முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Monday, October 18, 2010

அல்லாஹ்வின் திக்ர் ஐ பற்றி PJ.PJ என்ற விஷமியின் தளத்தில் பொய் நிறைந்து இருக்கும் என்று எல்லோருக்கும் தெரியும் ஒன்றாக இருக்கின்றது. அந்த அவதூறுகளில் சிலவற்றை பற்றி இன்று அவருடைய கூட்டாளியான காசிமி மார்க்கத்தின் சூரியன் (ஷம்சு லி தீனில் காசிமி) கிழித்துக்கொண்டு இருக்கின்றார்.

திக்ரு என்றால் என்ன:

அல்லாஹாவை புகழ்வதற்கு திக்ரு என்று சொல்லப்படும். அது தக்பீர் (அல்லாஹு அக்பர்), தஹ்மீத் (அல்ஹம்து லில்லாஹ்) தஸ்பிஹ் (சுப்'ஹானல்லாஹ்), கலிமா (லா இலாஹா இல்லல்லாஹ்) என்பது, மேலும் இதன் சம்பந்தப்பட்டதும், மேலும் எதுவெல்லாம் அல்லாஹ்வை குறித்தும், அல்லாஹ்வை நினைத்து பார்க்க உதவுவதும் அல்லாஹ்வை நினைவு கூர்தல் தான்.

எனினும், இதிலும் வழமையாக எதுவும் விளங்காததை போல மாதிரி இந்த விஷயத்திலும் PJ விற்கு விளங்கவில்லை. அதனால் இந்த PJ அல்லாஹ்விற்கு செய்யப்படுகின்ற திக்ரு களை பற்றியும், அதிலும் குறிப்பாக ஷாதுலியா தரீகா வின் திக்ர் ஐயும் குறை பேசி உள்ளார். இதில் இருந்து அவருக்கு கொஞ்சமும் மார்க்க ஞானம் இல்லை என்று தெரிந்து கொள்ளலாம்.

ஏன் என்றால் அனைத்து தரீகாக்களின் திக்ரும் குர்'ஆன் மற்றும் ஹதீஸின் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. குர்'ஆனையும் ஹதீஸையும் பின்பற்றி தான் அமைந்துள்ளது. குர்'ஆன் ஹதீஸ் உடைய ஞானம் இருந்து இருந்தால் இப்படி மடமைத்தனமாக பேசி இருக்க மாட்டார். உலகில் உள்ள மடமைத்தனத்தின் குத்தகைகாரர் இவர்தான் என்பது இவரின் பேச்சில் இருந்தே நன்றாக விளங்குகின்றது. மார்க்க அறிஞர் என்று சொல்லி கொண்டு திரிபவர், இப்படி மார்க்கத்தில் கொஞ்சம் கூட அறிவு இல்லை என்றால் எப்பிடி இவர் மார்க்க அறிஞராக இருக்க முடியும். மூடர்களின் குருவாக வேண்டுமானால் இருக்கலாம். அதாவது பரமார்த்த குருவும் அவரது சிஷ்யர்களும் என்று வேண்டுமானால் இவர்களை கூறலாமே தவிர மார்க்க அறிஞர் என்று கூறவே முடியாது.

திக்ரை பற்றி அல்லாஹ்வும் அவனது தூதர் கண்மணி ஸல்... அவர்களும் நிறைய சொல்லி இருக்கின்றார்கள். அதை வைத்து (அதனால் இவர்கள் கூறுவதை புறம் தள்ளி விட்டு அல்லாஹ்வும் அவனது தூதர் ஸல்... அவர்களும் என்ன கூறுகின்றார்கள் என்று பாப்போம்). யார் சொல்வதில் உண்மை இருக்கின்றது என்று விளங்கிக்கொள்ளலாம்.

அல்லாஹ்வின் சிறப்பை பற்றி அல்-குர்'ஆன்:

அல்லாஹ் குர்'ஆனில் என்னை திக்ரு செய்யுங்கள், நான் உங்களை நினைவு கூறுகின்றேன் என்று கூறுகின்றான். அல்லாஹ் நம்மை நினைவு கூறுதல் என்பது எவ்வளவு மகத்துவம் வாய்ந்தது? (நான் நேரிடை அர்த்தம் தான் கொடுத்துள்ளேன், காரணம் வஹ்ஹாபிகள் நேரிடை அர்த்தம் கொடுப்பதால்) (2:152)


மேலும், அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், தொழுகை மானக்கேடான விஷயங்களை விட்டு தடுக்கும், அல்லாஹ்வின் திக்ரு மகத்தானது, மிகப்பெரியது, மிகவும் உயர்ந்தது. ஒருவன் மகத்துவம் பெற வேண்டுமானலோ, பரிசுத்தப்பட வேண்டுமானாலோ அல்லாஹ்வின் திக்ரு செய்ய வேண்டும் என்று நன்றாக விளங்கி கொள்ளலாம். (29:45)


الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ
ۗ أَلاَ بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُமேலும் அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், அறிந்து கொள்ளுங்கள், அல்லாஹ்வின் திக்ரு வை கொண்டு மன நிம்மதி ஏற்படுகிறது. இப்படி ஏராளமாக திக்ரின் சிறப்பை பற்றி கூறுகின்றான். (13:28)

அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருபவர்களான பெண்களும், (அல்லாஹ்வை அதிகமாக) நினைவு கூருபவர்களான பெண்களும் ஆகிய இவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான நற்கூலியையும் தயார் செய்து வைத்திருக்கின்றான். (33:35)


திக்ரின் சிறப்பை பற்றி நபி மொழி:


ஹழ்ரத் அபூ தர்தா ரழி.... அவர்கள் கூறுகின்றார்கள், நீங்கள் செய்யும் நற்செயலில் எது சிறந்தது என்று சொல்லவா? மேலும் அல்லாஹ்வை கண்ணியப்படுத்துவதை, புகழ்ந்து கண்ணியப்படுத்தி, அதன் மூலம் அதிக கூலி பெறுவதையும், இறைவன் பாதையில் தங்கம் செலவழிப்பதை காட்டிலும் சிறந்ததையும் கூறவா? இறைவன் பாதையில் எதிரியை சந்தித்து தனது கழுத்து வெட்டுப்பட்டு உயிரை தியாகம் செய்வதை காட்டிலும் சிறந்ததை கற்று கொடுக்கவா? என நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கேட்க, சரி கூறுங்கள் யா ரசூலல்லாஹ் என்று சஹாபாக்கள் (ரழியல்லாஹு அன்ஹும் ) சொல்ல, அல்லாஹ்வின் திக்ரு என்று நபிகள் ஸல்... அவர்கள் கூறினார்கள் (திர்மிதி, இப்னு மாஜா)

மேலும் எல்லாவற்றையும் தூய்மை படுத்துதல் இருக்கின்றது, இதயத்தை தூய்மை படுத்துவது அல்லாஹ்வின் திக்ரு ஆகும் என்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள்.


நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், திக்ரு செய்பவன் மற்றும் திக்ரு செய்யாதவன் உடைய வேறுபாடு, உயிருள்ளவ்னுக்கும் உயிர் இல்லாத மையத் ற்கும் உள்ள வேறுபாடு தான் என்று கூறினார்கள் நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் என்று ஹழ்ரத் அபூ மூசா அல் அஷ்'அரி ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், நீங்கள் சுவனத்தை கடந்து சென்றால் அதில் மேய்ந்து கொள்ளுங்கள் என்றார்கள், அது என்ன என்று சஹாபா பெருமக்கள் கேட்க, அது தான் திக்ரின் வளையம், வட்டம், என்று கூறினார்கள் என்று ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (திர்மிதீ)

மேலும் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் , உங்களை மக்கள் மஜ்னூன் (பைத்தியம், லூசு, கிறுக்கு) என்று கூறும் அளவிற்கு நீங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். (அஹமத், இப்னு ஹிப்பான், ஹாகிம்). இந்த PJ எங்களை பார்த்து அப்படி பைத்தியம் வின் கூறி கொண்டு தான் திரிகின்றார். இது நபிகள் ஸல்... அவர்களின் வாக்கு. இவர் சொல்கின்றாரே என்று நாம் வெட்கப்பட தேவை இல்லை. நாங்கள் அல்லாஹ்வை தானே புகழ்கின்றோம்.

மேலும், அல்லாஹ்வின் திக்ரு தவிர வேறு எதுவும் அல்லாஹ்வின் தண்டனையை விட்டு பாது காப்பு அளிக்காது என்று ஹழ்ரத் முஆத் பின் ஜபல் ரழி.... அவர்கள் கூறுகின்றார்கள்,

மேலும், அல்லாஹ் அனைத்து விஷயங்கள் நின்றும் ஒரு எல்லையை வகுத்து உள்ளான் ஆனால் திக்ரை தவிர. திக்ரு செய்வதற்கு ஒரு எல்லை இல்லை என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி.... அவர்கள் கூறுகின்றார்கள்.


திக்ர் செய்யப்பட வேண்டிய முறைகள் பற்றி அல்-குர்'ஆன்:

அத்தகையோர் நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், விலாப்புறங்களில் சாய்ந்தும், அல்லாஹ்வை நினைப்பார்கள் (திக்ரு செய்வார்கள்) (3: 190-191)

(அல்லாஹ்வின்) வீடுகளில் (வணக்க வழிபாடுகளின் மூலம்) அவை உயர்த்தப்படவும், அவற்றில் அவனது பெயர் கூறப்பட வேண்டுமென்றும், (திக்ரு செய்யப்படவேண்டும் என்றும்) அல்லாஹ் கட்டளை இடுகின்றான். அவற்றில் காலையிலும், மாலையிலும், அவனை திக்ரு செய்வர். (24:36)


ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்கள் ஆஹ் என்றவர்களாக துன்பத்தை சகித்துக்கொண்டார்கள். (9:114)

ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்கள் ஆஹ் என்றவர்களாக (அல்லாஹ்வின் பக்கம்) திரும்பக்கூடியவர்கள். ( 11:75)

திக்ர் செய்யப்பட வேண்டிய முறைகள் பற்றி நபி வழி:

ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் கூறுகின்றார்கள், ஒரு முறை நான் யா ரசூலல்லாஹ் (ஸல்... ) அல்லாஹ் இருக்கின்றான் என்பதை இலகுவாக விளங்கவும், அவனை மிகவும் இலகுவான முறையில் வணங்குவதையும், அல்லாஹ்வை மேன்மை படுத்துவதையும் கற்று தாருங்கள் என கேட்டேன், அதற்கு நபிகளார் ஸல்... அவர்கள், அலீயே! அல்லாஹ்வின் திக்ரை வழமையாக மெதுவாகவும், சப்தத்தோடும் செய்து வரவும் என கூறினார்கள். நான் யா ரசூலல்லாஹ் (ஸல்... ) அனைத்து மனிதர்களும் திக்ரு செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள், எனக்கு விசேஷமாக சிலவற்றை கற்று தரவும் என கேட்டேன். நபிகளார் ஸல்.... அவர்கள் அலீயே, நானும், எனக்கு முன் உள்ள அனைத்து நபிமார்களும் செய்த சிறந்த திக்ராகிறது லா இலாஹா இல்லல்லாஹ் வாகும். எல்லா சுவனமும், இவ்வுலகமும், ஒரு பக்கத்தில் வைத்து, மற்றொரு பக்கத்தில் லா இலாஹா இல்லல்லாஹ் என்ற திக்ரை வைத்து நிறுத்தினால், லா இலாஹா இல்லலாஹ் என்ற திக்ரே கனமானதாக இருக்கும். மக்கள் லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறும் காலம் வரை கியாமத் நாள் வராது என்று கூறினார்கள். பிறகு நான் யா ரசூலல்லாஹ் அதை நான் எப்பிடி கூறட்டும் என கேட்டேன், அதற்க்கு நபி ஸல்... அவர்கள், உன் கண்ணை மூடி எவ்வாறு லா இலாஹா இல்லல்லாஹ் என்று நான் கூறுவதை செவியுற்று பிறகு நீர் அப்படியே கூறும், நான் செவிஎர்கின்றேன் என்று கூறினார்கள். பிறகு நபிகளார் (லா இலாஹா இல்லல்லாஹ்) என்று கூறி நானும் சப்தத்தோடு (லா இலாஹா இல்லல்லாஹ்) என்று கூறினேன். என்று ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபிகளார் ஸல்... அவர்கள், சஹாபா ரழி... அன்ஹும் அவர்களை பார்த்து உங்களில் யாரும் புதியவர்கள் இருக்கின்றார்களா என்று கேட்க இல்லை என்று நாம் பதில் அளித்தோம். நாயகம் ஸல்... அவர்கள் கதவை மூட சொன்னார்கள். மேலும் கூறினார்கள், உங்களின் கையை உயர்த்திக்கொண்டு எனக்கு பின்னால் லா இலாஹா இல்லல்லாஹ் என்று என்று கூற சொன்னார்கள், நாமும் அவ்வாறே கையை உயர்த்தி லா இலாஹா இல்லல்லாஹ் என்று கூறினோம். பிறகு நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் அல்லாஹ்வை புகழ்ந்தார்கள், பிறகு கூறினார்கள், அல்லாஹ் என்னை இந்த உலகத்தில் இந்த கலிமாவோடு தான் அனுப்பினான், அதன் படி தான் எனக்கு கட்டளையும் இட்டான், இதில் இருந்து தான் சொர்க்கம் உள்ளது என்று சத்தியம் செய்தும் இருக்கின்றான், அவன் தனது வாக்கு ற்கு மாறு செய்ய மாட்டான். பிறகு ஸல்... அவர்கள் கூறினார்கள், மகிழ்ச்சியோடு இருங்கள் அல்லாஹ் உங்களை மன்னித்து விட்டான் என்றார்கள், என்று ஹழ்ரத் உப்பாதா பின் சாமித் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (அஹமத், தப்ரானி)

நபிகளார் ஸல்... அவர்கள் கூறினார்கள். திக்ரு செய்யும் மக்களை தேடும் மலக்கு மார்களை மேன்மை தாங்கிய அல்லாஹ் ஜல்....வைத்து இருக்கின்றான். அம்மலக்கு மார்கள் திக்ரு செய்யும் மக்களை பார்க்கும் பொது அவர்கள் முதலாம் வானம் வரும் வரை சூழ்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ் கேட்கின்றான், எனது அடியார்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள், அப்போது வானவர்கள் கூறுகின்றார்கள் யா அல்லாஹ் அவர்கள் உன்னை புகழ்கின்றார்கள், அவர்கள் உன்னை திக்ரின் மூலமாக பரிசுத்தப்படுத்தி கொண்டிருக்கின்றார்கள். அல்லாஹ் கேட்கின்றான்! அவர்கள் என்னை பார்த்தார்களா? மலக்கு மார்கள் கூறுகின்றார்கள் இல்லை அவர்கள் உன்னை பார்க்கவில்லை. பிறகு அல்லாஹ் ஜல்... கேட்கின்றான், என்னை பார்த்தால் அவர்கள் எப்பிடி இருப்பார்கள் (என்ன செய்வார்கள்). வானவர்கள் கூறினார்கள், யா அல்லாஹ், அவர்கள் உன்னை கண்டால், அவர்கள் உன்னை அதிகமாக புகழ்வார்கள், உன்னை திக்ரின் மூலம் அதிகமாக பரிசுத்தப்படுத்துவார்கள். பிறகு அல்லாஹ் கேட்டான், அவர்கள் எதை கேட்கின்றார்கள், அதற்கு வானவர்கள், உனது சுவனத்தை அவர்கள் கேட்கின்றார்கள் என கூற, பிறகு அல்லாஹ் ஜல்..., எனது சுவனத்தையாவது பார்த்துள்ளார்களா என கேட்க, இல்லை யா அல்லாஹ் என்று வானவர்கள் கூற, எனது சுவனத்தை பார்த்தால் எப்பிடி இருப்பார்கள் (என்ன செய்வார்கள்) என்று அல்லாஹ் ஜல்... வினவ, வானவர்கள், அவர்கள் அதன் பால் ஈர்க்கப்பட்டு, அதை அடைய மிகவும் பேராசை கொள்வார்கள் என்று கூறினார்கள். பிறகு அல்லாஹ் ஜல்... வானவர்களை நோக்கி கேட்டான், பிறகு எதை பயப்படுகின்றார்கள், அப்போது வானவர்கள் கூறினார்கள், அவர்கள் நரக நெருப்பை பயப்படுகின்றார்கள் என்று கூற, அல்லாஹ் அவர்கள் நரகத்தை பார்த்தால் எப்பிடி இருப்பார்கள் (என்ன செய்வார்கள்) என கேட்க அதற்கு வானவர்கள், அதை (நரகத்தை) விட்டு அதிகம், அதிகமாக வெருண்டோடுவார்கள், அதை விட்டு பாதுகாப்பும் தேடுவார்கள். நான் உங்களை சாட்சியாக வைத்து அவர்களின் அனைத்து பாவங்களை யும் மன்னித்து விடுகின்றேன் என அல்லாஹ் கூற, ஒரு வானவர் கேட்கின்றார், யா அல்லாஹ் அவர்களுள் திக்ரு செய்யாதவரும் இருக்கின்றாரே, அவர் அவர்களிடம் எதையோ கேட்டு தானே வந்தார் என்று கேட்க, அதற்கு அல்லாஹ் ஜல்.... (திக்ரு) செய்த அந்த மனிதர்கள் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவர்கள், அவர்கள் என்னுடைய திக்ரை செய்தார்கள். அவர்களின் வலயத்திற்கும் வந்தவர்கள் மன்னிக்கப்படுவார்கள், அதனால் அவர்களை (திக்ரு செய்யாத மனிதர் உட்பட) மன்னிக்கின்றேன். என்று ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)


அல்லாஹ் ஜல்.... . என் அடியான் என்னை பற்றி நினைத்தால், நான் அவனுக்காக இருக்கின்றேன். அவன் என்னை நினைவு கூர்ந்தால் அவனோடு இருக்கின்றேன். அவன் அவனுள் என்னை நினைத்தால் (அதாவது அமைதியாக திக்ரு செய்தால்) நானும் என்னுள் அவனை நினைப்பேன். ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் (சப்தமாக திக்ரு செய்தால்) நானும் இதை விட சிறந்த ஒரு கூட்டத்தில் நினைவு கூறுவேன். ஒரு ஜான்அளவு என்னை நெருங்கி வந்தால், நான் ஒரு ஒரு கையளவு நெருங்கி வருவேன். அவன் ஒரு கையளவு நெருங்கி வந்தால் நான் அவனை ஒரு முழம் அளவிற்கு நெருங்கி வருவேன். அவன் நடந்து வந்தால், நான் ஓடி வருவேன் என்று கூறுகின்றான், என்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறியதாக, ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழி... அறிவிக்கின்றார்கள் (புகாரி, முஸ்லிம்)

நபிகள் கோமான் ஸல்... அவர்கள் காலத்தில் அல்லாஹ்வின் திக்ரில் சப்தத்தை உயர்த்துவார்கள் என்று ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி.... அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி)

திக்ரு எப்போது செய்ய வேண்டும் :

காலையிலும், மாலையிலும் அவனை திக்ரு செய்வீராக! (3:41)


விசுவாசிகளே! அல்லாஹ்வை அதிகமான நினைவு கூறுதலாக நினைவு கூறுங்கள். காலையிலும், மாலையிலும் அவனை திக்ரு செய்யுங்கள். (33:41-42)


திக்ரு பற்றி PJ:

திக்ரு செய்வது பற்றியும், சப்தமாக திக்ரு செய்வது பற்றியும், கைகள் ஆட்டி திக்ரு செய்வது பற்றியும், வட்டமாக அமர்ந்து திக்ரு பற்றியும், நின்று திக்ரு செய்வது பற்றியும், அமர்ந்து திக்ரு செய்வது பற்றியும், சாய்ந்தவர்களாக திக்ரு செய்வது பற்றியும், மெதுவாக திக்ரு செய்வது பற்றியும், ஆஹ் என்று கூறி திக்ரு செய்வது பற்றியும், வேறு அல்லாஹ்வை நினைவு கூறும் வார்த்தைகளை கூறி திக்ரு செய்வது பற்றியும் மிகத்தெளிவாக குர்'ஆன் வசனத்தை கொண்டும், நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் ஹதீசுகளின் தொகுப்பிலிருந்தும் ஆதாரங்களை காட்டியுள்ளோம். இருப்பினும் இந்த PJ, என்ன Dance ஆடிக்கொண்டு, (கையை ஆட்டிக்கொண்டு, சாய்ந்தவர்களாக) திக்ரு செய்கின்றார்கள் என்று கிண்டல் அடிக்கின்றார். மேலும் என்ன உரக்க சப்தம் இட்டு கத்துகின்றார்கள் என்றும் கூறுகின்றார்.

இவருக்கு வேண்டுமானால் கிண்டலாக தெரியலாம். ஏனென்றால் நபிகள் நாயகம் ஸல்.... அவர்களையே தப்பு காணுபவர்கள் தான் இந்த மா பாவிகள். கையை ஆட்டிக்கொண்டும், சப்தமிட்டும், நபிகளார் ஸல்... அவர்கள் செய்ய சொல்லி உள்ளார்கள். அதனால் செய்கின்றோம். மேலும் ஒருவர் நடுவில் கையை தட்டிக்கொண்டு திக்ரு செய்கின்றார், என்றும் கூறுகின்றார். இரண்டு கையை தட்டுவது தொழுகையில் தடுக்கப்பட்டுள்ளது, வேறு இடங்களில் தடுக்கப்பட்டுள்ளதா? இல்லேயே! மேலும், இரண்டு கை தட்டி தான் ஓசை வரக்கூடாதா? நீங்கள் களியக்காவிளையில் மேஜையை தட்டி சப்தம் உருவாக்கினீர்களே! அந்த சப்தம் கூடுமா?

இன்னும் இவரின் உளறலை பார்த்தால் ஆஹ் என்று கூறுகின்றார்கள், இதற்க்கு என்ன ஆதாரம் என்று கேட்கின்றார். ஆஹ் என்று ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்கள் கூறியதை அல்லாஹ் குர்'ஆனில் அங்கீகரித்து உள்ளானே! இதற்க்கு மேலாக என்ன வேண்டும்? ஆஹ் என்பதற்கு கிண்டல் செய்கின்றார் இவர். அல்லாஹ்வின் முதல் எழுத்தையும், கடைசி எழுத்தையும் சேர்த்து கூறுகின்றார்கள், அப்படியானால் ரஹ்மானிற்கு ரன் என்றும், ரஹீமிற்கு ரம் என்றும் கூறுவார்களா என்று கேட்கின்றார்கள். நாம் ஆஹ் என்று இதற்காக மட்டும் கூறவில்லை. ஹழ்ரத் இப்ராஹீம் அலை... அவர்கள் விஷயத்தையும் வைத்து தான் கூறுகின்றோம். இல்லை அது தவறு என்றால், ஆஹ் என்பதற்கு அல்லாஹ்வை குறிக்கும் சொல் இல்லை என்றாவது நிரூபிக்க முடியுமா? என்றால் முடியாது, காரணம் ஆஹ் என்பதும் அல்லாஹ்வை தான் குறிக்கும் சொல்லாக இருக்கின்றது. ரன் என்பதும், ரம் என்பதும் அல்லாஹ் வை குறிக்காது, அதனால் சொல்லக்கூடாது. சொல்ல முடியாது.

ஒரு வாதத்திற்கு கூற வேண்டுமானால், ஆஹ் என்று கூறுவது தப்பு என்றால் இவர் தனது பெயரை PJ (உண்மையில் PZ என்று தான் வந்திருக்க வேண்டும்) என்று வைத்தது சரியோ? இல்லே இப்படி சொன்னால் மக்களுக்கு புரியுது தானே? என்று கேக்கலாம்! இவர்கள் சொற்படி பார்த்தால் தமிழ் மக்களை தவிர்த்து (தமிழ் மக்களிலும் அதிகம் பேருக்கு இவரை தெரியாது) வேறு மாநிலத்து மக்களிடமோ, நாட்டு மக்களிடமோ, PJ சொன்னால் புரியுமா? புரியாது தானே? அதே போல குர்'ஆன் ஹதீஸை விளங்குபவர்களுக்கு ஆஹ் என்பது அல்லாஹ்வைத்தான் குறிக்கும் என்பதும், குர்'ஆன் ஹதீஸை விளங்காதவர்களுக்கு ஆஹ் என்பது கிண்டலான வார்த்தையாகத்தான் தெரியும்.

இப்படிப்பட்ட அடிப்படைகளில் தான் எந்த தரீகாவை எடுத்துக்கொண்டாலும் திக்ரு அமைந்து இருக்கும். குறிப்பாக ஷாதுலியா தரீகா. இதன் அடிப்படையில் தான் தமிழகத்தின் கூத்தாநல்லூரில் ஓதிக்கொண்டு (?!?!?!?!?!?!?! அதுதான் சனத் ஐ புடிங்கி விட்டார்களே, இன்னும் ஏன் அதை நினைவு படுத்துகின்றீர்! அட ஆமா நினைவு இல்லேயே! ஆமா வால் அருந்துபோச்சுள்ள? ) இருக்கும் போது, அங்கு ஷாதுலியா தரீகாவின் அடிப்படையில் திக்ரு செய்தவர் தான் இந்த PJ.

எதை எதையோ கிண்டல் அடித்தவர் அல்லாஹ்வின் திக்ரு செய்வதிலும் கிண்டல் அடிக்க ஆரம்பித்துவிட்டார். இவர்களிடம் இருந்தது மக்கள் ஜாக்கிரதையாக (நாய்கள் ஜாக்கிரதை என்று தான் கேள்வி பட்டிருக்கின்றோம், நீங்க என்ன இப்படி மக்களை ஜாக்கிரதை என்று கூறுகின்றீர்கள், அட நீங்க வேற, அந்த அமைப்பில் இருக்கும் நாய் குண மக்களில் இருந்து (எந்த கூட்டத்துக்கு போனாலும் வள் வள் னு எரிஞ்சு விழுவதால்) ஜாக்கிரதை என்று சொல்றோம்ங்க!) இருக்க அல்லாஹ்விடம் வேண்டியவனாக! இந்த கட்டுரையை முடிக்கின்றேன்.

மேலும் திக்ரு செய்யாதவன், திக்ரு செய்யும் கூட்டத்தில் இருக்கும் ஒருவரை சொந்த அலுவல் காரணமாக சந்திக்க வந்தாலே அல்லாஹ்வின் திக்ரு செய்யாதவனின் பாவத்தையும் மன்னித்து விடுகின்றான் என்ற ஹதீசையும் ஓரம் தள்ளிவிட்டு, எங்களோடு சேராமல் இருந்தாலும் பரவா இல்லை. சேரவும் இல்லாமல், அல்லாஹ்வின் திக்ரு செய்யாமல், அதை எதிர்க்கவும் செய்ததினால், இவர்களின் மறுமை பாழாக இருக்கின்றது என்பதையும் தெரிவித்து, அல்லாஹ் நம்மையும், நம் பெற்றோர், குழந்தைகள், நம் வருங்கால சந்ததியினர், நம் உறவினர்கள், நம் சுற்றத்தார்கள், சுன்னத் ஜமாத்தை சேர்ந்தவர்கள், அனைவரையும் இவர்களின் தீங்கிலிருந்து காப்பாற்றுவானாக என்று துஆ செய்தவனாக முடிக்கின்றேன்.

வஸ்ஸலாம்

மதுரை நாபிஈ.


0 comments: