முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, September 14, 2010

கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமா சுபுஹான மௌலித்


மௌலித் என்றால் என்ன:மவ்லித் என்ற சொல்லுக்கு அரபு மொழியில் பிறப்பு என்று பொருளாகும். இஸ்லாமியர்களின் வழக்கில் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புகளை கவிநடையில் புகழ்வதற்கு மவ்லித் என்று கூறப்படும்.
ஹஸ்ஸான் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களுக்கு பள்ளிவாசல் ஒரு மிம்பரை அமைத்துக் கொடுத்தார்கள்.அதிலே அவர் ஏறி நின்று இறைதூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே புகழ்வார்கள்.

அறிவிப்பாளர் :ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா

நூல் :திர்மிதி எண் :2773

இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முஹாஜிர் மற்றும் அன்ஸார் தோழர்களுக்கு பிராத்தனை செய்து கவி படித்தார்கள் :


اللهم ان العيش عيش الآخرة فاغفر للانصار والمهاجرة
اللهم انه لاخير الا خير الآخرة فبارك فى الانصار والمهاجرة
اللهم لا عيش الا عيشالآخرة فاكرم الانصار والمهاجرة
اللهم ان الاجر اجر الآخرة فارحم الانصار والمهاجرة


திண்ணமாக,வாழ்வு என்பது மறுமையின் வாழ்வுதான். இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களை மன்னிப்பாயாக! நிச்சியமாக மறுமை நலனைத்தவிர வேறு எந்த நலனும் கிடையாது. இறைவனே! அன்ஸார் – முஹாஜிர் தோழர்களுக்கு பரகத் (அபிவிருத்தி) செய்வாயாக! உறுதியாக மறுமை வாழ்வைத்தவிர வேறு எந்த வாழ்வுமில்லை. இறைவனே! அன்ஸார்- முஹாஜிர் தோழர்களுக்கு கருணை புரிவாயாக!

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு

நூல் : புகாரீ: 2622,2623,2741,3616

இப்படி ஏராளமான விஷயங்களை மௌலித் ஓதலாம் என்பதற்கு கூறிக்கொண்டே போகலாம். ஆனாலும் இங்கு சில விஷயங்களை மட்டுமே எடுத்து காட்டி உள்ளோம். அதற்கு காரணங்கள் பின்னால் வரும்.

இந்த உலகத்தில் பூமியில் குழப்பம் பண்ணும் ஆசாமிகள் சுபுஹான மவ்லித் என்பது கேரளாவிலும், தமிழகத்திலும் மட்டுமே இருக்கின்றது. ஒரு வழிபாடாக இருந்தால் உலகம் முழுதும் இருக்குமே! ஆனால் இல்லையே என்று கூறுகின்றார்கள், அதை களியக்காவிளையிலும் கூறினார்கள். என்ன செய்வது? அல்லாஹ் இவர்களை பற்றி குர்'ஆனில்

ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم

அதாவது, அல்லாஹ் அவர்களின் இதயத்திலும், அவர்களின் செவிகளிலும், அவர்களின் பார்வைகளிலும் முத்திரை இட்டுவிட்டான் என்று கூறுகிறான்.

அதனால் இவர்களின் பார்வைக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் பாருங்கள், இந்த பரிசுத்தமான என்ற பொருளை உள்ளடக்கிய மௌலிதான சுபுஹான மௌலித் உலகத்தில் பல இடங்களில் ஓதப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. அந்த புகழ்களின் மூலம் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சார்ந்தவர்களுக்கு சுவனமும், வஹ்ஹாபிகளுக்கு நரகமும் எழுதப்பட்டு கொண்டு இருக்கின்றது. ஓதப்படும் ஊர்கள் அனைத்தையும் இங்கே காட்ட முடியாத ஒரு நிலை. காரணம் பார்வையாளர்களின் நேரம் கருதி.

இங்கு இந்த பூமியில் குழப்பம் பண்ணும் ஆசாமிகள் எந்த ஒரு காரணமும் சொல்ல முடியாத, அதாவது இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான் கற்று கொடுத்தார்கள், அல்லது இந்தியாவில் இருந்து சென்றவர்கள் தான் ஓதினார்கள் (என்று களியக்காவிளையில் சப்பை கட்டு கட்டியதை போல கட்டவும் முடியாமல்) என்று சொல்லவே முடியாத ஒரு நாடான இந்தோனேசியாவில் ஓதிய சுபுஹான மௌலித், மற்றும் புர்தா ஷரீப் உடைய பகுதியை பாருங்கள்.
நாம் ஓதும் சலாம் பைத் யிலிருந்து ஒரு பகுதி


நாம் ஓதும் யா நபி சலாம் அலைக்கும் பைத் யிலிருந்து ஒரு பகுதிநாம் ஓதும் புர்தா ஷரீப் யிலிருந்து ஒரு பகுதிஇப்படி ஏராளமான பகுதியில் ஒதப்பட்டதும் இருக்கின்றது. இதில் எந்த சப்பைகட்டும் கட்ட முடியாது. இது பக்கா இந்தோனேசியாவை சேர்ந்தவர்களாலே ஓதப்பட்டது. மேலும் النبي صلو عليك பைத் பாகிஸ்தான், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்தும் வீடியோ க்கள் உள்ளன. நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் புனித மக்க மாநகரை விட்டு மதீன மாநகருக்கு வரும் போது ஓதப்பட்ட

طلع البدر علينا من ثنيات الوداع
وجب الشكر علينا مادعى لله داعيஅதாவது, தனியதுல் விதா' என்னும் இடத்தில் இருந்து பௌர்ணமி நிலவு எங்களிடையே உதயமானது,

எங்கள் து'ஆ வை ஏற்றுக் கொண்ட அந்த அல்லாஹ் வை நன்றி செலுத்துவது எங்கள் மீது வாஜிப் ஆகும்

என்ற தொடர் மௌலித் மதீனத்து சிறுவர்களால் ஓதப்பட்டு, அது நபிகள் நாயகம் ஸல்... அவர்களால் புன்முறுவல் பூத்தபடி ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்த மௌலித் இன்றைய சவுதி வஹ்ஹாபி அரசாங்கத்தாலேயே சிறுவர்களை வைத்து ஓதப்பட்டு CD யாக வெளியிடப்பட்டு வருகிறது. உலகத்தில் சவுதி உட்பட எல்லா நாட்டிலும் ஏதாவது ஒரு மௌலித் இருந்து கொண்டு தான்இருக்கிறது.

இப்படி நாம் சொன்னால் ம்ஹும்... அவர்கள் செய்தாலும் தப்பு தப்பு தான் என்று இப்படி திரும்பி விடுவார்கள் இந்த வஹ்ஹாபிய புரோகிதர்கள். காரணம் குதிரை முன்னால் போனால் கடிக்கும், பின்னால் வந்தால் உதைக்கும், அப்படித்தான் இவர்களும். மவ்லித் ஓதுவதை நிறுத்தவேண்டும் முடிவெடுத்துவிட்டு, அதற்கேற்றாற்போல் அறிவிற்கும் மார்க்கத்திற்கும் சம்பந்தம் இல்லாமல் பேசிக்கொண்டு இருப்பார்கள்.

நாம் ஏன் மவ்லித் ஓதுகிறோம்:

எத்தனையோ சஹாபாக்கள் மவ்லித் ஓதி இருந்தாலும், மேலே கூறப்பட்ட ஹதீஸ்களும் சரி, கீழே வர இருக்கும் சஹாபா பெருமக்கள் படித்த மவ்லிதும் சரி வஹ்ஹாபிகளும் திருந்த வேண்டும் என்ற நோக்கில் தான் காட்டப்பட்டுள்ளது. அதனால் தான் ஹழ்ரத் ஆயிஷா சித்தீகா ரழி... அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ், மற்றும் கவிதை, சித்தீகுல் அக்பர் ஹழ்ரத் அபூபக்கர் சித்தீக் ரழி... மற்றும் ஹழ்ரத் ஹஸ்ஸான் பின் ஸாபித் ரழி.... சம்பந்தப்பட்ட ஹதீஸ், மற்றும் கவிதை மட்டுமே குறிப்பிட்டு காட்டப்பட்டுள்ளது.

காரணம் அல்லாஹ் குர்'ஆனில்

النَّبِيُّ أَوْلَىٰ بِالْمُؤْمِنِينَ مِنْ أَنفُسِهِمْ وَأَزْوَاجُهُ أُمَّهَاتُهُمْ

நபிகள் ஸல்.... அவர்கள் மூமின்களுக்கு அவர்களின் உயிரைவிட மேலானவர்கள், அவர்களின் மனைவிமார்கள் அவர்களுக்கு தாய் மார்கள் என்று கூறுகிறான், அதனால் ஹழ்ரத் ஆயிஷா சித்திக்கா ரழி.... பற்றியதும், நாயக கண்மணி நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள்

عليكم بسنتي وسنة الخلفاء الراشدين

என்னுடைய மற்றும் நேர்வழி பெற்ற கலீபாக்களின் சுன்னத்தை பின்பற்றுங்கள் என்று கூறி உள்ளார்கள், அதனால் சித்தீகுல் அக்பர் ரழி... பற்றியதும், நபிகளார் ஸல்... அவர்கள் யா அல்லாஹ் روح القدس ஐ கொண்டு உதவி கொடு என்று யாருக்காக துஆ செய்தார்களோ அப்படி பட்ட ஹழ்ரத் ஹஸ்ஸான் ரழி... பற்றியது மட்டும்கொடுக்கின்றோம்.

ஹழ்ரத் ஆயிஷா ரழி... அவர்கள் படித்தார்கள், உலகத்திலும் சூரியன் இருக்கின்றது, எங்களிடமும் சூரியன் (நபிகள் நாயகம்) இருக்கின்றது. வானின் சூரியனை விட எனது சூரியன் சிறப்பானதாகும்.

شمس الناس تطلع بعد فجر وشمسي تطلع بعد العشاء

மனிதர்களின் சூரியன் காலையில் தான் உதயமாகும், எனது சூரியன் இஷா விற்கு பிறகும் உதயமாகித்தான் இருக்கின்றது. ஹழ்ரத் சித்தீகுல் அக்பர் ரழி... அவர்கள் படித்தார்கள்,


رأيت الهلال و وجه الحبيبي فصار هلالين عند النظر
فهذا يغيب وهذا حضر وليس المغيب كمن قد حضر

அதாவது, நான் சந்திரனையும் பார்கின்றேன், எனது ஹபீபின் முகத்தையும் பார்க்கின்றேன். இரு சந்திரன்களும் எனது பார்வையில் இருக்கின்றன. இந்த (வானின்) சந்திரன் மறைந்து விட்டது, இந்த (நபிகள் ஸல்...) சந்திரன் மறையவில்லை, இந்த சூரியன் மறையவே மறையாது.

ஹஸ்ஸான் ரழி... அவர்கள் படித்தார்கள்,

خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء
واحسن منك لم تر قط عيني واجمل منك لم تلد النساء

(யா ரசூலுல்லாஹ்....) தாங்கள் எப்பிடி விரும்பினீர்களோ அப்படி, எல்லா குறைகளை விட்டும் நீக்கப்பட்டு படைக்கப்பட்டுள்ளீர்கள். தங்களை போல ஒரு அழகை என் கண் பார்த்ததில்லை, உங்களை போன்ற ஒரு அழகானவரை எந்த தாயும் பெற்றெடுக்கவில்லை.

நபிகாளார் காட்டித்தந்த, சஹாபா பெருமக்கள் ஸல்.... அவர்களுக்கு முன்னாலே பின்பற்றி காட்டிய இப்படிப்பட்ட மௌலிதை நாம் ஓதி வந்தால் சிலருக்கு கீழிருந்து மேல் வரை பற்றிக்கொண்டு எரியும். நபிகளார் ஸல்... அவர்களை புகழ்ந்தால்தான் ஈமானே இருக்கும் என்பது அவர்களுக்கு தெரியாது.


மேலும் அபூ ஜஹ்ல் போன்றவர்களின் வழியை தேர்ந்தெடுத்ததால் (அல்லாஹ்வை மட்டும் நம்பிக்கை கொண்டு, நபிகளார் ஸல்... அவர்கள் மேல் பொறாமை கொண்டு அவர்களை ஏற்றுக்கொள்ளாமல் இருப்பது) இவர்களுக்கு பற்றி எறியும். அதனால் தான் இவர்கள் (பிஸ்மில்லாஹ், குர்'ஆன் வசனங்கள், ஹிகாயத்தில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ் உள்ளடங்கிய) மௌலித் ஷரீபை வார்த்தை தவறினாலும், வாய்க்கு வாய் குப்பை, மவ்லித் குப்பை (நவூதுபில்லாஹ்) என்று கூறுவார்கள்.இவர்களை பற்றி நாம் கண்டுக்கொள்ள தேவை இல்லை. தமிழகத்தில் அதிகாலை நேரங்களில் தெருக்களில் குப்பை, குப்பை என்று வருவார்கள்( இவர்கள் அந்த வேலையை பார்த்திருப்பார்கள் போலும்). அதனால் குப்பை, குப்பை என்று கூவிக்கொண்டு திரிகின்றார்கள். காலையில் வருபவர்கள் நமது வீட்டையும் நாட்டையும் சுத்தப்படுத்து கிறார்கள், இந்த குப்பைகள் மார்கத்தில் குப்பைகளை வீசுகிறார்கள். எப்பிடி நாம் தேவை இல்லாதவைகளை குப்பையாக்கி வீசுகின்றோமோ அப்படி இந்த (வஹ்ஹாபி) குப்பைகளை நாம் தூர ஏறிய வேண்டும், இந்த (வஹ்ஹாபி) கழிசடைகளை நாம் வெறுத்து ஒதுக்கினால் தான் நமது ஈமான் சுத்தப்படும். மேலும் நம்மிடையில் இருக்கும் கெட்ட குணங்கள் போன்ற குப்பைகளை, இந்த (வஹ்ஹாபி) குப்பைகளிடம் வீசி விட வேண்டும். அப்போது தான் நமது வீடு சுத்தம் ஆகுவதை போல் நமது ஈமான் சுத்தம் ஆகுவோம்.


நாமும் நமது வருங்கால சந்ததியும் அல்லாஹ்வை மற்றும் அவனது தூதரை நேசித்து, சஹாபா பெருமக்கள் நபிகளார் ஸல்... அவர்களை புக
ழ்ந்ததை போல புகழ்ந்து ஈருலகிலும் வெற்றி பெற அல்லாஹ் ஜல்.... அருள் புரிவானாக!

ஆமீன்!!

ஆமீன்!

யாரப்பல் ஆலமீன்!


அபூத் தைய்யார்0 comments: