ரமழானின் 27 ம் இரவு தான் உலகமெங்கும் லைலத்துல் கத்ராக கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் வெளிப்படையாக இமாம்களின் கருத்தே காரணம் என்று வஹ்ஹாபிய புரோகிதர்களால் கூறப்படுகிறது. உண்மையில் குர்'ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாக கொண்டு தான் இமாம்கள் கருத்தாக கூறுவார்கள். அதை தான் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்த நாம் பின்பற்றி வருகிறோம். ஹதீஸில்வருகிறது,
நாயகம் ஸல்... கூறுவதாக ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் அஹமத் என்னும் கிரந்தத்தில் உள்ளது.
நாயகம் ஸல்... அவர்கள் , யார் அந்த (கத்ர்) இரவை நாடுவாரோ அவர் 27 ம் இரவில் அவ்வாறு (அமல்கள்) செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.
நூல்: அஹமத்
மேலும் ஹழ்ரத் உபைய் இப்னு கஅப் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள்,
அவனை தவிர வேறு இறைவன் இல்லையே அப்படிப்பட்ட அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) ரமழானில் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) எந்த இரவு என்று எனக்கு தெரியும். அந்த 27 ம் இரவில் தான் நாயகம் ஸல்... தொழுக கட்டளையிட்டார்கள். அவ்விரவு சூரியனின் சுடர் வருவதற்கு முன் வரை உள்ளது.
நூல் : முஸ்லிம், அபூ தாவூத், அஹமத், திர்மிதி.
இதை தான் இமாம்கள் ஆய்வு செய்து 27 ல் தான் கத்ர் இரவு வருகிறது என்று கூறுகின்றார்கள்.
இமாமுல் அ'ளம் அவர்கள் சூரா கத்ரை ஆய்வு செய்து, அந்த சூரா 30 வார்த்தைகளால் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் வரும் هي (அந்த இரவாகிறது) என்பது 27 வது வார்த்தையாக வருகிறது அதனால் லைலத்துல் கத்ர் 27 ம் இரவு என்றும், அந்த சூராவில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை 3 முறை வருகிறது, அந்த வார்த்தையில் 9 எழுத்துக்கள் உள்ளன, 3 * 9 = 27 ஆக வர வாய்ப்பு உள்ளது என்று குர்'ஆனில் ஆய்வு செய்து சொல்லி உள்ளார்கள்.
லைலத்துல் கத்ரில் அதிகமாக ஓத வேண்டிய துஆ:
அல்லாஹும்ம இன்னக அஃபூவன் துஹிப்புல் அஃபுவ ப'ஃபு அன்னீ (திர்மிதீ).
اللهم انك عفوا تحب عفو فاعف عني
அனைவருக்கும் லைலத்துல் கத்ர் வாழ்த்துக்கள்.
அபூத் தைய்யார்
மேலும் குதுப் மார்களின் பேரரசர் ஹழ்ரத் ஷாதுலி நாயகம் ரழி... அவர்கள் தங்களுடைய முரீத் மற்றும் ஷாதுலியா தரீகாவின் முதல் கலீபாவான ஹழ்ரத் அபுல் அப்பாஸ் முர்சி ரழி... அவர்களோடு பிரயாணத்தில் இருந்தார்கள். 27 ம் இரவில் முழுதும் நின்று வணங்கினார்கள். இரண்டாம் நாள் பயணத்தை தொடர்ந்தார்கள், மேலும் கூறினார்கள், முர்சியே அறிந்து கொள்ளும், கடந்த இரவு தான் லைலத்துல் கத்ர் ஆகும். More Details: http://www.shazuli.com/lailathul-qadhr/
மேலும் ஒரு முறை வலீமார்களின் தலைவரான ஷாதுலி இமாம் ரழி... அவர்களிடம், லைலத்துல் கத்ர் என்றைக்கு என்று கேட்ட போது, அல்லாஹ்வை பயந்தவறுக்கு ஒவ்வொரு நாளும் லைலத்துல் கத்ர் தான் (அதாவது எல்லா நாளும் நின்று வணங்கி கொள்வார்கள்) என்று கூறினார்கள்.
ஆகா எப்படியோ, நபிகளார் கண்மணி ஸல்.`.. அவர்கள் கூறிய 1000 மாதத்தை விட சிறப்பான இரவு இன்று வர இருக்கிறது. உரிய முறையில் பயன் படுத்திக்கொள்வோமாக! ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!மேலும் ஒரு முறை வலீமார்களின் தலைவரான ஷாதுலி இமாம் ரழி... அவர்களிடம், லைலத்துல் கத்ர் என்றைக்கு என்று கேட்ட போது, அல்லாஹ்வை பயந்தவறுக்கு ஒவ்வொரு நாளும் லைலத்துல் கத்ர் தான் (அதாவது எல்லா நாளும் நின்று வணங்கி கொள்வார்கள்) என்று கூறினார்கள்.
லைலத்துல் கத்ரில் அதிகமாக ஓத வேண்டிய துஆ:
அல்லாஹும்ம இன்னக அஃபூவன் துஹிப்புல் அஃபுவ ப'ஃபு அன்னீ (திர்மிதீ).
اللهم انك عفوا تحب عفو فاعف عني
அனைவருக்கும் லைலத்துல் கத்ர் வாழ்த்துக்கள்.
அபூத் தைய்யார்
0 comments:
Post a Comment