முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Monday, October 11, 2010

PJ வின் (நிரந்தர) வனவாசம் ஒரு பின்னணி (இரண்டாம் பாகம்) - தொடர் - 3


மறைமுக ஞானம் ஆரம்பித்த PJ:

போடப்பட்ட ஒப்பந்தத்தில் நிற்க முடியவில்லை, தோற்று போயாச்சு என்ற நிலையை அல்லாஹ் ஏற்படுத்திய உடன், மறைமுக ஞான விஷயத்தில் தவ்வினார் (அப்போது தான் கலாட்டா செய்ய முடியும்). PJ சொன்ன விஷயங்கள்...

மூத்தா போரில் நபிகளார் அறிவித்தது எல்லாம் உண்மை (மறைமுக ஞானம் ஒப்புக்கொள்கின்றோம்). என்று ஆரம்பித்த PJ, பிறகு
 1. 70 காரியை அழைத்து சென்று கொன்று விட்டார்கள், அது நபிகளாருக்கு தெரியவில்லை.
 2. மற்றொரு சந்தர்பத்திலும் சஹாபாக்களை அழைத்து கொண்டு போய் கொன்று விட்டார்கள். அதுவும் தெரியவில்லை.
 3. தொழுகையில் ஒருவர் பின்னால் ஓதுகின்றார். அது யார் என்று கேட்டார்கள் அதனால் அதுவும் தெரியவில்லை.
 4. நபிகளாரிடம் வழக்கு வருகின்றது. திறைமையாக யார் வாதிடுவாரோ அவருக்கு தான் தீர்ப்பு சொல்வேன். இதனால் மறைமுக ஞானம் இல்லை.
 5. ஒரு ஆள் வந்து தொழுகையில் வரிசைக்கு முன்பாக ருகூவு செய்து விடுகின்றார், இது தெரிந்த நபிகளாருக்கு யார் செய்தார்கள் என்பது தெரியவில்லை.
 6. பள்ளிவாசலை சுத்தம் ஆகும் பெண்மணி இருந்து விட்டார் அவரை அடக்கம் செய்து விட்டனர். இறந்ததும், எந்த இடத்தில் அடக்கியதும் தெரியவில்லை.
 7. ஒழுவிற்கு தண்ணீர் வைத்தார்கள் இப்னு அப்பாஸ் ரழி..., யார் வைத்தது என்று கேட்டார்கள், அதனால் இதுவும் தெரியாது.(ஆமா இவருக்கு தான் எல்லாமே தெரியும்).
 8. மதினாவிற்கு அச்சம் இருக்கின்றது என்ற தகவல் வந்த உடன் குதிரை வாங்கிட்டு போய் வந்து ஒன்னும் இல்லை என்று சொன்னார்கள் அதனால் இதுவும் தெரியாது.
 9. வீட்டிற்கு வந்து என்ன சாப்பாட்டிற்கு இருக்கின்றது என்று கேட்பதால். இதுவும் தெரியாது.
 10. விருந்தாளி வரும்போது வீட்டில் விசாரித்து அனுப்புகின்றார்கள், ஒன்றும் இல்லை என்று பதில் வருகின்றது. அதனால் இதுவும் தெரியாது.
 11. ஒருவர் எட்டிப்பார்கின்றார், இது முதலிலேயே தெரிந்து இருந்தால் ஈட்டியினால் குத்தி இருப்பேன் என்று கூறினார்கள். இதனால் மறை முக ஞானம் இல்லை.
 12. சித்ரத்துல் முன்தஹா வில் பல நிறம் இருந்தது ஆனால் எனக்கு தெரியவில்லை என்று கூறினார்கள். அதனால் அவர்களுக்கு ஒன்றும் தெரியாது. (பார்த்துட்டு வந்த பிறகுமா ஒன்னும் தெரியல, என்னங்க நீங்க, அது மனிதர்களிடம் விவரிக்க அப்போது அந்த நிறங்கள் இருக்க வில்லை என்று அர்த்தம் வைக்காமல் இப்படி அர்த்தம் வைக்குறீங்க).
 13. ஹழ்ரத் மூஸா அலை... அவர்கள் மூர்ச்சையாவது பற்றி எனக்கு தெரியாது என்று கூறுகின்றார்கள். அதனால் ஒன்றும் தெரியாது.
 14. மேராஜிற்கு சென்ற நபிகள் ஒவ்வொரு நபியையும் பார்க்கும் பொது இவர் யார் என்று கேட்டார்கள். அதனால் ஒன்றும் தெரியாது.
 15. எறும்பு புற்றிற்கு தீ வைத்தவர் யார் என்று கேட்கின்றார்கள்.
 16. ஹிஜ்ரத் செய்யும் பொது குறுக்கு வழி தெரியவில்லை. காபிரான ஒருவர் தான் வழிகாட்டினார் (நபிகளாருக்கு தெரியாததை காபிருக்கு தெரியும் என்று கூறி அதன் மூலம் இவர் காபிர் ஆகி விட்டார்).
 17. ஒரு பொருள் வருவதற்கு முன்னாள் இது சதகாவா? ஹதியாவா? என்று கேட்பார்கள்.
 18. ஹழ்ரத் அலீ ரழி... அவர்களின் வீட்டிற்கு சென்று அலீ எங்கே என்று கேட்பார்கள்.
 19. இறந்தவரை கொண்டுவந்தால் கடன் இருக்கா என்று கேட்பார்கள். (கடன் அடைத்து இருந்தால் தான் தொழ வைப்பார்கள். இந்த ஹதீஸை பின்பற்றுவது இல்லை இந்த அறிவு (?!?!?!?!?) ஜீவிகள். ஆனால் தற்கொலை செய்து கொண்டவர்களை நபிகளார் சஹாபாக்களை கொண்டு தொழுக வைத்ததை ஏற்றுக்கொள்ளாமல், அவர்களை காபிர் ஆக்கியதன் மூலம் , அவர் காபிர் ஆகி போனார் என்பது விவாதத்தில் நிரூபிக்கப்பட்டது).
 20. ஒரு ஆட்டை ஓட்டி கொண்டு போனால் விற்கபோகின்றாயா? என்று கேட்பார்கள்
 21. ஒரு பொம்பளை அதிகமாக தொழுவார்கள் என்ற போது யார் என்று கேட்டார்கள்.
 22. ஒருவர் கல்யாணம் பண்ணி கேப்பாரு, அதற்கு நபியவர்கள் மோதிரம் வைத்திருக்கின்றாய என்று கேட்பார்கள்.
 23. பிரயாணத்தில் ஹழ்ரத் ஜாபிர் ரழி... போகும் போது தெரியாமல்? யாரு சென்றது? என்று கேப்பார்கள்?
 24. ஒரு கூட்டம் வந்தால், யார் இந்த கூட்டம் என்று கேட்பார்கள்.
(பட்டியல் போட்டு கொண்டே போகலாம், வண்டி கணக்கில் இருக்கின்றது என்று கூறினார். ஆனால் 24 விஷயங்களை மட்டுமே கூற முடிந்தது. 1 வண்டி அளவிற்கு கூட தேறவில்லை என்பதே உண்மை. ஆனால் இதற்கும் மறைமுக ஞானம் இல்லை என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது வேறு விஷயம்.)

PJ வின் தவறான விளங்குதல் என்பதை உணர்த்திய பதில்:

 1. மேற்கண்ட 25 விஷயங்களில் நபிகளாருக்கு தெரியாது என்று எங்கே வருகின்றது. இது உலக நடைமுறைக்கு கேட்டது. பல விஷயங்கள் நமக்கு தெரிந்தும் நான் பிறரிடம் கேட்டு உறுதிப்படுத்துவோம், உதாரணமாக, ஒருவரை பாப்போம், விசாரிப்போம், என்ன செய்றீங்க? அவர் என்ன செய்றார் என்பது தெரிந்து தான் விசாரிப்போம். அப்படி தான் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் விசாரித்தார்கள். ஒருவர் எழுதுகிட்டு இருப்பார், அவரிடமும் என்ன செஞ்சுட்டு இருக்கீங்க என்று கேட்போம். அப்படியானால் தெரிந்து தான் கேள்வி வைக்கப்படுகின்றது. ஒருவர் சாப்பிட்டுக்கொண்டு இருப்பார் அவரிடம் என்ன சாப்டுறீங்களா என்று கேட்போம்? இதுவும் தெரியாமலா கேட்கிறோம். சாப்பிடுவதை தான் பார்த்து விட்டு தானே கேட்கின்றோம்.
 2. இப்படித்தான் அல்லாஹுத் த'ஆலா வும் கேள்வி கேட்பானே. அதனால் இறைவனுக்கு ஞானம் இல்லை என்றா விளங்க முடியும். (இது நாத்திக வாதம் அல்லவா) விசாரணைக்கு தான் செய்றான் என்று தான் நாம் விளங்குகின்றோம். . மலக்குமார்கள் காலையிலும் மாலையிலும் அடியார்கள் என்ன செய்கின்றார்கள் என்று பார்க்க இறங்குகின்றார்கள். அல்லாஹ் அவர்களை பற்றி என்ன செய்து கொண்டு இருந்தார்கள் என்று விசாரிப்பானே (புகாரி) அதனால் அல்லாஹ்விற்கு ஒன்றும் தெரியாதா?
 3. நீதிபதி, குற்றவாளியிடமும், தந்தை மகனிடமும் ஒரு முறைக்காக விசாரித்ததை போல நபிகாளார் விசாரித்ததை மறைமுக ஞானம் இல்லை என்று கூறி ஹதீஸை மறுக்கும் நிலைக்கு சென்று விட்டார் PJ.
 4. நபிமார்களின் கூட்டத்தாரை மக்கள் கொலை செய்தார்கள் என்று அல்லாஹ் குர்'ஆனில் கூறுகின்றான். ஏன் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்விற்கு தெரிய வில்லையா? (உங்கள் வாதப்பிரகாரம். நவூதுபில்லாஹ்)
 5. அது எல்லாம் எழுதப்பட்டது. அப்படி தான் நடக்கும். இது கத்ரின் விஷயங்கள். இப்படி அல்லாஹ் அவர்களின் உயிரிழப்பை தடுக்காமல் விட்டதால் அல்லாஹ்விற்கு தெரியவில்லை என்று நாத்திகன் சொன்னால் ஒப்புக்கொள்ள முடியுமா?

கீழே விழுந்தேன் மண் ஒட்டவில்லை - PJ:

இயல்பாக நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கேட்டதை உள்நோக்கம் கற்பித்த இந்த PJ (பின்னால் அது வெல்லாம் இயல்பாக கேட்பது தான் என்று ஒத்துக்கொண்டார்) விற்கு ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கொடுத்த பதிலில் நிலை தடுமாறி போனார் PJ என்பது தான் உண்மை.

ஆமாம் இதுவெல்லாம் (ஜமாலி) சொன்னது சரி தான் என்று ஒத்துக்கொண்டு, ஆனாலும் சிலவற்றில் பொருந்தாது என்று கூறி, நான் கீழே விழுந்து விட்டேன். என் மீசையில் பாருங்க மண் ஒட்டவில்லை என்று கூறாமல் கூறினார். இப்படி ஒத்துக்கொண்டதால், அல்லாஹ்வின் விஷயத்திலும் இப்படி விளங்க முடியுமா என்பதிலிருந்து கேள்விகள் 1,2, லிருந்தும், அவர்கள் வாயால் வர வேண்டும் என்று தான் கேட்டார்கள் நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் என்று ஒப்புக்கொண்டதில் இருந்தும் கேள்விகள் 3, 5, 7, 9, 10, 11, 12, 14, 15, 17, 18, 19, 20, 21, 22, 23, 24 என்று தான் விடுத்த 19 கேள்விகளை வாபஸ் வாங்கி விட்டார். எஞ்சி இருக்கும் 5 கேள்விகளையும் (4,6,8,13,16) மறைமுகமாக மீசையில் மண் ஒட்டவில்லை என்று நிலையில் வாபஸ் வாங்கினார்.

மேலும் அதே களத்தில் அவருக்கு முன்னால் (நாம் கூறும் எல்லை எது என்ற தலைப்பில் (தொடர் 2 ல்) இருக்கும் விஷயங்களையும் சேர்த்து) அடுக்கடுக்கான விஷயங்களை முழுமையாக தெரியும் என்பதற்கு ஆதாரமாக்கிய போது, ஆம் இது உள்ளது என்று ஒத்துக்கொண்டார். உண்மையான கொள்கைக்கு அல்லாஹ் தந்த மாபெரும் வெற்றி இது. அந்த வெற்றியை தந்த அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும். மேலும் ஒரு விஷயம் இல்முல் கைப் இருப்பதற்கு ஆதாரம் என்றால் இல்லை என்று ஆயிரம் சொல்ல முடியும் என்றவரால் 24 விஷயங்களைதான் காட்ட முடிந்தது. 100 விஷயம் (தப்பு தப்பாக விளங்கியதை) கூட காட்ட முடியவில்லை. அல்லாஹ் எல்லாவற்றிற்கும் போதுமானவன். அல்லாஹ் எக்காலமும் தவறான பாதையில் இருப்பவர்களுக்கு உதவி புரிய மாட்டான் என்பதற்கு PJ தோற்றதே சாட்சி.

நபிகளார் ஸல்... அவர்களின் தூய்மையான மறைமுக ஞானம்:

 • ஹழ்ரத் உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், ஒரு முறை நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் பஜர் தொழுகையில் இருந்து சூரியன் மறையும் வரை இதுவரை என்ன நடந்தது. இனிமேல் என்ன நடக்க இருக்கின்றது என்று கூறினார்கள். (முஸ்லிம்).
 • அல்லாஹ் எனக்கு இந்த பூமியை சுருட்டிக்காட்டினான் அதன் மூலம் சூரியன் உதிக்கும் இடத்தையும், சூரியன் மறையும் இடத்தையும் பார்த்தேன் (முஸ்லிம்).
 • என்னுடைய உம்மத்தினர் செய்யும் எல்லா விஷயமும் எனக்கு எடுத்து காட்டப்பட்டு விட்டன, நல்ல விஷயங்களும் (பாதையில் கிடக்கும் இடையூறை அப்புறப்படுத்துவதும், துப்பி விட்டு சுத்தப்படுத்தும் இந்த சிறிய செயல்களும்), தீய செயல்களும் காட்டப்பட்டு முடிந்து விட்டன (முஸ்லிம்).
 • கைபர் யுத்தத்தில் நாளை ஒருவரிடம் கொடியை கொடுப்பேன், அவர் மூலம் வெற்றி கிடைக்கும் என்கின்றார்கள். அப்படியே ஹழ்ரத் அலீ ரழி... அவர்களின் கையில் கொடியை கொடுத்தார்கள் வெற்றியும் கிடைத்தது. (புகாரி).
 • ஹழ்ரத் மூசா அலை... அவர்களின் கப்ர் எங்கே இருக்கின்றது என்பதையும் காட்டுவேன் என்றார்கள்.
 • உஹத் மலையில் இருந்தார்கள் ஆடியது, ஏன் ஆடுகின்றாய், உன்மீது ஒரு நபி, ஒரு உண்மையாளர் (சித்தீக், ஹழ்ரத் அபூபக்கர் ரழி...) , இரண்டு அல்லாஹ்வின் பாதையில் ஷஹீதாக்கப்படுபவர்கள் (ஹழ்ரத் உமர் ரழி..., ஹழ்ரத் உஸ்மான் ரழி...) இருக்கின்றார்கள். (பின்னால் நடக்கும் ஷஹாததை அப்படியே கூறுகின்றார்கள்) (புகாரி).
 • நாளை நடக்கும் பத்ர் உத்தத்தில் யார் எங்கே கொல்லப்படுவார் என்பதை சுட்டிக்காட்டி அப்படியே நடந்தது (புகாரி, முஸ்லிம்)
 • மூத்தா போருக்கு அனுப்பும் போதே ஹழ்ரத் ஜைத் ரழி... கொல்லப்பட்டால் (கொல்லப்படுவார்கள் என்று தெரிந்து) ஹழ்ரத் ஜாஃபர் தைய்யார் ரழி... அவர்களை தளபதியாகவும். அவர்களும் கொள்ளப்பட்டு விட்டால் (கொல்லப்படுவார்கள் என்று தெரிந்து) ஹழ்ரத் அப்துல்லாஹ் பின் ரவாஹா ரழி... அவர்களை தளபதியாகவும் நியமித்தார்கள். (புகாரி) (கொல்லப்படுவார்கள் என்று முன்னறிவிப்பு செஞ்சு தானே அனுப்பி வைத்தார்கள். அப்படியானால்! வேண்டுமென்று தான் அனுப்பி வைத்தார்கள் என்றா சொல்லுவது? இல்லை, அல்லாஹ் அவர்களின் மேல் எதை நாடியுள்ளனோ அது தான் நடக்கும் என்பதை இவர்கள் விளங்கி கொள்ள வேண்டும்).

PJ முனாபிக் ஆகிய நேரம்:

இப்படி எல்லாம் பதில்கள் சொல்லி அவரை ஜமாலி அவர்கள் ஒப்புக்கொள்ள வைத்த போது, எப்போதும் எடுக்கும் ஆயுதமான நமது உயிரினும் மேலான, கண்மணி நாயகத்தின் பரிசுத்தமான மனைவி, நமது உயிருக்கும் உயிரான, உயிரினும் மேலான, நமது தாய்மார்கள் என்று குர்'ஆனில் சொல்லப்பட்டு, யாருக்காக இந்த பூமி தயம்மம் செய்ய சுத்தமாக்கப்பட்டதோ (புகாரி) அந்த பரிசுத்த, கற்பில் சிறந்த, பத்தினியான, அன்னை ஆயிஷா ரழி... பீவி அம்மையார் அவர்கள் மீது முனாபிக் கள் அள்ளி வீசிய களங்கத்தை இவர்கள் கையில் எடுத்தார்கள். (நவூது பில்லாஹ்) இதன் மூலம் முனாபிக்கள் சாக வில்லை. எங்கள் ரூபத்தில் உயிரோடு தான் உள்ளார்கள் என்று காட்டினார்கள்.

ஜமாலியின் பதில், PJ யின் ஓட்டம்:

இதை பார்த்துக்கொண்டிருந்த சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்த உண்மையான மூமின்களின் நெஞ்சங்கள் பதறியது. ஜமாலி அவர்கள் பதில் கூறினார்கள். குர்'ஆன் மூலம் வசனம் இறங்கப்போகின்றது என்ற ஞானமும் நாயக கோமான் ஸல்... அவர்களிற்கு இருந்ததால் தான் மெளனமாக இருந்தார்கள் என்று ஜமாலி அவர்கள் கூறி அந்த அமர்வு முடிந்தவுடன் PJ வேறு நிலைப்பாட்டிற்கு தாவினார். (இதற்கு பொருத்தமான ஆதாரம் கிப்லா மாற்றம் விஷயத்தையும் கூறலாம். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் எதை பொருந்தினார்களோ அது கிப்லாவாக ஆக்கப்பட்டது, அதே போல நபிகள் ஸல்... அவர்கள் இப்படி வசனம் இறங்க வேண்டும் என்று எண்ணியதால் தான் நபிகளார் ஸல்... அவர்கள் பதில் சொல்லாமல் வசனம் இறங்கியது. இப்படி சொன்னால் இது சுய கருத்து என்று சொல்வார்கள். அப்படி இல்லை நபிகளாரும் அந்த இட்டுக்கட்டி நம்பி தான் இருந்தார்கள் என்று இவர்கள் கூறுவதை போல இருந்து இருந்தால், (நவூது பில்லாஹ்) அங்கே அல்லாஹ் இட்டுக்கட்டியவர்களை கண்டித்தானே, இவர்களின் வாதப்படி அப்படி அல்லாஹ் கண்டித்தல்லவா இருக்க வேண்டும். அப்படி கண்டித்தானா? (நவூது பில்லாஹ்), அதனால் அல்லாஹ் இறக்கிய வசனத்திலே இருக்கின்றது நபிகளார் ஸல்... அவர்கள் இந்த இட்டுக்கட்டி நம்பவில்லை என்று, ரூம் போட்டு ரொம்ப யோசிப்பாரோ? இந்த PJ).

வழுக்க வைத்த திருப்பூர் நிலைப்பாடு:

மூன்றாவது அமர்வின் (மற்றும் PJ வின் மூன்றாவது நிலைப்பாடு) ஆரம்பம். சென்னையில் அதன் ஒப்பந்தத்தில் விவாதிக்க முடியவில்லை என்ற நிலையில் திருப்பூர் விவாத ஒப்பந்தத்தில் உதவி தேடுதல் என்பதில் சுன்னத் வல் ஜமாஅத் ன் நிலைப்பாடாக குறிப்பிட்டதை பற்றி விவாதிக்க வேண்டும் என்று அவரின் அஸ்திரத்தை கையில் எடுத்தார். அதாவது (அல்லாஹ்வின் உதவியை நாடாமல்) திருப்பூர் மற்றும் களியக்காவிளையின் ஒப்பந்தத்தின் உதவியை நாடினார். ஜமாலி அவர்களோ திருப்பூர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் களியக்காவிளையில் விவாதம் நடந்து முடிந்து விட்டது. அதனால் அதை பற்றி இங்கே பேச முடியாது. இங்கு சென்னை விவாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தான் பேச வேண்டும் என்று கூறினார்கள். இல்லை திருப்பூர் விவாத அடிப்படையில் தான் விவாதிக்க வேண்டும் என்றால் களியக்காவிளையில் தோற்று விட்டோம் என்று ஒப்புக்கொண்டு நீங்கள் (PJ) எழுதி தர வேண்டும். அப்படி தந்தால் களியக்காவிளை மற்றும் திருப்பூர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் விவாதிக்க தயார் என்று ஆணித்தரமாக பேசிய போது, ஜமாலி தன்னுடைய நிலைப்பாட்டில் மாறிவிட்டார் என்று திசை திருப்ப பார்த்தார் இந்த பரமார்த்தகுரு ஜி (PJ).

ஜமாலி ஹழ்ரத் அவர்களோ திருப்பூர் மற்றும் களியக்காவிளை நிலைப்பாட்டில் எங்களுக்கு மாற்றம் இல்லை. ஆனால் இங்கு சென்னை ஒப்பந்தத்தில் தான் விவாதிக்க முடியும் என்றும் இந்த விவாதத்திற்கான கடித போக்குவரத்திலேயே இந்த விஷயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் ஜமாலி ஹழ்ரத் அவர்கள் கூறினார்கள். கூறிய போது, எல்லா பித்தலாட்டத்தின் வாய்ப்புகளும் அடைபட்ட நேரத்தில், முதலாம் நாளின் அமர்வு முடிந்து விட்டது.

இப்படி எல்லா நிலைகளிலும் தோற்று விட்டதன் பிறகு, அவரின் ஜால்ராக்கள் எல்லாம் என்ன இப்படி ஆகிவிட்டதே என்று இந்த பரமார்த்தகுரு வை முற்றுக்கை இட்ட போது எடுத்த முடிவே (நிரந்தர) வனவாசம்.

(தொடரும்..... இன்ஷா அல்லாஹ்)


மதுரை நாபிஈ

0 comments: