முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Thursday, August 5, 2010

உண்மை வழிக்கு மீண்டு(ம்) வந்த ஹாமித் பக்ரி PJ விற்கு வைத்த செக்.

நாம் வாழும் காலத்தில் நாம் மாத்திரம் நேர் வழி பெற்றால் போதாது அனைத்து மக்களும் நேர் வழி பெற்று மறுமையில் சுவர்க்கத்தை அடைய வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.

ஆனால் நேர் வழியைக் கொடுப்பதும் வழிகேட்டில் விட்டு விடுவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். அதனைத் தனது திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன்(28:56)

நபியவர்களுக்கு அல்லாஹ் தெளிவாக கூறுகிறான் , அல்லாஹ் நாடினால் ஒருவரை நேர் வழியில் வைப்பான் அவன் நினைத்தால் அவரையே வழி கேட்டிலும் தள்ளி விடுவான். நேர் வழியை தேர்ந்தேடுப்பவர்களுக்கே மறுமையில் வெற்றி கிட்டும். அதற்கு மிக அண்மைக்கால நிதர்சன எடுத்துக் காட்டுதான் ஹாமித் பக்ரி அவர்கள்.

ஹாமித் பக்ரியின் ஆரம்ப காலம்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கம் அனைத்து தவ்ஹீத் கூட்டமைப்பாக இயங்கிய காலத்தில் அதன் தலைவராக இருந்தவர்தான் ஹாமித் பக்ரி.

போலியான தவ்ஹீத் கொள்கையை தமிழகத்தில் நிலை நாட்டுவதற்காக போலி தவ்ஹீத் ஜமாத் ஆலிம்கள் அயராது பாடுபடுகின்ற நேரங்களில் அவர்கள் அனைவருக்கும் தலைவர் இவர்தான். மார்க்கப் பிரச்சாரம் செய்யும் போது குர்'ஆன் ஹதீஸ் என்ற பெயரை வைத்துக்கொண்டு PJ வின் சொற்கள் தான் அவருடைய நாவில் மடை திறந்த வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடும்.

  • இன்று இதே நாவில் நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் புகழான மவ்லிதுப் பாடல்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அல்ஹம்துலில்லாஹ்.
  • சஹாபாக்களை திட்டிகொண்டு திரியும் கூட்டத்தில் இருந்த வந்த இந்த பக்ரி சஹாபாக்களின் விஷயத்தில் புண்ணியமிகு சஹாபாக்களை பரிந்து பேசி PJ வின் முகத்திரையை கிழித்துக்கொண்டுஇருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
  • வலிமார்களிடம் தான் உதவி தேட கூடாது என்று சொன்ன கூட்டம், அல்லாஹ்விடம் கேட்கும் கூட்டு து'ஆ வை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த இவர், நசாயி வுடைய ஹதீஸை கொண்டு பலமாக கூட்டு து'ஆசெய்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
  • மத்ஹபை மறுத்த கூட்டத்திலிரிந்து வந்த பக்ரி, மத்ஹபை ஆதரித்து பேசிக்கொண்டு இருக்கின்றார். அல்ஹம்துலில்லாஹ்.
இந்த ஹாமித் பக்ரி இந்த (போலி) தவ்ஹீத் வாதியான PJ வுடன் சேர்ந்து 2001 ம் வருடம் இலங்கையில் நடந்த விவாதத்தில் சுன்னத் ஜமாஅத்திற்கு எதிராக கலந்து கொண்டார். பின்னர் எப்பிடி ஹிதாயத் கிடைத்தது? அல்லாஹ் நாடிவிட்டான்!

நடந்தது என்ன?

பணத்தை பிரச்சனையாக காட்டி எப்பிடி இவருக்கு வேண்டாதவர்களை கழட்டி விடுவார்களோ அப்படி இவரையும் கழட்டி விட்டார்கள். (எங்கே சிஷ்யன் குருவை மிஞ்சி விடுவானோ என்ற பயம்) அவருக்கும் போலி தவ்ஹீத் ஜமாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று எந்த பதவியிலும் இல்லாத PJ வின் உத்தரவில் அதிரடியாக அறிவித்தது.

சென்ற வழியில் திரும்பியதன் காரணம் என்ன?

எதேதோ பேசும் போது ஜால்ரா தட்டி கொண்டு இருந்த பக்ரியின் மனது கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிக்கும் போது சமாதானம் அடையவில்லை. அல்லாஹ்வின் ஹிதாயத்தும் சேர்ந்து நேர் வழியான சுன்னத் ஜமாத்தின் பக்கம் அழைத்து வந்து விட்டது.

PJ கண்ணியத்திற்குரிய சஹாபா பெருமக்களை அவமதிப்பதை விளக்கும் வீடியோஅதாவது பி.ஜெ பற்றி ஹாமித் பக்ரி குறிப்பிட்டு பேசும் போது அவர் கருப்பை வெள்ளை என்றார் நாங்களும் வெள்ளை என்றோம் ,அவர் வெள்ளையை கருப்பு என்றார் நாமும் கருப்பு என்றோம். இது பக்ரியின் பதிவு செய்யப் பட்ட வாக்கு மூலம்.

அதாவது அவர் இந்தக் கருத்தின் மூலம் சொல்ல வருவது நான் தவ்ஹீதை பிரச்சாரம் செய்யவில்லை பி.ஜெ என்பவரை தக்லீத் தான் செய்தேன் என்பதாகும்.

இந்த PJ வும் அவரின் ஜால்றாக்கூட்டமும் எதை சொன்னாலும் தங்களுடைய வளர்ச்சியாக காட்டுவது மன்னர் ஹெர்குலிஸ் நபிகளாரின் கூட்டம் பற்றி அந்த கூட்டத்தில் இணைபவர் வெளியே வருகின்றார்களா என்று கேட்டதை சுட்டிக்காட்டி அப்படித்தான் எங்கள் கூட்டமும் என்று இந்த கேடு கேட்ட கூட்டத்தை அந்த கண்ணியமிகு கூட்டத்தை ஆதாரமாகக்காட்டுவார்கள். மேலும் யாரையேனும் அப்படி வெளி ஏறியவரை காட்ட முடியுமா என்று மார் தட்டும் போது, மாறிய மக்கள் நிறைய இருந்தாலும், அவர்களை ஆதாரமாக வெளியில் சொன்னால் ஒத்து கொள்ளும் மனபக்குவம் தான் இவர்களிடம் இல்லையே (தான் பிடித்த முசலுக்கு மூன்று கால் என்று சொல்லும் கூட்டமாச்சே). அதனால் தான் அல்லாஹ் அந்த கூட்டத்தில் இருந்த ஒரு தலைவரேயே மாற்றிகாட்டினான்.

அது மட்டுமல்ல, ஹெர்குலிஸ் மன்னன் சம்பந்தமாக வரும் ஹதீஸை இவர் புரிந்ததும் தவறு தான். காரணம் அவர் மார்கத்தில் நுழைந்தவன் கொள்கை பிடிப்பில் எப்பிடி என்ற நோக்கத்தில் கேட்டு, அதில் உறுதி கொண்டவர் என்ற பதிலை பெற்றார். இவர்களிடம் கொள்கை பிடிப்பு சரியாக இருக்கிறதா? Jaqh, tmmk, intj, tntj, என்று ஒவ்வொருவருக்கும் ஒரு கொள்கை, (கொள்கை இல்லாத கூட்டம் கொள்கை பிடிப்பான அருமைமிகு பெருமைமிகு, கண்ணியமிகு சஹாபாக்களின் கொள்கையை ஒப்புமை ஆக்கிக்கொண்டு திரிகிறது)அனைவரும் ஒன்றாக இருந்து பிரிந்து போனவர்கள். வெட்கமாக இல்லையா உங்களுக்கு இந்த ஹதீஸை உங்களுக்கு உதாரணம்காட்டுவதற்கு?


பக்ரியின் இன்றைய நிலை என்ன?

(போலி) தவ்ஹீத் ஜமாத்தின் தலைவராக இருந்த ஒருவரின் இன்றைய நிலையைப் பாருங்கள்.

ஹாமித் பக்ரி அன்றும் இன்றும்

அன்று : PJ சொல் மாத்திரமே நேர்வழி

இன்று : குர்ஆனும், ஹதீஸும், இமாம்களின் கருத்து மட்டுமேநேர்வழி

அன்பின் சகோதரர்களே அனைவரும் புரிந்து கொள்வதற்காகவே ஒரு சில தகவல்களை நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இவரை போல உண்மையை உணர்ந்து பலர் வந்து விட்டார்கள். இன்னும் இருக்கின்ற மிச்ச சொச்சமும் வந்து விட எல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஹக் சுபுஹானஹு த'ஆலா அருள் புரிவானாக.ஆமீன்.

மதுரை நாபிஈ