முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, August 3, 2010

விவாதத்திலும் தோற்று, மறுமையிலும் தோற்க இருக்கின்ற PJ மற்றும் போலி தவ்ஹீத் ஜமாஅத்



விவாதத்தில் தோற்று விட்டு
வெட்கமில்லாமல் மறுபடியும் வெற்றிக் கோஷமா?



17-07-2010, 18-07-2010
மற்றும் 24-07-2010, 25-07-2010 ஆகிய தேதிகளில் சென்னையில் விவாதம் நடந்தது, இதில் தோல்வி கண்ட (போலி) தவ்ஹீத் ஜமாத்தினர் களியக்கவிலையில் தோற்று போன பிறகு போட்ட வெற்றி கூப்பாட்டை போல இதிலும் போட்டு உள்ளார்கள். உண்மையில் யார் வெற்றிபெற்றது?

முதல் விஷயம் களியக்காவிளையில் ஜெயித்தது யார்?

சந்தேகம் இல்லாமல் சுன்னத் ஜமாஅத் தான் வெற்றி பெற்றது. காரணம் 25 ஆண்டுகளாக பெண்கள் பொது கப்ருக்கு சென்று ஜியாரத் செய்ய கூடாது என்று சொல்லி வந்தவர்கள், களியக்கா விலையில் 2006 ஜூன் மாதம் 3, 4 தேதிகளில் நடந்த விவாதங்களில் தர்கா ஜியாரத் என்ற தலைப்பில், பெண்கள் ஜியாரத் செய்த ஹதீஸை காட்டிய பிறகு 8 மாதம் கடந்த பின் 2007 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி மதுரையில் நடந்த ஜகாத் விவாதத்தில் பெண்கள் ஜியாரத் செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளார். இது ஒன்றே களியக்கா விலையில் நாம் பெற்ற வெற்றிக்கு மிகப்பெரிய ஆதாரம் ஆகும். நாம் அங்கு இருந்த நிலைப்பாட்டில் தான் இன்றளவும் இருக்கின்றோம், என்றைக்கும் இருப்போம், காரணம் உண்மை தவ்ஹீதில் இருக்கிறோம். மனோ இச்சைக்கு நம்மிடம் வேலைஇல்லை.


அதற்கு சொல்லும் காரணம் ஏற்றுக்கொள்ளத்தக்கது அல்ல. நாங்கள் மறு ஆய்வு செய்து மாற்றி இருக்கின்றோம். காரணம் நாங்கள் நிராயுதபாணியாக (போலி) தவ்ஹீத் பிரசாரம் ஆரம்பித்தோம். அப்போது எந்த நூலும் எங்களிடம் இல்லை என்ற பொய்யையும் பதிவு செய்கின்றார். எங்களிடம் இருக்கும் நூலில் தான் சட்டங்களை ஆய்வு செய்து சொன்னோம் என்றும் கூறுகிறார். அப்படிஎன்றால் 10-02-2007 ற்கு முன்னாள் அவர்களிடம் புகாரி, முஸ்லிம், போன்ற ஹதீஸ் கிரந்தங்கள் இல்லையா? நீங்கள் வெளியில் எடுத்து வைத்த ஹதீஸ் எல்லாம் புகாரி இல் இருந்து தானே எடுத்து வைத்தீர்கள் (அதுக்கு அர்த்தம் தவறாக வைத்தீர்கள் என்பது வேறு விஷயம்), ஏனைய சட்டங்கள் சொல்லும் பொது இருந்த புகாரி நூல் ஜியாரத் சம்பந்தமாக சொல்லும் போது எப்பிடி காணாமல் போனது. தன்னுடையமனோ இச்சைக்காக மார்கத்தை எப்பிடி வளைக்கிறார்கள் பாருங்கள்.

எங்களுக்கு சரி என்று தெரிந்த பொது சரி என்று சொல்லுகிறோம், எங்களுக்கு தவறு என்று பட்ட பொது தவறு என்று சொல்லுகிறோம் என்றும் கூறுகிறார். இவர் ஒரு ஆய்வு செய்து சட்டம் சொல்லும் இமாமை போல(அந்த தகுதி இவருக்கு அறவே இல்லை என்பது வேறு விஷயம்) சொல்லி தன்னுடைய ஜால்ராக்களை எல்லாம் தன்னுடைய முகல்லிதுகளாக மாற்றி உள்ளார். தன்னுடைய மனோ இச்சையை இறைவனாக்கிய (அல் குர்'ஆன்) இந்த வழி கேட்டின் தலைவர். அவரின் அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை கீழே உள்ள வீடியோ வில் பார்க்கலாம்.



இவர்களை பின்பற்றினால் நரகத்தின் கொள்ளிக்கட்டைகளாக ஆகி விடுவீர்கள், காரணம் ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு விதமாக சட்டம் சொல்லுபவர்கள் இவர்கள். இவர்களுக்கு குர்'ஆனின் ஞானமோ, ஹதீஸின் ஞானமோ கொஞ்சமும் இல்லை என்பது தான் இவர்களின் முன்னுக்கு பின் முரணான விஷயங்களில் இருந்து தெரிகிறது.

அந்த காலத்து இமாம்கள் ஹதீஸின் தேடுதலில் இருந்தார்கள். அப்போது சொன்னால் இந்த காரணம் ஏற்றுக்கொள்ளலாம். எல்லா ஹதீஸ்களும் நூல் வடிவில் வந்த பின்னால். அவர்களிடமே இருக்கும் அந்த நூலில் இருக்கும் அந்த சட்டத்தை மனோ இச்சையின் பிரகாரம் பாக்காமல் என்னிடம் அந்த நூல் இல்லை என்பது முழு பூசணிக்காயை சோற்றுக்குள் அமுக்கியது போல் ஆகாதா. கேப்பையில் நெய் வடியிது என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளுபவர்கள் இருக்கும் வரை இப்படித்தான் சொல்லுவார்கள்.


(போலி) தவ்ஹீத் ஜமாஅத் தான் ஜெய்த்தது என்று இருந்தால்

 • அங்கு பேசிய விஷயத்திற்கு அங்கு பதில் சொல்ல முடியாமல் (அவர்கள் மக்களே அவர்களை என்னங்க இப்படி தோற்று போய் விட்டீர்களே என்று கேள்வி கேட்ட பிறகு) வெளியில் வந்து விதண்டா விவாதமும், உண்மை(?!?!?!?) விளக்கமும் என்ற தலைப்பில் விதண்டா விவாதத்தை மக்கள் மத்தியில் எடுத்து வைத்து இருக்க மாட்டார்கள்.

 • சென்னையில் நடந்த விவாதத்திற்கு அழைக்கும் போது மீண்டும் களியக்கவிலையில் நடந்த அதே தலைப்பில் விவாதம் நடத்துமாறு கோரிக்கை வைத்து இருக்க மாட்டார்கள் (சென்னை விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் போது களியக்காவிளையில் நடந்த அந்த நான்கு தலைப்பில் விவாதம் வேண்டும் என்று அவர்களின் லெட்டர் பேட் இல் எழுதி தந்தார்கள்).

சென்னையில் நடந்த விவாதத்தில் ஜெயித்தது யார்?

இந்த சென்னையில் நடந்த இரு விவாதத்திலும் சுன்னத் ஜமாஅத் தான் சந்தேகத்திற்கு இடமில்லாமல் வென்றுள்ளது.

காரணம்,

 • அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா விற்கு உருவம் உண்டு என்ற நிலைப்பாட்டில் விவாதித்த PJ பல இடங்களில் அல்லாஹ்வின் உறுப்பு என்று அர்த்தம் வைக்காமல் பண்பின் அர்த்தம் (அதாவது முகத்திற்கு உள்ளமை, கையிற்கு வல்லமை, கண்ணிற்கு கண்காணிப்பு, காலிற்கு கடினம், அடக்கி ஆள்தல்) வைத்து தோற்றோம் என்பதை ஒத்துக்கொண்டார்.

ஷிர்க் வாதி, பித்'அத் வாதி யார் என்ற தலைப்பின் போது,

 • நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள் (நாங்கள் வர மாட்டோம் என்று தான் சொல்லிக்கொண்டு இருந்தோம்) என்பதில் இருந்தும்,

 • வெளியில் ஷிர்க் செய்கிறார்கள் என்று கூறியவர்கள் ஒரு ஆதாரம் கூட சென்னையில் எடுத்து வைக்கைப்பட்ட விவாதத்தில் காட்ட முடியாததில் இருந்தும்,

 • சென்னை விவாதத்தில் வாதிக்க முடியவில்லை என்ற நிலையில் களியக்காவிளை ஒப்பந்தம் எடுத்து அதற்கு பதில் கூறுங்கள் என்று சொல்லியதில் இருந்தும்,

 • சரித்திரத்தில் இல்லாத விவாதம் என்று கூறி, நீங்கள் ஷிர்க் செய்கின்றீர்கள் என்பதற்கு நீங்களே ஆதாரம் தாருங்கள் என்று கேட்டதில் இருந்தும்,

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலும் (நாங்கள் செய்றது தப்பு என்று தெரிந்ததால்),

 • முசாபஹா விஷயத்தில் கேட்ட கேள்விக்கு ஹதீஸில் இருந்து பதில் தராமல் கெளசுல் அ லம் சொல்லி இருக்கிறார்கள், இமாம் நவவி கூறி இருக்கின்றார்கள் என்பதை காட்டியதின் மூலம் ஹதீஸில் இல்லை என்பதை ஒப்பு கொண்டதில் இருந்தும் (ஒப்பந்தம் ஹதீஸில் இருந்து தான் காட்ட வேண்டும்)

 • சஹாபா பெருமக்களை முர்தத் (இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள்) என்றும், நரகவாதிகள் என்றும், பித்'அத் வாதிகள் என்றும் நா கூசாமல், நபிகள் நாயகம் ஸல்.... முர்தத் (ஏனைய மதம் மாறி போனவர்கள் ) பற்றி கூறிய ஹதீஸை சஹாபா பெருமக்கள் மீது இட்டுக்கட்டி சாட்டியதில் இருந்தும், அதை பற்றி கேக்கும் போது அதை பற்றி பதில் பேசாமல் இருந்ததில் இருந்தும்,

 • நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... யார் இந்த மார்கத்தை நமக்கு வழங்கினார்களோ அவர்களே மாற்றி மாற்றி பேசினார்கள் (நவூதுபில்லாஹ்) என்று விவாதத்தில் பதிவு செய்ததில் இருந்தும்,(அல்லாஹ் இந்த வழி கேடர்களை விட்டு நம்மையும், நம்முடைய வருங்கால சந்ததியும் காத்து அருள் புரிவானாக)

 • பாங்கின் சத்தம் மனிதர்கள் கேட்டு அல்லாஹ்விடம் சாட்சி சொல்வார்கள் என்ற ஹதீஸிற்கு கோவிலும் தான் கேக்கிறது அதுவும் சாட்சி சொல்லுமா என்று கேலி பேசி (கேட்டு தனக்கு எப்போதும் உருவம், கோவில், சிலை, காபிர் என்பது தான் நினைவிற்கு வரும், இஸ்லாத்திற்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று) கூறியதில் இருந்தும்,

 • முஸ்லிம்கள் காபிர்களின் கோவிலுக்குள் செல்லலாம், அவர்களுக்கு சலாம் சொல்லலாம், பூஜை அறைக்கு செல்லலாம், சிலைகளை காணலாம் என்று வெளியில் கூறியதை எடுத்து காட்டி அதை பற்றி கேக்கப்பட்ட போது வாய் மூடி மௌனியாக இருந்ததில் இருந்தும்,

 • முஸ்லிம்களை காபிர் என்று சொன்னால் (தற்கொலை செய்து கொண்ட முஸ்லிம் காபிர் என்று கூறி ஜனாஸா தொழுகை இல்லை) நீங்கள் காபிர் ஆகி விடுவீர்களே என்று ஹதீஸில் இருந்து சுட்டி காட்டி கேட்கப்பட்ட கேள்விக்கு வாய் பொத்தி கொண்டு இருந்ததில் இருந்தும்,

 • நம்முடைய நிலைப்பாட்டையும், நாம் சொல்லாத விஷயத்தையும், உங்கள் நிலைப்பாடு இது தான் என்றும், இப்படி தான் நீங்கள் கூறுகிறீர்கள் என்றும் நம்மின் மீது நம்முடைய நிலைப்பாட்டை திரித்து திணித்ததில் இருந்தும்,

 • சென்னையின் முதல் விவாதத்தில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்ட நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் மீதுள்ள சலாமை கேடு கெட்ட மௌலித் (நவூதுபில்லாஹ்) என்று ஒரு கேடுகெட்ட இணையத்தில் பதிவு செய்து, அதை பாதியில் அவர்கள் சுட்டி காட்டும் போது நிறுத்தப்பட்டது (உண்மையில் முழுமையாக ஓதி முடிக்கப்பட்டது) என்று கூறிய பொய்யில் இருந்தும்,
 • நபிகள் நாயகம் ஸல்.... அவர்களுக்கு மறைமுக ஞானம் இல்லை (இது விவாதத்திற்கு சம்பந்தம் இல்லாத விசயம்) என்று கூறி, பிறகு ஆதாரம் தந்த போது மறுப்பு பேச முடியாததில் இருந்தும்,

 • ஷிர்க், பித்'அத் என்ற இரு தலைப்பில் பித்'அத் பற்றி பிறகு பேசுவேன், என்று கூறி (பாம்பு, கீறி விளையாட்டு போல) கடைசி வரை பித்'அத் பற்றி வாயே திறக்காமல் இருந்ததில் இருந்தும்,

 • உன்னதமான சஹாபா பெருமக்கள் ரலியல்லாஹு அன்ஹும் அவர்களின் விஷயத்தில் நபிகளார் கண்மணி ஸல்... அவர்கள் சொல்லாத விஷயத்தை சொன்னதாக இட்டுக்கட்டியதன் மூலமும்,

 • யார் என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டி கூறி உள்ளாரோ அவர் தனது தங்குமிடம் நரகமாக்கி கொள்ளட்டும் என்ற ஹதீஸின் அடிப்படையிலும் (இந்த ஹதீசும் ஓதி காண்பிக்கப்பட்டது) இவர்கள் தோற்று போனார்கள் என்பதும், இவர்கள் காபிர்கள் என்பதும், இவர்கள் நரக வாதிகள் என்பதும் நன்றாக விளக்கி காட்டிய எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

ஆனாலும் சில ஜால்ராக்கள் உண்மையை உணராமல் இன்னும் அவரை பின்பற்றுவதால், தான் ஜெயித்து விட்டோம் என்று (வெளியில்) கூறிக்கொண்டு இருந்தாலும் (உள்ளுக்குள்) அவர் வனவாசம் சென்று தன்னுடைய ஜால்ராக்களின் கேள்விகளில் இருந்து தப்பிக்கவும், எப்பிடி சமாளிக்க வேண்டும் என்பதை யோசிக்கவும் சென்று உள்ளதின் மூலமும் தான் தோற்று விட்டோம் என்று அவருக்கு புரிய வைத்த எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கே புகழ் அனைத்தும்.

இவரை நம்பி (போலி) தவ்ஹீதில் சென்று மறுமை வாழ்வை கேள்வி குறி ஆக்கி விடாதீர்கள்,

மதுரை நாபிஈ.

2 comments:

Ibrahim said...

Dear Brother,

Please Publish the acceptance video of PJ ( Pengal kabarasthaan ziyarath seyyalaam)

This Is Truth said...

உங்களின் கோரிக்கை ஏற்கப்பட்டு அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.