தரீகா என்ற சொல்லிற்கு "வழி" அல்லது பாதை என்பது பொருள். இது என்ன பாதை அல்லது வழி என்று சிலர் கேட்கலாம். அல்லாஹ்வை அடைய வைக்கும் ஒரு பாதை அல்லது வழி என்ற பொருளால் தரீகா என்று பெயர் பெற்றது.
உலகில் பல தரீகாக்கள் உள்ளன. அதில் உலகளாவிய தரீகா ஷாதுலியா தரீகா தான். ஆங்கில எழுத்தாளர் ஹிட்டி என்பார் கூறும் போது, "The Largest Brother Hood in the World is Shadhuliya Brother Hood" அதாவது, உலகில் மிகப்பெரிய சகோதரத்துவம் என்பது ஷாதுலியா வின் கட்டமைப்பு என்று கூறியுள்ளார்.
ஒவ்வொரு தரீகா விற்கும் ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன. ஆனால் சேரும் இடம் அல்லாஹ் தான். ஷாதுலியா என்பது உலகத்தில் உள்ள பெரிய தரீகா வாகும். இந்த தரீகா வின் ஸ்தாபகர் ஹழ்ரத் ஷைக் இமாம் நூருத்தீன் அபுல்ஹசன் அலி அஷ் ஷாதுலி ஆகும். இமாம் அவர்களின் இயற் பெயர் அலி என்பதாகும். புனைபெயர் அபுல் ஹசன் என்பதாகும். இவர்கள் குதுபாக உச்ச கட்டத்தில் இருக்கும் போது, அல்லாஹ் இவர்களை நோக்கி," انت شاذ لي " நீர் எம்மிடம் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளீர் என்று கூறினான். அதுவே ஷாதுலி என்று மருவி நிலைத்துவிட்டது.
ஷாதுலியா தரீகா தரீகுஷ் ஷுக்ர் (நன்றிக்கான தரீகா) என்று அழைக்கப்படும். காரணம் ஏனைய தரீகாக்கள் பழைய ஆடைகள் அணியவும், மனக்கட்டுப்பாடு விதித்து மனம் விரும்பியதை தடுத்து கொள்ளவும் அறிவுறுத்துகின்றன. ஷாதுலியா தரீகா என்பது கீழ் கண்ட வசனத்தின் மூலம் தரீகாவை அமைத்துள்ளது.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ
விசுவாசிகளே, உங்களுக்கு ஆகுமாக்கியவைகளை உண்ணுங்கள், மேலும் நீங்கள் அவனை வணங்குவதின் மூலம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். என்ற வசனத்தின் அடிப்படையில் ஹலாலான எல்லாவற்றையும் உண்ணலாம் (தேவைக்கு ஏற்ப) ஆனால் நன்றி செலுத்த கூடிய அடியாராக மாற நன்றியோடு வணங்க வேண்டும்.
நாயகக்கண்மணி நபிகள் நாயகம் ஸல்... அவர்களும் இப்படி தான் வழி காட்டி யுள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தினமும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இரவில் வணங்குவார்கள் (வஹ்ஹாபிகள் அதிக்கப்படியான இபாதத் இல்லை என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள் நபி வழியை பின் பற்றாதவர்கள்). ஹழ்ரத் ஆயிஷா சித்தீகா ரழி... யா ரசூலுல்லாஹ் (நாம் யா ரசூலல்லாஹ் என்று அழைத்தால் ஷிர்க் என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள்) உங்களை தான் அல்லாஹ் முன் பின் பாவங்கள் மன்னித்து விட்டானே, எதற்கு கால் கடுக்கும் அளவிற்கு நின்று தொழுகையில் நிற்கின்றீர்கள் என கேட்கும் போது.
يا عائشة افلا ان اكون عبدا شكورا
ஆயிஷாவே (யா ஆயிஷா என்று நபிகளார் ஸல்... அவர்களும் அழைத்துள்ளார்கள்) நன்றியுள்ள ஒரு அடியானாக நான் மாற வேண்டாமா என்று கூறினார்கள். ஒரு நல்ல அடியானாக மாற வேண்டுமானால் கடமையான வணக்கங்களின் மூலம் நிச்சயமாக முடியாது. அதிகப்படியான அமல்கள் இருந்தால் தான் அது முடியும். இன்றைக்கு வயிற்று பிழைப்பை நடத்தும் இவ் வஹ்ஹாபிகள் அதிகப்படியான அமல்களை நாம் செய்தால் பித்'அத் என்று கூறுகின்றார்கள். இது நம்மை பார்த்து கூறவில்லை. நபிகளார் ஸல்... அவர்களை பார்த்து கூறுகின்றார்கள். காரணம் அல்லாஹ்வின் தூதர் நபிகள் ஸல்... அவர்கள் காட்டி தந்த வழிமுறை தான் அதிகப்படியான வணக்கம் என்பது.
இப்படி பட்ட வணக்கங்கள் செய்வதற்காக தான் தரீகாக்கள் உருவாக்கப்பட்டன. ஜிக்ர்கள் செய்வது, ஒளராத்கள் ஓதுவது, ஹிஸ்ப்கள் ஓதுவது. காலை மாலை விர்து எனப்படும் சலவாத்துக்கள், பாவ மன்னிப்புக்கள், கோருவது எல்லாம் நடக்கின்றது. மேலும் ஹிஸ்புல் பஹர் என்னும் ஹிஸ்ப் உலக முஸ்லிம்களுக்கு பொதுவாக ஷாதுலி இமாம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. மங்கோலியர்கள் பாக்தாத் மாநகரத்தை சின்னா பின்னப்படுத்திய போது ஷாதுலி நாயகம் கூறினார்கள். யாரேனும் ஒருவர் பக்தாத்தில் ஹிஸ்புல் பஹர் ஓதுபவர் இருந்து இருந்தால் பாக்தாத் பாதுகாப்பு பெற்று இருக்கும் என்றார்கள். (அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று நாம் வலிமார்களுக்கு மரியாதை செய்தாலே வணங்காதீர்கள், ஷிர்க் இது என்று சொல்லி கொண்டு திரியும் இந்த வஹ்ஹாபிகள் ஏன் நாம் அல்லாஹ்விற்கு செய்யும் அமல்களையும் பித்'அத் என்று கூறி, தடுத்து நிறுத்த பார்கின்றார்கள். அல்லாஹ்விற்கு வணக்கம் செய்தாலும் பித்'அத் என்றால் பின்னர் யாருக்கு தான் வணக்கம் செய்ய வேண்டும்? இவர்களின் சுய ரூபத்தை கண்டு கொள்ளுங்கள். இவர்கள் யூத, கிறிஸ்தவர்களின் கைகூலிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.)
மேலும் அதிக தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
ஷாதுலி இமாம் அவர்களின் உரூஸ் தினம் தமிழகத்தில் பல ஊர்களில் கொண்டாடப்படுகிறது. மதுரையில் வருகின்ற 20-09-2010 திங்கள் கிழமை இரவு விடிந்தால் செவ்வாய்கிழமை நடைபெற இருக்கின்றது. அதற்கான தகவலும் http://www.shazuli.com இல் பதியப்பட்டுள்ளது. மேலும் 25-09-2010 ஞாயிற்றுக்கிழமை விடிந்தால் திங்கள் கிழமை திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் என்னும் ஊரிலும் கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.
மதுரை நாபிஈ
0 comments:
Post a Comment