முக்கிய வேண்டுகோள்

நமது தளத்திலிருக்கும் கட்டுரைகளை யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் மற்ற இணையத்தளங்களில் வெளியிடுபவர்கள் நமது இணையத் தளத்தின் பெயரினை குறிப்பிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். - அபூத் தைய்யார்.
Showing posts with label shazuli imam. Show all posts
Showing posts with label shazuli imam. Show all posts

Saturday, September 18, 2010

இமாம் ஷாதுலி ரழி... அவர்களின் உரூஸ்



தரீகா என்ற சொல்லிற்கு "வழி" அல்லது பாதை என்பது பொருள். இது என்ன பாதை அல்லது வழி என்று சிலர் கேட்கலாம். அல்லாஹ்வை அடைய வைக்கும் ஒரு பாதை அல்லது வழி என்ற பொருளால் தரீகா என்று பெயர் பெற்றது.

உலகில் பல தரீகாக்கள் உள்ளன. அதில் உலகளாவிய தரீகா ஷாதுலியா தரீகா தான். ஆங்கில எழுத்தாளர் ஹிட்டி என்பார் கூறும் போது, "The Largest Brother Hood in the World is Shadhuliya Brother Hood" அதாவது, உலகில் மிகப்பெரிய சகோதரத்துவம் என்பது ஷாதுலியா வின் கட்டமைப்பு என்று கூறியுள்ளார்.

ஒவ்வொரு தரீகா விற்கும் ஒவ்வொரு வழிமுறைகள் உள்ளன. ஆனால் சேரும் இடம் அல்லாஹ் தான். ஷாதுலியா என்பது உலகத்தில் உள்ள பெரிய தரீகா வாகும். இந்த தரீகா வின் ஸ்தாபகர் ஹழ்ரத் ஷைக் இமாம் நூருத்தீன் அபுல்ஹசன் அலி அஷ் ஷாதுலி ஆகும். இமாம் அவர்களின் இயற் பெயர் அலி என்பதாகும். புனைபெயர் அபுல் ஹசன் என்பதாகும். இவர்கள் குதுபாக உச்ச கட்டத்தில் இருக்கும் போது, அல்லாஹ் இவர்களை நோக்கி," انت شاذ لي " நீர் எம்மிடம் மிகவும் நெருக்கமான இடத்தில் உள்ளீர் என்று கூறினான். அதுவே ஷாதுலி என்று மருவி நிலைத்துவிட்டது.

ஷாதுலியா தரீகா தரீகுஷ் ஷுக்ர் (நன்றிக்கான தரீகா) என்று அழைக்கப்படும். காரணம் ஏனைய தரீகாக்கள் பழைய ஆடைகள் அணியவும், மனக்கட்டுப்பாடு விதித்து மனம் விரும்பியதை தடுத்து கொள்ளவும் அறிவுறுத்துகின்றன. ஷாதுலியா தரீகா என்பது கீழ் கண்ட வசனத்தின் மூலம் தரீகாவை அமைத்துள்ளது.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِن كُنتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

விசுவாசிகளே, உங்களுக்கு ஆகுமாக்கியவைகளை உண்ணுங்கள், மேலும் நீங்கள் அவனை வணங்குவதின் மூலம் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்துங்கள். என்ற வசனத்தின் அடிப்படையில் ஹலாலான எல்லாவற்றையும் உண்ணலாம் (தேவைக்கு ஏற்ப) ஆனால் நன்றி செலுத்த கூடிய அடியாராக மாற நன்றியோடு வணங்க வேண்டும்.

நாயகக்கண்மணி நபிகள் நாயகம் ஸல்... அவர்களும் இப்படி தான் வழி காட்டி யுள்ளார்கள். நபிகள் நாயகம் ஸல்... அவர்கள் தினமும் கால் வீங்கும் அளவிற்கு நின்று இரவில் வணங்குவார்கள் (வஹ்ஹாபிகள் அதிக்கப்படியான இபாதத் இல்லை என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள் நபி வழியை பின் பற்றாதவர்கள்). ஹழ்ரத் ஆயிஷா சித்தீகா ரழி... யா ரசூலுல்லாஹ் (நாம் யா ரசூலல்லாஹ் என்று அழைத்தால் ஷிர்க் என்று சொல்லி கொண்டு திரிகின்றார்கள்) உங்களை தான் அல்லாஹ் முன் பின் பாவங்கள் மன்னித்து விட்டானே, எதற்கு கால் கடுக்கும் அளவிற்கு நின்று தொழுகையில் நிற்கின்றீர்கள் என கேட்கும் போது.
يا عائشة افلا ان اكون عبدا شكورا

ஆயிஷாவே (யா ஆயிஷா என்று நபிகளார் ஸல்... அவர்களும் அழைத்துள்ளார்கள்) நன்றியுள்ள ஒரு அடியானாக நான் மாற வேண்டாமா என்று கூறினார்கள். ஒரு நல்ல அடியானாக மாற வேண்டுமானால் கடமையான வணக்கங்களின் மூலம் நிச்சயமாக முடியாது. அதிகப்படியான அமல்கள் இருந்தால் தான் அது முடியும். இன்றைக்கு வயிற்று பிழைப்பை நடத்தும் இவ் வஹ்ஹாபிகள் அதிகப்படியான அமல்களை நாம் செய்தால் பித்'அத் என்று கூறுகின்றார்கள். இது நம்மை பார்த்து கூறவில்லை. நபிகளார் ஸல்... அவர்களை பார்த்து கூறுகின்றார்கள். காரணம் அல்லாஹ்வின் தூதர் நபிகள் ஸல்... அவர்கள் காட்டி தந்த வழிமுறை தான் அதிகப்படியான வணக்கம் என்பது.

இப்படி பட்ட வணக்கங்கள் செய்வதற்காக தான் தரீகாக்கள் உருவாக்கப்பட்டன. ஜிக்ர்கள் செய்வது, ஒளராத்கள் ஓதுவது, ஹிஸ்ப்கள் ஓதுவது. காலை மாலை விர்து எனப்படும் சலவாத்துக்கள், பாவ மன்னிப்புக்கள், கோருவது எல்லாம் நடக்கின்றது. மேலும் ஹிஸ்புல் பஹர் என்னும் ஹிஸ்ப் உலக முஸ்லிம்களுக்கு பொதுவாக ஷாதுலி இமாம் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. மங்கோலியர்கள் பாக்தாத் மாநகரத்தை சின்னா பின்னப்படுத்திய போது ஷாதுலி நாயகம் கூறினார்கள். யாரேனும் ஒருவர் பக்தாத்தில் ஹிஸ்புல் பஹர் ஓதுபவர் இருந்து இருந்தால் பாக்தாத் பாதுகாப்பு பெற்று இருக்கும் என்றார்கள். (அல்லாஹ்வை மட்டும் தான் வணங்க வேண்டும் என்று நாம் வலிமார்களுக்கு மரியாதை செய்தாலே வணங்காதீர்கள், ஷிர்க் இது என்று சொல்லி கொண்டு திரியும் இந்த வஹ்ஹாபிகள் ஏன் நாம் அல்லாஹ்விற்கு செய்யும் அமல்களையும் பித்'அத் என்று கூறி, தடுத்து நிறுத்த பார்கின்றார்கள். அல்லாஹ்விற்கு வணக்கம் செய்தாலும் பித்'அத் என்றால் பின்னர் யாருக்கு தான் வணக்கம் செய்ய வேண்டும்? இவர்களின் சுய ரூபத்தை கண்டு கொள்ளுங்கள். இவர்கள் யூத, கிறிஸ்தவர்களின் கைகூலிகள் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.)

மேலும் அதிக தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

ஷாதுலி இமாம் அவர்களின் உரூஸ் தினம் தமிழகத்தில் பல ஊர்களில் கொண்டாடப்படுகிறது. மதுரையில் வருகின்ற 20-09-2010 திங்கள் கிழமை இரவு விடிந்தால் செவ்வாய்கிழமை நடைபெற இருக்கின்றது. அதற்கான தகவலும் http://www.shazuli.com இல் பதியப்பட்டுள்ளது. மேலும் 25-09-2010 ஞாயிற்றுக்கிழமை விடிந்தால் திங்கள் கிழமை திருச்சி மாவட்டம் புத்தாநத்தம் என்னும் ஊரிலும் கொண்டாடப்படுகிறது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

மதுரை நாபிஈ


Sunday, September 5, 2010

லைலத்துல் கதர் இரவு 27 ரமழான்



ரமழானின் 27 ம் இரவு தான் உலகமெங்கும் லைலத்துல் கத்ராக கொண்டாடப்படுகிறது. இதற்கு காரணம் வெளிப்படையாக இமாம்களின் கருத்தே காரணம் என்று வஹ்ஹாபிய புரோகிதர்களால் கூறப்படுகிறது. உண்மையில் குர்'ஆன் மற்றும் ஹதீஸை அடிப்படையாக கொண்டு தான் இமாம்கள் கருத்தாக கூறுவார்கள். அதை தான் சுன்னத் வல் ஜமாஅத் ஐ சேர்ந்த நாம் பின்பற்றி வருகிறோம். ஹதீஸில்வருகிறது,

நாயகம் ஸல்... கூறுவதாக ஹழ்ரத் இப்னு உமர் ரழி... அவர்கள் அறிவிக்கின்ற இந்த ஹதீஸ் அஹமத் என்னும் கிரந்தத்தில் உள்ளது.

நாயகம் ஸல்... அவர்கள் , யார் அந்த (கத்ர்) இரவை நாடுவாரோ அவர் 27 ம் இரவில் அவ்வாறு (அமல்கள்) செய்து கொள்ளட்டும் என்று கூறினார்கள்.

நூல்: அஹமத்

மேலும் ஹழ்ரத் உபைய் இப்னு கஅப் ரழி... அவர்கள் அறிவிக்கின்றார்கள்,

அவனை தவிர வேறு இறைவன் இல்லையே அப்படிப்பட்ட அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) ரமழானில் இருக்கின்றது. அல்லாஹ்வின் மீது ஆணையாக, அது (கத்ர் இரவு) எந்த இரவு என்று எனக்கு தெரியும். அந்த 27 ம் இரவில் தான் நாயகம் ஸல்... தொழுக கட்டளையிட்டார்கள். அவ்விரவு சூரியனின் சுடர் வருவதற்கு முன் வரை உள்ளது.


நூல் : முஸ்லிம், அபூ தாவூத், அஹமத், திர்மிதி.

இதை தான் இமாம்கள் ஆய்வு செய்து 27 ல் தான் கத்ர் இரவு வருகிறது என்று கூறுகின்றார்கள்.

இமாமுல் அ'ளம் அவர்கள் சூரா கத்ரை ஆய்வு செய்து, அந்த சூரா 30 வார்த்தைகளால் அமைக்கப்பட்டுள்ளது என்றும், அதில் வரும் هي (அந்த இரவாகிறது) என்பது 27 வது வார்த்தையாக வருகிறது அதனால் லைலத்துல் கத்ர் 27 ம் இரவு என்றும், அந்த சூராவில் லைலத்துல் கத்ர் என்ற வார்த்தை 3 முறை வருகிறது, அந்த வார்த்தையில் 9 எழுத்துக்கள் உள்ளன, 3 * 9 = 27 ஆக வர வாய்ப்பு உள்ளது என்று குர்'ஆனில் ஆய்வு செய்து சொல்லி உள்ளார்கள்.

மேலும் குதுப் மார்களின் பேரரசர் ஹழ்ரத் ஷாதுலி நாயகம் ரழி... அவர்கள் தங்களுடைய முரீத் மற்றும் ஷாதுலியா தரீகாவின் முதல் கலீபாவான ஹழ்ரத் அபுல் அப்பாஸ் முர்சி ரழி... அவர்களோடு பிரயாணத்தில் இருந்தார்கள். 27 ம் இரவில் முழுதும் நின்று வணங்கினார்கள். இரண்டாம் நாள் பயணத்தை தொடர்ந்தார்கள், மேலும் கூறினார்கள், முர்சியே அறிந்து கொள்ளும், கடந்த இரவு தான் லைலத்துல் கத்ர் ஆகும். More Details: http://www.shazuli.com/lailathul-qadhr/

மேலும் ஒரு முறை வலீமார்களின் தலைவரான ஷாதுலி இமாம் ரழி... அவர்களிடம், லைலத்துல் கத்ர் என்றைக்கு என்று கேட்ட போது, அல்லாஹ்வை பயந்தவறுக்கு ஒவ்வொரு நாளும் லைலத்துல் கத்ர் தான் (அதாவது எல்லா நாளும் நின்று வணங்கி கொள்வார்கள்) என்று கூறினார்கள்.

ஆகா எப்படியோ, நபிகளார் கண்மணி ஸல்.`.. அவர்கள் கூறிய 1000 மாதத்தை விட சிறப்பான இரவு இன்று வர இருக்கிறது. உரிய முறையில் பயன் படுத்திக்கொள்வோமாக! ஆமீன்! ஆமீன்! யா ரப்பல் ஆலமீன்!

லைலத்துல் கத்ரில் அதிகமாக ஓத வேண்டிய துஆ:

அல்லாஹும்ம இன்னக அஃபூவன் துஹிப்புல் அஃபுவ ப'ஃபு அன்னீ (திர்மிதீ).
اللهم انك عفوا تحب عفو فاعف عني


அனைவருக்கும் லைலத்துல் கத்ர் வாழ்த்துக்கள்.

அபூத் தைய்யார்