முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Thursday, October 28, 2010

யார் வாடி போனாலும் ஏர்வாடி வாருங்கள்.

சுல்தான் சையத் இப்ராஹீம் ஷஹீத் ரழி... வரலாற்றுச்சுருக்கம்:



ஹழ்ரத் சுல்தான் சையத் இப்ராஹீம் ஷஹீத் ரழி... அவர்கள் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் 18 ஆம் தலை முறையில் சுல்தானே கர்பலா ஹழ்ரத் சய்யிதினா இமாம் ஹுசைன் ரழி... அவர்களின் வழித்தோன்றலாக பிறந்தார்கள். இவர்களின் தந்தையார் ஹழ்ரத் சையத் அஹமத் ரழி... தாயார் ஹழ்ரத் பாத்திமா ரழி... ஆவர். இவர்களின் தந்தையார் மதினத்து சிற்றரசராக இருந்தவர்கள் ஆவார்கள்.

இளவரசராக இருந்த ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்கள், சிறு வயது முதலே தக்வாவில் சிறந்து விழங்கினார்கள். நிர்வாக பொறுப்பில் இருப்பினும் அல்லாஹ்வின் மற்றும் அவனது தூதர் பெருமானார் ஸல்... அவர்களின் சொற்படி நடப்பதில் அவர்களுக்கு நிகராக அவர்களே இருந்தார்கள். ஹழ்ரத் ஜைனப் ரழி... என்னும் அம்மையாரை மண முடித்த ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களுக்கு ஹழ்ரத் அபூதாஹிர் ரழி..., ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ரழி... ஆகிய இரண்டு கண்மணிகள் பிறந்தன. ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களுக்கு ஹழ்ரத் சையத் இஸ்மாயீல் ரழி..., ஹழ்ரத் சைய்யிதா ராபி' ரழி... என்ற இரண்டு உடன் பிறப்புக்கள் இருந்தார்கள்.

தந்தையாரின் மறைவிற்கு பின், ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்கள் ஆட்சியில் அமர்ந்தார்கள். நீதி, நேர்மை, நியாயம் ஆகியவற்றில் தலை சிறந்து விழங்கினார்கள். நபிகளார் ஸல்... அவர்களின் வழி நின்று ஆட்சியை நிறுவினார்கள். துருக்கி பேரரசின் கீழ் ஆட்சி செய்தாலும், பாதுஷா மஹமூத் அவர்கள் ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களிடமே துருக்கியின் மிகப்பெரும் படையை பொறுப்பாக்கி இருந்தார்கள். இஸ்லாத்திற்கு பரிந்துரைக்காக போர் செய்வதற்காக ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களையே நியமித்து இருந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் உத்தரவின் பேரில் குஜராத்தில் இஸ்லாமிய பிரசாரம் செய்ய முனைந்த ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களின் கூட்டத்தினரை குஜராத்தின் அரசன் நாரத்சிங் தாக்க ஆரம்பித்தான். அதன் காரணமாக ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களுக்கு போர் செய்யும் சூழ்நிலை ஏற்பட்டது. அதில் இஸ்லாமிய படை வென்றது. சிறிது காலம் அங்கு இருந்து இஸ்லாமிய பிரச்சாரம் செய்த ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களின் பிரசார பலனாக நாரத் சிங்கின் சகோதரர் இப்ரத் சிங் மற்றும் அவரை பின்பற்றிய அநேகம் பேர் இஸ்லாத்திற்கு மனமுவந்து வந்தார்கள். ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்கள் குஜராத்தில் இஸ்லாமிய ஆட்சியை நிறுவி, அங்குள்ள புதிதாக வந்த மக்களுக்கு இஸ்லாத்தை போதித்த பின் இப்ரத் சிங் தன்னுடைய பிரதிநியாக நியமித்து விட்டு, கச் பகுதிக்கு சென்றார்கள்.

கச் பகுதியின் அரசன் கரோடா சிங் இஸ்லாமிய மக்களுக்கு துன்புறுத்தி கொண்டு இருந்தான் என்றும், மதம் மாற பிரயாசித்தம் எடுத்துக்கொண்டின்ருந்தான் என்றும் ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்று கச் உடைய பகுதியையும் இஸ்லாமிய பகுதி ஆக்கினார்கள். பின்பு சிந்த் பகுதிக்கு பயணப்பட்டார்கள் ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்கள். சிந்தின் அரசன் ஆப்தாப் சிங். மிகப்பெரும் படையை தன்னகத்தே கொண்டிருந்தான். இஸ்லாமிய பிரசாரம் செய்த ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்களின் கூட்டத்தினரை தாக்க ஆரம்பித்தான். அவனை எதிர் கொண்ட ஹழ்ரத் ஷஹீத் ரழி... வெற்றியை சூடி அங்குள்ள மக்களுக்கு இஸ்லாத்தை போதித்த பின் தங்களுடைய பிரதிநிதியாக காபுல் பகுதியை சேர்ந்த ஜுல்பிகார் அலி கான் ரழி... அவர்களை நியமித்து விட்டு மதீனா ஷரீப் திரும்பினார்கள்.

ஹழ்ரத் ஷஹீத் ரழி... இந்த மார்க்கப் பிரச்சார விஷயங்களை கேள்விப்பட்ட ஏனைய அரசர்களும், பொது ஜனங்களும் சந்தோஷித்தார்கள். சிறிது காலம் மதினாவில் நிர்வாகம் மற்றும் மார்கப்பணிகளில் ஈடுபட்டார்கள். பிறகு எம்பெருமானார் ஸல்... அவர்களின் உத்தரவின் பேரில் இந்தியாவின் பாண்டிய நாட்டின் பக்கம் பிரயாணம் செய்தார்கள். கடல் மார்க்கமாக பிரயாணம் செய்ய ஜித்தாவின் அரசராக இருந்த ஹழ்ரத் இஸ்கந்தர் பாதுஷா ரழி... அவர்கள் கப்பல்களை தயார் செய்தார்கள். ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் உதவிக்காக ஏனைய பகுதியின் சிற்றரசர்களும் தங்களின் படைகளோடு இறை பாதையில் போர் புரியும் நோக்கோடு சேர்ந்து கொண்டார்கள். இதனால் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்கள் பேரரசாராக திகழ்ந்தார்கள்.

மஹமூத் பாதுஷாவின் படை,
ஜித்தாவின் அரசர் ஹழ்ரத் இஸ்கந்தர் பாதுஷா ரழி... அவர்களின் படை
மக்காவின் அரசர் ஹழ்ரத் ஷம்சுத்தீன் ரழி... அவர்களின் படை
ஹழ்ரத் இம்ரான் ரழி... அவர்களின் படை,
ஆர்மீனியாவின் படை,
ஹல்வானின் படை,
ஆசர்பைஜானின் படை,
மேலும் சுற்றில் உள்ள அனைத்து படைகளும் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படையோடு இணைந்தது. அப்படையில் பத்து லட்சம் குதிரப்படி மட்டும் இருந்தது என்றால் அந்த படையின் பிரமாண்டத்தை நினைத்து பார்ப்பது சாத்தியமா?

முதலில் பயணப்பட்ட கப்பல் கண்ணனூர் துறைமுகத்திலும், கடைசி கப்பல் ஜித்தா துறைமுகத்திலும் இருந்தன. அவ்வளவு ஒரு பிரமாண்டப்படையை தயார் செய்து இருந்தார்கள் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்கள். கண்ணனூர் உடைய அரசர் அலி ரசா என்பவர். ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் வருகை, நோக்கத்தை புரிந்த அலி ரசா ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து கொடுத்தார்கள். கண்ணனூர் இல் இருந்து காயல்பட்டினம் பக்கம் வரும் போது பாண்டிய மன்னனின் படை பாண்டிய மன்னனின் சகோதரர்கள் கோப்பாண்டியன், திருப்பாண்டியனின் தலைமையில் தாக்க ஆரம்பித்தது. இதை ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படை எதிர்கொண்ட போது பயந்து பின் வாங்கினர். அங்கிருந்து திருப்பாண்டியன் பயந்து திருப்பதி சென்று விட்டான். காயல்பட்டணத்தில் பல ஷஹீத் மார்களின் கப்ர் இருக்கின்றது.

அங்கிருந்து வைப்பார் வந்த ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படை அங்கும் பாண்டிய படையின் தாக்குதலில் ஆளாகியது. அங்கும் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படை அவர்களை எதிர்கொண்ட பிறகு பாண்டியப்படை பயந்து பின்வாங்கியது. அங்கு நடந்த போரில் ஹழ்ரத் ஷம்சுத்தீன் ரழி... அவர்கள் உள்ளிட்ட பல பேர் ஷஹீதானார்கள். ஹழ்ரத் ஷம்சுத்தீன் ரழி... அவர்களின் தர்கா ஷரீப் வைப்பாரில் இன்றளவும் இருக்கின்றது.

அங்கு ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்கள் படையை ஒவ்வொரு அந்ததந்த தலைமையின் கீழ் பிரித்தார்கள். திருப்பாண்டி திருப்பதிக்கு சென்று விட்ட காரணமாக காலியாக இருந்த மதுரையை ஹழ்ரத் இஸ்கந்தர் பாதுஷா ரழி... அவர்களின் தலைமையில் ஜித்தாவின் படையை அனுப்பி கைப்பற்றினார்கள். பிறகு பௌத்திர மாணிக்கப்பட்டினம் (ஏர்வாடி) வந்தடைந்தார்கள். அங்கும் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படையை தாக்கினார்கள் பாண்டிய படையினர்.

பத்து முறை போர் நடந்தது. பலர் ஷஹீதானார்கள். முதல் நாள் போரில் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் மந்திரி ஹழ்ரத் அப்துல் காதிர் ரழி... ஷஹீதானார்கள். இரண்டாம் போரில் மக்கத்து மன்னர் ஹழ்ரத் ஷம்சுத்தீன் ரழி... அவர்களும், மூன்றாம் போரில் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் படைத்தளபதி ஹழ்ரத் அமீர் அப்பாஸ் ரழி... அவர்களும், நான்காம் போரில் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் மந்திரி ஹழ்ரத் முஹியித்தீன் ரழி... அவர்களும், ஏழாம் போரில் ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ரழி... அவர்களும், எட்டாம் போரில் ஹழ்ரத் இம்ரான் ரழி... அவர்களும், ஒன்பதாம் போரில் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் மூத்த புதல்வர் ஹழ்ரத் அபூதாஹீர் ரழி... அவர்களும் படைத்தளபதிகளில் ஷஹீதானார்கள். பத்தாம் போரில் பாண்டிய மன்னன் விக்கிரமப்பாண்டியன் கொல்லப்பட்டான்.

ஆட்சி ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களின் கைக்கு வந்தது... அதற்கு பிறகு பனிரெண்டு ஆண்டுகள் அங்கிருந்த மக்களுக்கு இஸ்லாத்தை போதித்தார்கள் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்கள். இந்நேரத்தில் திருப்பதிக்கு சென்றிருந்த திருப்பாண்டி மேலும் படையை திரட்டி கொண்டு மதுரையை முற்றுகை இட்டான். அந்த போரில் இஸ்லாமிய படை வெற்றி பெற்றது. திருப்பாண்டியனின் வருகை பற்றிய இந்த தகவலை ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களிடம் தெரிவிக்க ஒன்பது நபர்களை அனுப்பினார்கள் ஹழ்ரத் இஸ்கந்தர் பாதுஷா ரழி... அவர்கள். இந்த படையயை பின்பற்றி தாக்க ஆரம்பித்தனர் பாண்டியர்கள். அதில் எட்டு பேர் ஷஹீதானார்கள். மதுரை கார்சேரியில் ஹழ்ரத் சையத் இப்ராஹீம் ரழி... பள்ளிச்சந்தையில் ஹழ்ரத் சாலார் ஷா ரழி... மானா மதுரையில் ஐந்து பேர். பரமக்குடி கிழவநேரியில் ஹழ்ரத் உமர் கத்தாப் ரழி... ஆகியோர் ஷஹீத் ஆனார்கள். மிஞ்சிய ஒருவர் ஹழ்ரத் ஷஹீத் ரழி...அவர்களிடம் வந்து தகவல் அளித்தார்கள்.

ஆட்சி முஸ்லிம்களின் கைக்கு வந்ததும், அனைத்து படைகளையும் அவர்களின் சொந்த நாட்டிற்கு அனுப்பி வைத்து விட்டு, சிறு படையையே தன்னோடு வைத்து இருந்தார்கள். தங்களுடைய இளைய குமாரரை (ஹழ்ரத் ஜைனுல் ஆபிதீன் ரழி...) மதினாவின் அரசராக நியமித்தார்கள். அவர்கள் சிறுவயதிலேயே வபாத் ஆனார்கள். சிறு படையை வைத்து இருந்தாலும் ஹழ்ரத் ஷஹீத் ரழி... அவர்கள் தோல்வியை சந்திக்கவில்லை.


தோற்றுப்போன திருப்பாண்டியன் சூழ்ச்சியின் மூலம் தொழுது கொண்டிருந்த ஹழ்ரத் இஸ்கந்தர் பாதுஷா ரழி... அவர்களை ஷஹீதாக்கினான். பிறகு ஏர்வாடி யை நோக்கி பயணப்பட்டான். அங்கு நடந்த போரில் தோற்று அங்கு ஒளிந்து நின்று கொண்டு, ஹழ்ரத் ஷஹீத் ரழி... போர் முடிந்து அவர்களின் இருப்பிடத்திற்கு திரும்பும் போது அவர்களின் மீது வேல் பாய்ச்சி ஷஹீதாக்கினான்.

அப்போதிருந்து யார் வாடி , ஏர்வாடி போனாலும் துஆ செய்து தீர்த்து கொண்டுள்ளார்கள். அவர்கள் இறை பாதையில் போரிட்டுள்ளதால் உயிருடன் இருக்கின்றார்கள் (2:154) என்று அல்லாஹ்வின் குர்'ஆன் பறை சாற்றுகின்றது. நாமும் வலிமார்களிடம் உதவி தேடி வெற்றி பெறுவோமாக.

ஆமீன், ஆமீன்! யாரப்பல் ஆலமீன்.

மேலும் முழு விபரங்களுக்கு http://www.ervadi.com. என்ற தளத்தை பார்வை இடவும்.



அபூத்தைய்யார்.



2 comments:

பாவா ஷரீப் said...

அன்பு சகோ அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் இந்த பணி குழப்பம் மிகுந்த இந்த கால கட்டத்தில்
மிகுந்த சிறப்பிற்குரியது

பாதுஷா நாயகத்தின் இந்த பதிவும்
மற்ற பதிவுகளும் மிக அருமை

தங்களுக்காக
எல்லாம் வல்ல அல்லாவிடமும்
இறைநேச செல்வர்களின் இடத்திலும்
துஆ செய்கிறேன்

நன்றி

James said...

Ervadi dargah"Ervadi dargah 360 view, Ervadi dargah , Ramanathapuram Ervadi dargah , dargah , Ramanathapuram , Ervadi dargah Ramanathapuram , 360 view, 360 Virtual Tours, 360 degree temple view,tamilnadu temples 360 degree view,360 degree virtual tour in tamil voice,360 degree view murugan temples,360 degree view vinayagar temples,tamilnadu temple,temple, Virtual Tours,ஏர்வாடி தர்கா
ராமநாதபுரம்" />