முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Thursday, January 27, 2011

நான் தவ்ஹீத்வாதீ...


ஒரு தவ்ஹீத் அமைப்பை சேர்ந்தவர், தமிழ் நாடு (போலி) தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களை நோக்கி வைத்த சில குற்றச் சாட்டுக்கள்: (மின் அஞ்சல் மூலம் வந்தது)

 • * தொழுகைக்கு பாங்கு சென்னவுடன் பக்கத்தில் உள்ள பள்ளியில் தொழாமல், அந்த தொழுகையை தவ்ஹீத் பள்ளியில் மட்டுமே தொழுவேன், மற்ற பள்ளிவாசலில் ஜானாசா தொழுகை மட்டும் தொழுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * நான் சார்ந்து இருக்கு இயக்கத்தவரிடம் மட்டும் தான் சலாம் கூறி நலம் விசாரிப்பேன் மற்றவரிடம் பேசமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * நண்பர்களுடன் பேசிக்கொண்டு இருக்கும் போது எல்லோரயிம் கிண்டலும் கேலியும் செய்வேன் என் நண்பர்கள் என் இயக்கத்தை பற்றி பேசினால் கண்கள் சிவக்க கோபப்படுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * மேலை நாடுகளின் பொருட்க்களை வாங்காதிர்கள், அவர்களின் கலாச்சரத்தை பின்பற்றாதிர்கள் என்று எல்லோருக்கும் சொல்வேன் ஆனால் அந்த பொருட்க்கள் என் விட்டில் உபயோகப்படுத்துவேன், அவர்களின் கலாச்சரத்தை நான் பின் பற்றுவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * பேராசை கூடாது என்று உபதேசம் சொல்வேன் ஊரில் உள்ள நிலங்களை எல்லாம் வலைத்து போட்டு பிறகு விலை ஏற்றி விற்ப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *ஆடம்பரமான வாழ்க்கை கூடாது என்பேன் ஆனால் நான் சுக போகமாக நவின கண்டுபிடிப்புக்களுடன் வாழ்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * மேலும் நீர் பூமியில் பெருமையாக நடக்க வேண்டாம் என்று குர் ஆன் வசனம் சொல்லி இருந்து நான் தவ்ஹித்வாதி என்று மார்தட்டி பிறருடன் விவாதம் செய்வேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கள் அனைத்திற்க்கும் மற்றவரிடம் தீவிரமாக மைக் செட் முலம் விளாம்பரம் செய்து பணம் வசூல் செய்வவேன். அதற்க்கு அப்புறம் நான் அவர்களாய் திரும்பி கூட பார்க்கமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது என்று நபிகளின் போதனைகளை மக்களிடம் பயான் செய்வேன் ஆனால் நான் செய்யும் உதவிகளாய் போட்டே எடுத்து விளாம்பரப்படுத்துவேன். ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நடத்தும் பேரணி, ஆர்ப்பட்டம், மாநாடு போன்ற நிகழ்ச்சிக்கள் அனைத்திற்க்கும் என் விட்டில் உள்ள அழைக்காமல் ஊரில் உள்ளவர்களாய் இலவச வாகனம் முலம் அழைத்துச்செல்வேன். ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * சொந்த ஊரில் ஆடு, மாடுகள் விலை குறைவாக கிடைக்கும் போது அதை வாங்கி குர்பானி கொடுக்கமால், விண் சிலவு செய்து ராஜஸ்தான் சென்று அதிகவிலை கொடுத்து ஒட்டகம் வாங்கி வந்து அதை விளம்பரப்படுத்தி குர்பானி கொடுப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * புனிதமிக்க ரமாலானில் வெளிநாட்டில் இருந்து வரும் பித்ரா பணத்தை ஏழைகளுக்கு கொடுக்கும் கூட போட்டே எடுத்து விளம்பரப்படுத்துவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என்னிடம் உள்ள போன்களையும், கம்பியூட்டர்களையும் பயன் படுத்தாமல் கம்பேனியில் உள்ள தொலைபேசிகளையும், பேக்ஸ் மிஷினையும், கம்பியூட்டர்களையும் என் சொந்த விசயத்திற்க்கு பயன் படுத்துவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * விண் விரயம் செய்யவேண்டாம் என்று நபிகள் நாயகம் சொன்னார்கள் என்று அழ்கிய முறையில் அடுத்தவருக்கு பயான் செய்து விட்டு என் விட்டு திருமணத்தை பல ஆயிரம் சிலவு செய்து கல்யாண் மண்டபத்தில் நடத்தி அதை விடியோவும் எடுப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • * என் இயக்கம் நட்த்தும் போராட்டங்களுக்கு அனைத்து முஸ்லிம்களயும் அணி திரண்டு வாரீர் வாரீர் என்று அழைப்பேன் & அழைத்தும் செல்வேன். ஆனால் முஸ்லிம் மக்களின் நல்லவிசயங்களுக்கு பிற அமைப்புக்களூம், ஊரின் ஜமாத்துக்களூம் நட்த்தும் போராட்டங்களுக்கு நான் போகமாட்டேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *மனைவி மக்களை விட்டு பிரிந்து வாழ்வது சுன்னத்துக்கு மாற்றமானது ( இக்கால கட்டத்தில் குடுப்ம்பத்தோடு இருப்பது ரொம்ப அவசியமானது ) என்றூம் தெரிந்தும் நான் வெளிநாட்டில் தனியாக இருந்து இளமையை காலத்தை கழிப்பேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.
 • *என் வருமானத்திற்க்கு தகுந்தார்போல் என் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளாமல் ஆடம்பரமான வாழ்க்கை வாழ கிரெடிட் கார்டு வைத்து இருப்பேன் பேங்கில் வட்டிக்கு லோனும் வாங்குவேன் ஏன் என்றால் நான் தவ்ஹீத்வாதீ.

இப்படி ஏராளமான விசயங்கள் சொல்லிக்கொண்டே போகலாம் ஏன் என்றால் நான் ஒரு தவ்ஹீத்வாதீ.

மதுரை நாபிஈ.

1 comments:

islam moomin said...

நிறைய விட்டுட்டீங்களே !!
அல்லாஹ்வை பற்றியும் ரசூலைப்பற்றியும் குறைசொன்னால் கோபப்பட மாட்டேன் ஆனால் நாங்கள் தக்லீது செய்யும் எங்கள் குருநாதரை பற்றி ஏதாவது சொன்னால் எனக்கு கொலைவெறி வரும் - நான் தவ்ஹீத் வாதி.
எல்லாரும் வந்து எங்க கூட்டத்திலே சேருங்க என்று அழைப்பேன் அனால் நான் யார் கூட்டத்திலும் ஒட்ட மாட்டேன் - நான் தவ்ஹீத் வாதி.
எவ்வளவு பெரிய மார்க்க அறிஞர் பேசினாலும் கேக்க மாட்டேன். எங்கள் குருநாதர் பேச்சில் மெய் மறந்து விடுவேன். - நான் தவ்ஹீத் வாதி.
எங்க கூட்டம் தான் சொர்கத்துக்கு போகும், மற்ற எல்லாரும் நரக வாசிகள். எங்க தலைவருக்கு மட்டும் தான் எல்லாம் தெரியும். வேற ஒருவருக்கும் ஒண்ணும் தெரியாது.