முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Saturday, August 14, 2010

இன்றைய முக்கிய நிகழ்வு (ரமழான் 3)

நாயகம் ஸல்... அவர்களின் கடைசி புதல்வியாக இந்த உலகில் பிறந்த அன்னை பாத்திமா நாயகி ரழி... அவர்கள்
  • சுவனத்தின் தலைவி பாத்திமா என்றும்,
  • பாத்திமா என்னில் இருந்து ஒரு பகுதி என்றும்,
நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் பாராட்டப்பெற்றவர்கள்.

  • இவர்களின் தாயார் பெயர் உம்முள் மூமினீன் அன்னை கதீஜா நாயகி ரழி....
  • இவர்களின் கணவர் பெயர் அமீருல் மூமினீன் ஹழ்ரத் அலீ கர்ரமல்லாஹு வஜ்ஹஹு
  • இவர்களின் புதல்வர்கள் சுவனத்தின் இளைஞர்களின் தலைவர்கள் என்று நபிகள் ஸல்... அவர்களால் பாராட்டபெற்ற ஹழ்ரத் இமாம் ஹசன் ரழி... மற்றும் ஹழ்ரத் இமாம் ஹுசைன் ரழி....
  • இவர்களின் புதல்விகள் அன்னை ஜைனப் ரழி... அன்னை உம்மு குல்சூம் ரழி...
இவர்களின் சிறப்பை பற்றி எழுத காலங்கள் போதாது, மிகவும் சின்ன விஷயமாக சொல்ல வேண்டுமானால் ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி.... அவர்கள் சொன்னதை நினைவில் கொள்ளுங்கள். ஹழ்ரத் இமாம் ஷாபிஈ ரழி... அவர்கள் கூறினார்கள், நபியின் குடும்பத்தவர்களே உங்களை பற்றி ஒன்று சொன்னால் போதும் உலகில் உள்ள அனைவரும் உங்கள் அந்தஸ்தை உணர்ந்து கொள்வார்கள், அது என்ன தெரியுமா? தொழுகையில் உங்கள் மீது யாரு சலவாத் சொல்ல வில்லையோ அவர்களின் தொழுகை பரிபூரணம் அடையாது.

மேலும் அன்னை பாத்திமா நாயகியின் வாரிசுகள் கியாமத் நாள் வரை வரக்கூடியவர்கள் அனைவருக்கும் கழிவுப்பொருளான ஜகாத் மற்றும் சதகா ஹராம் ஆகும்.

அப்படிப்பட்ட சிறப்பிற்குரிய நமது உயிரினும் மேலான நபிகள் நாகம் ஸல்.... அவர்களின் கண்மணியாம் அன்னை பாத்திமா நாயகி ரழி.... அவர்களின் உரூஸ் நினைவு தினம் இன்று (ரமழான் 3) ஆகும் . அவர்களை நினைவு கூர்ந்து, அவர்களின் பொருட்டால் துஆ கேட்டு ஈருலகத்திலும் நபிகளார் ஸல்... அவர்களின் குடும்பத்தோடு சுவனத்தில் இருக்க அல்லாஹ் கிருபை செய்வானாக.

ஆமீன், யா ரப்பல் ஆலமீன்,

மதுரை நாபிஈ

0 comments: