முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, August 21, 2010

PJ வின் கோஷ்டிகளுக்கு ஒரு கேள்விஆற்றல் அனைத்தும் அல்லாஹ்விற்கே!பிறப்பு - இறப்பு மட்டுமல்ல நடப்பவை அனைத்தும் அல்லாஹ்வின் நாட்டப்படி தான் நட்க்கும்" என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தால் எந்த ஒரு குழப்பமும் இல்லை. ஏர்வாடி தர்காவில் நடந்த 'தீ' விபத்து, கோரிப்பாளையம் தர்காவில் நடந்த சம்பவம் இவை இரண்டுமே அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்பதை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் உணர்வார்கள். இதை விடுத்து 'அவுலியாக்கள் காப்பாற்றினார்களா?' என்று வினவுவது அறியாமை என்றுதான் சொல்லவேண்டும். 'மினா' தீ விபத்தில் பக்தர்கள் பலி, 'ஷைத்தானுக்கு கல்லெறியும் இடத்தில் - கூட்ட நெரிசலில்' பக்தர்கள் பலி, ஹாஜிகளை ஏற்றி வந்த விமானம் விழுந்து ஹாஜிகள் பலி என்றெல்லாம் செய்திகள் பார்க்கிறோம். அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்ற சென்றவர்களை அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று கேட்பதும், அல்லாஹ்வின் தூதர் 'தாயிஃப்' நகரத்தில் இரத்தம் சிந்தியது, மார்க்கத்திற்காக போர் புரிந்து எண்ணற்ற சகாபாக்கள் உயிர் தியாகம் செய்தது, வீரர் 'ஹம்ஜா' (ரலி) அவர்கள், கண்மணி நாயகத்தின் பேரப்பிள்ளைகள் 'ஹஸன் - ஹுஸைன்' அவர்கள், ஹழ்ரத் உமர், உஃத்மான், அலி (ரலி) இவர்களின் மரணம் எப்படி சம்பவித்தன? இவைகளையெல்லாம் நாம் சிந்திக்க வேண்டாமா? இவர்களெல்லாம் இஸ்லாத்தை வளர்க்க முனைப்புடன் செயல் பட்டவர்கள். இதற்கெல்லாம் மேலாக அல்லாஹ்வின் ரசூலுக்கு துணையாக இருந்தவர்கள். இவர்களையெல்லாம் அல்லாஹ்வால் ஏன் காப்பாற்ற முடியவில்லை என்று வினவுவதும் எப்படி அர்த்தமற்றதாக இருக்குமோ அப்படித்தான் நீங்கள் கேட்ட கேள்வியும். இவைகளெல்லாம் அல்லாஹ்வின் நாட்டம்.


மேலும் கணவனை இழந்த பெண் தன் மகனை அழைத்துக்கொண்டு தர்காவிற்கு சென்றது தீமை என்றே வைத்துக் கொள்வோம். அந்த தீமையை நாடியது மேலே கண்ட இறை வசனத்தின்படி இறைவன் தான் என்பது உறுதியாகிறது. அந்த தீமையை யார் தடுக்க முடியும்? கணவனை காவு கொடுத்து, பின்னர் மகனையும் காவு கொடுத்த அந்த பெண்ணுக்கு தீமையை நாடி நிம்மதியை பறித்தது யார்?.........அல்லாவா? அவுலியா?

நமது சிற்றறிவு இதுபோன்ற விஷயங்களில் நமக்கு தெளிவை தராது. "ஷரீயத்தையும், நாவையும் பேணுங்கள்"


அபூத் தைய்யார்

0 comments: