முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, August 6, 2010

பிறையில் JAQH ன் நிலைப்பாட்டிற்கு PJ காரணம் இல்லை.



JAQH மத்'ஹபு, சுன்னத் வல் ஜமாஅத்தின் வழியில்.


பிறையின் விஷயத்தில் 1400 ஆண்டுகாலமாக ஒரு நிலை பின்பற்றப்பட்டு வந்தது. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறினார்கள். பிறையை பார்த்து நோன்பு வையுங்கள், பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். வானில் மேகம் சூழ்ந்து இருந்தால் மாதத்தை 30 நாட்களாக கணக்கிட்டுக்கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

இதற்கு மாற்றமாக உலகம் அனைத்திற்கும் ஒரே பிறை என்ற நிலையில் தான் PJ வின் (போலி) தவ்ஹீத் களும், TMMK வினரும், JAQH பார்ட்டியும் சிறிது காலத்திற்கு முன் இருந்து ஒரு கொள்கையாக வைத்து அதை பின் பற்றி வந்தன. ஊருக்கு ஒரு பிறை இல்லை, உலகம் முழுதும் ஒரே பிறை தான், நாம் இங்கு அரபா நோன்பு நோற்றால் சவுதியில் பிறை பத்தாக இருக்கின்றது. அன்றைய தினம் நோன்பு நோற்பது ஹராம். ஆனால் அன்று தான் நாம் நோன்பு நோற்கிறோம், இது தவறு என்ற இந்த சட்டத்தை பிறை ஆய்வுக் குழு வான PJ, கமாலுத்தீன் மதனி, அப்துல் காதிர் மதனி, ஹாமித் பக்ரி போன்ற (போலி) ஆலிம்கள் எல்லாம் சேர்ந்து ஆய்வு செய்து சொன்ன சட்டத்தை (அல் ஜன்னத் நவம்பர் 1999), அவர்களின் மத்'ஹபை சேர்ந்த முகல்லிதுகள் ஏற்று அவர்களை வழிபட்டார்கள்.

அவர்களுக்குள் ஏற்பட்ட பணப்பிரச்சனையினால் ஜனவரி 2000 அல் முபீன் பத்திரிக்கையின் மூலம் ஒரு மாற்றம். அதில் பழைய படி நம் ஊரில் பார்க்கும் பிறை கொண்டு தான் அமல் செய்ய வேண்டும். காரணம் பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்று திர்மிதியில் நாம் சொன்ன ஹதீஸிற்கு அடுத்தே வருகின்றது. முன்னாள் அந்த ஹதீஸை பார்க்கவில்லை என்று கூறி முழுப்பூசணிகாயை சோற்றில் அமுக்கிய சிறிது காலத்திற்கு பிறகு (போலி) தவ்ஹீத் களின் நிலைப்பாட்டில் ஒரு மாற்றம் வந்தது. கைர். அல்ஹம்து லில்லாஹ். ஆனால் TMMK மற்றும் JAQH நிலைப்பாட்டில் மாற்றம் இல்லாமலே இருந்தது.

JAQH ற்கு கூட ஒரு நிலை, அதாவது சவுதியில் பார்த்தால் பெருநாள் என்ற ஒரு நிலை. TMMK விற்கு ஒரு நிலை இல்லாமல் இருந்தது. ஒரு முறை சவுதிவிற்கும் நமக்கும் இரண்டு நாள் வித்தியாசம் வந்தது. அப்போது பார்த்தால் JAQH கொண்டாடிய நாளிற்கும் நாம் கொண்டாடிய நாளிற்கும் மத்தியில் உள்ள ஒரு நாளில் கொண்டாடினார்கள். கேட்டால் சவுதி விற்கும் நமக்கும் ஒரு நாள் தான் வித்தியாசம், நேற்று அங்கு கொண்டாடப்பட்டு விட்டது, அதனால் இன்று நமக்கு பெருநாள் என்று கூறி நபிகளாரை கிண்டல் செய்தார்கள். இதனால் அவர்களின் வழிபாட்டுத்தலத்தில் 3 நாட்கள் பெருநாள் தொழுகை நடந்தது, இதுஒரு கூத்து. இதை பார்த்து காபிர்களே இவர்களை பார்த்து துப்பினார்கள்.

JAQH இன் நிலைப்பாடு சவுதியில் பிறை பார்த்தால் போதும் என்ற நிலை. ஆனால் அதற்கு மாற்றமாக ரமழான் மாதம் 27 லேயே போஸ்டர் அடித்து இன்ன தேதியில் பெருநாள் என்று அறிவித்து விடுவார்கள். அப்படிஎன்றால் சவுதியில் பிறை என்பது எல்லாம் சும்மா மனோ இச்சை என்பதும் நபிகளாரை கிண்டல் செய்வதும் இதன் மூலம்தெரிகிறது.

இதில் நடந்த ஒரு கூத்து என்ன வென்றால், இரண்டு வருடத்திற்கு முன்னாள் இன்ன தேதி என்று சொல்லப்பட்ட தேதியில் பெருநாள் என்பதற்காக 29 ம் நாளில் இதிகாப் இருந்தவர்கள், இதிகாப் முடித்து விட்டு நாளை பெருநாள் என்று இருந்தவர்களுக்கு ஒரு அதிர்ச்சி (சவுதியில் நம்மை விட்டு 2.30 மணி நேரம் வித்தியாசத்தினால்) ஏற்பட்டது. அது என்ன தெரியுமா? சவுதியில் பிறை தெரியவில்லை. அதனால் இந்தியாவின் இரவு 12.00 வரை அழைந்து திரிந்து கொண்டு இருந்தார்கள். (இது வெல்லாம் மனோ இச்சையினால் ஏற்பட்டது, நபிகளாரின் ஹதீஸை விலங்காததால் ஏற்பட்டது)

இப்படி ஒரே பிறை என்ற நிலையில் வந்தால், ஒரே சூரியன் அதனால் ஒரே நேரத்தில் தான் தொழுக வேண்டும் என்ற நிலை வந்து விடும். அது சாத்தியமா? இப்படி எல்லாம் நாம் ஹதீஸின் ஆதாரம் வழங்கியும், நாம் இப்படி சூரியனை வைத்து விளக்கம் கூறினாலும் ஏற்றுக்கொள்ளாமல் இருந்த JAQH ன் இந்த நிலையில், ஒரு மாற்றம் வந்து உள்ளது. அல்ஹம்து லில்லாஹ். அதற்க்கு காரணம், சவுதியும் இவர்களை கழட்டி விட்டது. அதாவது உலகம் முழுதும் ஒரே பிறை இல்லை என்று சவுதியை சேர்ந்தவர்கள் பத்வா வழங்கிவிட்டார்கள்., நம்முடைய ஆதாரம் ஒரு பக்கம். அதனால் தான் இந்த நிலை. மார்கத்தை பின்பற்ற சவுதியை பின்பற்றும் JAQH விரைவில் கபாவிலும், மதீனாவிலும் 20 ரக்அத் தொழும் தராவிஹ் யிலும் சவுதியை பின்பற்றும் என்று விரைவில் எதிர் பார்க்கிறோம்.

இந்த நிலையில் JAQH ன் நிலைக்கு தாங்கள் தான் காரணம் என்று கூப்பாடு போடுகிறார்கள் PJ வைச்சேர்ந்த (போலி) தவ்ஹீத்கள். இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. காரணம் இவர்களே அந்த நிலையில் தான் இருந்தவர்கள். அதனால் ஊருக்கு ஒரு பிறை என்பதின் சொந்தக்காரர்கள் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்தவர்களே தவிர (போலி) தவ்ஹீத் ஐ சேர்ந்தவர்கள் இல்லை.

உண்மை தான் ஜெய்க்கும் என்பதை பிறையின் மூலம் உலகத்திற்கு எடுத்துக்காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

மதுரை நாபிஈ.

0 comments: