முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Thursday, October 14, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (இரண்டாம் பாகம்) - தொடர் - 4



PJ யின் நான்காம் நிலைப்பாடு:


இரண்டாம் நாள் ஆரம்பித்த போது, முதல் நாளில் எடுத்த மூன்று நிலைப்பாட்டிலும் தோல்வி பெற்று விட்டதனால், வேறு வழியே இல்லாமல் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் வெளியே பேசிய ஹதீஸ் குத்சியில் (அல்லாஹ் கூறியதாக வரும் ஹதீஸ்) edit செய்து Clip ஆக காண்பித்தார். அதன் மூலம் நான்காம் நிலைப்பாட்டிற்கு தாவினார். அந்த Clip போட்டு காட்டி விட்டு இறைவன் தான் அவுலியா, அவுலியா தான் இறைவன் என்று ஜமாலி கூறினார் என்று PJ அவதூறாக கூறினார். அப்படி ஜமாலியோ, எந்த சுன்னத் ஜமாத்தின் அறிஞர்களோ எந்த காலத்திலும் சொல்லவில்லை. ஜமாலி அவர்கள் கூட நான், அல்லாஹ் தான் அவுலியா, அவுலியா தான் அல்லாஹ் என்று சொன்னதாக கியாமத் நாள் வரை நேரம் எடுத்துக்கொண்டு நிரூபித்துவிட்டால் நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கின்றேன் என்று கூறிய போது, இல்லை அப்படி சொல்லவில்லை ஆனால் அப்படி தான் சொன்னார் என்று மற்றொரு நிலைப்பாட்டில் தாவினார் இந்த PJ.

அல்லாஹ்விற்கு கப்ர் வைத்த PJ:

ஆனால் இந்த PJ, பிச்சைகாரன் தான் அல்லாஹ் (நவூதுபில்லாஹ்) என்று களியக்காவிளையில் கூறினார். அல்லாஹ்விற்கு (பிச்சைகாரன்) கப்ர் வைக்கலாம் (நவூதுபில்லாஹ்) என்றும் கூறினார். அதுவும் இந்த ஹதீஸை கிண்டல் செய்து விட்டு தான் இந்த வார்த்தையை கூறினார் PJ. சந்தேகம் உள்ளவர்கள் களியக்காவிளையில் நடந்த தர்கா ஜியாரத் என்ற விவாதத்தை பார்த்தால் தெரிந்து கொள்ளலாம். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், அவர்களின் சொல்லையும் கிண்டல் அடித்ததின் விளைவு, அல்லாஹ்வை சாகடித்து, கப்ர் வைக்க சொல்கின்றார்கள் இந்தா மா பாவிகள்.

அவர்களிடம் (இது பற்றிக்) கேட்டால் வேடிக்கையாகவும் விளையாட்டாகவும் பேசினோம் என்று கூறுவார்கள். அல்லாஹ் வையும் அவனது வசனங்களையும் அவனது தூதரையுமா கேலி செய்து கொண்டிருந்தீர்கள்? என்று கேட்பீராக! (9:65)

அந்த Clip முழுவதையும் காண்பித்தால் ஜமாலி அவர்களுடைய விளக்கம் சரி என்பதை கண்டு விடுவார்கள் என்பதால் edit செய்து Clip ஆக காண்பித்தார்.

ஹதீஸே குத்சி யின் முழுமை: (புகாரி)

உபரியான வணக்கத்தின் மூலம் என் அடியார் என்னை நெருங்கிக்கொண்டே வருகின்றார், நான் நேசிக்கும் வரை. நான் நேசிக்க ஆரம்பித்துவிட்டால் அவன் கேட்கும் செவியாக நான் ஆகிவிடுவேன். அவன் பார்க்கும் கண்ணாக நான் மாறிவிடுவேன், அவன் பிடிக்கும் கரமாக நான் மாறிவிடுவேன், அவன் நடக்கும் காலாக நான் மாறி விடுவேன்.

இதில் உள்ள சாராம்சத்தை Edit செய்து விட்டு அதில் சொல்லப்பட்ட விளக்கத்தை மட்டும் காண்பித்தார். இதன் உண்மை நிலையை ஜமாலி ஹழ்ரத் அவர்கள் எடுத்து காட்டி அவர்களின் முகத்திரையை கிழித்த போது அடங்கிப்போனார். இந்த PJ. ஆனாலும் அந்த அமர்வில் மொத்தம் கொடுக்கப்பட்ட 5 வாய்ப்புகளையும் இப்படியே வீணடித்தார் PJ.

ஹதீஸ் குத்சியின் உண்மை நிலை:

 • அவன் கேட்கும் செவியாக அல்லாஹ் மாறுவான் என்று சொன்னால், சாதாரண மக்கள் கேட்கும் சக்தியை விட அதிகமாக கேட்பார்கள். உதாரணம்: ஹழ்ரத் சுலைமான் அலை.... அவர்கள். ஒரு எறும்பு மற்ற எறும்புகளிடம் உங்கள் இருப்பிடத்திற்கு சென்றுவிடுங்கள், இல்லை என்றால் சுலைமான் நபியில் படை உங்களை அழித்து விடும் என்று பேசியதை கேட்டு சிரித்தார்கள் ஹழ்ரத் சுலைமான் அலை... அவர்கள். இது தான் கேட்கும் திறனிற்கு ஒரு உதாரணம். (அல்-குர்'ஆன்).

 • அவன் பார்க்கும் கண்ணாக அல்லாஹ் மாறுவான் என்று சொன்னால், சாதாரண மக்கள் பார்க்கும் சக்தியை விட அதிகமாக பார்ப்பார்கள். உதாரணம்: நமது நாயகம் ஸல்... அவர்கள். இங்கிருந்து கொண்டு, மறுமையில் நீங்கள் என்னை சந்திக்கும் இடமான ஹவ்ழுள் கவ்சர் நீர் தடாகத்தை பார்க்கின்றேன் என்று கூறியது.(அல் ஹதீஸ்).

 • அவன் பிடிக்கும் கையாக அல்லாஹ் மாறுவான் என்று சொன்னால், சாதாரண மக்களுக்கு இருக்கும் சக்தியை விட அதிகமாக கையில் சக்தி இருக்கும். உதாரணம்: நபிகள் நாயகம் ஸல்... அவர்கள். பத்ர் போரின் சமயம் இவர்கள் எறிந்த மண் எதிரிகள் அனைவர்கள் மீதும் விழுந்தது. (அல்-குர்'ஆன்).

 • அவன் நடக்கும் காலாக அல்லாஹ் மாறுவான் என்று சொன்னால், சாதாரண மக்கள் நடக்கும் தூரத்தை விட பன்மடங்கு தூரத்தை விரைவில் கடந்து விடுவார்கள். உதாரணம்: ஹழ்ரத் ஆதம் அலை.... அவர்கள். 40 எட்டுகளில் இந்திய திருநாட்டில் இருந்து அல்லாஹ்வின் ஆலயமாம் 'அபாவை அடைந்து விடுவார்கள். (இந்த ஹதீஸ் இறைவனுக்கு உருவம் உண்டா என்ற தலைப்பில் கூட சொல்லப்பட்டது).

30 ஆண்டாக ஆர்பரித்த PJ வை அடக்கிய விவாதம்:

முதல் நாளின் ஆரம்பத்தில் PJ ஷிர்கை பற்றி இப்போது பேசுவேன் பின்னர் சுன்னத் ஜமாஅத் காரர்கள் பித்'அத் வாதிகள் என்பதை பற்றி பேசுவேன் என்று கூறினார். இரண்டாம் நாளில் இவர்கள் ஷிர்க் வாதிகள் என்று (எந்த வசனமோ, ஹதீசோ இல்லாமல்) நிரூபித்து (?!?!?!?!?) விட்டேன், அதனால் பித்'அத் பற்றி (பேசினாலும் என்னால் நிரூபிக்க முடியாது என்பதால்) பேசமாட்டேன் என்று மற்றொரு நிலைப்பாட்டிற்கு தாவினார்.

PJ வை சிக்க வைத்த PJ வின் புத்தகம்:

PJ வின் நபித்தோழர்களும் நமது நிலையும் என்னும் புளுகு மூட்டை புத்தகத்தில், மறுமையில் நபிகளார் ஸல்... அவர்கள் மதம் மாறிப்போன சஹாபாக்களை விரட்டுவார்கள் என்று நபிகளார் ஸல்... அவர்கள் மீது இட்டுக்கட்டி உள்ளார். (நவூதுபில்லாஹ்) நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள்.

من كذب علي متعمدا فليتبؤأ مقعده من النار

யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறினாரோ அவர் தனது இருப்பிடத்தை நரகமாக்கிக்கொள்ளட்டும். இந்த ஹதீஸின் பிரகாரம், இந்த PJ நரக வாதி என்று புலப்படுகின்றது.

ஜமாலி அவர்கள் இந்த புளுகு மூட்டை புத்தகத்தில் குறிப்பிட்டது சஹாபாக்களை பற்றிய ஹதீஸா? நிரூபிக்க முடியுமா? என்று அந்த ஹதீஸை சுட்டிக்காட்டி (புகாரி 3349, 3447) கேட்ட போது அவரின் புத்தகத்தையே ஆதரித்து பேச முடியவில்லை இந்த PJ வால். அதற்கு பதிலாக நீங்களே வாசியுங்கள், என்று கூறிக்கொண்டின்ருந்தார். ஒரு மிகப்பெரிய குற்றச்சாட்டிற்கு கூட மறுப்பு சொல்ல முடியாமல் அடங்கிப்போனார் PJ.

அந்த ஹதீஸின் உண்மை நிலை என்ன தெரியுமா? அது சராசரியான மதம் மாறி போன மக்களை பற்றிய செய்தி அது. சஹாபாக்களை பற்றியது அல்ல. அதனால் தான் வாய் பொத்திக்கொண்டிருந்தார் இந்த PJ.

சஹாபிய பெண்களை அசிங்கமாக பேசிய PJ:


பெண்களை ரோட்டிற்கு அழைத்து வந்து காட்சிப்பொருள் ஆக்குகின்றீர்களே! பல ஆண்கள் பார்க்கின்றார்களே! இதற்கு ஆதாரம் தாருங்கள் என்று கேட்டால், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் காலத்தில் பெண்கள் போருக்கு வந்தார்கள். ஆண்களை தொட்டு தூக்கினார்கள். குனிந்து நிமிரும் போது தெரிந்தது. (நவூதுபில்லாஹ் இது என்ன அசிங்கமானா பேச்சு? யார் விஷயத்தில் பேசுகின்றீர்கள் நவூது பில்லாஹ், இதன் மூலம் இவருக்கு மிகப்பெரும் இழிவு தரும் நரகம் காத்திருக்கின்றது.) என்று கூறி அதனால் பெண்களை காட்சி பொருள் ஆக்கலாம் என்று கூறினார். போராட்டத்திற்கு , ஜிஹாதிற்கு உள்ள சட்டம் பொருந்துமா என்பதை மக்கள் மன்றம் புரிந்து கொள்ள வேண்டும். அங்கே சஹாபிய பெண்கள் மருத்துவ உதவிக்காக தான் சென்றார்கள். போருக்கு செல்லவில்லை. இங்கே போராட்டத்திற்கே அல்லவா அழைத்து வருகின்றார்கள். இதற்கும் மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.



பெண்கள் காட்சிப்பொருள் ஆக்கும் சம்பந்தமான, மற்றும் PJ சஹாபிய பெண்மணிகள் ரழி... patri ஆபாசமாக பேசிய வீடியோ:

முசாபாஹாவில் தடுமாறிய PJ:

முசாபாஹா விஷயத்தில் முதல் நாளில் இதை பற்றி வாயே திறக்காமல், இரண்டாம் நாளில் இதற்கு அதாரம் ஜமாலி அவர்களிடத்திலேயே கேட்டதின் மூலமும், ஏன் செய்யக்கூடாது என்று கேட்டதின் மூலம் அதிலும் தோற்று விட்டார் இந்த PJ. ஒரு கையில் மட்டும் தான் முசாபாஹா செய்ய வேண்டும் என்று சொன்னவர்கள், அதற்கான ஆதாரம் காட்டினால் தானே இரு கைகளில் கொடுக்க வேண்டும், இவர்கள் தவறாக விளங்கி உள்ளார்கள் என்பதை காட்ட முடியும் என்று ஜமாலி அவர்கள் சொல்லியும் காட்ட வில்லை PJ.

கௌசுல் 'ஃளம் PJ விற்கு உதவுவார்களா?


முசாபாஹா விஷயத்தில் கிறிஸ்துவ கலாசாரத்தை ஒரு கையில் மட்டும் கொடுப்பதின் மூலம் பின் பற்றிக்கொண்டு இருக்கின்றீர்கள் இல்லை என்றால் ஆதாரம் காட்டுங்கள் என்ற போது, (ஹதீஸில் ஆதாரம் இல்லை என்று தெரிந்த நேரத்தில்) கௌசுல் அஃளம் அவர்கள் ஒரு கையில் தான் கொடுக்க சொல்லி இருக்கின்றார்கள் (அவர்கள் சொன்னது வலது கையை நன்றாக பிடித்து இரண்டாவது கையை வைக்க வேண்டும் என்று நாம் செய்வது போல சொல்லி இருப்பதை இப்படி விளங்கி இருக்கின்றார்) என்று கௌசுல் அஃளம் ரழி... அவர்களின் உதவியை நாடினார். அதே போல் இமாம் நவவி ரழி... அவர்களின் உதவியையும் நாடினார். இருவரும் இவரை கை விட்டனர். காரணம் அங்கே இறந்தவர்களை உதவிக்கு அழைக்கக்கூடாது என்று கூறிக்கொண்டிருன்தவர், இறந்தவர்களை (இமாம்களை) அழைத்ததால் இமாம்கள் கை விட்டனர்.

ஒப்பந்தம் மீறிய PJ:

குர்'ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸின் மூலம் தான் விவாதம் நடத்தவேண்டும் என்று ஒப்பந்தம் இருக்க, இவர் மேற்கூறிய இமாம்களை குறிப்பிட்டதின் மூலமாக ஒப்பந்தத்தையும் மீறி விட்டார்.
பின்னர் ஆதாரத்திற்கு அவர்களை காட்டவில்லை என்று கூறி பெரிய பல்டி அடித்து குர்'ஆன் ஹதிஸ் இல்லாத நிலைப்பாட்டிற்கு தாவினார்.

தமிழ் வழிபாடு:

அரபியில் செய்ய வேண்டிய பிரசங்கத்தை தமிழில் செய்கின்றீர்கள் என்று ஆரம்பம் முதல் ஜமாலி அவர்கள் கேட்டால் பதில் சொல்லாமல் தொகுப்புரையில் , அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதை தான் குத்பாவில் கூறுகின்றோம் என்று அப்பட்டமாக பொய் கூறி, தொழுகையின் இருப்பில் கூட (ஹிந்துக்களை) போல தமிழில் துஆ கேட்கலாம் என்றும் கூறினார் (ஆதாரம்: PJ வின் மனோ இச்சை). ஜமாலி அவர்களோ நீங்கள் தஸ்லிமா நஸ்ரின், சல்மான் ருஷ்டி போன்றவர்களி பற்றி எல்லாம் குத்பாவில் பேசி இருக்கின்றீர்கள் என்று இவர்களின் முகமுடியை போட்டு கிழித்தார். குத்பா தமிழில் செய்யலாம் என்றால் பாங்கு ஏன் தமிழில் கூறக்கூடாது என்று ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கேட்டதற்கு அழகான (?!?!?!?!?) விளக்கம் அளி(ழி)த்தார் இந்த PJ. வெளிநாட்டில் இருந்து யாராவது வந்தால் அவருக்கு இது பாங்கு தான் என்று புரியாதாம். ஆனால் குத்பா வேறு மொழியில் செய்தால் மட்டும் புரியுமாம். (என்ன காமெடி PJ உடையது)

சரித்திரத்தில் இல்லாத விவாதம்:


 • தான் கூறிய விஷயத்திற்கும் ஜமாலி அவர்களிடமே ஆதாரம் கேட்டு சரித்திரத்திலேயே இல்லாத விவாதம் இது என்று நிரூபித்தார் இந்த PJ.

 • எதிரணியின் நிலைப்பாட்டையும் தானே முடிவெடுத்து சரித்திரத்திலேயே இல்லாத விவாதம் இது என்று நிரூபித்தார் இந்த PJ.

 • தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டிற்கும் ஜமாலி அவர்களிடமே ஆதாரம் கேட்டு சரித்திரத்திலேயே இல்லாத விவாதம் இது என்று நிரூபித்தார் இந்த PJ.
நபிகளாருக்கு நோவினை:

நபிகளார் தப்பு, தப்பாக மார்க்கத்தில் பேசினார்கள் என்று நபிகளார் ஸல்... அவர்களை நோவினை செய்ததில் இருந்து முர்தத் என்ற நிலைக்கு வந்துள்ளார் இந்த PJ.

காரணம் அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் விஷயமாக யார் சப்தம் உயர்த்தி பேசுகின்றார்களோ, அவர்களின் அமல்கள் அழிக்கப்படும். (49:2)

அமல்கள் எப்போது அழிக்கப்படும் என்று வேறொரு இடத்தில் அல்லாஹ் கூறுகின்ற போது, யார் முர்தத் ஆகி காபிரான நிலையிலேயே மரணித்து விடுகின்றாரோ, அவரின் அமல்கள் இம்மையிலும் மறுமையிலும் அழிக்கப்படும் (2:217)

என்று அல்லாஹ் வைத்த நியதியில் இவர் முர்தத் ஆகி காபிரானார்.

மன்னிப்பு இல்லாத PJ:

விவாதத்தில் பல இடத்தில் உங்களுக்கு மன்னிப்பே இல்லை என்று கூறினார். என்ன செய்வது இவர் அல்லாஹ்வின் மன்னிப்பு என்ற பண்பை மறுத்து விட்டதால் (மூஸா அலை அவர்கள் காலத்தில் வாழ்ந்த ஒரு வணக்கசாலியை போல) இவர் நரகத்திற்கு செல்ல போகின்றார்.

நஹுவில் வழுக்கிய PJ:

எல்லா விஷயத்தையும் மாற்றி, மாற்றி பேசிய PJ, அரபி இலக்கணத்தையும் மாற்றி, இது நஹூ சட்டத்தில் இருக்கின்றது என்று நஹூவிலும் இட்டுக்கட்டி கூறினார், நஹூ சட்டமே தெரியாத PJ. அது எந்த புத்தகத்தில் இருக்கின்றது என்று ஜமாலி அவர்கள் கேட்ட போது வழுக்கி விட்டார் PJ. இருந்தால் தானே தர முடியும்.

காபிர்களின் கலாசாரம்:

பிஸ்மில்லாஹ் என்பதை எழுதாமல் இறைவனின் திருப்பெயரால் என்று எழுதுகின்றீர்களே ஆதாரம் என்ன என்று கேட்ட போது (ஓதுவது சம்பந்தமான சில ஆதாரத்தை தந்தார். அது நாம் கேட்ட கேள்விக்கு சம்பந்தம் இல்லை). ஆனால் எழுதுவது சம்பந்தமாக காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்களை நோக்கி ஹுதைபிய்யா உடன்படிக்கையில்

بسمك اللهم

என்று எழுதியதை ஆதாரமாக்கி நானும் ஒரு மக்கா காபிரை போல என்று நிரூபித்துக்கொண்டார். ஆனால் குர்'ஆனிலும் ஹதீஸிலும் கடிதம் சம்பந்தமாக, அதாவது எழுத்துக்கள் சம்பந்தமாக, நாயகம் ஸல்... அவர்கள் ஹிர்கல் மன்னனுக்கு எழுதிய கடிதத்திலும் (புகாரி), ஹழ்ரத் சுலைமான் அலை... அவர்கள் எழுதிய கடிதமும் (அல் குர்'ஆன்) பிஸ்மில்லாஹ் ஹிர் ரஹ்மான் நிர் ரஹீம் என்று எழுதியதாக தான் ஆதாரம் உள்ளது. வேறு ஆதாரங்கள் இல்லை.

ஏன் கேள்வி பதில் நிகழ்ச்சி ரத்தானது:

விவாதத்தின் பல நேரங்களிலும், கேள்வி பதில் நிகழ்ச்சியின் பல நேரங்களிலும், இந்த போலி தவ்ஹீத்கள் (ஒப்பந்தத்தை மீறி) சிரித்துக்கொண்டிருந்தார்கள். சில நேரங்களில் தக்பீரும் சொன்னார்கள். தக்பீர் சொன்ன சில நேரத்தில் சொல்ல கூடாது என்றும் சிரித்து கொள்ளலாம் (ஒப்பந்தத்தை தானாக திருத்தி) கூறினார் PJ. மேலும் சவால் விடுகின்றேன் என்று PJ சவால் விடும் போது பல முறை தக்பீர் சொல்லிக்கொண்டிருந்தார்கள் இந்த போலி தவ்ஹீத் வாதிகள். நமது அணியினர் சிரிக்கும் போதோ, தக்பீர் சொன்னாலோ, ஜமாலி ஹழ்ரத் அவர்கள் தடுத்து கொண்டே வந்தார்கள். ஆனால் PJ விட்ட போலி சவால்களில் அதை ஜமாலி ஹழ்ரத் (மேலும் ஐக்கிய பேரவையினர் அடிக்காத போஸ்டரை, இவர்கள் தான் அடித்தார்கள் என்று இட்டுக்கட்டி கூறிய வாதத்தை ஹழ்ரத் அவர்கள்) எதிர்கொண்ட போது, அதுவரை அமைதியாக இருந்த நமது அணியினரும் தக்பீர் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். சாது மிரண்டு விட்டது காடு கொள்ளாது என்ற நிலையில் நமது தக்பீரை கேட்டு பயந்து விட்ட இந்த போலி தவ்ஹீத்கள், அல்லாஹ்விற்கு மட்டும் பயப்பட வேண்டும் என்ற நிலையில் இருந்து வாபஸ் வாங்கி மனிதர்களுக்கும் பயந்த காரணத்தால் கேள்வி பதில் நிகழ்ச்சி ரத்தானது.


சவாலில் தோற்ற PJ:

இதன் முழு விபரத்தை காண விரும்புவோர் கீழ் கண்ட முகவரியை கிளிக் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

http://this-is-truth.blogspot.com/2010/08/pj_10.html


PJ காபிர், முஷ்ரிக், முனாபிக், பித்'அத் வாதி, ஒப்பந்தம் மீறுவது, ஆகிய தருணங்கள்:

 • நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள் (நாங்கள் வர மாட்டோம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம்) என்பதில் இருந்தும்,

 • வெளியில் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறியவர்கள் ஒரு ஆதாரம் கூட சென்னையில் எடுத்து வைக்கைப்பட்ட விவாதத்தில் காட்ட முடியாததில் இருந்தும்,

 • சென்னை விவாதத்தில் வாதிக்க முடியவில்லை என்ற நிலையில் களியக்காவிளை ஒப்பந்தம் எடுத்து அதற்கு பதில் கூறுங்கள் என்று சொல்லியதில் இருந்தும்,

 • சரித்திரத்தில் இல்லாத விவாதம் என்று கூறி, நீங்கள் ஷிர்க் செய்கின்றீர்கள் என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள் என்று கேட்டதில் இருந்தும்,

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் (நாங்கள் செய்றது தப்பு என்று தெரிந்ததால்)இருந்ததில் இருந்தும்,

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு ஹதீஸில் இருந்து பதில் தராமல் கெளசுல் ஃலம் சொல்லி இருக்கிறார்கள், இமாம் நவவி கூறி இருக்கின்றார்கள் என்பதை காட்டியதின் மூலம் ஹதீஸில் இல்லை என்பதை ஒப்பு கொண்டதில் இருந்தும் (ஒப்பந்தம் ஹதீஸில் இருந்து தான் காட்ட வேண்டும், ஒப்பந்தத்தை மீறியதில் இருந்தும்)

 • சஹாபா பெருமக்களை முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்றும், நரகவாதிகள் என்றும், பித்'அத் வாதிகள் என்றும் நா கூசாமல், நபிகள் நாயகம் ஸல்.... முர்தத் (ஏனைய மதம் மாறி போனவர்கள் ) பற்றி கூறிய ஹதீஸை சஹாபா பெருமக்கள் மீது நபிகளார் ஸல்... அவர்கள் கூறியதாக இட்டுக்கட்டி சாட்டியதில் இருந்தும், அதை பற்றி கேக்கும் போது அதை பற்றி பதில் பேசாமல் இருந்ததில் இருந்தும்,

 • நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... யார் இந்த மார்கத்தை நமக்கு வழங்கினார்களோ அவர்களே மாற்றி மாற்றி பேசினார்கள் (நவூதுபில்லாஹ்) என்று விவாதத்தில் பதிவு செய்ததில் இருந்தும்,(அல்லாஹ் இந்த வழி கேடர்களை விட்டு நம்மையும், நம்முடைய வருங்கால சந்ததியும் காத்து அருள் புரிவானாக)

 • பாங்கின் சத்தம் மனிதர்கள் கேட்டு அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸிற்கு கோவிலும் தான் கேக்கிறது அதுவும் சாட்சி சொல்லுமா என்று கேலி பேசி (கேட்டு தனக்கு எப்போதும் உருவம், கோவில், சிலை, காபிர் என்பது தான் நினைவிற்கு வரும், இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று) கூறியதில் இருந்தும்,

 • முஸ்லிம்கள் காபிர்களின் கோவிலுக்குள் செல்லலாம், அவர்களுக்கு சலாம் சொல்லலாம், பூஜை அறைக்கு செல்லலாம், சிலைகளை காணலாம் என்று வெளியில் கூறியதை எடுத்து காட்டி அதை பற்றி கேக்கப்பட்ட போது வாய் மூடி மௌனியாக இருந்ததில் இருந்தும்,

 • முஸ்லிம்களை காபிர் என்று சொன்னால் (தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம் காபிர் என்று கூறி ஜனாஸா தொழுகை இல்லை) நீங்கள் காபிர் ஆகி விடுவீர்களே என்று ஹதீஸில் இருந்து சுட்டி காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு வாய் பொத்தி கொண்டு இருந்ததில் இருந்தும்,

 • நம்முடைய நிலைப்பாட்டையும், நாம் சொல்லாத விஷயத்தையும், உங்கள் நிலைப்பாடு இது தான் என்றும், இப்படி தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்றும் நம்மின் மீது நம்முடைய நிலைப்பாட்டை திரித்து திணித்ததில் இருந்தும்,

 • சென்னையின் முதல் விவாதத்தில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீதுள்ள சலாமை கேடு கெட்ட மௌலித் (நவூதுபில்லாஹ்) என்று ஒரு கேடுகெட்ட இணையத்தில் பதிவு செய்து, அதை பாதியில் அவர்கள் சுட்டி காட்டும் போது நிறுத்தப்பட்டது (உண்மையில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டது என்பது தான் உண்மை) என்று கூறிய பொய்யில் இருந்தும்,

 • நபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு மறைமுக ஞானம் இல்லை (இது விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத விஷயம்) என்று கூறி, பிறகு ஆதாரம் தந்த போது மறுப்பு பேச முடியாததில் இருந்தும்,

 • ஷிர்க், பித்'அத் என்ற இரு தலைப்பில் பித்'அத் பற்றி பிறகு பேசுவேன், என்று கூறி (பாம்பு, கீறி விளையாட்டு போல) கடைசி வரை பித்'அத் பற்றி வாயே திறக்காமல் இருந்ததில் இருந்தும்,

 • உன்னதமான சஹாபா பெருமக்கள் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் விஷயத்தில் நபிகளார் கண்மணி ஸல்... அவர்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக இட்டுக்கட்டியதன் மூலமும்,

 • யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறி உள்ளாரோ அவர் தனது தங்குமிடம் நரகமாக்கி கொள்ளட்டும் என்ற ஹதீஸின் அடிப்படையிலும் (இந்த ஹதீசும் ஓதி காண்பிக்கப்பட்டது)

 • அன்னை ஆயிஷா சித்தீகா ரழி... அவர்கள் மீது கலங்கப்படுத்தியத்தின்மூலமாகவும்

 • வேறு மொழியில் குத்பா பிரசங்கம் செய்யலாம் என்றதில் இருந்தும்

 • காபிர்களுக்கும் இஸ்லாமிய முறையான சலாம் சொல்லலாம் என்று எழுதி வைத்ததை சுட்டிக்காட்டி, ஆதாரம் கேக்கும் போது மெளனமாக இருந்ததில் இருந்தும்,

 • சஹாபிய பெண்களை (அவர்களின் உடல் போரில் தெரிந்தது என்று) அசிங்கமாக பேசியதில் இருந்தும்,

 • பிஸ்மில்லாஹ்வை எழுதாமல் இறைவனின் திருப்பெயரால் என்று எழுதுவதில் இருந்தும்,

 • mobile, Google போன்றவற்றின் உதவியை நாடுவதில் இருந்தும்,

 • அல்லாஹ்வின் சக்திக்கும் சப்தம் தான் அளவுகோல் என்றதில் இருந்தும்,

 • அல்லாஹ்விற்கு ஒரு எல்லை நிர்ணயித்ததின் மூலமும்,

 • கப்ரை வணங்கி கொண்டிருந்தார் என்று ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததின் மூலமும்,

 • களியக்காவிளையில் அல்லாஹ்விற்கு கப்ரு வைக்கலாம் என்று சொன்னதின் மூலமும்,

 • ஹதீஸ் குத்ஸி யை கிண்டல் செய்ததின் மூலமும்,

 • குர்'ஆன் ஹதீஸ் மட்டும் தான் பேசவேண்டும் என்றிருக்க வலிமார்களை துணைக்கு அழைத்ததின் மூலமும்,

 • சிரித்து கொள்ளலாம் என்று ஒப்பந்தத்தை மாற்றி கூறியதன் மூலமும்,

இவர்கள் தோற்று போனார்கள் என்பதும், இவர்கள் காபிர்கள் என்பதும், முஷ்ரிக்கள் என்பதும், முனாபிக்கள் என்பதும், பித்'அத் வாதிகள் என்பதும், ஒப்பந்தம் மீறுபவர்கள் என்பதும் இவர்கள் நரக வாதிகள் என்பதும் நன்றாக விளக்கி காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இது தான் இவர் வனவாசம் சென்றதின் இரண்டாவது காரணம் ஆகும். ஆனாலும் சில ஜால்ராக்கள் உண்மையை உணராமல் இன்னும் அவரை பின்பற்றுவதால், தான் ஜெயித்து விட்டோம் என்று (வெளியில்) கூறிக்கொண்டு இருந்தாலும் (உள்ளுக்குள்) அவர் வனவாசம் சென்று தன்னுடைய ஜால்ராக்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்கவும், எப்பிடி சமாளிக்க வேண்டும் என்பதை யோசிக்கவும் சென்று உள்ளதின் மூலமும் தான் தோற்று விட்டோம் என்று அவருக்கு புரிய வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இவரை நம்பி (போலி) தவ்ஹீதில் சென்று மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கி விடாதீர்கள்.

முற்றும்........



மதுரை நாபிஈ



0 comments: