முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, September 14, 2010

அபூலஹபின் விரலில் தண்ணீர் புகட்டப்படுகிறது.

சமிபத்தில் சகோதரர் PJ அவர்களின் உறுப்பினர்கள் அபூலஹபின் விரலை நரகம் தீண்டாதா? என்று ஒரு தலைப்பை நமக்கு அனுப்பி இருந்தார்கள், இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் பதித்த ஒரு ஹதிஸை கட்டுகதை என்று நிராகரிக்கிறார்கள்.

இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் தொகுத்த ஹதிஸ்:

அறிவிப்பாளர் உர்வா(ரஹ்) கூறினார்:
ஸுவைபா, அபூ லஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூ லஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி(ஸல்) அவர்களுக்குப் பாலு}ட்டினார். அபூ லஹப் இறந்தபோது அவரின் குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார். அபூ லஹபிடம், '(மரணத்திற்குப் பிறகு) நி எதிர்கொண்டது என்ன?' என்று அவர் கேட்டார். உங்களைவிட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்களினூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார்.

மறுப்பவர்கள் எழுப்பும் கேள்விகள்:

1.கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.

2.அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

3.இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

4.கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

5.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

முதல் கேள்வி:1.கனவு என்பது மார்க்கமாகாது. கனவில் காட்டப்படுவது போல் நடக்கும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை.

பதில்:


நல்ல (உண்மையான) கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். கெட்ட (பொய்யான) கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ கத்தாதா அல்அன்சாரி(ரலி) அறிவித்தார்கள்.

உங்களில் ஒருவர் தமக்கு விருப்பமான கனவொன்றைக் கண்டால், அது அல்லாஹ்விடமிருந்தே வந்தது (என்று தெரிந்து), அதற்காக அவர் அல்லாஹ்வைப் போற்றட்டும் . அதை (தமக்கு விருப்பமானவர்களிடம் மட்டும்) தெரிவிக்கட்டும். அதற்கு மாறாகத் தமக்கு விருப்பமில்லாத கனவு கண்டால், அது ஷைத்தானிடமிருந்தே வந்தது (என அறிந்து), அதன் தீங்கிலிருந்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரட்டும். அதைப் பற்றி யாரிடமும் கூற வேண்டாம். ஏனெனில், அப்போது அக்கனவு அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்திட முடியாது என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்கள்.


மேலும் கனவின் விளக்கத்தை இமாம் புகாரி(ரஹ்) அவர்களின் ''கனவுக்கு விளக்கமளித்தல்'' என்ற பாடத்தில் உற்று அறிந்தால் மறுப்பவர்கள் அதை தெளிவாக புரிந்து கொள்வார்கள்

இரண்டாம் கேள்வி:2.அபூலஹபின் குடும்பத்தினரில் முஸ்லிம்களும் இருந்தனர் முஸ்லிம் அல்லாதவரும் இருந்தனர். கனவில் கண்டவர் யார் என்பது தெரியவில்லை. கனவு கண்டவர் யார் என்பது கூறப்படவில்லை.

பதில்:
ஹதிஸை முழுமையாக ஆராயாமல் இருப்பதே இதற்கு காரணம்,

கனவு கண்டது யார்?

அப்பாஸ்(ரலி) அவர்கள் அபூலஹபைக் கனவில் கண்டார்கள், அவர்கள் அவனிடம் கேட்டார்கள்: உனது நிலை எப்படி என. அவன் கூறிலானான், உங்களைப் பிரிந்தபின் ஒரு நலமும் கண்டிருக்கவில்லை.(எனது மண்ணரையிலேயே), இருப்பினும் என் இவ்விரண்டு விரல்கிடையில் பானம் புகட்டப்படுகிறேன், துவைபாவை உரிமைவிட்ட காரணத்தால்.."மேலும் எனக்கு வேதனையை ஒவ்வொரு திங்களும் இலேசக்கப்படுகிறது. மஃபாஹீம்.. பக்கம் 226)

நபி(ஸல்) அவர்களின் குடும்பத்தில் உள்ள சிறிய தந்தையான அப்பாஸ்(ரலி) அவர்களின் கனவாகும்.கனவு கண்டது நபி(ஸல்) அவர்கலின் குடும்பத்தில் உள்ளவராவர்கள்.

மேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.

மூன்றாவது மற்றும் நான்காவது கேள்வி:
3.இதைக் கூறுபவர் உர்வா என்பவர். இவர் அந்தக் காலகட்டத்தில் பிறக்காதவர்; நபித்தோழர் அல்லர்.

4.கனவு என்பது காண்பவருக்கு மட்டுமே தெரிந்ததாகும். அவர் சொல்லாமல் யாரும் அறிய முடியாது. அவ்வாறிருக்க உர்வாவுக்கு இது எப்படி தெரிந்தது.

பதில்:

உர்வா(ரஹ்) அவர்கள் நபித்தோழர் என்று மறுப்பவர்கள் கூறினாலும், உர்வா(ரஹ்) அவர்கள் சஹபாக்கள் காலத்தில் வாழ்ந்த மிக நம்பிக்கையான தாபின்களில் இடம் பெறுபவர்கள், பல ஹதிஸ்களை மிகப் பெரிய சஹபாக்களை(அன்னை ஆயிசா(ரழி...), இப்னு உமர்(ரழி...), இப்னு அப்பாஸ்(ரழி...) இன்னும் பல சஹாபாக்கள் இன்னும் பல சஹாபாக்கள் (ரழி...)) நேரடியாக சந்தித்து ஹதிஸ்களை கற்றவர்கள், இந்த மாபெரும் உண்மையை மறைத்து தமது வாதத்தை நிலைநிறுத்த முற்படுகின்றார்கள், தனது அறிவுக்கு ஒத்து வரவில்லை என்பதற்காக ஒரு ஸஹிஹ்வான ஹதிஸ்களை பலகினமாக்க முற்படுகின்றார்கள், சூனியம் சம்பந்தப்பட்ட ஹதிஸ்களை போல்... அல்லாவுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள்.

உர்வா(ரஹ்) அவர்கள் மட்டும் இதை கூறுவது இல்லை, இப்னு ஸஃது(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு முஹம்மதிப்னி வஹ்ஹாப்(ரஹ்), இப்னுல் ஜவ்ஸி(ரஹ்)) ஆகியோரும் கூறுகின்றார்கள். ஹதிஸ்களை முழுவது ஆராய்மல் அறை குறைவாக படித்து உளருவது தான் இது போன்ற ஹதிஸ் கலை ஞானம் இல்லாமல் இருப்பது இது போன்ற நிலைமைக்கு ஹதிஸை நிரகரிக்க காரணமாகும்.

அபூலஹப் மரணித்த பின் அவரை கனவில் காணப்பட்டது. அவரிடத்தில் உங்களின் நிலை என்ன என்று கேட்கப்பட்டது. நான் நரகத்தில் இருக்கின்றேன், நபி(ஸல்) அவர்கள் பிறந்த செய்தியை எனக்கு துவைபா அம்மையார் அவர்கள் நற்செய்தி கூறியதாலும் நபி(ஸல்) அவர்களுக்கு அப்பெண்மணி பாலூட்டியதாலும் அப்பெண்ணை நான் உரிமையிட்டிருந்தேன். அதனால் ஒவ்வொரு திங்கட் கிழமையும் என் விரல்களுக்கு மத்தியிலிருந்து விரல் நுனியளவு கொட்டும் நீரை நான் உறிஞ்சி குடிக்கின்றேன் என்றார். காஃபிரான, இறைவனால் சபிக்கப்பட்ட ஒருவர் நபி(ஸல்) அவர்கள் பிறந்ததை பற்றி சந்தோஷம் அடைந்ததால் அவருக்கு இந்த சலுகை கொடுக்கப்பட்டதென்றால், உண்மையான ஒரு முஸ்லிம், நபி(ஸல்) அவர்கள் மீது மீலாது விழா கொண்டாடுவதால் அவருக்கு சுவர்க்கம் கிடைப்பது நிச்சயம் (இப்னு ஸஃது(ரஹ்), அப்துல்லாஹ் இப்னு முஹம்மதிப்னி வஹ்ஹாப்(ரஹ்),இப்னுல் ஜவ்ஸி(ரஹ்))

மேலும் அல்லாமா இப்னுல் ஜவ்ஸி(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். '' குர்ஆன்(அபூலஹபுடைய இரண்டு கைகளும் நாசமாட்டும் மேலும் அவனும் நாசமாகட்டும் (குர்ஆன் 111:2)) யாரைப் பழித்து ஒரு வசனத்தில் கூறுகிறதோ அவனுக்கு மவ்லித்துன்னபி ஸல்லல்லாஹு கொண்டாடியதால் (முன்னர் கண்டபடி) கூலி கொடுக்கப்பட்டானென்றால், ஏகத்துவத்தை நிலைநாட்டி வரும் ரஸுலில்லாஹி(ஸல்) அவர்களின் உம்மத்திலுள்ள முஸ்லிம், மீலாது ''நபி(ஸல்)'' அவர்கள் பிறந்த தினத்தில் மகிழ்ச்சியை வெளியிடுவதினால் அவரின் நிலை எவ்வாறு இருக்கும், உண்மையில் அதைவிட பல்லாயிரம் மடங்கு நற்கூலி அளிக்கப்படுவர் என்பது திண்ணம். (முத்தஸருஸ்ஸீரத், பக்கம் 113).

இப்னு ஜவ்ஸி(ரஹ்), அவர்களின் ஹதிஸ்கலை கூற்றை ஏற்கமாட்டோம் எனக் கூறினால், தனது இணைய தளத்தில் இப்னு ஜவ்ஸி(ரஹ்), வழியாக பதித்துள்ள அனைத்து ஹதிஸ்களையும் வாபஸ் பெற வேண்டும். அப்படி வாபஸ் பெறுகிறவன் தான் சோற்றில் உப்பு போட்டு சாப்பிடுகிறான் என்று அர்த்தம். அப்படி இல்லை என்றால் ரோசம் இல்லை என்று தான் அர்த்தம். இவர்கள் வேணுகிற போது இப்னு ஜவ்ஸி(ரஹ்), கூற்றை எடுத்து கொள்வார்கள், வேணாம் என்கிற போது எடுத்து கொள்ள மாட்டோம் என்று கூறுபவர்கள் நிச்சியமாக குழப்பத்தை பூமியில் உண்டாக்குகிறார்கள் என்பது சந்தேகமில்லை.

ஐந்தாவது கேள்வி:
5.எல்லாவற்றுக்கும் மேலாக இந்தக் கனவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அறிவிக்கப்பட்டு அவர்களின் அங்கீகாரம் பெறவில்லை.

பதில்:
நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்கள்.


இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'என உபாதா இப்னு அஸ்ஸாமித்(ரலி) அறிவித்தார்கள்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நற்செய்தி கூறுகின்றவை ('முபஷ்ஷிராத்') தவிர, நபித்துவத்தில் வேறெதுவும் எஞ்சியிருக்கவில்லை' என்று கூற கேட்டேன். அப்போது மக்கள் 'நற்செய்தி கூறுகின்றவை (முபஷ்ஷிராத்) என்றால் என்ன?' என்று வினவினர். நபி(ஸல்) அவர்கள் 'நல்ல (உண்மையான) கனவு' என்று விடையளித்தார்கள். அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்கள்.


மேல் உள்ள ஹதிஸ் இமாம் புகாரி(ரஹ்) அவர்கள் தனது கித்தாபில் பதிவு செய்துள்ளார்கள். இதன் மூலம் கனவு கண்டது ஸாலிஹான இப்னு அப்பாஸ்(ரலி) ஆவார்கள், நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு நல்ல மனிதர் கனவு கண்டால் நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும். எனவே அப்பாஸ்(ரலி) அவர்கள் கண்ட கனவு உண்மையானதும், அல்லாஹ்விடம் இருந்தும் வந்ததாகும்.


நன்றி:
முஹம்மத் அப்பாஸ்

0 comments: