மேலதிக தகவல் மிக விரைவில் வரும் இன்ஷா அல்லாஹ்...

இந்த கூட்டத்தாரை விட்டு அல்லாஹ் நம் அனைவரையும் காப்பாற்றுவானாக! 

ஆமீன்! ஆமீன்!! ஆமீன்!!!
 
யா ரப்பல் ஆலமீன்.
 
வஸ்ஸலாம்.

மதுரை நாபிஈ

Wednesday, September 26, 2012

மாபெரும் விவாதம்: நேரடி ஒளிபரப்பு

புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா? (நவூது பில்லாஹ்...!) 


விவாதம்: நமது இணைய தளத்தில் 

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகின்றது.

விவாதம் மற்றும் ஒளிபரப்பப்படும்  

நேரம்:

காலை 10 மணி முதல் 1 மணி வரை
பகல்  2.30 மணி  முதல் 5 மணி வரை 
மாலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை

தேதி: 

இன்ஷா அல்லாஹ்  29-09-2012 (சனிக்கிழமை), மற்றும் 30-09-2012 (ஞாயிற்றுக்கிழமை) 

இடம்: தூத்துக்குடி

தலைப்பு:
  
புனித குர்ஆனில் எழுத்து பிழைகளா? (நவூது பில்லாஹ்...)

சுன்னத் ஜமாஅத் நிலைப்பாடு:


புனித குர்'ஆனில் எழுத்து பிழை இல்லை.

தவ்ஹீத் ஜமாஅத் நிலைப்பாடு:

குர்'ஆனில் எழுத்து பிழை உண்டு.
Saturday, December 31, 2011

இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில்


இந்தியாவின் மிகப்பெரிய மஸ்ஜித் மிக விரைவில் இன்ஷா அல்லாஹ்.....

நாயக கோமான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தங்களின் ஹஜ்ஜின் போது (நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டு விடலாம் என்பதற்காக ஒரே ஒரு ஹஜ்ஜு தான் தன் வாழ்நாளில் செய்துள்ளார்கள். அதுவும் அவர்கள் நம் கண்களை விட்டு மறைக்கப்பட இருந்த அந்த கடைசி ஆண்டு. இதுவும் அவர்களின் மறைமுக ஞானத்தால் செய்தார்கள்.) இஹ்ராம் களையும் அடையாளமாக ஹழ்ரத் முஅம்மர் இப்னு அப்துல்லாஹ் ரழி... என்ற தோழரை (நாவிதர்) அழைத்து தங்களுடைய தலையில் இருந்த அந்த திரு முடியை மழிக்க சொன்னார்கள். எதிலும் ஒரு ஒழுங்கை காட்டி தந்த நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் முதலில் வலது பக்க முடியை எடுக்க சொன்னார்கள். பிறகு இடது புற முடியை எடுக்க சொன்னார்கள் இப்படியாக முழுதும் மழிக்கப்பட்ட திரு முடியை ஒன்றாக சேகரித்து, அதை ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் வழங்கினார்கள்.


அப்படி வழங்கிய அந்த திருமுடியை சஹாபா பெருமக்கள் மத்தியில் பங்கு வைக்க சொன்னார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள். இந்த குறுகிய கால வாழ்க்கையில் 1,40,000 (ஒரு இலட்சத்து நாற்பது ஆயிரம் ) சஹாபாக்கள் நபிகளாரோடு இருந்தார்கள். அனைவருக்கும் பங்கு வைத்து விட்டு சில முடிகள் ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்தது. அங்கே இருந்தது சஹாபிகள் அதனால் நபி ஸல்... அவர்களின் புனிதமிகு அந்த திருமுடியை வாங்கி வாங்கி பாதுகாத்து கொண்டார்கள். ஒருக்கால் இன்றைய நவீன வாதிகள், அயோக்கியர்கள், மார்க்கத்தை நாசமாக்கும் புற்றீசல்கள், கரையான்கள், நபிகளார் மேல் பொறாமை பிடித்தவர்கள், அங்கே இருந்திருந்தார்களேயானால் தலை முடியை என்னிடம் எதற்கு தருகின்றீர்கள் அதை தூர வீசுங்கள் என்று கூறி இருப்பார்கள். அல்லாஹ் நபி ஸல்... அவர்களின் கண்ணியத்தை பாதுகாத்தான் அதனால், அங்கே இருந்தது வஹ்ஹாபி இல்லை சஹாபி.

அப்படி பாதுகாத்ததாலும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் கட்டளைக்கேற்ப யாருடைய வாகனம் எந்த திசையில் இருக்கின்றதோ, அந்த திசையில் சென்று மார்க்கத்தை பரப்புங்கள் என்று சொன்னதாலும், அப்படி சென்ற புனித மிகு சஹாபா பெருமக்களால் உலகம் முழுதும் அந்த புனித திரு முடி வியாபித்து இருக்கின்றது. நபி ஸல்... அவர்களின் பரக்கத் பொருந்திய அந்த பொன் முகத்தை காண முடியாத இந்த பாக்கியம் இல்லா கண்களுக்கு அந்த புனித மிகு முடிகளை காண பாக்கியம் கிடைக்கின்றது. அந்த புனித முடியிற்கு முன்னாலும் சத்தம் போட்டு பேசுவது கூடாது.


எப்படி நபிகள் நாயகம் ஸல்.... அவர்களின் வாரிசுதாரர்களான சையத்மார்கள், தங்கள், மௌலானாக்கள் என்று அடையாளம் காட்டப்பட்டு, உலகம் முழுதும் இருக்கின்ற சாதாத் மார்களை அடையாளம் காட்டப்படுவதற்கு சில்சிலா என்னும் கொடிவழி ஜாபிதா பராமரிக்கப்படுகின்றதோ அதே போல நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திரு முடிக்கும் அதை வைத்திருப்பவர்கள் அதன் சில்சிலாவை பராமரித்து வருகின்றார்கள். அப்படி இருந்தும் அந்த திருமுடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று இன்றைக்கு ஒரு கூட்டம் நமது மத்தியில் இருக்கின்றது. அவர்களை நாம் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்களுக்கே தெரியாத விஷயம் இவர்களுக்கு தெரிந்து விட்டதாம். கண்மணி ரசூலுல்லாஹி ஸல்... அவர்கள் பங்கு வைக்க சொன்னார்கள், நபி வழியை (!?!?!?!?!?!?) பின்பற்றும் இந்த கூட்டம் அந்த முடிக்கு ஒரு சிறப்பும் இல்லை என்று கூறுகின்றது. அந்த முடியின் சொந்தக்காரரான அபுல் காசிம் ஸல்.... அவர்களுக்கே சிறப்பு இல்லை என்று கூறும் கூட்டம் தானே! அவர்களும் நம்மை போன்றவர்கள் என்று கூறுபவர்கள் தானே!! ஆனால் நமது நிலையை பாருங்கள். ஹழ்ரத் முஹம்மத் இப்னு சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அபீதா ரழி... அவர்களிடம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடியை வழங்கி விட்டு கூறினார்கள் என்னிடம் என் தந்தை சீரின் ரழி... அவர்கள் மூலம் நபிகளாரின் திரு முடி எனக்கு கிடைத்தது. ஹழ்ரத் சீரின் ரழி... அவர்கள் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் பணியாள். ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தாயார் ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் தந்தையின் மறைவிற்கு பிறகு ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களை திருமணம் முடித்து இருந்தார்கள்.

ஹழ்ரத் அபூ தல்ஹா ரழி... அவர்களிடம் இருந்த அந்த திருமுடிகளில் சிலவற்றை ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களிடம் வழங்கி இருந்தார்கள். ஹழ்ரத் உம்மு சுலைம் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களிடம் வந்து, ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் பணியாள் ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் சீரின் ரழி... அவர்களின் மூலமாக அவர்களின் மகனார் ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களுக்கு கிடைத்து, ஹழ்ரத் முஹம்மத் பின் சீரின் ரழி... அவர்களிடம் இருந்து ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் அந்த திருமுடியை பெற்றார்கள். ஹழ்ரத் அபீதா ரழி... அவர்கள் ஒரு தாபிஈ. ஹழ்ரத் இப்னு சீரின் அவர்கள் கனவின் விளக்கம் சொல்வதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள். இன்றளவும் கனவிற்கு விளக்கம் அளிப்பதில் அவருக்கு நிகர் அவர்களே.அப்படி நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் திருமுடியை பெற்றுக்கொண்ட ஹழ்ரத் அபீதா அவர்கள் கூறுவதை பாருங்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் ஒரு திருமுடி என்னிடம் இருப்பது,

أحب إلي من الدنيا و ما فيهاஇந்த உலகமும், உலகில் உள்ள எல்லாவும் என்னிடம் இருப்பதை விட என்னிடம் இந்த திருமுடி இருப்பதி மிகவும் பிரியமானதாகும் என்று கூறுகின்றார்கள் (புகாரி).

அவர்களின் திருமுடியும் எனது முடி போல தானே என்று சொல்லுகின்ற துணிச்சலோ, தைரியமோ இல்லையே அவர்களுக்கு, அவர்கள் தானே சஹாபிகளும், தாபியீன்களும். வாங்கி வாங்கி பாதுகாத்தார்களே. அவர்களை தானே பின்பற்ற முடியும். அவர்களின் ஈமான் தானே சரியானது, அவர்களின் முடிவு தானே உண்மையானது. அவர்களின் வழி தானே சாத்தியமானது. ஆனால் இன்று எளிய மார்க்கம் என்றும், தூய மார்க்கம் என்றும் கூறும் இந்த மடையர்கள் இந்த மார்க்கத்தின் பரிசுத்தத்தை அசுத்தம் ஆக்க பார்க்கின்றார்கள். மேலும் இன்றைய சமீப காலமாக


ما أنا عليه و أصحابي


நானும் எனது தோழர்களும் எந்த வழியில் இருக்கின்றோமோ அவர்கள் வழியை பின்பற்றுபவர்கள் தான் சுவன வாதிகள் என்ற ஹதீஸிற்கு விளக்கம் கூறக்கூடிய போலி தவ்ஹீதின் பொய்யன் ஜெய்னுல்ஆபிதீன், நாம் தான் அந்த ஹதீஸிற்கு உரியவர்கள், நாம் தான் சுன்னத் ஜமாஅத் என்று கூறி, தன்னுடைய போலி தவ்ஹீத் என்னும் வியாபாரம் சரியாக ஓட வில்லை என்பதால் நமது கூட்டத்தின் பெயரை திருட முயற்சி செய்கின்றார் (ஏனைய 72 கூட்டங்களில் இவரும் ஒருவர் என்பதை நாம் ஒப்புக்கொள்கின்றோம் என்பது வேறு விஷயம்) அப்படி செய்யும் போது, இன்றைக்கு எந்த வழியில் இருக்கின்றோமோ அந்த வழியில் என்று தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். அதனால் நாம் தான் ஸல்... அவர்களின் காலத்தில் செய்வதை மட்டும் பின்பற்றுகின்றோம், பின்னால் தோழர்கள் செய்ததை பின்பற்றவில்லை என்று கூறுகின்றார்களே. நபிகளார் ஸல்... அவர்களே பங்கு வைத்து கொடுத்தார்களே, அந்த திருமுடியை இன்று பரிகாசம் செய்வது எதனால்? பதில் சொல்வார்களா?


மேலும் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் அந்த திருமுடி ஹழ்ரத் உம்முல் மூமினீன் உம்மு சல்மா ரழி... அவர்களிடம் இருந்தது. யாரேனும் வயிற்று வழி ஏற்பட்டால் அந்த புனித முடியை தண்ணீரில் முக்கி வெளியில் எடுத்துவிடுவார்கள். அந்த புனித தண்ணீர் மருந்தாகவும் பயன் பட்டிருப்பதும் ஹதீஸ்களில் காணப்படுகின்றது...

இப்படி பட்ட ஒரு புனித மிகு நபி ஸல்... அவர்களின் புனித மிகு திரு முடி , (சுன்னத் ஜமாஅத்) முஸ்லிம் மக்கள் அதை கண்ணியத்துடனும், மரியாதையுடனும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் காலம் தொட்டு பாதுகாத்து, பரக்கத்திற்காகவும், மருந்திற்க்காகவும் உபயகப்படுத்தியும் வந்துள்ளார்கள்.
அதன் தொடர்ச்சியாக நமது அருகில் உள்ள கேரளா மாநிலத்தில் கோழிகோடு என்ற மாவட்டத்தில் கரந்தூர் என்ற ஊரில் செயல் பட்டுவரும் உலக பிரசித்தி பெற்ற சுன்னத் ஜமாத்தின் அரபி கல்லூரியான மார்கஸ் சக்கபாத்தி சுன்னியா என்ற கல்லூரியின் நிறுவுனர் கமருல் உலமா, அபுல் ஆய்தாம், A.P.அபூபக்கர் முஸ்லியார் (பாகவி) (DUBAI AWQAF DIECTER SHEIK HAZRAJI) அவர்கள் கடந்த வருடம் அவர்களின் பாதுகாப்பில் இது வரை பாதுகாக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் (ஸல்)திருமுடியை மர்கசிற்கு வழங்கினார். அதை பாதுகாப்பதற்கும், சுன்னத் ஜமாத்தினர் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் இந்தியாவில் மிக பெரிய மசூதியை அதன் நினைவாக ருபாய் 40 கோடி செலவில் கேரளா மாநிலத்தில் கோழிகோடு மாவட்டத்தில் மிக விரைவில் கட்ட உள்ளார்கள்.

அதன் அடிக்கல் நாட்டு விழாவும் இன்டர்நேஷனல் மிலாது விழாவும் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜனவரி 30 ம் தேதி நடைபெற உள்ளது. அது சமயம் அனைவரும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறும் அன்புடன் அழைகின்றோம்

எல்லாம் வல்ல அல்லாஹ் ஜல்... நம் எல்லோரையும் உண்மையான பாதையாம் சுன்னத் ஜமா'த்தில் என்றென்றும் பாதுகாப்பானாக!

ஆமீன்!
ஆமீன்!!!
யா ரப்பல் ஆலமீன்.!!!!!

வஸ்ஸலாம்.மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்

கோவை பைசல்
09382222202,09383333303

பள்ளியின் மாதிரி தோற்றம்:


Wednesday, November 30, 2011

சையதுஸ் ஷுஹதா ஹஸ்ரத் இமாம் ஹுசைன்ரழியல்லாஹு அன்ஹு

ஷஹீத் இப்னு ஷஹீத் சையதுஸ் ஷுஹதா ஹஸ்ரத் இமாம் ஹுசைன்ரழியல்லாஹு அன்ஹு

ஹஸ்ரத் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அன்னவர்கள் சையதுஸ் ஷுஹதா என்று சொல்லக்காரணம், ஹஸ்ரத் ஆதம் அலைஹி ஸலாம் முதல் இப்போது உள்ள உயிர்கள் வரை, இமாம் ஹுசைன் அவர்களை போன்று கஷ்டங்களை சந்தித்ததும் இல்லை, பலவிதமான இன்னல்களுக்கு ஆளானவர்கள் எவரும் இல்லை.

கர்பலாவினுடைய மைதானத்தில் காzஸிகளும் (Ghaazi) [The one who fight for the Sake of ALLAH] இருந்தார்கள், பர்தேஸ்'ஸி -களும் (A person who lives in another Land), முஹாஜிர்-களும் (Rally to My help) இருந்தார்கள், முஸாபிர்-களும் (A traveler) இருந்தார்கள்.

மூன்று நாட்களுக்கு பட்டினி நோன்போடும், மனைவி, குழந்தைகளோடும் இறைவனுக்காக தங்களை காணிக்கை செய்பவர்களும் இருந்தார்கள். மேலும் இறைவணக்கம் புரிந்தவர்கள் தன் இறைவனை வணக்கம் செய்துகொண்டு இருக்கையில் ஷஹீத் ஆனவர்களும் இருந்தார்கள்.

முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்கள் கூறியிருந்தார்கள், "ஹசன், ஹுசைன் சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்கள் ஆவர்கள்". சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்கள், சொர்கத்தின் தலைமையை ஏற்க எல்லா பலப்பரிட்சைகளிலும் நின்றும் வெற்றிபெற்றுவந்தார்கள்.

இமாம் ஹுசைனார் முதலில் முஜாஹிர், முஜாஹித், காஃஸி (Gazi) யாக இருக்கவில்லை. இதற்க்கு முன்பே இமாம் ஹுசைனார் அவர்களுக்கு முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் "சொர்கத்தின் வாலிபர்களின் தலைவர்" என்று கிரீடம் அணிவித்துவிட்டார்கள் . சுபானல்லாஹ்.

ஒரு ஹிக்மத் என்னவென்றால் எவரேனும் ஒரு சொர்கவாசி என்னுடைய சொர்கத்தின் தலைவர் (இமாம் ஹுசைன்) அவர்களுக்கு சில "சிப்பாத்"-கள் இல்லை எல்லாம் அல்லாஹ்வினுடைய விருப்பமாக இருந்தது என்பாராயின்.

கர்பலாவின் ஒரே மைதானத்தில், எல்லாவித இன்னல்களுக்கும் உட்பட்டு எல்லா பலப்பரிட்சைகளிலும் சந்தித்து ஒவ்வொன்றாக வெற்றியும் கண்டுவந்தார்கள். இமாம் ஹுசைனாரின் அனைத்து "சிப்பாத்"-களும் வெளிப்பட்டுவிட்டன.

இமாம் ஹுசைன் அவர்களை போன்று எவரும் தொழுததும் இல்லை, எவரும் பட்டினி நோன்பும் வைத்ததில்லை, இமாம் அவர்களை போன்று எந்த ஒரு போர்வீரனும் இல்லை, இமாம் அவர்களுக்கு சென்ற "ஜூலுஸ்" (a gathering of People) போன்று எந்த ஒரு "ஜூலுஸ்"-ம் இதுவரை சென்றதில்லை.

எல்லோரும் தொழுகைக்காக "ஒளு" செய்வார்கள் அல்லது "தயம்மும்" செய்வார்கள். இமாம் ஹுசைனார் அவர்களின் இறுதி தொழுகை "ஒளு" மற்றும் "தயம்மும்" கடந்து இருந்தது.

விஷயம் என்னவென்றால் 3 நாள் பட்டினியுடன் குடிப்பதற்கு தண்ணீரே இல்லாத பட்சத்தில், "ஒளு" செய்ய தண்ணீர் கிடைக்கவா போகிறது?

சரி தயம்மும் செய்துவிடலாமே என்று நினைத்தால் காய்ந்த சுத்தமான மண் அல்லது கட்டாந்தரை அல்லது சுவர் கொண்டு கைகளினால் செய்துவிடலாம் என்று நினைத்தால்....

கைகளிலோ காயங்களுடன் வெட்டுப்பட்டு ரத்தம் வடிந்து கொண்டு இருக்கையில் எவ்வாறு தயம்மும் செய்ய இயலும்?

"நா மஸ்ஜித் மே, நா பைத்துல்லாஹ் கி திவாரோ கே சாயேமே;

நாமா ஸே இஷ்க் அதா ஹோதி ஹே தல்வாரோன்கே சாயேமே..."

"பள்ளிவாசலிலும் இல்லை, அல்லாஹ்வின் வீட்டின் சுவர் நிழலிலும் இல்லை,

யா ஹுசைன், உங்கள் இறைக்காதலின் தொழுகை போர்வாளின் நிழலில் நிறைவேறியது"

இமாம் ஹுசைன் அவர்களுடைய தொழுகை "ஒளு", "தயம்மும்" போன்றவற்றினை எதிர்பார்த்துக்கொண்டு இருக்கவில்லை. அதையும் கடந்து இமாம் அவர்களின் இறைக்காதல் இருந்தது.

இமாம் அவர்களின் நோன்பை போன்று இந்த உலகில் எவரும் நோன்பு பிடித்ததில்லை, எல்லோருக்கும் நோன்பு ஒரு நாள் ஆகும், இமாம் அவர்களின் நோன்போ 3 நாட்கள் கொண்டதாகும். எல்லோருக்கும் "இப்தார்" நேரம் சூரியன் மறையும் போதாகும், இமாம் அவர்களுக்கோ கதிரவன் உச்சத்தில் இருந்த போது.

எல்லோரும் தண்ணீரை கொண்டு "இப்தார்" செய்வார்கள். இமாம் அவர்களோ "ரத்தத்தை" கொண்டு செய்தார்கள்.

கணவனை இழந்துவிட்ட பெண்கள் 4 மாதம் 10 நாட்கள் "இத்தத்" உடைய காலத்தினை தனியே ஒரு இடத்தில் இருந்து களிப்பார்கள். ஆனால் இமாம் ஹுசைன் அவர்களின் மனைவி, அலி அஸ்கர்-ன் அன்னை, அலி முர்தஸா அவர்களின் மருமகள், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி ஸல்லம் அவர்களின் குடும்பத்தின் "குலவிளக்கு", முஸ்லிம்களின் கண் இமை! தன்னுடைய கணவனை (இமாம் அவர்களை) இழந்துவிட்ட பிறகு....

கர்பலாவிலிருந்து குஃபா- வரையும் பின்பு குஃபா-விலிருந்து சிரியா வரைக்கும் கைதிகளாக அலைகிலிக்கப்பட்டார்கள். இமாம் ஹுசைனார் அவர்கள் ஷஹீத் ஆன பிறகு அவர்களை போன்று எவரும் இதுவரை ஊர்வலம் சென்றிருக்க மாட்டார்கள்.

இந்த வானமும், பூமியும் இது போன்ற சம்பவத்தினை இதுவரை பார்த்தது இல்லை. துண்டிக்கப்பட்ட இமாம் ஹுசைனார் அவர்களின் புனித சிரம் ஈட்டியின் முனையில் சொருகியபடி முன்னே செல்ல கைதிகளாக ஒட்டகங்களை இழுத்துக்கொண்டு பெண்கள் பின்னே தொடர்ந்தனர்.

இறந்து போகும் நபர், இறப்பதற்கு சற்று முன் தன்னுடைய நேசபந்துக்களுக்கு நல்லுபதேசம் செய்வார்கள். ஆனால் இமாம் ஹுசைன் அவர்களோ எவ்வாறு இவ்வுலகை விட்டு பிரிகிறார்கள் என்றால் கடுமையான வெட்டுக்காயங்களுடன் குதிரையிலிருந்து கிழே விழும் போது தன்னை வெட்ட வந்த கொடுங்கோலன் ஷிமர் என்பவனிடம் "இரு 'ரகாத்' ஷித்ததுல் (ஹ்)வ்ப் என்னும் யுத்ததிர்க்குண்டான தொழுகையினை நான் தொழ வேண்டும் என கேட்டார்கள்" .

இறைவன் மீது ஆணையாக நம் முழு வாழ்கையும் லட்சக்கணக்கான தொழுகைகளை தொழுது இருந்து காணிக்கை ஆக்கினாலும், இமாம் ஹுசைன் அவர்களுடைய ஒரு "சஜ்தா" விற்க்கு ஈடாகாது. சுபானல்லாஹ். (ஆனால், அந்நாளில் நல்லடியார்களிடம்) சாந்தியடைந்த ஆத்மாவே! நீ உன்னுடைய இறைவன்பால் திருப்தி அடைந்த நிலையிலும், (அவன்) உன்மீது திருப்தியடைந்த நிலையிலும் மீளுவாயாக. நீ என் நல்லடியார்களில் சேர்ந்து கொள்வாயாக. மேலும், நீ என் சுவர்க்கத்தில் பிரவேசிப்பாயாக (என்று இறைவன் கூறுவான்). (Al-Fajr 89:27-30)

பிறகு ஏன் முஸ்தபா ஸல்லலாஹு அலைஹி ஸல்லம் அவர்களுடைய தோட்டத்தின் "பூ" விற்க்கு சிறப்பு இல்லாமல் போகும்? முஸ்தபாவின் உம்மத்தில் மதிப்பிட முடியாத அந்தஸ்தும் கண்ணியமும் என்டென்றும் இமாம் ஹுசைன் அவர்களுக்கு இருக்கும். இமாம் அவர்கள் தீனை பாதுகாப்பவராக இருந்தார்கள்.

சந்தோஷத்திலும், சங்கடங்களிலும் "தீன்" உடைய பக்கமே திரும்புபவராக இருந்தார்கள்.

"காற்று விளக்கை அணைக்கும் என்பதற்கு தான் குமிழ் !

காற்றே குமிழாக மாறிவிட்டால் பின்பு விளக்கை யார் அணைப்பது ? "

-- அல்லாமா இக்பால் அலைஹி ரஹ்மா--

ஹஸ்ரத் இஸ்மாயில் அலைஹி ஸலாம் அவர்கள் தன்னை இறைவனுக்காக வேண்டி "பலியிட" சென்று இருந்தபோது. தன்னுடைய தந்தை ஹஸ்ரத் இப்ராஹீம் அலைஹி ஸலாம் அவர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதித்தார்கள்.

உயிர் பிரியும் போது எல்லோருக்கும் துடிப்பு இருக்க செய்யும் எனவே என்னுடைய கை, கால்களை கட்டிவிடுங்கள், என் முகத்தினை பார்க்காமல் வெட்டுங்கள் ஏனென்றால் நான் வெட்டுப்படும் போது துடிக்காமல் இருப்பேன் என்று கூறினார்கள்.

இமாம் ஹுசைன் அவர்களும் வெட்டுப்படும் போது துடிக்கவில்லை, பதறவில்லை.

"த்ஹா கண்ஜீர் பி நா தடப்'பா பஷர் ஷேர் குதா

தக்லீப் தொ பஅக்த் பாத்திமா கே ஷேர் மே ஹே"

"புலியும் துடிக்கவில்லை, புலியின் புதல்வரும் துடிக்கவில்லை

இந்தக் கஷ்டம் பாத்திமாவுடைய புலிகளுக்கு மட்டுமே"

ஷஹீத் ஆன பிறகும் இமாம் ஹுசைன் ஈட்டி முனையில் இருந்த வேளையிலும் தன்னுடைய கண்களை திறந்தார்கள், இந்த புவியையும் கண்டார்கள்.

சுபானல்லாஹ்... எவ்வாறு அதை சொல்லுவது. வார்த்தைகளில் அடங்காத ஒன்று....

"பா ஆங்கேன் சரே நேஸே பர் சவா ஹே சமீன் ஹே ரோ

யானி ஹே சஜ்தா சாநி கி ஆர்சோ"

இமாம் ஹுசைன் ஈட்டி முனையில் இருந்து பார்த்த போது இப்புவி முறையிட்டது,

யா ஹுசைன் உங்கள் "சஜ்தா" கிடைக்காத என்று?

இமாம் ஹுசைன் அவர்கள் ஒரு சஜ்தா செய்து இருந்த வேளையிலே இரண்டாம் சஜ்தா செய்ய முடியும் என்ற நினைத்த நேரத்தில் கொடுங்கோலனால் வெட்டப்பட்டுவிட்டார்கள் "சையதுஸ் ஷுஹதா" ஆனார்கள்.

ஹகிகதில் ஷஹீத் உடைய பரக்கத்துக்கள் இமாம் ஹுசைன் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தன் திருமடியிலிருந்து பங்கிடுகிறார்கள். மேலும் ஷுஹாதக்கள் இமாம் அவர்களின் கரத்தினை பற்றி பிடித்துக்கொண்டு தான் இறைவனின் சந்நிதானத்தில் போய் சேருகிறார்கள்.


அல்லாஹ் நம் அனைவரையும் ஹழ்ரத் இமாம் ஹுசைன் ரழி... அவர்களின் கூட்டத்தில் என்றென்றும் ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்.


வஸ்ஸலாம்.


நன்றி: அஜீமுத்தீன்.