முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் ன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.

Tuesday, September 7, 2010

திருவாரூர் கலவரம் நடந்த உண்மை!திருவாரூர் கலவரம்: முஸ்லீம்கள் சுட்டுக்கொலை: போலீஸ் குவிப்பு-பதட்டம் நீடிப்புஎது மார்க்கம்? ரௌடியிசமா? வெட்டு குத்தா? இது தான் நபி வழியா?

(போலி)தவ்ஹீத் ஜமாஅத்தின் போக்கிரி தனத்தில் பலியானவர்களின் புகைப்படம்:


திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருவிடைச்சேரி கிராமத்தில் கடந்த ஒரு மாதங்களாக இஸ்லாமிய மக்கள் ரம்ஜான் சிறப்புத்தொழுகை அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலில் செய்துவருகின்றனர். சுன்னத் ஜமாஅத் பள்ளியில் (சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசலுக்கு தான் போக கூடாது என்று உங்களின் வழி கேட்ட கூட்டத்தின் தலைவர் ஃபத்(து)வா வழங்கி இருக்கின்றாரே, பின்னர் ஏன் இங்கு வருகின்றீர்கள்) சுன்னத் ஜமாஅத் முறையோடு தொழுக வேண்டும் என்று சொல்லி இருக்க, வேண்டும் என்றே பிரச்சனை பண்ணிய (போலி) தவ்ஹீத் ஜமாத்தினர், பின்னர் ஊர் கட்டுப்பாட்டை மீறி வேறு இடம் தேர்ந்தெடுத்தனர். (தராவீ ஹ் தொழுகை இல்லாதவர்களுக்கு ரமழானில் இரவில் தொழுக வேறு இடம் எதற்கு?)


இது அப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கிறது என்று கிராம ஜமாத்தார்கள், (போலி) தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகளிடம் கேட்டபோது மீண்டும் பிரச்னையை ஆரம்பித்தனர் (ஒரு முடியோடு தான் இருந்தார்கள் போல இருக்கு).


இந்த பிரச்சனை வாக்குவாதத்தில் ஆரம்பித்து, கை கலப்பில் தொடர்ந்தது. இது இரவு வரை நீடித்தது. இதில் (போலி) தவ்ஹீத் களின் கையாளாக, அடியாளாக, வந்த திருமங்களக்குடி யை சேர்ந்த ரவுடி ஹஜ் முஹம்மது என்ற கொலைகாரன் (இந்த ஆளுக்கு பேரில் தான் ஹஜ்ஜும், நபிகளாரின் பெயரும்) தனது கை துப்பாக்கியை வைத்து 12 முறை சுட்டிருக்கின்றான். அதில் சுன்னத் ஜமாஅத் தலைவர் முஹம்மத் இஸ்மாயில் என்பவரும் கமிட்டி உறுப்பினர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். (பள்ளிவாசல் எதற்கு? தொழுகவா? கொலை செய்யவா? நபிகளார் ஸல்... அவர்கள் காட்டிய வழி என்ன?)

5 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த ஐந்து பேரில் 3 பேர் சமாதானத்திற்கு சென்ற இந்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இது ஏதோ ஆத்திரத்தில் செய்த செயல் இல்லை.12 ரவுண்ட் சுட்டு கொலைகள் செய்யும் அளவிற்கு, அவர்களுக்கு என்ன கேடு நேர்ந்து விட்டது..??? இது சதி செய்யப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது..அல்லாஹ்வே மிக்க அறிந்தவன்.

அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்சனையை சுமுகமாக்க வரவில்லை. கொடூர ஆயுதங்களை கையில் ஏந்தி வருபவன், பிரச்சனையை பெரிதாக்கி, பிரிவினையை உண்டாக்கவே வந்துள்ளான். கொலை புரியும் பாதகர்களின் கூட்டத்தார் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். என் சமுதாய மக்களை பிளவு படுத்தி, அதில் குளிர்காய முயலும் அந்த (போலி) தவ்ஹீத் கயவர்கள் என்னும் மண்ணாங்கட்டிகள் அழிந்து போகட்டும். இப்படிப்பட்ட நிலையை உருவாக்கி,எம்மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிய ஈனர்களை மக்கள் இனம் கண்டு கொள்ளவேண்டும்....

இதற்கு எந்த விளக்கமும் தர முடியாது. எந்த காரணங்களும் தந்து முடியாது. (PJ) அண்ணணின் பிடியை நம்பி ஆற்றில் இறங்கிய தம்பிகளே.. உங்களை பற்றிப்பிடிக்க சொன்னது (PJ) அண்ணனின் கயிற்றை அல்ல. அல்லாஹ்வின் கயிற்றை. அதுவே சரியானது. இப்படிப்பட்ட (PJ) அண்ணன்களின் கயிறு நம்மில் ஒருவருக்கு தூக்கு கயிறாகவும், மற்றவனுக்கு, துப்பாக்கி தோட்டாவாகவுமே மாறும்...

திருமங்கலக்குடியை சேர்ந்த ரவுடி ஹஜ்முஹம்மது, இவனை திருவிடைமருதூர்க்கு அழைத்து வந்தது யார்? அவர்கள் தான் பொறுப்ப்பு ஏற்க வேண்டும்! ஹஜ்முஹம்மதுவை அழைத்து வந்த (போலி) தவ்ஹீதை சேர்ந்த குதுபுதீன் என்பவனை அந்த ஊரை விட்டு விரட்டவேண்டும்.


இன்று விளக்கம் கொடுக்கூடியவர்கள் அவர்கள் தன் இயக்கத்தை
பாதுகாப்பதற்கு அவன் எங்கள் ஜமாஅத்தை சார்ந்தவன் இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள்.


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُواْ لاَ تَأْكُلُواْ أَمْوَالَكُمْ بَيْنَكُمْ بِالْبَاطِلِ إِلاَّ أَن تَكُونَ تِجَارَةً عَن تَرَاضٍ مِّنكُمْ وَلاَ تَقْتُلُواْ أَنفُسَكُمْ إِنَّ اللّهَ كَانَ بِكُمْ رَحِيمًا


நம்பிக்கை கொண்டவர்களே! உங்களில் ஒருவருக்கொருவர் பொருந்திக்கொள்ளும் முறையில் ஏற்படுகிற வர்த்தகம் அல்லாமல், ஒருவர் மற்றொருவரின் பொருட்களை தவறான முறையில் உண்ணாதீர்கள்;. நீங்கள் உங்களையே கொலைசெய்து கொள்ளாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் உங்களிடம் மிக்க கருணையுடையவனாக இருக்கின்றான்.(4:29)(உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள்; ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள்;. ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் - இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும். (2:191)

وَلَئِن مُّتُّمْ أَوْ قُتِلْتُمْ لإِلَى الله تُحْشَرُونَ


நீங்கள் மரணமடைந்தாலும் அல்லது கொல்லப்பட்டாலும் அல்லாஹ்விடமே நீங்கள் ஒரு சேரக் கொண்டு வரப்படுவீர்கள். (3:158)இன்று விளக்கம் கொடுக்கூடியவர்கள் அவர்கள் தன் இயக்கத்தை பாதுகாப்பதற்குஅவன் எங்கள் ஜமாஅத்தை சார்ந்தவன் இல்லை என்று விளக்கம் கொடுக்கின்றார்கள்.நெருப்பு இல்லாமல் புகையாது. ஒரு வாதத்திற்கு ஹஜ் முஹம்மத் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்தவன் இல்லை என்று வைத்துகொண்டாலும், (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ஐ சேர்ந்த குதுபுதீன் என்பவனுக்கு ஆதரவாக தான் வந்துள்ளான். ஒரு பேச்சிற்கு குதுபுதீனின் பரிந்துரைக்காக அந்த கொலைகாரன் வந்து இருந்தான் என்று வைத்துகொண்டாலும் குதுபுதீன் கூலி ஆள் வைத்து முஸ்லிம்களை அதுவும் ரமழான் மாதத்தில் கொன்றான் என்று வருமே தவிர
(போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு இதில் சம்பந்தம் இல்லை என்று வரவே வராது. அந்த கொலைக்கு குதுபுதீனே பொறுப்பாளி (அதன் மூலம் (போலி) தவ்ஹீத் ஜமாத்தே பொறுப்பாளி)


இந்த விஷயத்தில் தங்களுடைய (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு SUN TV ன் மூலமாகவும் Nakkeeranin மூலமாகவும் முகத்திரை கிழிந்து விட்டதை எண்ணிப்பார்த்த (போலி) தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள், எவ்வளவு பெரிய பூசணிக்காயையும் சோற்றுக்குள் அமுக்குவதாக எண்ணி கொண்டிருக்கும் PJ வை பேச வைத்து சுய விளக்கம் அளிக்கின்றார்கள். இந்த PJ (வனவாசத்தில் உட்காராமல் இங்கே என்ன வேலை
அந்த 6 மாத வாக்குறுதியும் வழக்கம் போல காற்றில் தானா?). செய்ததையும் செய்து விட்டு சுய விளக்கம் எதற்கு.

சரி இந்த PJ சுயவிளக்கம் அளிக்கும் போது ஒரு தெளிவு கிடைக்கும் என்று பார்த்தால், உண்மையில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்காதோ என்று பார்த்தால், ஒப்புதல் வாக்குமூலம் தான் கொடுக்கின்றோம் என்று தெரியாமல் ஒப்புதல் வாக்குமூலம் தருகிறார். எப்பிடி? ஹஜ் முஹம்மத் (போலி) தவ்ஹீதை சேர்ந்தவன் இல்லை, குதுபுதீன் (போலி) தவ்ஹீதை சேர்ந்தவன், குதுபுதீனுக்கு ஆதரவாக ஹஜ் வந்தான். ஆனால் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு சம்பந்தம் இல்லை. அது அவர்களின் PERSONAL. இது எப்பிடிஇருக்கு?

எல்லாவற்றையும் சொல்லிவிட்டு இதில் (போலி) தவ்ஹீத் ஜமாஅத் ற்கு சம்பந்தம் இல்லை என்றால் என்ன அர்த்தம். மேலும் தகராறு செய்ய எந்த காலத்திலும் செல்லவில்லையாம்! எத்தனை பள்ளிவாசல்கள், எத்தனை பிரச்சனைகள், எத்தனை குடும்பத்தில் குழப்பங்கள், எத்தனை வழக்குகள், எத்தனை போலீஸ் வழக்குகள், இதற்கும் உங்களுக்கு சம்பந்தம் இல்லையா?

பள்ளிவாசல்களில் எங்களை அனுமதிப்பதில்லை, யார் பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரை சொல்லுவதை விட்டும் தடுக்கின்றாரோ அவர்களை விட மிக அநியாயக்காரன் யார் இருக்கின்றார் (அல்-குர்'ஆன்) என்ற வசனத்தை சுன்னத் ஜமாஅத் ஆகிய நம்மை பார்த்து கூறினார்களே, ஒரு வாதத்திற்கு இவர்களுடைய கூற்று உண்மை என்று வைத்துக்கொண்டாலும் ஏன் தடுக்கின்றோம் புரியுதா மக்களே! இவர்கள் கொலைகாரர்கள்! கொள்ளைகாரர்கள்! மக்களுக்கு மத்தியில் துவேஷத்தை உண்டு பண்ணுபவர்கள். ஆனால் நாம் கூறுவது என்ன? நாம் சுன்னத் ஜமாஅத் முறை படி தொழுக சொல்கிறோம், காரணம் அது தான் சரியான முறை என்பதால்.

இந்த PJ வுடைய சொல், இந்த கொலை காரன் (போலி) தவ்ஹீதில் உறுப்பினர் இல்லை, அனுதாபியும் இல்லை, அங்கு தொழுக வருபவரும் இல்லை. ஆனால் உண்மை கொலைகாரன் (போலி) தவ்ஹீத் சம்பந்தப்பட்டவன் தான். எப்பிடி? இந்த கொலைகாரனிற்கும் இவர்களுக்கும் மத்தியில் எந்த தொடர்பும் இல்லாவிட்டால் எப்பிடி
இவரின் ஆள் இந்த கொலையாளியை அழைத்திருக்க முடியும், அவன் வைத்து இருந்த துப்பாக்கி licence பற்றி இவருக்கு தெரியும், அவனுக்கு இருந்த அரசியல் செல்வாக்கு எப்பிடி தெரியும், ஆக ஏற்கனவே இந்த கொலைகாரனிற்கும் (போலி) தவ்ஹீதிற்கும் மத்தியில் ஏதோ ஒரு தொடர்பு இருக்கின்றது.


இந்த PJ ஒரு நியாயவாதி என்று இருந்தால் இந்த கொலையாளியை பரிந்து பேசி இருக்க மாட்டார். ஆனால் பரிந்து பேசுகிறார். இவர் தப்பி விடுவார் என்றும் கூறுகிறார். எல்லா வற்றிற்கும் (சுய இச்சையில்) மார்க்க சட்டம் சொல்லும் இந்த PJ இந்த கொலையாளியின் விஷயத்தில் ஏன் (சுய இச்சையில்) மார்க்க சட்டம் சொல்லாமல் நியாயம் கற்பிக்கின்றார். இந்த கொலையாளி செய்த கொலை தவறாம், ஆனால் செய்த செயல் சரியாம்! தலை சுற்றுகிறதா! உங்களுக்குக்கே இப்படின்னா , அவர் பேட்டியை பார்த்த எனக்கு எப்பிடி இருக்கும்?

வழக்கமான குழப்பங்களும், உளறல்களும் தான் அவருடைய விளக்கமாக வந்தது.

இவர்கள் பிரச்சனை பண்ணுபவர்கள் இல்லை என்று சொல்கின்றார்கள், உண்மையில் மார்க்கம் பின்பற்றி வந்த விஷயத்தில் புது குழப்பங்களை புகுத்தி பிரச்சனையை பண்ணியது யார்? 1998 கோவை குண்டு வெடிப்பில் அப்பாவிகளை சிக்க வைத்தார்கள் என்றும் இவர்கள் மேல் குற்றச்சாட்டு உள்ளது. எத்தனை நீதி மன்ற வழக்குகள் இவர்களால்? யோசித்து பாருங்கள் இவர்களின் கூற்றில் உண்மை உள்ளதா என்று.

மேலும் இவர்களை அழிக்க நாம் என்னுகின்றோமாம். அதில் வெற்றி காண முடியாதாம். சிரிப்பு தான் வருகிறது. இவர்களை நாம் ஒரு பொருட்டாகவே எண்ணவில்லையே. இவர்கள் தானாக பணத்திற்காக அழிந்துவிடுவார்கள். அல்லாஹ் மறுமையில் இவர்களை அழித்துவிடுவான், இங்கு வாழ வைத்து கொண்டு தான் இருப்பான் என்று எங்களுக்கு தெரியுமே!

நபிகள் நாயம் ஸல்... அவர்கள் இஸ்லாத்தில் 72 வழிகெட்ட கூட்டம் வரும் (திர்மிதி) என்று சொல்லி இருக்கின்றார்களே, அதனால்
அந்த கூட்டம் வரும் என்று எதிர் பார்த்து கொண்டு அமர்ந்து இருக்கின்றோம். உங்களை நாங்கள் அழிக்க தேவை இல்லை. உங்களை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்பதை தெரியப்படுத்திக்கொண்டு, வீடுகளில், பள்ளிவாசல்களில், பிரச்சனை பண்ண கூடிய இந்த கூட்டத்தை உங்களை நெருங்க விடாதீர்கள். நீங்கள் பஞ்சாக இருக்கின்றீர்கள், இவர்கள் நெருப்பாக இருக்கின்றார்கள், உங்கள் பக்கத்தில் வைத்துக்கொண்டால் இவர்கள் உங்களை சீரழித்துவிடுவார்கள். ஜாக்கிரதை. இப்படிப்பட்ட அறிவை விட்டும், இந்த கொலைகாரர்களை விட்டும், இந்த கொலைகாரர்களை பரிந்து பேசும் இக்கயவர்களை விட்டும் என்றென்றும் அல்லாஹ் நம்மையும் நம் வருங்கால சந்ததியினரையும் காப்பாற்றுவானாக!

ஆமீன்! ஆமீன்! யாரப்பல் ஆலமீன்!

மதுரை நாபிஈ


2 comments:

MakeMeHappy said...

thanks for மதுரை நாபிஈ

Shazuli said...

இந்த தளத்தில் உண்மையை தவிர வேறு ஒன்றைவும் என்னால் இங்கு பார்க்கவில்லை. தங்கள் இணையதளத்திற்கு சரியான பெயர் வைத்துள்ளீர்கள். மறைக்கப்படும் உண்மையை வெளிக்கொண்டுவந்த மதுரை நாபிஈ அவர்களுக்கு நன்றி