பிஜே ஜமாலி அவர்களிடம் பயின்ற பாடங்களில் ஒன்று, இமாம் நஸாயீ அவர்களின் பெயரைச் சரியாகச் சொல்லக் கற்றுக் கொண்டது. பிஜே தனது பற்பத்தாண்டு கால வாழ்க்கையில், "நஸாயீ" என்ற இமாம் அவர்களது பெயரினை "நஸயீ" என்றே தொடர்ந்து எழுதி வந்தார்.
இதனை ஷேக் அப்துல்லாஹ் ஜமாலி அவர்கள் கிண்டலடித்து, கித்தாபுப் பெயர்கூடத் தெரியாதவர்தான் இந்தப் பிஜே என்று பல மேடைகளில் கூறிய யூடியூப் வீடியோக்கள் உள்ளன. அவைகளில் ஒன்று ஜமாலி அவர்களின் இந்த பயான். (கேட்பதற்கு கிளிக் செய்யவும்).
ஜமாலி அவர்களின் முயற்சி பலனளிக்கிறது. தற்போது பிஜே திருத்திக்கொள்ள ஆரம்பித்துள்ளார் என்று தெரிகிறது. பிஜே-யின் இணையதளத்திலிருந்து ஒரு ஸ்க்ரீன்-ஷாட்டினைக் கீழே காட்டியுள்ளேன். அதில் "நஸாயீ" என எழுதியுள்ளதினை வட்டமிட்டுள்ளேன்.
ஹதீஸ் புத்தகத்தின் பெயரைப் பீஜே இப்போது தெரிந்துக் கொள்ள ஆரம்பித்துவிட்டார். சில வாரங்களுக்கு முன்பு "ஆறு மாதம் கால ஆய்வுக்கு செல்கிறேன்; எனவே யாரும் என்னைத் தொந்தரவு செய்யாதீர்கள்" என்று அறிவிப்பு செய்தது உண்மைதானோ ?!! இனிமேல் ஹதீஸ்களையும் விளங்கிக்கொள்வார் என நம்பலாமா ?
பிஜே ஜமாலியிடம் பயின்ற பாடங்களில் இன்னொன்று, களியக்காவிளை விவாதத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஜியாரத் செய்ய அனுமதி உண்டு என்று ஒத்துக்கொண்ட பாடம். அவ்வாறு ஒத்துக்கொண்டுத் தன்னைத் திருத்திக்கொண்டதாக பிஜே கூறும் வீடியோ இந்தத் தளத்தில் காட்டப்பட்டுள்ளது. பார்க்க விரும்புவோர் இங்கே கிளிக் செய்க.
0 comments:
Post a Comment