முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, August 28, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 17)பத்ரு போர் நினைவு நாள்


நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் செய்து விட்ட பிறகு இரண்டாம் ஆண்டில், இஸ்லாத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத மக்கத்து காபிர்கள் நபிகளார் ஸல்... அவர்கள் மீது போர் தொடுத்தார்கள். அந்த திணிக்கப்பட்ட போரில் இஸ்லாம் வென்றது. அந்த போர் நடந்தது ரமழான் 17. இந்த நாளை நாம் நினைவு கூறுவோம். இடிக்கப்பட்ட பாபர் மஸ்ஜிதிற்கு வருடாந்திர உரூஸ் தினத்தை கொண்டாடும் வஹ்ஹாபிகள், ஒரு உன்னதமான இப்படிப்பட்ட தினத்தையோ, தியாகம் செய்த சஹாபா பெருமக்களையோ நினைவு கூறுவது இல்லை. அல்லாஹ் குர்'ஆனில் நல்லவர்களை நினைவு கூறுங்கள் என்று கூறுகின்றான், மர்யம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இப்ராஹிம் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இத்ரிஸ் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், இஸ்மாயீல் அலை... அவர்களை நினைவு கூறுங்கள், என்று கூறுகின்றான். அதனால் நாம் சஹாபிகளை நினைவு கூர்ந்து வஹ்ஹாபிகளை புறம்தள்ளுவோம்.

மேலும் நபிகள் நாயம் ஸல்... அவர்கள் اذكرو محاسن موتاكم உங்கள் முன் சென்றவர்களின் நல்லவைகளை நினைவு கூறுங்கள் என்றும் சொல்லி இருக்கின்றார்கள். அதன் படி நாம் நினைவு கூறுவோம். சுன்னத் ஜமாஅத் ஆகிய நாம் அல்லாஹ்வையும், அவனின் ரசூலையும் தான் பின் பற்ற வேண்டும். வஹ்ஹாபிகளை அல்ல. இந்த பத்ரு போரில் கலந்து கொண்ட சஹாபாக்களை பற்றி அல்லாஹ் اعملو ما شئتم فقد غفرت لكم நீங்கள் நாடியவைகளை செய்யுங்கள் உங்களை மன்னித்து விட்டேன் என்றும் கூறுகின்றான். அப்படிப்பட்ட சஹாபாக்களின் தியாகங்களை நாம் நினைவு கூறுவோம்.

மேலும் இவர்களின் வசிலாவை தேட வேண்டும். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள், اطلب الحوائج ذوى الرحمة من امتي என்னுடையா உம்மத்தினரில் ரஹ்மத் செய்யப்பட்டவர்களிடம் உங்கள் தேவைகளை கேளுங்கள் என்று கூறி உள்ளார்கள் (பைஹகி). பத்ரு சஹாபாக்களை போல யாரும் ரஹ்மத் செய்யப்பட்டவர்கள் இல்லை, அதனால் அவர்களிடம் நம்முடைய நாட்டத்தை கேட்போம். மேலும் உங்களுக்கு உதவி தேவை பட்டால், اعينوني يا عبادالله அல்லாஹ்வின் அடியாரே உதவி செய்யுங்கள் என்றும் அழைக்க சொல்லி உள்ளார்கள் நபிகள் நாயகம் ஸல்... அவர்கள்.

சுய விளம்பரத்திற்காக இல்லாமல் இம்மை மறுமை வாழ்வு சிறக்க வேண்டுமானால் இவர்களின் பொருட்டினால் நாம் துஆ கேட்க வேண்டும். அல்லாஹ் பத்ரு சஹாபாக்களின் பொருட்டால் நம்முடைய அனைத்து தேவைகளையும் நிறைவேற்றி வைப்பானாக!
ஆமீன்! ஆமீன்! யா ரப்பல்ஆலமீன்.


அபூத் தைய்யார்

0 comments: