முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, July 31, 2010

PJ மற்றும் TNTJ வின் கிறிஸ்தவ பயணம்

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல் நமது உயிரினும் மேலான கண்மணி நாயகம் ஸல்... அவர்களும் எது ஹலால் எது ஹராம் என்று காட்டியுள்ளார்கள். அல்லாஹ் குர்ஆனில் انما حرم عليكم الميتت والدم ولحم الخنزير وما اهل به لغير الله என்று கூறிகிறான். அதாவது உங்களுக்கு தானாக செத்த பிராணிகள் (ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவை), இரத்தம், பன்றியின் இறைச்சி மேலும் அல்லாஹ்வின் பெயர் சொல்லி அறுக்கப்படாதது அனைத்தும் ஹராம்(விளக்கப்பட்டது) என்று கூறுகிறான். செத்தவைகளில் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஹதீஸின் மூலம்
மீனை விதிவிலக்கு ஆக்கினார்கள். கடலில் ஒழு செய்யலாமா என்று கேக்கும் போது ஆமாம் கடலில் ஒழு செய்யலாம் அதில் இருக்கும் மீன் கூட ஹலால் என்று கூறி செத்தவைகளில் மீனை சாப்பிட அனுமதி வழங்கினார்கள்.

மேற் கூறப்பட்ட விஷயங்களில் மீனை தவிர ஏனைய விஷயங்களில் நபிகள் நாயகம் ஸல்... அவர்களோ அல்லாஹ்வோ எவ்வித விதிவிலக்கு அளிக்கவில்லை. ஆனால் ஒரு கூட்டம் வந்தது அதற்கு ஒரு மதி கேட்ட தலைவர் வேற. அந்த தலைவர் கூறுகிறார், அல்லாஹ் பன்றியின் இறைச்சி மட்டும் தான் ஹராம் என்று குர்ஆனில் சொல்லி உள்ளான் அதனால் ஏனைய எலும்பு, குடல், ஈரல், போன்றவற்றை பொருத்தலாம், சாப்பிடலாம் என்று கூறி உள்ளதன் மூலம் கிறிஸ்தவர்களை போன்று நாமும் பன்றியை சாப்பிடுவோம் என்ற நிலைக்கு வந்து உள்ளார்கள். இப்படி இவராக சொல்லுவதற்கு யாரு அதிகாரம் கொடுத்தது, அல்லாஹ்வா? இல்லை அவனின் தூதர் நாயகம் ஸல்... அவர்களா? மார்கத்தில் விதி விலக்கு அளிக்க இவர் யார்?

மார்க்கம் என்ன இவரின் பாக்கெட் இல் தவழும் யூத கிறிஸ்தவர்களின் பணமா, தேவைக்கு ஏற்றாற்போல் செலவு செய்ய? இது நபிகளாரின் மார்க்கம், அந்த நபியை கேவலப்படுத்தி அவர்கள் அல்லாஹ்வின் தூதுத்துவத்தை எத்தி வைக்கும் பொறுப்பு மட்டும் தான், அவர்கள் மறைவிற்கு பின் அந்த பொறுப்பு இல்லை என்று கூறி, நபிகளாரிடம் இருந்து அந்த பொறுப்பை தான் எடுத்து கொள்வதற்கு யார் அதிகாரம் வழங்கியது இவருக்கு? இப்படித்தான் நபிகளாருக்கு ஒரு பொறுப்பும் இல்லை என்று முனாபிக்குகளும், அக்காலத்து கிறிஸ்தவர்களும், இக்காலத்து கிறிஸ்தவர்களும் நபிகளாரை ஏசி பேசி திரிகிறார்கள். அவ்வழியில் சென்று கொண்டிருக்கிறார் PJ என்பது அல்லாஹ்வின் வசனத்திற்கு புது கருத்தை புகுத்தியதன் மூலம் தெரிகிறது.

நாம் அல்லாஹ்வின் பெயரை சொல்லி அறுத்து வலிமார்களுக்கோ, நம் முன்னோர்களுக்கோ ஆட்டையோ, மாட்டையோ, ஒட்டகத்தையோ ஈஸால் செய்தால் ம்ம்மம்மம்ம்ம்ம் அல்லாஹ்வின் பெயரை சொல்லாமல் அறுத்தால் சாப்பிட கூடாது என்று நமது மக்களை குழப்புவார்கள்.

பன்றியை கத்தியால் அறுக்க முடியாது, பன்றியின் தலையில் பாறாங்கல்லை தூக்கி போட்டு தான் கொல்லுவார்கள். இஸ்லாம் கூறும் வழிமுறை இல்லாமல், அல்லாஹ் அனுமதி தராமலும், அல்லாஹ்வின் ரசூல் ஸல்... அவர்கள் அனுமதி தராமலும், அல்லாஹ்வின் பெயர் சொல்லப்படாமலும், தண்ணீர் ஊற்றாப்படாமலும், கத்தியால் அறுக்கப்படாமலும் சாகடிக்கப்படுகிற பன்றியின் ஏனைய உறுப்பை சாப்பிடலாம் என்று பத்வா வழங்கி நாங்கள் கிறிஸ்தவர்கள் வழி நடப்பவர்கள் என்று மார்தட்டுவதை பார்க்கின்றோம்,

இறைநேசர்களை திட்டிய வாய்க்கு அல்லாஹு ஹக் சுபுஹானஹு தஆலா பன்றியின் எலும்பும், ஈரலும், குடலும், தான் தருவான், பின்னே என்ன தேனும் பாலுமா தருவான்?

மேலும் ஹதீஸில் நபிகளாருக்கு சூனியம் செய்யப்பட்டதாக வருவது குர்ஆனிற்கு மாற்றம் அதனால் அந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ளமாடோம் என்று சொல்பவர்கள், (குர்'ஆனிற்கு ஹதீஸ் மாற்றம் என்ற உன்னத(!?!?!?!?!?) கருத்தை முன் வைத்து தான் ஒரு அஹ்லுல் குர்'ஆன் என்பதையும் தீர்க்கமாக வெளிச்சம் போட்டு காட்டியுள்ளார்! அதனால் குர்'ஆனில் வரும் கருத்தை மட்டும் எடுப்பதால்) இனிமேல் கீழ் கண்ட விஷயங்களையும் சீக்கிரமாக சொல்லலாம், அதனால் சிறிது கவனமாக இருக்கவும். அவை,
  • நாய் சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் நாய் கறி சாப்பிடலாம்,
  • மூத்திரத்தை குடிக்க கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் குடிக்கலாம்,
  • மலத்தை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,
  • எலி மற்றும் பெருச்சாளி சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,
  • பூனை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் சாப்பிடலாம்,

இந்த வரிசையில் சீனா, ஜப்பான், போன்ற நாடுகளில் சாப்பிட்டு ஏப்பம் விடும் விலங்கினங்கள்

  • பாம்பு சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் பாம்பு வறுவல் சாப்பிடலாம்,
  • பல்லி சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் பல்லி 65 சாப்பிடலாம்,
  • தவளை சாப்பிடக்கூடாது என்று நேரிடையாக குர்ஆனில் வரவில்லை அதனால் தவளை ரோஸ்ட் சாப்பிடலாம்,
போன்ற அதிரடி அறிவிப்புகள் வன வாசம் சென்றுள்ள PJ நகரவாசம் வரும் போது கிடைக்கலாம். அதனால் இஸ்லாமிய சகோதர்களே ஜாக்கிரதை.

மேலும் ஒரு மனிதன் உருவாக ஒரு ஆண் ஒரு பெண் தேவை, குர்ஆனில் ஈசா அலை... மட்டும் ஆண் துணை இல்லாமல் பிறந்தார்கள் என்று வருகிறது, இது உலக நியதிக்கு மாற்றமானது அதனால் இந்த வசனத்தையும் ஏற்க மாட்டோம் என்றும் மிகவும் விரைவில் சொல்லலாம், காரணம் இவர்கள் கிறிஸ்தவ வழியை பின்பற்றுபவர்கள். இஸ்லாமியர்களே ஜாக்கிரதை இவர்கள் உங்கள் ஈமானை பாழ் படுத்தி விடலாம்.

மேலும் இவர்கள் கிறிஸ்தவ வழியை பின்பற்றுபவர்கள் என்பதற்கு மேலும் ஒரு சான்று இவைகள் தங்களின் நரை முடிகளை டை யின் மூலம் கருப்பாக்கி உள்ளார்கள். இஸ்லாமியர்களின் வழிமுறையான மருதாணியை விட்டுவிட்டு கிறிஸ்தவர்களின் கலாச்சாரமான டை ஐ உபயோகித்ததன் மூலம் நாங்கள் எங்களுக்கு தோது எதுவோ அதை தான் செய்வோம் என்று சொல்லாமல் சொல்லி இருக்கின்றார்கள்.

இவர்களின் கிறிஸ்தவ முகத்தை பன்றி மற்றும் டை யின் விஷயங்களின் மூலம் கிழித்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்,

மதுரை நாபிஈ


0 comments: