முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Friday, September 10, 2010

பெருநாளன்று கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள்.செப்டம்பர் 9 ம் தேதி தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் பிறை பார்க்கப்பட்டது. பிறை பார்த்த ஆலிம், ஹாபிழை மதுரை மாவட்ட அரசு தலைமை காழியார் மௌலானா மௌலவி A. சையத் கா(ஹ)ஜா முஈனுத்தீன் B.A., அவர்கள் தொலைபேசியில் நேரிடையாக தொடர்பு கொண்டு உறுதி படுத்தப்பட்டு, இத்தகவலை தமிழக அரசு தலைமை காழியார் மௌலானா மௌலவி Dr. சலாஹுத்தீன் முஹம்மத் அய்யூப் அவர்களுக்கு Fax மூலம் தகவல் அளிக்கப்பட்டு, பெருநாள் உறுதிப்படுத்தப்பட்டது.

பெருநாள் அன்று சில ஒழுக்கங்களை பேண வேண்டும், இது நபிகள் நாயகம் ஸல்... அவர்களின் வாழ்க்கையில் முன்மாதிரியாக இருப்பதால் நாம் பின்பற்றுவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

  • காலை உணவு உண்டு விட்டு தான் பெருநாள் ற்காக வெளியேற வேண்டும்,

ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் ஃபித்ர் பெருநாள் அன்று உண்ணாமல் (அவர்களின் வீட்டை விட்டு) வெளியேறமாட்டார்கள். (திர்மிதீ)

  • சதகத்துல் ஃபித்ர் (என்னும் ஏழை வரியை) பெருநாளைக்கு செல்லுமுன் கொடுத்து விட வேண்டும்.

நாயகம் ஸல்... அவர்கள் ஜகாத்துல் ஃபித்ரை (சதகத்துல் ஃபித்ர்) ஈத் தொழுகைக்கு செல்லு முன் வழங்க கட்டளையிட்டுள்ளார்கள். (புகாரி)

  • யாருக்கு சதகத்துல் பித்ர் கொடுக்க வேண்டும்?

நாயகம் ஸல்... அவர்கள் சதகத்துல் ஃபித்ரை சிறுவர்கள், முதியோர்கள், ஆண்கள், பெண்கள், அடிமைகள், சுதந்திரமானவர்கள் ஆகிய அனைவர் மீதும் கடமையாக்கி உள்ளார்கள் என்று ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

நமது நோன்பில் ஏற்பட்ட குறைபாடுகளால் (எதார்த்தமாகவும் நிகழ்ந்து விட்ட, தீய பேச்சுக்கள், தீய பார்வைகள் இன்ன பிற தீய செயல்களால்) நமது நோன்பு வானத்திற்கும் பூமிக்கும் மத்தியில் தொங்கிக்கொண்டு இருக்கும், சதகத்துல் ஃபித்ர் வழங்கினால் தான் அல்லாஹ்வை சென்றடையும் என்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் பெருமானார் ஸல்... அவர்கள், நமது நோன்பை தூய்மை படுத்துவதற்காகவும், ஏழை எளிய மக்களின் உணவிற்காகவும்சதகத்துல் ஃபித்ரை கடமையாக்கி உள்ளார்கள்.


  • பெருநாள் தொழுகைக்கு செல்லு முன் பேரீத்தம் பழம் சாப்பிட வேண்டும் (நோன்பை விட்டு இருக்கின்றோம் என்பதற்காக, இல்லாவிட்டால் நோன்பை போலவே சூழ்நிலை இருக்கும், பசிக்காது, தண்ணீர் தேவை படாது, ஈத் அன்று நோன்பு வைப்பது ஹராம், அந்த நோன்பின் வழக்கத்தை அன்று விட்டு விடுவதற்காக) மேலும் பேரீத்தம் பழம் ஒற்றைப்படை எண்ணிக்கையில் இருக்க வேண்டும்.

ஹழ்ரத் அனஸ் பின் மாலிக் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள், சில பேரீத்தம் பழம் உண்ணாமல் பெருநாள் தொழுகைக்கு செல்ல மாட்டார்கள். ஹழ்ரத் அனஸ் ரழி... அவர்கள் மேலும் கூறினார்கள் நாயகம் ஸல்.... அவர்கள் ஒற்றைப்படையில் பேரீத்தம் பழம் உண்ணுவார்கள். (புகாரி)

  • பெருநாள் தொழுக இருப்பவர்கள், ஈத் அன்று பெருநாள் தொழுகைக்கு முன்னோ, பின்னோ (நபிலான தொழுகைகளை) தொழுக கூடாது.

ஈத் பெருநாள் அன்று நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் இரண்டு ரக்'அத் தொழுதார்கள். அதற்கு முன்னும் பின்னும் எந்த தொழுகையையும் தொழுக வில்லை என ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரழி.... அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி)

  • மேலும் பெருநாளிருக்கு ஒரு வழியில் சென்று மற்றொரு வழியில் திரும்புவது சுன்னத்.

ஹழ்ரத் அபூ ஹுரைரா ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நபிகள் நாயகம் ஸல்... அவர்கள், ஈத் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று, மற்றொரு வழியில் திரும்புவார்கள். (திர்மிதீ)

ஹழ்ரத் ஜாபிர் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள், நாயகம் ஸல்.... அவர்கள் மாற்று பாதையில் திரும்புவார்கள் (புகாரி)

நபிகளாரின் ஒரு சுன்னத்தை சிறு விஷயமாக இருந்தாலும், பின்பற்றுவது, மறுமையில் வெற்றி அளிக்கக்கூடும், அதனால் இதை செய்து மறுமையில் வெற்றி பெரும் கூட்டத்தில் நம்மையும், நம் குடும்பத்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள், நம் சந்ததியினர் அனைவரையும் ஆக்குவானாக! ஆமீன்! ஆமீன்! யாரப்பல்ஆலமீன்!

நபிகளார் ஸல்.... அவர்கள் காட்டி தந்த வழியில் பிறை பார்த்து நோன்பு நோற்று, பிறை பார்த்து பெருநாள் கொண்டாடும் அனைவருக்கும்

ஈதுல் ஃபித்ர் பெருநாள் நல் வாழ்த்துக்கள்

அபூத் தைய்யார்

0 comments: